கயில் என்றால் பூரணம், உடைத்த தேங்காய்ப் பாதி என்றும் “பிடரி” என்றும் பொருள். ( https://ta.wiktionary.org/s/1q9j)
சங்க இலக்கியத்தில் கயில் என்ற சொல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது.
“வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை” - ஐங் 72/1
“கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்” - பரி 12/18
கைலாசம், கைலாயம், கயிலாய மலை, கைலை மலை, கைலாச மலை, திருக்கயிலாய மலை, சிமகிரி, இமகிரி, என்ற பெயர்களால் இமயமலை அழைக்கப்படுகிறது.
கயிலைமலை என்றால் என்ன பொருள்?
கயிலைமலை என்றால் “உடைத்த பாதித் தேங்காய் போன்ற வடிவத்தை உடைய மலை” என்று பொருள். இமயமலையானது உடைத்த பாதித் தேங்காய் போன்று வட்ட வடிவத்தில், அதன் நடுப்பகுதியானது பெரும் பள்ளத்தாக்காக உள்ள காரணத்தினால் இமயமலைக்குக் கயிலைமலை என்ற காரணப்பெயர் உண்டாகியுள்ளது.
கயில் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள்
சங்க இலக்கியம் - எட்டுத்தொகை - ஐங்குறுநூறு - 72
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல்
குவளை உண்கண் ஏஎர் மெல் இயல்
மலர் ஆர் மலிர் நிறை வந்து என
புனல் ஆடு புணர் துணை ஆயினள் எமக்கே.
சங்க இலக்கியம் - எட்டுத்தொகை - பரிபாடல் # 1 திருமால்
“....... அம் தண் புனல் வையை யாறு என கேட்டு 10
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும்
பொன் அடர் பூ புனை திருத்துவோரும்
அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற
புகை கெழு சாந்தம் பூசுவோரும்
கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும் 15
வேர் பிணி பல் மலர் வேயுமோரும்
புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்
கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்
வாச நறு நெய் ஆடி வான் துகள் ....... ”
-----------------------------------------------------------
கம்பராமாயணத்தில் கயில், கயிலை என்ற சொற்கள் இடம் பெற்றுள்ள பாடல்வரிகளின் தொகுப்பு - நன்றி http://tamilconcordance.in
கயில் விரி வயிர பைம் பூண் கடும் திறல் மடங்கல் அன்னான் - அயோ-மிகை:8 4/2
கயில் விரிவு அற வரு கவசமும் உருவி - யுத்4:37 85/1
அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன் - ஆரண்:10 43/1
கங்கை சடை வைத்தவனோடும் கயிலை வெற்பு ஓர் - ஆரண்:11 19/1
எல் இட்ட வெள்ளி கயிலை பொருப்பு ஈசனோடும் - ஆரண்:13 29/1
உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால் - கிட்:15 25/4
நீல மலை முன் கயிலை நின்றது என நின்றான் - யுத்1:12 7/3
கண்டு நின்று கயிலை இடந்தவன் - யுத்2:15 94/2
பரக்க பல உரைத்து என் படர் கயிலை பெரு வரைக்கும் - யுத்2:15 165/1
காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை - யுத்2:15 223/2,3
கடம் ஏய் கயிலை கிரி கண்ணுதலோடு - யுத்2:18 56/1
நடுக்கம் உற்றிட நல் அறம் ஏங்கிட கயிலை எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை நாண் எறிந்தான் - யுத்2-மிகை:15 32/3,4
உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் - யுத்3:24 43/4
ஈது அவர் சொல கயிலை ஈசனும் நகைத்து இமையவர்க்கும் ஒளி வான் - யுத்3-மிகை:31 45/1
வான் கயிலை ஈசன் அயன் வானவர் கோன் முதல் அமரர் வாழ்த்தி ஏத்த - யுத்4-மிகை:38 1/1
வளம் கெழு கயிலை ஈசன் மலர் அயன் மறைகள் நான்கும் - யுத்4-மிகை:41 297/1
காதினான் என்ன வானோர் கலங்கினார் கயிலையானும் - யுத்3:27 86/3,4
கயிலையில் இருந்த தேவை தனி தனி கடுத்தல் செய்தார் - சுந்:1 11/4
தூர்த்தான் அகன் கயிலையில் தொலைவு இலோனும் - சுந்:1 73/3
பத்து எனும் திசையும் வென்று கயிலையில் பரனை எய்தி - யுத்3-மிகை:29 3/1
கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம் - யுத்4-மிகை:42 19/1
கயிலையின் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த - சுந்:3 82/3
கயிலையின் ஒரு தனி கணிச்சி வானவன் - சுந்:12 15/1
கயிலையின்மலை என நின்றான் அனையவர் வரு தொழில் கண்டான் - சுந்:7 20/4
முக்கணான் கயிலையும் முரண் இன்றாயது - யுத்1:2 32/2
கொண்ட வான் கயிலையும் சிகர கோடிகள் - யுத்2-மிகை:15 16/3
ஈறு இலான் கயிலையே இயைந்த என் இனி - பால:19 3/3
வசை உற கயிலையை மறித்து வான் எலாம் - ஆரண்:10 12/2
கந்தர கயிலையை நிகர்க்கும் காட்சியான் - ஆரண்:13 6/4
கடிது சென்று அவனும் அ கடவுள்-தன் கயிலையை கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும் குறுகி முன் - கிட்:5 5/1,2
ஏயும் நன் மதில் இட்டனன் கயிலையை எடுத்தான் - சுந்:2 20/4
மேல் உயர் கயிலையை எடுத்த மேலை_நாள் - யுத்1:2 80/1
வெருவுதி போலும் மன்ன கயிலையை வெருவல் கண்டாய் - யுத்2:16 36/4
கந்தனார் தந்தையாரை கயிலையோடு ஒரு கை கொண்ட - யுத்3:27 166/3
இம்மை இ உரு இயைந்து எழில் கயிலையோடு ஈசன் - யுத்4-மிகை:35 4/3
8. கயிலைமலைக் கெய்தியங்குக் காமுற் றுறைநாட்
குயிலை மலைக்கரசன் கொம்பைப் - பயில்வொரீஇ - திருப்பூவணநாதருலா
--------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக