வெள்ளி, 27 செப்டம்பர், 2019

மதுரையும் கூடல்நகரும் திருவாலவாயும்

மதுரையும் கூடல்நகரும் திருவாலவாயும்

தற்போது தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ளது பண்டைய கூடல்நகர் என்ற ஆலவாய் நகரம் என்று நான் எழுதியுள்ளதால், தற்போதைய மதுரை நகரின் தொன்மை பற்றிய ஐயத்தை நண்பர்கள் எழுப்புகின்றனர்.

அதற்கான விளக்கத்தைத் திருவிளையாடல் புராணத்தின் அடிப்படையில் கொடுத்துள்ளேன்.

1) தற்போதுள்ள மதுரையே தொன்மையான மதுரை நகரமாகும்,....
2) இது கடல்கோளால் அழிந்து போனது.,..
3) அயலகத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழர் மீண்டும் மதுரையைத் தேடிக்கண்டறிந்து, கீழடி யருகே தொல்லியலாளர் கண்டுபிடித்துள்ள கூடல் நகரில் குடியேறி நகர் உண்டாக்கி அரசாட்சி அமைத்து தமிழ்ச்சங்கம் அமைத்து ஆராய்ந்துள்ளனர்.
4) வணிகன் ஒருவன், கடல்கோளால் அழிந்துபோன் தொன்மையான மதுரை நகரின் சிவலிங்கம் கடம்பவனத்தினுள்ளே இருப்பதைக் கண்டறிந்து கூடல்நகர் மன்னன் குலசேகரபாண்டியனிடம் வந்து கூறுகிறான்.
5) அந்த இடத்தில் இருந்த கடம்வனத்தை அகற்றிக் கடல்கோளால் அழிந்த மதுரை இருந்த இடத்திலேயே தற்போதுள்ள மதுரை நகரைக் குலசேகரபாண்டியன் உருவாக்குகிறான்.
6) கூடல் நகரிலிருந்த மக்கள் எல்லாம் தற்போதுள்ள மதுரையில் குடியமர்த்தப்படுகின்றனர்.
7) கூடல் நகரம் கைவிடப்பட்ட நகரமாக மாறுகிறது.
8) மீண்டும் ஒரு கடல்கோள். தற்போதுள்ள மதுரைவரை கடல் வந்து அழித்துள்ளது. கூடல் நகரம் முற்றிலுமாக இந்தக் கடல்கோளால் அழிந்துபோனது.
9) கடல்கோளால் அழிந்த கூடல்நகருக்கு ஆலவாய் என்ற பெயர் வைத்துள்ளனர்.
10) கடல்கோளால் அழிந்து போன நக்கீரன் வாழ்ந்த சங்கத்தமிழ் வளர்த்த கூடல்நகரை இப்போது திரு அமர்நாத் தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ளார். ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முடிவாக நான் சொல்லவருவது - தற்போதுள்ள மதுரைக்குக் கீழே கூடல்நகர் என்ற ஆலவாய் நகருக்கும் முந்திய தொன்மையான மதுரை மாநகர் புதைந்துள்ளது என்பதே. திரு அமர்நாத் அவர்களது கருத்துப்படி தற்போதுள்ள மதுரையில் அகழாய்வு நடைபெற வேண்டும். அந்த அகழாய்வு தமிழரின் தொன்மையை கி.மு.3000க்குமுன் கொண்டு செல்லும்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக