கீழடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீழடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 செப்டம்பர், 2021

உறைகிணறுகளா?

படம் - நன்றி - https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2021/jul/15/கீழடி-அகழாய்வில்-சுடுமண்-உறைகிணறு-கண்டுபிடிப்பு-3660277.html

கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.  அகரத்தில் மட்டும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 7 உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது.  6ஆம் கட்ட அகழாய்வில் 28 அடுக்குகள் கொண்ட உறைகிணற்றின் அருகே, தற்போது, 7ஆம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக ஒரு உறைகிண கண்டறியப்பட்டுள்ளது.  இதில் அகரத்தில் 6வது குழியில் 20 முதல் 25 செ.மீ உயரமுள்ள உறைகள் கொண்ட 3 அடுக்குகளுடன் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.  உறைகிணறுகளின் உள்ளே எந்த பொருளும் கிடைக்க வில்லை.  ஆனால் உறைகிணறுகளின் அருகே மண் பாத்திரங்கள் கிடைத்துள்ளன.  அதனை வைத்து உறைகிணறுகளில் தண்ணீர் எடுத்து இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.


அந்தக்காலத்தில் குடிநீர்க் கிணறுகளில் மூங்கில் மரத்தினால் உறை செய்யப்பட்டிருக்கும்.  இவ்வாறான கிணறுகளில் இருந்த மூங்கில் உறைகள் மக்கி மண்ணோடு மண்ணாகிவிட்டன. ஆனால் இந்தக் கிணறுகளின் அடிப்பகுதியில் விழுந்த பானைகள் உடைந்து வட்டவடிவமாக இருக்கும்.



இந்தச் சுடுமண்உறைகிணறுகள் குடிநீர் எடுப்பதற்கானவை அல்ல....
இவற்றின் பயன்பாடு அறிவியல் அடிப்படையிலான ஆய்விற்கு உரியது.

வியாழன், 15 ஜூலை, 2021

கீழடியில் கிடைப்பன உறைகிணறுகளா ? செப்டிக்டேங்குகளா?

கீழடியில் கண்டறியப்படுவன

உறைகிணறுகளா? அல்லது

மனிதக் கழிவுநீர்த் தொட்டிகளா(septic tank)?

கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. அகரத்தில் மட்டும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 7 உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. 6ஆம் கட்ட அகழாய்வில் 28 அடுக்குகள் கொண்ட உறைகிணற்றின் அருகே, தற்போது, 7ஆம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக ஒரு உறைகிண கண்டறியப்பட்டுள்ளது. இதில் அகரத்தில் 6வது குழியில் 20 முதல் 25 செ.மீ உயரமுள்ள உறைகள் கொண்ட 3 அடுக்குகளுடன் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. உறைகிணறுகளின் உள்ளே எந்த பொருளும் கிடைக்க வில்லை. ஆனால் உறைகிணறுகளின் அருகே மண் பாத்திரங்கள் கிடைத்துள்ளன. அதனை வைத்து உறைகிணறுகளில் தண்ணீர் எடுத்து இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கின்றனர்.

அகலம் குறைவான இந்தத் தொட்டிகளில் உள்ளே உடைந்த மண்பாண்டங்கள் ஏதும் கிடைக்காத காரணத்தினால், கீழடியில் தோண்டிக் கண்டறியப்படும் உறைகிணறுகள் உண்மையில் கிணறுகளாக இருக்க வாய்ப்பில்லை. அவை மனிதக் கழிவுநீர்த் தொட்டிகளாக இருக்கலாம். அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

படித்தது 1) https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2021/jul/15/கீழடி-அகழாய்வில்-சுடுமண்-உறைகிணறு-கண்டுபிடிப்பு-3660277.html

படித்தது 2) மெசொபடோமியாவில் உர் (Ur, Mesopotamia) அருகே கண்டறியப்பட்டுள்ள கிமு 4000 க்கு முந்தைய நாகரிகமும் கீழடி நாகரிகமும் ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

British archaeologist Leonard Woolley and his wife Catherine at the moment of the discovery of pottery pipes that were used as a sewage and rainwater network in what is considered the first water drainage system in history before about 4000 BC.
Within the archaeological excavations of the ancient city of Ur (Mesopotamia) in 1930.

சனி, 14 மார்ச், 2020

கீழடி அகழ்வாராய்ச்சி நீளமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

தினத்தந்தி செய்தி - 
கீழடி அகழ்வாராய்ச்சியில் 
நீள சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.


பதிவு: மார்ச் 15,  2020 04:00 AM திருப்புவனம்.
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவு பெற்று தற்சமயம் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.  கடந்த மாதம் 19-ந் தேதியிலிருந்து பணிகள் தொடங்கப்பட்டு, கீழடி நீதியம்மாள் நிலத்தில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கீழடியில் ஏற்கனவே குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சிறிய பானைகளும், செங்கற்களால் ஆன சிறிய சுவரும் கண்டுபிடிக்கப்பட்டது.  தற்போது தொடர்ந்து பணிகள் செய்யும் போது சிறிய சுவரின் தொடர்ச்சியாக நீள சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுவர் பழைய சுவருடன் இணைந்தே உள்ளது.  தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணியின் போது இன்னும் பல அரிய பொருட்கள் கிடைக்கக் கூடும் என்று தெரிய வருகிறது. கொந்தகையில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அகரம் பகுதியிலும் சுத்தம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
https://www.dailythanthi.com/News/Districts/2020/03/15023728/Archaeological-kiladi--Long-wall-discovery.vpf

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

மதுரையும் கூடல்நகரும் திருவாலவாயும்

மதுரையும் கூடல்நகரும் திருவாலவாயும்

தற்போது தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ளது பண்டைய கூடல்நகர் என்ற ஆலவாய் நகரம் என்று நான் எழுதியுள்ளதால், தற்போதைய மதுரை நகரின் தொன்மை பற்றிய ஐயத்தை நண்பர்கள் எழுப்புகின்றனர்.

அதற்கான விளக்கத்தைத் திருவிளையாடல் புராணத்தின் அடிப்படையில் கொடுத்துள்ளேன்.

1) தற்போதுள்ள மதுரையே தொன்மையான மதுரை நகரமாகும்,....
2) இது கடல்கோளால் அழிந்து போனது.,..
3) அயலகத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழர் மீண்டும் மதுரையைத் தேடிக்கண்டறிந்து, கீழடி யருகே தொல்லியலாளர் கண்டுபிடித்துள்ள கூடல் நகரில் குடியேறி நகர் உண்டாக்கி அரசாட்சி அமைத்து தமிழ்ச்சங்கம் அமைத்து ஆராய்ந்துள்ளனர்.
4) வணிகன் ஒருவன், கடல்கோளால் அழிந்துபோன் தொன்மையான மதுரை நகரின் சிவலிங்கம் கடம்பவனத்தினுள்ளே இருப்பதைக் கண்டறிந்து கூடல்நகர் மன்னன் குலசேகரபாண்டியனிடம் வந்து கூறுகிறான்.
5) அந்த இடத்தில் இருந்த கடம்வனத்தை அகற்றிக் கடல்கோளால் அழிந்த மதுரை இருந்த இடத்திலேயே தற்போதுள்ள மதுரை நகரைக் குலசேகரபாண்டியன் உருவாக்குகிறான்.
6) கூடல் நகரிலிருந்த மக்கள் எல்லாம் தற்போதுள்ள மதுரையில் குடியமர்த்தப்படுகின்றனர்.
7) கூடல் நகரம் கைவிடப்பட்ட நகரமாக மாறுகிறது.
8) மீண்டும் ஒரு கடல்கோள். தற்போதுள்ள மதுரைவரை கடல் வந்து அழித்துள்ளது. கூடல் நகரம் முற்றிலுமாக இந்தக் கடல்கோளால் அழிந்துபோனது.
9) கடல்கோளால் அழிந்த கூடல்நகருக்கு ஆலவாய் என்ற பெயர் வைத்துள்ளனர்.
10) கடல்கோளால் அழிந்து போன நக்கீரன் வாழ்ந்த சங்கத்தமிழ் வளர்த்த கூடல்நகரை இப்போது திரு அமர்நாத் தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ளார். ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முடிவாக நான் சொல்லவருவது - தற்போதுள்ள மதுரைக்குக் கீழே கூடல்நகர் என்ற ஆலவாய் நகருக்கும் முந்திய தொன்மையான மதுரை மாநகர் புதைந்துள்ளது என்பதே. திரு அமர்நாத் அவர்களது கருத்துப்படி தற்போதுள்ள மதுரையில் அகழாய்வு நடைபெற வேண்டும். அந்த அகழாய்வு தமிழரின் தொன்மையை கி.மு.3000க்குமுன் கொண்டு செல்லும்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

சனி, 21 செப்டம்பர், 2019

கீழடி அல்ல. இது கூடல்நகர் என்ற ஆலவாய்நகர்

கீழடி அல்ல, இது கூடல்நகர் .
ஆலவாய்நகர் என்ற மதுரை மாநகரம்.


“பூவின் இதழகத்து அனைய தெருவம்; 
இதழகத்து அரும் பொகுட்கு அனைத்தே, அண்ணல் கோயில்” 
என்று மதுரையின் அமைப்பைக் குறிப்பிடுகிறது பரிபாடல்.

மாயோன் கொப்பூழில் தாமரை மலர்ந்துள்ளதாம்.  அந்தத் தாமரைப் பூவின் இதழ்களைப் போன்ற வடிவத்தில் மதுரைமாநகரின் தெருக்கள் இருக்கின்றனவாம்.  தாமரைப் பூவின் பொகுட்டு போன்று, மதுரை நகரின் நடுவில் அண்ணல் (சிவன்) கோயில் உள்ளதாம்.  ஆனால் இன்றைய மதுரை நகரமானது தாமரை இதழ்கள் போன்ற வடிவில் இல்லாமல் சதுரவடிவில் உள்ளது.  சங்கத் தமிழ்ப் புலவருக்குத் தாமரையின் இதழ் வடிவத்திற்கும் சதுரவடிவத்திற்கும் வேறுபாடு தெரியாதா என்ன?  பரிபாடலில் குறிப்பிடப் பெற்றுள்ள தாமரைப் பூவின் இதழ்களைப் போன்ற தெருக்களைக் கொண்ட மதுரை எங்கே உள்ளது?

மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றம் உள்ளதாம்.  இதை “மாடமலி மறுகில் கூடல் குடவயின்” என்று பாடுகிறார் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரன். “கூடற் குடவயின் பரங்குன்று” என்று அகநானூறும் குறிப்பிடுகிறது.   திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே உள்ளதாக நக்கீரன் குறிப்பிடும் மதுரை எங்கே உள்ளது?  அகநானூறு குறிப்பிடும் மதுரை எங்கே உள்ளது?

செழியன் கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,  - எருக்காட்டூர் தாயங்கண்ணனார்  (அகம்-149)



திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே கீழடிதான் உள்ளது.  கீழடி அருகேதான் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது.  கீழடி அருகே புதையுண்டுள்ள நகரம்தான் பண்டைய கூடல்நகரமா? இதுதான் பண்டைய ஆலவாய் நகரமா?  இந்த நகரத்தின் தெருக்கள் தாமரைப்பூவின் இதழ்களைப் போன்ற அமைப்பில் உள்ளனவா? இந்த நகரத்தின் மையப்பகுதியில் அண்ணல் (சிவன்) கோயில் உள்ளதா?

அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே சுமார் 500 மீட்டர் கிழக்கே சிவலாயம் ஒன்று மண்ணுள் புதைந்து கிடக்கிறது. நந்தியின் தலைப்பகுதி மட்டும் காணும்படி உள்ளது. இந்தக் கோயிலே பரிபாடலில் குறிப்பிடப் பெற்றுள்ள அண்ணல் (சிவன்) கோயிலாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.



பண்டைய மதுரைமாநகரத்தை ஆட்சி செய்த குலசேகரபாண்டியன் இப்போதுள்ள மதுரை நகரை உருவாக்கினான் என்றும், அவன் ஆட்சி செய்த பண்டைய மதுரை மாநகரமானது கடல்கோளால் அழிந்து போனது என்றும் குறிப்பிடுகிறது திருவிளையாடற் புராணம்.   இதனால் இப்போது அகழ்வாய்வு நடைபெறும் இடமே நக்கீரர் காலத்தில் மதுரையாக இருந்துள்ளது என்பதும்,  அகநானூறு குறிப்பிடும் மதுரையும் இதுவே என்பதும் தெளிவு.

பரிபாடலில் குறிப்பிடப்பெற்றுள்ளபடி, அகழ்வாராய்ச்சி செய்யப்பெற்று வரும் இடத்திற்கு மிகஅருகே அண்ணல்கோயில் ஒன்று புதையுண்டு இருக்கிறது.  இந்தப் புதையுண்டுள்ள நகரத்தின் தெருக்கள் மட்டும் தாமரைப்பூவின் இதழ்களின் வடிவத்தில் அமைந்திருந்தால் போதும்.  பரிபாடலில் குறிப்பிடப்பெறும் பண்டைய மதுரை இதுவே என உறுதியாகச் கூறலாம்.

தொல்லியலாளர் போற்றுவோம்,
தமிழரின் தொன்மை போற்றுவோம்,
கூடல்நகர் போற்றுவோம்,
திருவாலவாய் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
22.09.2019
-------------------------
பரிபாடல் திரட்டு (எட்டாம் பாடல்)
மதுரை
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்கு அனைத்தே, அண்ணல் கோயில்;
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
தாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.
--------------------------------


சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10

வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 19                     
                                                         - எருக்காட்டூர் தாயங்கண்ணனார்  (அகம்-149)

149. எளிதாகப் பெற்றாலும் வாரேன்!
பாடியவர்: எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார். திணை: பாலை. துறை: தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. சிறப்பு : சேரநாட்டுடன் யவனர் செய்த வாணிகச் செய்தியும், செழியனின் மதுரைக்கு மேற்கிலுள்ள திருப்பரங் குன்றத்து வளமும், (தன் நெஞ்சத்திலே பொருள்தேடி வருதல் வேண்டுமென்ற ஆர்வம் எழ, முன்னர்த், தான் அப்படிப் பிரிந்த காலத்திலே, தன் தலைவி அடைந்த வேதனை மிகுதியை மறவாத தலைவன், தான் வாரேன் எனத் தன் நெஞ்சிற்குக் கூறிப்போவதை நிறுத்தி விட்டான். அதுபற்றிக் கூறுவது இச்செய்யுள்)
சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த, நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின். புல்லரை இருப்பைத் தொள்ளை முனையின், பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும் அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும் வாரேன்-வாழி, என் நெஞ்சே!-சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 1 O

மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 65
வளர்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ, அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய நெடுநல் யானை அடுபோர்ச் செழியன் கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது, 15 பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய,
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் - அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 20
சிறிய புல்லிய கறையான் முயன்று எழுப்பிய மிகவும் உயரமான சிவந்த புற்றினுள் மறைந்து கிடக்கும் புற்றாஞ் சோற்றினைப், பெரிய கையினையுடைய கரடியின் பெரிய சுற்ற மானது தின்னும் அதுவும் வெறுத்துவிட்டதானால், புற்கென்ற அரையினையுடைய இருப்பையின் தொளையுடைய வெண்மை யான பூக்களைக் கவர்ந்து உண்ணும். அத்தகைய சுரத்திலே நெடுந்தொலைவு சென்று, மிகவும் அரிதாக ஈட்டத்தக்க உயர்ந்த பொருளை எளிதாக யான் பெற்றாலும்கூட -
சேர மன்னர்களது, ‘சுள்ளி’ எனப்படும் அழகிய பேராற்றினது வெண்மையான நுரைகள் சிதறிப் போகுமாறு, நல்ல தொழில் மாண்புடைய மரக்கலத்திலே யவனர் பொன்னோடு வந்து மிளகோடு திரும்பிப் போகும் நல்ல வளங்கெழுமிய ஊர் முசிறி ஆகும். அதன்கண், ஆரவாரம் எழுமாறு முற்றுகையிட்டு, நடந்த அரிய போரையும் வென்று, அங்குள்ள பொற்பாவையையுங் கவர்ந்து வந்தவன், நெடிய நல்ல யானைப் படையினையும் வெல்லும் போராற்றலையும் உடையவனாகிய செழியன். அவனுடைய கொடியசையும் தெருக்களையுடைய மதுரைமா நகருக்கு மேற்குப்புறத்தே இருப்பது திருப்பரங்குன்றம். பல புள்ளிகளையுடைய மயிலின் வெற்றிக்கொடியினை உயர்த்திருப்பது அது. இடையறாத விழாக்களையும் அது உடையது. நெடியோனாகிய முருகனின் அந்தத் திருப்பரங்குன்றின் குண்டு சுனையிலே, வண்டினம் மொய்க்க இதழ் விரிந்த புதிய நீலப்பூவின் ஒத்த மலர்கள் இரண்டின் சேர்க்கையைப் போன்ற, இவளது செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ச்சியான கண்கள் தெளிந்த கண்ணிரினைக் கொள்ளுமாறு, நெஞ்சமே! இவளைப் பிரிந்து யான் நின்னோடு வருவேனல்லேன். நீ போய் நின் வினையை முடித்து வாழ்வாயாக! என்று, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் .
அகநானூறு - மணிமிடை பவளம்
சொற்பொருள்: 1. சிதலை - கறையான். 2. நெடுஞ்செம் புற்று - உயரமான சிவந்த புற்று. ஒடுங்கு இரை உள்ளே மறைந்து கிடக்கும் இரையான புற்றாஞ் சோறு. முனையில் - வெறுத்தால், 3. வான்பூ - வெண்மையான பூ எண்கு கரடி இருங்கிளை பெரிய சுற்றம், 9. யவனர் - அயோனியர் போன்ற மத்திய தரைக்கடல் நாட்டவர். கலம் - மரக்கலம். 10, கறி மிளகு, 12. படிமம் - பாவை. 16. ஒடியா விழவு - இடையறாத விழாக்கள். 17. குண்டு சுனை - வட்டமான ஆழச்சுனை.
https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகநானூறு-மணிமிடை_பவளம்-மூலமும்_உரையும்-2.pdf/81
_________________

மதுரை மாநகரத்தின் மேற்கே இருப்பது திருப்பரங் குன்றம்.

'' செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போல்அரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதிர் நியமித்து
மாடமலி மறுகிற் கூடற் குடவயின்

இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று''   -- (நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படை)

போருக்கு அறை கூவிக் கட்டிய நெடுந்துரம் உயர்ந்த நெடிய கொடிக்கருகே, வரிந்து புனையப்பட்ட பந்து பாவையோடு தொங்க, யுத்தம் செய்வாரை ஒடுக்கிய போர் இல்லாத வாயிலையும், திருமகள் வீற்றிருந்த குற்ற மற்ற அங்காடி வீதியையும், மாடங்கள் மலிந்த வீதியை யும் உடைய கூடல் மாநகரத்தின் மேற்கே.  மலையின் அடிவாரத்துக்கருகே விரிந்த வயல்கள் இருக்கின்றன. நீர்வளமும் நிலவளமும் செறிந்தவை அந்த வயல்கள் என்பதை அங்குள்ள கரிய சேறு காட்டு கிறது. சேற்றிடையே விரிந்து வாயவிழ்ந்த தாமரை மலர்கள், முள்ளைத் தண்டிலே கொண்ட தாமரை மலர்கள் உள்ளன. கட்டுக் காவலுள்ள இடத்தைப் போலத் தாமரையின் தண்டு, எதுவும் ஏறி வராதபடி முள்ளுடன் இருக்கிறது. மலர்களில் வண்டுக்கூட்டங்கள் தங்கி ஒய்யாரமாக இருக்கின்றன. மாலைக்காலம் வந்து விட்டது. தாமரை மலர்கள் மூடிக் கொண்டன. மெத் தென்ற மலர்ப் படுக்கையில் வண்டுகள் சுகமாகத் துங்கிப் போகின்றன.

செரு-யுத்தம். பொருநர்-பொருபவர். நியமம்கடைவீதி, மறுகு-வீதி. குடவயின்-மேற்குத் திக்கில்.)
(கரிய சேற்றையுடைய அகன்ற வயலில் விரிந்து மலர்ந்த முள்ளையுடைய தண்டைப் பெற்ற தாமரை மலரில் தூங்கி, விடியற் காலையில் தேன் பரந்த நெய்தல் மலரை ஊதி, சூரியன் உதயம் ஆனவுடன் கண்ணைப் போல மலர்ந்த அழகிய சுனைகளில் உள்ள மலர்களிலே சிறைகளையுடைய வண்டின் அழகிய கூட்டம் ரீங்காரம் செய்யும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருத்தலையும் உடையவன். அதுவேயன்றி.
இரு - கரிய. எல் பட - சூரியன் உதிக்க. அரி - அழகு. குன்று - திருப்பரங்குன்றம்.)
https://ta.wikisource.org/wiki/பக்கம்:வழிகாட்டி.pdf/79

செவ்வாய், 8 ஜனவரி, 2019

கீழடி அருகே பழங்கால சுவர் கண்டுபிடிப்பு

கீழடி அருகே 
லாடனேந்தலில் 
பழங்கால சுவர் கண்டுபிடிப்பு

தினமலர் செய்தி  Added : ஜன 08, 2019  00:01 


திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே லாடனேந்தலில் ரயில்வே சுரங்கப்பாதை பணியின் போது பழங்கால சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. லாடனேந்தலில் மதுரை- ராமேஸ்வரம் ரயில் பாதை குறுக்கே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடக்கிறது. கடந்த மாதம் இப்பகுதியில் பழங்கால உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. கீழடி அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்த தமிழக தொல்லியல் ஆய்வுக் குழுவினர், அப்பொருட்களை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர்.தற்போது பழங்கால கட்டட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சுவர்களில் உள்ள செங்கல் நீள்வாக்கிலும், உயரம் குறைந்தும் காணப்படுகிறது. சுவர் அருகே மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகளும் இருந்தன. தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை. கீழடியை தொடர்ந்து லாடனேந்தல், கீழடி கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொள்வதுடன், சுரங்க பாதை பணியின் போது கிடைத்து வரும் பொருட்களை பாதுகாக்க வேண்டும்.

தினமலர் செய்தி https://www.dinamalar.com/news_detail.asp?id=2186607
-------------------------------------------------------------------------------------------------

ரெயில்வே சுரங்கப்பாதை பணியின் போது பண்டைய கால பொருட்கள் கண்டுபிடிப்பு
மாலைமலர் செய்தி
பதிவு: ஜனவரி 09, 2019 23:27

ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது பழங்காலத்து செங்கல் கட்டிடங்கள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகள், மணிகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன.
ரெயில்வே சுரங்கப்பாதை பணியின் போது பண்டைய கால பொருட்கள் கண்டுபிடிப்பு
திருப்புவனம்:
திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தின் வழியாக டி.ஆலங்குளம் கிராமத்திற்கு செல்லும் பாதை உள்ளது. இந்த பாதையின் குறுக்கே மதுரை-ராமேசுவரம் ரெயில் தண்டவாளம் உள்ளது. இந்த வழியாக விவசாய பொருட்கள் கொண்டு செல்ல ஏதுவாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து, ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.1¼கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அப்போது வடக்கு பகுதியில் பழங்கால உறை கிணறும், தென்புறத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது பழங்காலத்து செங்கல் கட்டிடங்கள் இருப்பதும், மேலும் மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகள், மணிகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன. இதுகுறித்து கீழடியில் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில் உறை கிணறு 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பண்டைய காலத்து கிணறு என்று தெரிவித்தனர். இதையடுத்து கீழடி போன்று லாடனேந்தல் பகுதியிலும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
https://www.maalaimalar.com/News/District/2019/01/09232736/1222131/ancient-discovery-of-inventory-during-the-railway.vpf
---------------------------------------------------------------------------------------------------------------

லாடனேந்தல் அருகே இருப்புப்பாதைக்காகத் தோண்டிய போது சிலமாதங்களுக்கு முன்னர் உறைகிணரு கண்டுபிடிக்கப்பட்டது.  இப்போது, தொல்லியல் சுவர் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது.

தோண்டத் தோண்டத் தமிழரின் தொன்மையான வரலாற்றுச் சுவடுகள் காணக்கிடக்கின்றன. தமிழரின் தொன்மையைத் தமிழகஅரசு முறையாக ஆவணப்படுத்தி உலகறியச் செய்ய வேண்டும்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


வியாழன், 11 அக்டோபர், 2018

லாடனேந்தலில் பழமையான உறைகிணறு கண்டெடுப்பு

திருப்புவனம் அருகே லாடனேந்தலில்
2 ஆயிரம் ஆண்டு பழமையான
உறைகிணறு கண்டெடுப்பு

தினகரன் செய்தி
 2018-10-10@ 20:20:20


திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழடியில் தமிழர் நாகரிகத்தை அறியும் வகையில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. 4 கட்டங்களாக நடந்த ஆய்வில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம் கீழடியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள், நகரங்கள் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கீழடி கண்மாயில் நேற்றுமுன் தினம் பழமையான உறைகிணறு கண்டறியப்பட்டது.

திருப்புவனம் அருகே லாடனேந்தலில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது. இதற்காக இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது உறைகிணறு தென்பட்டது. இதுகுறித்து கீழடியில் உள்ள தமிழக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொல்லியல் துறையினர் உறைகிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இயந்திரம் தோண்டும்போது உறை கிணற்றின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும் சேதமடையாமல் இருக்க தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ‘லாடனேந்தலில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறு 2 ஆயிரம் ஆண்டு பழமையானது’ என்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=442295

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

Theory of Tsunamis பசியாபுரம் தொல்லியல் தடையங்கள் கண்டுபிடிப்பு


Theory of Tsunamis 
பசியாபுரம் 
தொல்லியல் தடையங்கள் கண்டுபிடிப்பு


தினமலர்செய்தி -
திருப்புவனம், அக்.7--2018
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பசியாபுரம் அருகே கண்மாயில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய பழங்காலத்து உறைகிணற்றை சிறுவர்கள் கண்டறிந்துஉள்ளனர்.திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் 4ம் கட்ட அகழாய்வு முடிவடைந்து விட்டது. கீழடியில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ளபசியாபுரம் அருகே கிராம கண்மாயில் நேற்று சிறுவர்கள் மணல் அள்ளிய பள்ளங்களில் விளையாடினர். அப்போது பழங்கால மண்பானையை கண்டு கீழடியில் இருந்த தமிழக தொல்லியல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையிலான அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்ததில் மூன்று அடுக்குகள் கொண்ட உறைகிணறும் தண்ணீர் எடுக்க பயன்படுத்திய மூன்று மண் பாத்திரங்களும் இருந்தன. ஒரு மண் பானை சேதமடையாமல் முழுமையாக கிடைத்துஉள்ளது. கீழடியில் கிடைத்த உறைகிணறுகள் சாதாரணமானகிணறுகள். பசியாபுரம் அருகே கண்மாயில் வேலைப்பாடுடன் கூடிய கிணறும் தண்ணீர் எடுக்க பயன்படும் பாத்திரங்களும் கிடைத்துள்ளன.  


பசியாபுரம் - இருப்பிடம்
தொல்லியல்துறையினர் அகலாய்வு செய்து வரும் இடத்திற்குச் செல்லும் பாதையில் பசியாபுரம் உள்ளது.  பசியாபுரத்தில் இருந்து 1கி.மீ. தொலைவில் தொல்லியல்துறையினர் அகலாய்வு செய்து வரும் இடம் உள்ளது.



இந்தக் கிணற்றைக் கண்டு பிடித்த ஆதீஸ்வரன், சாந்தமுருகன், ஈஸ்வரபாண்டி ஆகிய மூவரையும், அதிகாரிகளும், மக்களும் வெகுவாகப் பாராட்டினர்.

http://www.seithipunal.in/tamilnadu/3-boys-found-an-ancient-well-near-keeladi


அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


சனி, 7 ஜூலை, 2018

இராமாயணம் கிசுகிந்தா காண்டத்தில் மணவூர் பற்றிய குறிப்புகள்

இது கீழடி அல்ல,
மணலூர் என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பெறும் ஆலவாய் என்ற மதுரை.

கிஸ்கிந்தா காண்டத்தில் பாண்டியர், திராமிட, மணலூர் பற்றிய குறிப்புகள்.









Page 7
Kumari was a great Thirtha resorted to by all.  Sri Hanuman crossed over to Lanka form this Kumarikkodu main land and the partially submerged Mahendra Mountains, for the Mahendra Mountains were not like the other ranges high and lofty but were low and surrounded by the ocean Cf.

..... .... .....
..... .... .....
                        Kishkinda Kanda Ch.41 St.21
This was the Second Sangam Age.  The events mentioned in the Ramayana occurred during this age. Cf. the reference to Kavatapuram in sri Valmike Ramayana (supra).

The Second Deluge.
            Then there was yet another deluge. In this great deluge the famous Kavatapuram with its gates of gold and pearls and rubies got submerged in the ocean.  Once more the Pandyas had to go further north and found a new capital.  This time it was at Manalure.  This was the city so constantly referred to in the Mahabaratha.

References in the Mahabharata.
            The references to "Pandya" "Dramind", "Manalur" etc.  in the following excerpts from the Mahabaratha are interesting.

..... .... .....
                        Adhi.235-st.20

..... .... .....
..... .... .....
                        Subha 33-St.20

..... .... .....
..... .... .....
                        Subha 33-St.29

..... .... .....
..... .... ..... 
                         Subha 32-St.75




Page 8
..... .... .....
..... .... .....
                        Subha 33-St.31

The Maritime Greatness of the Pandyas.
            It should be noted that at this time of the Mahabharata period, the River Kanya Thirtham was resorted to by 'Madhreya' and the river was crossed by him. Note these words "........" in the above excerpt; and then he goes and conquers the country further south also - ....... ......etc., going further south after crossing the Kumari.  This was the Third Sangam age.  How long was their capital situate in Manalure it is difficult to say/  But from the inscriptions so far deciphered it appears that the capital might have been changed from the re-changed to this place more than once.  or it may be quite possible there might have been more than one city of that name.  There is now a place called Manalure a few miles east of Madura, which is reputed to have been a Pandyan Capital.  There is another Manalure near Tinnevelly,and which Sri. P.V.Jagadeesa Iyer states was the Pandyan Capital.  But the references to Arjuna have reached Manalure "........." make us doubt if there might not have been a sea-coast city by the name of Manalure. Moreover there are constant references to the city of "Alaivai" being the Pandyas'Capital.  Or could Manalure and "Alaivai" be one and the same city?  Scholars think that the Pandyas had their capital sometimes at Uragapura the maritime city of Negapatam a flourishing city even during the time of the Mahabharata.  The Pandyas were a maritime nation and there are many references quoted by scholars as to the maritime greatness of the Tamils..

            i. In Sangam Literature they are often referred to as பெருந்ரோச்சுணர்
            ii. Their conveyances for trade or war in the seas were called நாவாய் (Navy)

Page 9 .....




சனி, 5 மே, 2018

பரிபாடலில் வைகை ஆற்றுப் பெருக்கு (மணலூர், மணவூர்,பண்டைய மதுரையை அழித்த ஆற்றுப் பெருக்கு ? )

பரிபாடலில் 
வைகை ஆற்றுப் பெருக்கு  


மணலூர் அல்லது மணவூர்,
கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள 
பண்டைய மதுரையை 
அழித்த ஆற்றுப் பெருக்கு ? 

புதுப் புனலையும் பல வகை மணங்களையும் உடன்கொண்டு வையை வருதல்


20. வையை

கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை
முற்றுபு முற்றுபு, பெய்து சூல் முதிர் முகில்
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்
(பரிபாடல்)
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை
முற்றுபு முற்றுபு, பெய்து சூல் முதிர் முகில்
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்

பரிபாடல் குறிப்பிடும் இந்த வைகை ஆற்றுப் பெருக்கினால்தான் கீழடி அருகே தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டுள்ள பண்டைய மதுரை (அல்லது மணவூர்) அழிந்து இருக்குமோ?






அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி.காளைராசன்

வியாழன், 5 ஏப்ரல், 2018

Theory of Tsunamis கடல்கோள் உண்மையா?

Theory of Tsunamis  கீழடி அழிந்தது எவ்வாறு ?   
கடல்வெள்ளத்தினாலா (சுனாமியினாலா ) ?
​
Tsunami deposits south of Valdivia
http://quakehunters.blogspot.in/2013/01/fieldwork-so-far-in-pictures.html

மேலே உள்ள படத்தில் தென்னமெரிக்காக்காவில் உள்ள வால்திவ்ய (Valdivia) வில் உள்ள மண்படிமங்கள் சுனாமியினால் உண்டானது என்று காணமுடிகிறது.

கீழே உள்ள படங்களில் மலைகளில் இதே போன்ற மண்படிமங்களைக் காண முடிகிறது.


ஆற்றுப் பெருக்கால், அடுக்கடுக்காய் மணவூரில் (கீழடியில்) மண் படிய வாய்ப்புகள் உண்டு.  ஆனால்,  கடல்நீர் வராமல் கலர்க்கலராய் மண் படிய வாய்ப்புகள் இல்லை.  எனவே இது வைகையாற்று வெள்ளத்தால் (நல்லதண்ணியால்) உண்டானது அல்ல. பிரளயத்தின் போது ஏற்பட்ட பெருஞ் சுனாமியினால் தோன்றிய கடல் வெள்ளம்  வைகை ஆற்றின் வழியாக உள்ளே புகுந்து பண்டைய மணவூரை (கீழடியை) அழித்துள்ளது என அறிய முடிகிறது.   

“திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே மதுரை உள்ளது” என்று நக்கீரர் பாடிய பண்டைய மதுரை இதுதான் என்பதை உறுதியாகிறது.

திருவிளையாடற்புராணம் 11ஆவது படலத்தில் சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகன் உக்கிர குமாரனின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்த ஆழிப்பேரலை(“சுனாமி”) வந்தது என்றும், அதை வேல் எறிந்து உக்கிரபாண்டியன் தடுத்து நிறுத்தினான் என்று ஒரு குறிப்பு உள்ளது.

மேலும், 17ஆவது படலத்தில் அதுலகீர்த்தி பாண்டியனின் பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி(“சுனாமி”) மதுரையை முற்றிலும் அழித்துள்ளது என்ற ஒரு குறிப்பு உள்ளது.
 http://kalairajan26.blogspot.in/2013/02/blog-post_18.html?view=timeslide

​வால்திவ்ய( Valdivia) வில் காணப்படும் மண் அமைப்பு சுனாமியினால் உண்டானது என்று கூறப்படுவதாலும், அதே போன்ற மண் அமைப்பு கீழடியிலும் காணப்படுகின்ற காரணத்தினாலும்,

மதுரைக்கு நேர் கிழக்கே அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் சுமார் 1,70,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள மாபெரும் நிலப்பகுதி பூமிக்குள் புதைந்துள்ளதைக் கூகுள்புவிப்படம் வழியாக அறியமுடிவதாலும்,
அங்கே தோன்றிய மிகமிகப்பெரிய கடல்வெள்ளம் (சுனாமி) மதுரை வரை வந்து அழிந்துள்ளது என்று கருதுகிறேன்.

மாமதுரை போற்றுவோம், தொல்லியல் போற்றுவோம், தொல்லியலாளர் போற்றுவோம், தமிழரின் தொன்மை போற்றுவோம்.

அன்பன்
கி.காளைராசன்
----------------------------------------------------------------------

N. Kannan navannakana@gmail.com

07/10/2016
to மின்தமிழ்

2016-10-07 0:29 GMT+08:00 Singanenjam Sambandam <singanenjam@gmail.com>:



இருபுறமும் மலைகள் எனில் , கடல்நீர் உட்புகும் வேகம்  மிக மிக அதிகமாக இருக்கும். ஏன் எனில் கடல் நீர் பரவுவதை மலைகள் தடுத்து விடும்.

​இதைச் சொன்னவுடன் எனக்கொரு திருவாய்மொழி நினைவிற்கு வந்தது:

ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர
வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்
மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்
சாறு படவமு தங்கொண்ட நான்றே
​

​உரை:​

மஹாநதிக ளெல்லாம் மலைகளின்று பெருகிக் கடலிலே வந்து சேருமே; அப்படி சேருவதற்காக ஆறுகள் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனவாம். கடைகிற போது மலைகளிற் காட்டில் கடல் உயருகையாலே ஆறுகள் எதிர்வெள்ளங் கோத்து மலைகளையே நோக்கியே திரும்பியோடுகிற வோசை விலக்ஷ்ணமாயிருந்ததென்று முதலடியாற் சொல்லுகிறது. இங்கே ஈட்டு ஸ்ரீஸீக்தி;-‘கடலிலே மந்தரத்தை நட்டவாறே கடல் கொந்தளித்து ஸஹயம் போய்த்தாழ்ந்து கொடுத்தது; நீரோனது தாழ்ந்த விடத்தே ஒடக்கடவதிறே. ஆறுகளானவை மலையைக் குறித்து எதிரிட்டோடுகிற போதை த்வநியாயனது இவர்க்குச் செவிப்படுகிறபடி. இவர்க்குக் காலத்ரயத்திலுமுள்ள தெல்லாம் தெரியும்படியிறே அவன் வெளிச்சிறப்பித்தது.”

நன்றி = மின்தமிழ்
---------------------------------------------------------------------------------