வையையும் வைகையும்
(மறைந்த அன்புநிறைந்த எனது நண்பர் ஐயா சிங்கநெஞ்சம் அவர்களுக்கு
இந்தக் கட்டுரை சமர்பணம்)
இந்தக் கட்டுரை சமர்பணம்)
தமிழ்நாட்டில் 98 ஆறுகள் ஓடுகின்றனவாம். இத்தனை ஆறுகளுக்குள் ஒரு ஆற்றிற்கு மட்டுமே தமிழ்
தெரியுமாம். ஆமாம் தமிழ்மொழி அறியுமாம் வைகை
ஆறு. இதனைத் “தமிழ் அறி வைகைப் பேர்யாறு”
(பாடல் எண் 3338) என்கிறது திருவிளையாடற் புராணம். வையை வைகை
வேகவதி கிருதமாலை என்ற நான்கு பெயர்களால் திருவிளையாடல் புராணம் வைகை ஆற்றைக்
குறிப்பிடுகிறது.
ஆனால், தமிழ் இலக்கியத்தைச் சங்ககாலப்
பாடல்கள் என்றும், பக்தி இலக்கியப் பாடல்கள் என்றும் பிரித்துப் பார்த்தால், சங்கப்பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரத்தில் வையை
என்ற பெயர் மட்டுமே 92 பாடல்வரிகளில் இடம் பெற்றுள்ளது. வைகை வேகவதி கிருதமாலை என்ற பெயர்கள் காணப்பெறவில்லை.
இதற்கு நேர்மாறாகத் தேவாரப் பாடல்களில்
வைகை என்ற பெயர் மட்டுமே 19 பாடல்வரிகளில் இடம் பெற்றுள்ளது. வையை வேகவதி கிருதமாலை
என்ற பெயர்கள் இடம் பெறவில்லை.
திருவிளையாடற் புராணத்தில் மட்டுமே வையை,
வைகை, வேகவதி, கிருதமாலை என்ற நான்கு பெயர்களும் இடம் பெற்றுள்ளன. திருவிளையாடற் புராணத்தில், வையை என்ற பெயர் 3 பாடல்களில் இடம் பெற்றுள்ளன. வைகை என்ற பெயர் 42 பாடல்களில் இடம் பெற்றுள்ளன. வேகவதி என்ற பெயர் 2 பாடல்களில் இடம் பெற்றுள்ளன. கிருதமாலை என்ற பெயர் 1 பாடலிலும் இடம் பெற்றுள்ளது. பாடல் எண் 875இல் மட்டும் வைகை வேகவதி கிருதமாலை
என்ற மூன்று பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
நூல்
|
வையை
|
வைகை
|
பரிபாடலில்
|
65
|
|
கலித்தொகை
|
8
|
|
அகநானூறு
|
3
|
|
புறநானூறு
|
1
|
|
மதுரைக்காஞ்சியில்
|
2
|
|
முத்தொள்ளாயிரம்
|
2
|
|
சிலப்பதிகாரம்
|
11
|
|
தேவாரம்
|
9
|
|
பெரியபுராணம்
|
7
|
|
திருப்புகழ்
|
3
|
|
திருவிளையாடற் புராணம்
|
3
|
42
|
மொத்தம் = 156
|
95
|
61
|
சங்கப் பாடல்களும் சிலம்பதிகாரமும் வையைப்
பாடியுள்ளன. பக்திஇலக்கியங்கள் வைகையைப் பாடியுள்ளன. திருவிளையாடற் புராணம் வையை வைகை வேகவதி கிருதமாலை என்ற
நான்கு பெயர்களையும் பாடுகிறது.
இதனால் சங்ககாலத்தில் ஓடிய வையை ஆறானது,
வழிமாறி தடம்மாறி உருமாறி, வையை என்ற பெயரும் மாறி, வைகை என்ற பெயருடைய ஆறாக ஓடிக்
கொண்டிருக்கிறது என்ற கருத வேண்டியுள்ளது.
அன்பன்
காசிசீர்,
முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி
14 (01.10.2019) செவ்வாய்கிழமை.
(குறிப்பு
– எனது சொற்தேடலில் விடுபட்ட பாடல்கள் ஏதேனும் இருந்தால் அறிஞர் பெருமக்கள் அன்புள்ளம்
கொண்டு அதைச் சுட்டிக்காட்டி உதவிடுமாறு வேண்டுகிறேன்)
வையையும் வைகையும் பாடற் தொகுப்பு
|
|
பரிபாடலில் வையை
|
|
1.
|
வகை
சாலும் வையை வரவு - பரி 6/13
|
2.
|
வரை
சிறை உடைத்ததை வையை வையை/ திரை
சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும் - பரி 6/22,23
|
3.
|
தமிழ்
வையை தண்ணம் புனல் - பரி 6/60
|
4.
|
பெருக்கு
அன்றோ வையை வரவு - பரி 6/70
|
5.
|
சுருக்கமும்
ஆக்கமும் சூள் உறல் வையை
|
பெருக்கு
அன்றோ பெற்றாய் பிழை - பரி 6/73,74
|
|
6.
|
இன்
இளவேனில் இது அன்றோ வையை நின் - பரி 6/77
|
7.
|
வையை
வயம் ஆக வை - பரி
6/78
|
8.
|
வையை
உடைந்த மடை அடைத்த_கண்ணும் - பரி 6/82
|
9.
|
யாறு
உண்டோ இ வையை யாறு
- பரி 6/93
|
10.
|
இ
வையை யாறு என்ற மாறு என்னை கையால் - பரி 6/94
|
11.
|
வாடற்க
வையை நினக்கு - பரி 6/106
|
12.
|
வந்தன்று
வையை புனல் - பரி 7/10
|
13.
|
தானையான்
வையை வனப்பு - பரி 7/50
|
14.
|
வையை
பெருக்கு வடிவு - பரி 7/60
|
15.
|
தாமம்
தலை புனை பேஎம் நீர் வையை
|
16.
|
நின்
பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க - பரி 7/84,85
|
17.
|
இனி
மணல் வையை இரும் பொழிலும் குன்ற - பரி 8/51
|
18.
|
வரு
புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள் - பரி
8/61
|
19.
|
வையைக்கு
தக்க மணல் சீர் சூள் கூறல் - பரி 8/71
|
20.
|
நனவின்
சேஎப்ப நின் நளி புனல் வையை/வரு புனல் அணிக என வரம் கொள்வோரும்
- பரி 8/104,105
|
21.
|
போந்தது
வையை புனல் - பரி 10/8
|
22.
|
யாம்
வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல் - பரி 10/40
|
23.
|
நெரிதரூஉம்
வையை புனல் - பரி 11/15
|
24.
|
சேண்
இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை/வய தணிந்து ஏகு
நின் யாணர் இறு நாள் பெற - பரி 11/39,40
|
25.
|
மல்லல்
புனல் வையை மா மலை விட்டு
இருத்தல் - பரி 11/43
|
26.
|
பாய்
தேரான் வையை அகம் - பரி 11/61
|
27.
|
நீர்
ஒவ்வா வையை நினக்கு - பரி 11/73
|
28.
|
வையை
நினக்கு மடை வாய்த்தன்று - பரி 11/87
|
29.
|
நீ
உரைத்தி வையை நதி - பரி 11/92
|
30.
|
தண்டு
தழுவா தாவு நீர் வையையுள்/கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க - பரி
11/106,107
|
31.
|
நறு
நீர் வையை நய_தகு நிறையே
- பரி 11/140
|
32.
|
வளி
வரல் வையை வரவு - பரி 12/8
|
33.
|
அம்
தண் புனல் வையை யாறு என கேட்டு - பரி
12/10
|
34.
|
உரைதர
வந்தன்று வையை நீர் வையை/கரை தர வந்தன்று காண்பவர்
ஈட்டம் - பரி 12/32,33
|
35.
|
வல்லதால்
வையை புனல் - பரி 12/75
|
36.
|
நன்
பல நன் பல நன் பல
வையை/நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை
உலகே - பரி 12/101,102
|
37.
|
பூத்தன்று
வையை வரவு - பரி 16/19
|
38.
|
வறாஅற்க
வையை நினக்கு - பரி
16/25
|
39.
|
வாய்த்தன்றால்
வையை வரவு - பரி 16/31
|
40.
|
தேன்
இமிர் வையைக்கு இயல்பு - பரி 16/38
|
41.
|
கொடி
தேரான் வையைக்கு இயல்பு - பரி 16/47
|
42.
|
தொய்யா
விழு சீர் வளம் கெழு வையைக்கும்/கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும் - பரி 17/44,45
|
43.
|
தான்
நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை/தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று - பரி 20/11,12
|
44.
|
கூடல்
விழையும் தகைத்து தகை வையை/புகை வகை தைஇயினார் பூம் கோதை நல்லார் - பரி 20/26,27
|
45.
|
வையை
மடுத்தால் கடல் என தெய்ய - பரி
20/42
|
46.
|
வையை
தொழுவத்து தந்து வடித்து இடித்து - பரி 20/60
|
47.
|
ஊடினார்
வையை அகத்து - பரி 20/67
|
48.
|
தென்னவன்
வையை சிறப்பு - பரி 20/97
|
49.
|
பூ
மலி வையைக்கு இயல்பு - பரி 20/111
|
50.
|
சீர்
அணி வையைக்கு அணி-கொல்லோ வையை_தன் - பரி 22/32
|
51.
|
தீரமும்
வையையும் சேர்கின்ற கண் கவின் - பரி 22/35
|
52.
|
தீம்
புனல் வையை திருமருத முன்துறையால் - பரி 22/45
|
53.
|
காமரு
வையை சுடுகின்றே கூடல் - பரி 24/4
|
54.
|
நீர்
அணி கொண்டன்று வையை என விரும்பி - பரி
24/5
|
55.
|
முற்று
இன்று வையை துறை - பரி 24/27
|
56.
|
அகல்
அல்கும் வையை துறை - பரி 24/33
|
57.
|
தணிவு
இன்று வையை புனல் - பரி 24/50
|
58.
|
மழுபொடு
நின்ற மலி புனல் வையை/விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி - பரி 24/80,81
|
59.
|
தான்
தோன்றாது இ வையை ஆறு
- பரி 24/87
|
60.
|
வழி
நீர் விழு நீர அன்று வையை/வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் - பரி 24/90,91
|
61.
|
உரு
கெழு கூடலவரொடு வையை/வரு புனல் ஆடிய தன்மை பொருவும்_கால் - பரி 24/92,93
|
62.
|
தண்
வரல் வையை எமக்கு - பரி 25/4
|
63.
|
பரி_மா நிரையின் பரந்தன்று
வையை - பரி 26/2
|
64.
|
வையை
உண்டாகும் அளவு - பரி 32/4
|
65.
|
வையை
வரு புனல் ஆடல் இனிது-கொல் - பரி 35/1
|
கலித்தொகையில் வையை
|
|
66.
|
வையை
வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் - கலி 27/20
|
67.
|
வையை
வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் - கலி 28/7
|
68.
|
அறல்
வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் - கலி 30/16
|
69.
|
வண்ண
வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் - கலி 35/9
|
70.
|
தார்
முற்றியது போல தகை பூத்த வையை தன் - கலி 67/3
|
71.
|
வரை
உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை/கரை அணி காவின் அகத்து - கலி 92/12,13
|
72.
|
பொரு
கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை/வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது
என்னை - கலி 98/10,11
|
73.
|
வையை
புது புனல் ஆட தவிர்ந்ததை - கலி
98/31
|
அகநானூற்றில் வையை
|
|
74.
|
வரு
புனல் வையை வார் மணல் அகன் துறை - அகம் 36/9
|
75.
|
மை
எழில் உண்கண் மடந்தையொடு வையை/ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து - அகம் 256/10,11
|
76.
|
பெரு
நீர் வையை அவளொடு ஆடி - அகம் 296/5
|
புறநானூற்றில் வையை
|
|
77.
|
வையை
சூழ்ந்த வளம் கெழு வைப்பின் - புறம் 71/10
|
மதுரைக்காஞ்சியில் வையை
|
|
78.
|
அவிர்
அறல் வையை துறை_துறை-தோறும் - மது 340
|
79.
|
வையை
அன்ன வழக்கு உடை வாயில் - மது 356
|
முத்தொள்ளாயிரத்தில் வையை
|
|
80.
|
கொல்
யானை மாறன் குளிர் புனல் வையை நீர் - முத்தொள் 84/3
|
81.
|
வரி
வளை நின்றன வையையார் கோமான் - முத்தொள் 80/3
|
சிலப்பதிகாரத்தில் வையை
|
|
82.
|
வையை
என்ற பொய்யா குல_கொடி - மது 13/170
|
83.
|
வரு
புனல் வையை மருது ஓங்கு முன் துறை - மது 14/72
|
84.
|
நீடு
நீர் வையை நெடு மால் அடி ஏத்த - மது 18/4
|
85.
|
கையில்
தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் - மது 20/103
|
86.
|
உரவு
நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு - மது 23/185
|
87.
|
வையை
பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் - மது 23/212
|
88.
|
வையை
ஒருவழிக்கொண்டு - வஞ்சி 29/62
|
89.
|
வானவன்
எம் கோ மகள் என்றாம்
வையையார்/ கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை - வஞ்சி 29/118,119
|
90.
|
வாழ்த்துவோம்
நாமாக வையையார் கோமானை - வஞ்சி 29/120
|
91.
|
வாழியரோ
வாழி வரு புனல் நீர் வையை/சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே - வஞ்சி 29/124,125
|
92.
|
வரு
புனல் வையை வான் துறை பெயர்ந்தேன் - வஞ்சி 30/108
|
தேவாரத்தில் வைகை
|
|
திருஞானசம்பந்தர்
- திருமுறை
1,2,3
|
|
93.
|
பார்
ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து - தேவா-சம்:692/3
|
94.
|
செடி
ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே - தேவா-சம்:693/4
|
95.
|
ஓடி
நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே - தேவா-சம்:697/4
|
96.
|
மை
ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து - தேவா-சம்:698/3
|
97.
|
அம்
தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய - தேவா-சம்:958/1
|
98.
|
வைகையின்
வடகரை மருவிய ஏடகத்து - தேவா-சம்:3145/2
|
99.
|
தன்னுள்
ஆர் வைகையின் கரைதனில் சமைவுற - தேவா-சம்:3147/2
|
100.
|
கோடு
சந்தனம் அகில் கொண்டு இழி வைகை நீர் - தேவா-சம்:3149/1
|
தேவாரம்
- திருநாவுக்கரசர்
(அப்பர்) - திருமுறை 4,5,6 -
|
|
101.
|
மருப்பு
ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை - தேவா-அப்:2272/2,3
|
பெரியபுராணத்தில் வைகை
|
|
102.
|
பற்றிய
பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில் - 6.வம்பறா:1 799/3
|
103.
|
ஏடுகள்
வைகை-தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார் - 6.வம்பறா:1 807/1
|
104.
|
வென்று
உலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான் - 6.வம்பறா:1 810/3
|
105.
|
மன்னிய
வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் - 6.வம்பறா:1 811/4
|
106.
|
பார்
கெழு புகழின் மிக்க பண்பு உடை வைகை ஆறு - 6.வம்பறா:1 812/4
|
107.
|
பொரு
புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்து போகும் - 6.வம்பறா:1 846/3
|
108.
|
எங்களை
வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார் - 6.வம்பறா:1 1230/4
|
திருப்புகழில் வைகை
|
|
109.
|
வேற்று
உருவில் போந்து மதுராபுரியில் ஆடி வைகை ஆற்றில் மணல் தாங்கும் மழுவாளி என தாதை புரம்
- திருப்:756/11
|
110.
|
மாடை
ஆடை தர பற்றி முன்
நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் - திருப்:960/11
|
111.
|
ஆசித்தார்
மனதில் புகும் உத்தம கூடற்கே வைகையில் கரை கட்டிட - திருப்:1317/13
|
--------------------------------------------------------------
|
திருவிளையாடற் புராணத்தில்
வையை வைகை வேகவதி கிருதமாலை.
' வையை ' என்ற சொல் உள்ள பாடல்கள்
968.
வையைக் கிழவன் தன்
அருமை குமரன் தனக்கு மணம் புணர்ச்சி
செய்யக்
கருதும் திறம் நோக்கி அறிஞரோடும் திரண்ட அமைச்சர்
மை
அற்று அழியா நிலத் திருவும் மரபும் குடியும் புகழ்மையும் நம்
ஐயற்கு
இசையத் தக்க குலத்து அரசர்
யார் என்று அளக்கின்றார்.
2457.
சுருப்புக்
கமழ் தேம் கண்ணித் தொடுபைங்
கழல் ஆடவரும்
கருப்புச்
சிலை மன்னவனால் கருவிப் படை அன்னவரும்
விருப்புற்று
எறிநீர் வையை
வெள்ளைத் தரளம் தெள்ளிப்
பொருப்பில்
குவிக்கும் புளினம் புறம் சூழ் சோலை புகுவார்.
2660.
சூழும்
வார் திரை வையை அம் துறை கெழு
நாட்டுள்
கீழையார்
கலி முகத்தது நெய்தல் அம் கீழ் நீர்
ஆழ
நீள் கரும் கழி அகழ் வளைந்து
கார் அளைந்த
தாழை
மூது எயில் உடுத்தது ஓர் தண் துறைப்
பாக்கம்.
---------------------------------------------------
'வைகை' என்ற சொல் உள்ள பாடல்கள்
108.
குமிழ்
அலர்ந்த செந்தாமரைக் கொடி முகிழ் கோங்கின்
உமிழ்
தரும் பா ஞானம் உண்டு
உமிழ்ந்த வாய் வேதத்
தமிழ்
அறிந்து வைதிகம் உடன் சைவமும் நிறுத்தும்
அமிழ்த
வெண் திரை வைகையும் ஒரு புறத்து
அகழ் ஆம்.
113.
மகர
வேலை என்று யானை போல் மழை
அருந்து அகழிச்
சிகர
மாலை சூழ் அம் மதி
திரைக் கரம் துழாவி
அகழ
ஓங்கு நீர் வைகையால் அல்லது வேற்றுப்
பகைவர்
சேனையால் பொரப் படும் பாலதோ அன்றே.
171.
பெண்
முத்தம் அனைய பேதைச் சிறுமியர்
பெருநீர் வைகை
வெண்
முத்தம் இழைத்த சிற்றில் சிதை பட வெகுண்டு
நோக்கிச்
கண்
முத்தம் சிதறச் சிந்தும் கதிர் முத்த மாலைத் தட்பத்
எண்
முத்தின் நகைத்துச் செல்வச் சிறார்கள் தேர் உருட்டுவார்கள்.
239.
சுர
நதி சூழ் காசிமுதல் பதிமறுமைக்கு
கதி அளிக்கும் தூநீர் வைகை
வரநதி
சூழ் திருவால வாய் சீவன் முத்தி
தரும் வதிவோர்க்கு ஈது
திரன்
அதிகம் பரகதியும் பின்கொடுக்கும் ஆதலின் இச் சீவன் முத்தி
புரன்
அதிகம் என்பது எவன் அதற்கு அதுவே
ஒப்பாம் எப் புவனத்து உள்ளும்.
330.
புலி
முனியும் பணி முனியும் தொழ
வெள்ளி மன்றுள் நடம் புரிந்த வாறும்
வலி
கெழு தோள் குண்டு அகட்டுக்
குறட்கு அன்னக் குன்று அளித்த வகையும் பின்னும்
நலி
பசி நோய் கெட அன்னக்
குழி அசைத்துக் கொடுத்து நீர் நசைக்கு வைகை
அலைபுனல்
கூய் அருத்தியதும் பொன்மாலைக் எழு கடலும் அழைத்த
வாறும்.
470.
குடவயின்
அயிரா வதப் பெரும் தீர்த்தம்
குடைந்து அயிராவத கணேசக்
கடவுளைத்
தொழுது ஐராவதேச் சுரத்துக் கடவுளைப் பணிந்தவர் சாபத்
தொடர்பினும்
பாவத் தொடர்பினும் கழிவர் சுராதிபன் களிறு செல் ஏறிபோய்
இடர்
கெட வைகை
படிந்து தென் கரையில் இந்திரேச்
சுரன் அடி பணிவோர்.
875.
தீர்த்தன்
இதழிச் சடை நின்றும் இழிந்து
வரலால் சிவகங்கை
தீர்த்தன்
உருவம் தெளி வோர்க்கு ஞானம்
தரலால் சிவஞான
தீர்த்தம்
காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி
தீர்த்தம்
கிருத மாலை என
வைகை
நாமம் செப்புவர் ஆல்.
953.
காற்றினும்
கடிய மாவில் காவதம் பல போய் மீண்டும்
கூற்றினும்
கொடிய சீற்றக் குஞ்சரம் உகைத்தும் வைகை
ஆற்றின்
உய்யானத்து ஆவி அகத்தின் உள்
இன்பம் துய்த்தும்
வேல்
திறன் மைந்தரோடு மல் அமர் விளைத்து
வென்றும்.
1010.
அங்கு
அது கேடோர் யாரும் அகம் களி துளும்ப
இப்பால்
கொங்கு
அலர் நறும் தார் குஞ்சி உக்கிர
குமரன் போந்து
மங்கல
வரிசை மாண மத்த மான்
சுமந்த வைகைச்
சங்கு
எறி துறை நீராடித் தகும்
கடி வனப்புக் கொள்வான்.
1148.
அறத்துறை
அந்தணாளர் துறந்தவர் அரன் தாள் பற்றிப்
புறத்துறை
அகன்ற சைவபூதியர் புனிதன் கோயில்
நிறத்துறை
அகத்துத் தொண்டர் திரண்டு எதிர் கொள்ள முத்தின்
நிறத்துறை
வைகை
நீத்து நெடு மதில் வாயில்
புக்கான்.
1290.
நறிய
நெய் ஆதி ஆர நறும்
குழம்பு ஈறா ஆட்டி
வெறிய
கர்ப்புர நீர் ஆட்டி அற்புத
வெள்ளம் பொங்க
இறைவனை
வியந்து நோக்கி ஏத்துவான் எறிநீர் வைகை
துறைவ
நீ என் கர்ப்பூர சுந்தரனேயோ
என்றான்.
1344.
பருவம்
மாரிய பருவத்தில் வைகை
நீர் பரந்து
வருவது
ஆக்கியும் மீளவும் வறந்திடச் செய்தும்
பொருவி
தீம் சுவையோடு அடையும் பொய்கையும் உவர்ப்புத்
தருவ
ஆக்கியும் உவரியின் சுவையவாத் தந்தும்.
1596.
விரை
செய் தார் அவன் யான்
அங்கம் வெட்டினேன் அல்லேன் நீங்கள்
உரை
செய்வது எவன் யார் என்போல்
சித்தனை உடன்று மாய்த்து
வரை
செய் தோள் விந்தைக்கு ஈந்தார்
மற்று இது சுற்றம் வைகைத்
திரை
செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல்
கொல் என்றான்.
1797.
கல்லும்
ஆர் அழல் அத்தமும் பல
கலுழியும் குண கனை கடல்
செல்லும்
மா நதி பலவும் வான்
நிமிர் கன்னலும் செறி செந் நெலும்
புல்லு
மாநிலனும் கழிந்து புறம் கிடக்க நடந்து போய்
வல்லு
மா முலையார் கணம் பயில் வைகை அம் துறை எய்தினான்.
1798.
குறுகு
முன்னர் அதிர்ந்து வைகை
கொதித்து அகன் கரை குத்திவேர்
பறிய
வன் சினை முறிய விண்
தொடு பைந் தருக்களை உந்தியே
மறுகி
வெள்ளம் எடுத்து அலைத்தர மன்னவன் கரை தன்னில் நின்று
இறுதியில்
அவனைத் தொழற்கு இடையூறு இது என்று அஞர் எய்துவான்.
1799.
இழுதொடும்
சுவை அமுது பென் கலன் இட்டு
உணாது இரு கண் கணீர்
வழிய
வந்து விலக்குவாரின் வளைந்தது ஆறு பகல் செய்யும்
பொழுது
எழும் பொழுதோ மறுக்கம் விளைக்குமே இகல் பூழியன்
வழுதி
அன்றியும் வைகையும் பகை ஆனது
என்று வருந்தினான்.
1806.
மண்ணினை
வளர்க்கும் வைகை
வடகரை அளவு நண்ணிப்
புண்நிய
நீற்றுக் காப்புப் புண்டர நுதலில் சாத்தி
உள்
நிறை கருத்துக்கு ஏற்ப உறுதுணை உனக்கு
உண்டாகி
நண்ணுக
என்று பொன்னி நாடனை விடுத்து மீண்டு.
1854.
அறவன்
நீ அல்லையோ உன் அகத்தினுக்கு இசைந்த
செய்கென
இறைவனது
அருளால் வானின் எழுமொழி கேட்டு வைகைத்
துறைவனும்
அறத்தின் ஆற்றால் சோழனைச் சிலமால் யானை
மற
வயப் பரிபூண் மற்றும் வழங்கினான் விடுத்தான் பின்னர்.
1857.
பரும்
கை மால்வரைப் பூமியன் பைந்தமிழ் நாட்டின்
இரங்கு
தெண் திரைக் கரங்களால் ஈர்ம் புனல் வைகை
மருங்கில்
நந்தனம் மலர்ந்த பன் மலர் தூ
உய்ப் பணியப்
புரம்
கடந்தவன் இருப்பது பூவண நகரம்.
1982.
பூசத்
துறையில் புகுந்து ஆடியப் பொன்னித் தென்சார்
வாசத்து
இடை மா மருதைப் பணிதற்கு
வைகைத்
தேசத்தவன்
கீழ்த்திசை வாயில் கடந்து செல்லப்
பாசத்
தளையும் பழியும் புற நின்ற அன்றே.
2194.
முறை
என இமையோர் வேண்ட முளைத்த நஞ்சாய் இன்று சான்றாய்
உறை
என மிடற்றில் வைத்த உம்பரான் மதுரைக்கு ஆரம்
திறை
என எறி நீர் வைகைத்து எற்கது குரு
இருந்த
துறை
என உளது ஓர் செல்வத்
தொல் மணி மாடமூதூர்.
2298.
தேக்கு
நீர் வைகை
நாட்டு ஒரு தென் புலத்து
ஆக்கும்
மாடவை வைப்பு ஒன்று உள அவ்வயின்
வீக்கு
யாழ் செயும் வண்டுக்கு வீழ் நறவு
ஆக்கு
தாமரை வாவி ஒன்று உள்ளது
ஆல்.
2387.
பிணத்தினைக்
கோலி புண் நீர் ஆற்றினை
பெருக்கி உண் பேய்க்
கணத்தினை
உதைத்து நூக்கிக் கரை உடைத்து ஒருவன்
பூதம்
நிணத்தொடும்
வரும் அந் நீத்தம் நேர்
பட விருந்து கையால்
அணைத்து
வாய் மடுக்கும் வைகை
அருந்திய பூதம் என்ன.
2445.
தரை
கிழித்து எழுநீர் வைகைத் தடம் கரை
எக்கர் அல்குல்
அரமே
கலை சூழ்ந்து என்ன அலர்ந்து தாது
உகுப்ப ஞாழல்
மரகதம்
தழைத்து வெண் முத்து அரும்பிப்
பொன் மலர்ந்து வாங்கும்
திரை
கடல் பவளக்காடு செய்வன கன்னிப் புன்னை.
2621.
போன
இடைக் காடனுக்கும் கபிலனுக்கும் அகத்து உவகை பொலியும் ஆற்றான்
ஞான
மயம் ஆகிய தன் இலிங்க
உரு மறைத்து உமையா நங்கை யோடும்
வானவர்
தம் பிரான் எழுந்து புறம் போய் தன் கோயிலின்
நேர் வடபால் வைகை
ஆன
நதித் தென்பால் ஓர் ஆலம் கண்டு
அங்கண் இனிது அமர்ந்தான் மன்னோ.
2627.
சிலர்
வந்து மன்னா ஓர் அதிசயம் கண்டனம்
வைகைத் தென் சாராக
அலர்
வந்தோன் படைத்த நாள் முதல் ஒரு
காலமும் கண்டது அன்று கேள்வித்
தலை
வந்த புலவரொடு ஆலவய் உடைய பிரான் தானே
செம்பொன்
மலைவந்த
வல்லியொடும் வந்து இறை கொண்டு உறை
கின்றான் மாதோ என்றார்.
2628.
அவ்வுரை
தன் செவி நுழைந்து புகுந்து
ஈர்ப்ப எழுந்து அரசன் அச்சத்து ஆழ்ந்து
தெவ்வர்
முடித் தொகை இடறும் கழல்
காலான் அடந்து ஏகிச் செழுநீர் வைகை
கௌவை
நெடும் திரைக் கரத்தால் கடிமலர் தூய உய்ப்ப பணியத் தென்
கரைமேல் வந்து
மௌவல்
இள முகை மூரல் மாதி
னொடும் இருக்கின்ற மணியைக் கண்டான்.
2634.
தென்னவன்
இன்ன வண்ணம் ஏத்தினான் செம் பொன் கூடல்
மன்னவன்
கேட்டா ஆகாய வாணியால் வைகை நாட
உன்னது
சோத்த நாம் கேட்டு உவந்தனம்
இனிய தாயிற்று
இன்னம்
ஒன்று உளது கேட்டி என்றனன்
அருளிச் செய்வான்.
2714.
தொடுத்த
வறுமையும் பயனும் தூக்கி வழங்குநர் போல
அடுத்த
வயல் குளம் நிரப்பி அறம் பெருக்கி அவனி
எலாம்
உடுத்த
கடல் ஒருவர்க்கும் உதவாத உவரி என
மடுத்து
அறியாப் புனல் வைகைக் கரை உளது
வாதவூர்.
2926
ஞான
நாயகன் அணையா நரி பரி வெள்ளம்
ஆன
வாரு உரை செய்து மீண்டு
அப் பரி நரியாய்ப்
போன
வாறு கண்டு அமைச்சரைப் புரவலன் கறுப்ப
வான
ஆறு போல் வைகை
நீர் வந்தவாறு உரைப்பாம்.
2977.
கங்கைப்
புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச்
சங்கச்சரி
அறல் ஆம் மலர்த் தார்
ஓதியை நோக்கா
வங்கக்
கடல் பேர் ஊழியில் வருமாறு
என எவரும்
இங்கு
அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான்.
2978.
தும்பைச்
சடை முடியான் ஒரு சொல்லாடவும் முன்னாள்
வம்பைப்
பெரு முலையால் வரி வளையால் வடு
அழுத்தும்
கொம்பைத்
தவம் குலைப்பான் கடும் கோபம் கொடு நடக்கும்
கம்பை
பெரு நதியில் கடும் கதியால் வரும் வைகை.
2982.
வரை
உந்திய மது முல்லையின் எய்பாற
அயிர் மருதத்
தரை
உந்திய கரும்பின் குறை சாறு ஓடு
உவர் ஆறோடு
இரையும்
தெழு தூர் நிர் வைகை இந் நகர் வைகும்
திரையும்
தெழு கடல் தம்மிடம் சென்றால்
அவை போலும்.
2992.
பண்
சுமந்த மறை நாடரும் பொருள்
பதம் சுமந்த முடியார் மனம்
புண்
சுமந்த துயர் தீர வந்த பரி
நரிகளாய் அடவி போன பின்
விண்
சுமந்த சுர நதி எனப்
பெருகு வித்த வைகை
இது விடையவன்
மண்
சுமந்து திரு மேனிமேல் அடி
வடுச் சுமந்த கதை ஓதுவாம்.
3006.
குறட்கு
நீர் அருத்தி வைகைக் குடிஞையாய் ஒழுகும்
கங்கை
அறம்
குழல் பிரிவின் ஆற்றாது அன்பினால் அவளைக் காண்பான்
மறக்
கயல் நெடும் கணாளை வஞ்சித்து வடிவம் மாறிப்
புறப்படு
வாரைப் போலப் போதுவார் போத மூர்த்தி.
3040.
ஆண்
தகை வனப்பை நோக்கி அடிக்கவும் இல்லேம் அஞ்சி
ஈண்டினேம்
என்று கூற இம் என
அமைச்ச ரோடும்
பாண்டியன்
எழுந்து நாம் போய்ப் பங்கு
அடை பட்ட எல்லாம்
காண்டும்
என்று எறிநீர் வைகைக் குடிஞை அம்
கரையைச் சார்ந்தான்.
3160.
கையர்
மாளவும் நீற்றினால் கவுரியன் தேயம்
உய்வது
ஆகவும் இன்று நும் அருளினால் ஒலி
நீர்
வைகை நாடன் மேல் வெப்பு நோய்
வந்ததால் அதனை
ஐய
தீர்த்திடல் வேண்டும் என்று அடியில் வீழ்ந்து இரந்தார்.
3171.
ஐய
இச்சுரம் ஆற்றரிது ஆற்றரிது என்னா
வைகை நாடவன் வல் அமண் மாசு
தீர்ந்து அடியேன்
உய்ய
வேண்டுமேல் அதனையும் அடிகளே ஒழித்தல்
செய்ய
வேண்டும் என்று இரந்தனன் சிரபுரக் கோனை.
3217.
உங்களேடும்
எங்கள் ஏடும் உம்பர் வானளாய் விரைஇப்
பொங்கி
ஓடும் வைகை
நீரில் இடுக இட்ட போது
தான்
அங்கு
நீர் எதிர்க்கும் ஓலை வெல்லும் ஓலை
அன்றியே
துங்க
வேலை செல்லும் ஓலை தோற்கும் ஓலை
யாவதே.
3223.
ஊகம்
தவமும் பழு மரத்தை உதைத்துக்
கரை மாறிட ஒதுக்கிப்
பூகம்
தடவி வேர் கீண்டு பொருப்பைப்
பறித்துப் புடை பரப்பி
மாகம்
துழாவிக் கடுகிவரும் வைகைப் புனலை மந்திரத்தால்
வேகம்
தணிவித்து ஏடு எழுதி விடுத்தார்
முன் போல் வெள்காதார்.
3338.
இந்
நதி வெண் முத்து ஆரம்
எனக் கிடந்து இலங்கும் சென்னி
மன்னவன்
நாடு ஈது என்ப தமிழ்
அறி வைகைப் பேர்யாறு
அந்நதி
துறக்க மண்மேல் வழுக்கி வீழ்ந்தாங்குத் தோற்றித்
தென்னவன்
நாடு சேய்த்தாத் தெரிவதே காண்மின் என்றான்.
3345.
கொண்டல்
படியும் திருவாப்பனூரும் தொழுது குளிர்திரைக்கை
வண்டு
படியும் கமலமுக வைகைப் பிராட்டி எதிர்
வண்ங்கிக்
கண்டு
பணிந்து திசை எட்டும் விழுங்கி
அண்டம் கடந்து உலகம்
உண்ட
நெடியோன் என உயர் கோபுரம்
முன் இறைஞ்சி உள்புகுதா.
--------------------------------------------------------
'வேகவதி' என்ற சொல் உள்ள பாடல்கள்
875.
தீர்த்தன்
இதழிச் சடை நின்றும் இழிந்து
வரலால் சிவகங்கை
தீர்த்தன்
உருவம் தெளி வோர்க்கு ஞானம்
தரலால் சிவஞான
தீர்த்தம்
காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி
தீர்த்தம்
கிருத
மாலை
என வைகை
நாமம் செப்புவர் ஆல்.
3228.
பொருப்பே
சிலையாய் புரம் கடந்த புனிதனே எத்தேவர்க்கும்
விருப்பேய்
போகம் வீடுதரும் மேலாம் கடவுள் என நான்கு
மருப்பேய்
களிற்றான் முடி தகர்த்தான் மருமான்
அறியக் குருமொழி போல்
நெருப்பே
அன்றி வேகவதி நீரும்
பின்னர்த் தேற்றியதால்.
'கிருதமாலை ' என்ற சொல் உள்ள பாடல்கள்
875.
தீர்த்தன்
இதழிச் சடை நின்றும் இழிந்து
வரலால் சிவகங்கை
தீர்த்தன்
உருவம் தெளி வோர்க்கு ஞானம்
தரலால் சிவஞான
தீர்த்தம்
காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி
தீர்த்தம்
கிருத மாலை என
வைகை
நாமம் செப்புவர் ஆல்.
அன்பன்
காசிசீர்,
முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி
14 (01.10.2019) செவ்வாய் கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக