விசுவாமித்திர முனிவர் அகலிகை வரலாற்றை இராமனிடம் கூறுதல்
466.
‘மாஇரு விசும்பின் கங்கை மண்மிசைக் கொணர்ந்தோன் மைந்த!
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்.
தீவினை நயந்து செய்த தேவர்கோன்தனக்குச்
செங் கண்
ஆயிரம் அளித்தோன். பன்னி; அகலிகை ஆகும்’ என்றான்.
கம்பராமாயணத்தின் அகலிகைப் படலத்தில் (பாடல்: 466)
மா இரு விசும்பின் - மிகப்
பெரிய ஆகாயத்திலிருந்து; கங்கை
மண்மிசை - கங்கா நதியை
இப்பூமிக்கு; கொணர்ந்தோன் மைந்த -
கொண்டு வந்த
பகீரதன் என்னும் பேரரசன்
(குலத்தில் பிறந்த)
மைந்தனே!; மேயின உவகையோடு
- பொருந்தின மகிழ்ச்சியோடு;
மின்னென - மின்னல்கொடிபோல; ஒதுங்கி நின்றாள் - ஒருபக்கத்தே
(நாணத்தால்) ஒதுங்கி
நின்ற இவள்; தீவினை - (மற்றொருவன்
மனைவியைச் சேர்தலாகிய)
கொடுந்தொழிலை; நயந்து
செய்த -
விரும்பிச் செய்த;
தேவர்கோன் தனக்கு - தேவர்கள் தலைவனான
இந்திரனுக்கு; செங்கண் ஆயிரம்
- சிவந்த ஆயிரம்
கண்களை;
அளித்தோன் பன்னி
- கொடுத்த கௌதம
முனிவனுடைய
பத்தினியான; அகலிகை ஆகும் - அகலிகை ஆவாள் என்றான்.
அகலிகை: தன் சிலை வடிவம்
நீங்கி பெண்வடிவு பெற்று
மகிழ்ச்சியோடு நாணத்தால் ஒதுங்கி நிற்பவளே. கௌதம முனிவனின்
மனைவியான அகலிகையாவாள் இந்திரன்
ஆயிரம் கண்கள்
பெற்றமை: இந்திரன்
மாற்றான் மனைவியைச் சேர்தலாகிய
கொடுஞ்செயலை விரும்பிச்
செய்ய அதன் பொருட்டுக்
கௌதம
முனிவர் அவனுக்குச்
சாபம் தந்தார். பின்னர்
அம் முனிவரை
வேண்டக் குறிகள் ஆயிரம் கண்களாகுமாறு
அருள் பெற்றான். 15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக