இந்த அறிவியல் தொழில் நுட்பக் காலத்தில் சுனாமியிலிருந்து காத்துக் கொள்ள வேண்டி சுனாமி தடுப்புச் சுவர்களை அமைக்கின்றனர்.
இதுபோன்று முதலாம் தமிழ்ச் சங்க காலத்தில் வாழ்ந்த பண்டைத் தமிழர் சுமார் 1500 கி.மீ. நீளத்திற்குச் செயற்கையாகச் சுவர் கட்டிக் கடல்கோளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முற்பட்டுள்ளனரோ? என்ற ஐயம் எனக்கு !
டியகோ கார்சியா தீவை மையமாகக் கொண்டு சுமார் 1500 கி.மீ. நீளத்திற்கு மிக நீண்ட திட்டு கோட்டை போன்று காணப்படுகிறது. அதிலும் சரியான இடைவெளியில் மேடுகள் கொத்தளங்கள் போன்று காணப்படுகின்றன. இந்த அமைப்பு முறையால் இது மனிதர்களால் கட்டப்பட்ட சுனாமி தடுப்புச் சுவராக ( Tsunami fencing Man made Wall) இருக்கலாம் என்பது கருத்து.
இது மனிதனால் கட்டப்பெற்ற செயற்கை மதிலா?
ஆம் என்றால், இந்த 1500 கி.மீ. நீளம் உடைய சுனாமி தடுப்பு மதிலைக் கட்டியவர்கள் பண்டைத் தமிழர் ஆவர். இந்தத் தீவு டிகோகார்சிகா அல்ல, இதுதான் இரண்டாம் தமிழ்ச்சங்கம் வளர்த்த தமிழரின் கபாடபுரம் என்பேன்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக