வெள்ளி, 6 டிசம்பர், 2024





புகையிற் பொங்கி



வியல்விசும்பு உகந்து

பனியூர் அழற்கொடி

புகையிற் பொங்கி வியல்விசும்பு உகந்து

பனியூர் அழற்கொடி கடுப்பத் தோன்றும்

இமயச் செவ்வரை ......  (265. பாலை)


புகையின் – புகையைப்போல

பொங்கி – மிகுந்து

வியல் – அகன்ற

விசும்பு – வானில்

உகந்து – உயர்ந்து

பனிஊர் – பனியானதுசூழும்

அழல்கொடி – தீச்சுடரை

கடுப்ப – ஒப்ப

தோன்றும் – காணப்படும்




265. பாலை

 [பிரிவிடை வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதூரத் தோழிக்குச் சொல்லியது.]

 

புகையிற் பொங்கி வியல்விசும்பு உகந்து

பனியூர் அழற்கொடி கடுப்பத் தோன்றும்

இமயச் செவ்வரை மானுங் கொல்லோ

பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

5.            சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை

நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ

எவன்கொல் வாழி தோழி வயங்கொளி

நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல்

குழல்குரல் பாவை இரங்க நத்துறந்து

10.         ஒண்டொடி நெகிழச் சாஅய்ச் செல்லலொடு

கண்பனி கலுழ்ந்தியாம் ஒழியப் பொறையடைந்து

இன்சிலை எழிலேறு கெண்டிப் புரைய

நிணம்பொதி விழுத்தடி நெருப்பின் வைத்தெடுத்து

அணங்கரு மரபிற் பேஎய் போல

15.         விளரூன் தின்ற வேட்கை நீங்கத்

துகளற விளைந்த தோப்பி பருகிக்

குலாஅ வல்வில் கொடுநோக்கு ஆடவர்

புலாஅற் கையர் பூசா வாயர்

ஒராஅ உருட்டுங் குடுமிக் குராலொடு

20.         மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும்

செந்நுதல் யானை வேங்கடந் தழீஇ

வெம்முனை அருஞ்சுரம் இறந்தோர்

நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே.

-மாமூலனார்.

---------------------------------

(சொ - ள்.) 7-11.

புகையின் – புகையைப்போல

பொங்கி – மிகுந்து

வியல் – அகன்ற

விசும்பு – வானில்

உகந்து – உயர்ந்து

பனிஊர் – பனியானதுசூழும்

அழல்கொடி – தீச்சுடரை

கடுப்ப – ஒப்ப

தோன்றும் – காணப்படும்

இமயச்செவ்வரை – இமயமாகிய சிவந்த மலையை

மானும்கொல்லோ – ஒக்குமோ? அன்றி

 பல்புகழ்நிறைந்த – பலவகையான செயல்களால் பல புகழ்மிகுந்த , வெல்போர் – போரில் வெல்லும் திறன்மிகுந்த, நந்தர் – நந்தர் என்னும் அரசமரபினர், சீர்மிகு – பெருமைமிகும், பாடலி – பாடலிபுரத்தின் கண்ணேகூடி, கங்கைநீர்முதல் – கங்கைநீரின்கண், கரந்த – ஒளித்துவைத்த, நிதியம் கொல்லோ – செல்வமோ, எவன்கொல் – அவ்விரண்டும் அல்லவானால் நம்மைவிட்டுப் பிரிந்தது என்ன காரணம்? வாழி – வாழ்வாயாக! தோழியே.

வயங்கு – விளங்கும், ஒளி – வெளிச்சத்தால் உண்டாகும், நிழல்பால் – நிழலின்கண் உள்ள, அறலின் – ஆற்றின் கருமணல் போல, நெறித்த – நெளிந்து அடர்ந்த, கூந்தல் – கூந்தலினையும், குழல்குரல் குழலிசைபோன்ற குரலினையும் உடைய, பாவை – அழகிய பாவை (பதுமை) போன்ற நீ, இரங்க – வருந்த,

(சொ - ள்.) 7-11.

தோழி-, வாழி-, வயங்கு ஒளி நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல் - விளங்கும் ஒலி வாய்ந்த நிழற்கண்ணுள்ள அறல்போலக் குழன்ற கூந்தலினையும், குழல் குரல் - குழலோசை போன்ற இனிய குரலினையும் உடைய, பாவை இரங்க-பாவை போன்ற நீ இரங்க, ஒள் தொடி நெகிழ - நமது ஒள்ளிய வளை நெகிழ்ந்து வீழ, சாஅய் செல்லலொடு - மெலிந்து துன்பத்துடன், கண்பனி கலுழ்ந்து யாம் ஒழிய - கண்ணீர் சொரிந்து யாம் இவண் தங்கியிருக்க, நம் துறந்து - நம்மைக் கைவிட்டு ;

 

11-22. குலாஅ வல்வில் கொடு நோக்கு ஆடவர் - வளைந்த வலிய வில்லையும் கொடிய பார்வையினையுமுடைய மறவர்கள், பொறை அடைந்து-குன்றினை அடைந்து, இன்சிலை எழில் ஏறு கெண்டி-இனிய முழக்கம் செய்யும் எழுச்சியுள்ள எருதினைக் கொன்று, புரைய நிணம் பொதி விழு தடி நெருப்பின் வைத்து எடுத்து - உயர்ச்சியுடைய கொழுப்புப்பொதிந்த சிறந்த தசையினை நெருப்பில்வைத்துச் சுட்டு எடுத்து, அணங்கு அரும் மரபின் பேஎய் போல - கண்டாரை வருத்தும் அரிய திறலுடைய பேய்களைப் போல, விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க - வெளுத்த அவ் வூனைத் தின்றதாலாய நீர்வேட்கை நீங்க, துகள் அற விளைந்த தோப்பி பருகி - குற்றமற முதிர்ந்த தோப்பிக்கள்ளைக் குடித்து, புலாஅல் கையர் பூசாவாயர் - புலால் நீங்காத கையினராய்க் கழுவாத வாயினராய், ஒராஅ உருட்டும் குடுமிக் குராலொடு - இடையறாது விட்டுவிட்டு ஒலிக்கும் குடுமியினையுடைய கோட்டான் ஒலியொடு கூடி, மராஅம் சீறூர் மருங்கில் தூங்கும்-வெண்கடப்ப மரங்களையுடைய சிறிய ஊர்ப்பக்கத்தே கூத்தாடும், செம் நுதல் யானை வேங்கடம் தழீஇ - சிவந்த நெற்றியினையுடைய யானைகளையுடைய வேங்கடமலையைப் பொருந்தியுள்ள, வெம்முனை அரும் சுரம் இறந்தோர் - வெவ்விய முனையிருப்புக்களையுடைய அரிய சுரத்தினைத் தாண்டிச் சென்ற நம் தலைவர்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக