Theory of Tsunamis லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Theory of Tsunamis லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 ஆகஸ்ட், 2020

பெக்மடைட் பாறைகள் (PEGMATITE) ஊடுறுவுப் பாறைகள் (INTRUSIVES)

 பெக்மடைட் பாறைகள்  (PEGMATITE) 

ஊடுறுவுப் பாறைகள் (INTRUSIVES) 

இரண்டிற்குமான வேறுபாடுகள் என்ன?

புவியியலாளர் வருத்தமும் என்னுடைய புரிதலும் -

புவியியலாளர் வருத்தம் 
Singanenjam Sambandam (11 ஆகஸ்ட், 2017) 

வணக்கம் காளை ஐயா, எத்தனை முறை சொன்னாலும் நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். 'மண்' 'மணல்' 'பாறை ' இவற்றை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் இரண்டாம் படத்தில் இருப்பது சிதைவுறும் பாறை. மூன்று மற்றும் நான்காம் படத்தில் இருப்பவை பெக்மடைட் ( PEGMATITE) எனப்படும் ஊடுறுவுப் பாறைகள் ( INTRUSIVES). எதயுமே அறிந்து கொள்ளாமல் உங்கள் புராணக் கதைகளை நிறுவுவதற்காக நீங்கள் பொய் எழுதுவது , வருத்தத்தை தருகிறது.

---------------------------------------------


என்னுடைய புரிதல்
Kalairajan Krishnan (11 ஆகஸ்ட், 2017)

வணக்கம் ஐயா.

விருப்பாச்சி அருகே உள்ள பாறையையும், ஆந்திரா அருகே உள்ள பாறைகளையும் நான் மண்புதைந்து தோன்றிய பிரளயப் பிளவுப் பாறைகள் எனக் குறிப்பிட்டுள்ளேன்.

ஐயா சிங்கநெஞ்சம் அவர்கள் இந்தப் பாறைகளை பெக்மடைட் (PEGMATITE) எனப்படும் ஊடுறுவுப் பாறைகள் (INTRUSIVES) என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஐயா சிங்கநெஞ்சம் அவர்கள் குறிப்பிடும் பெக்மடைட் (PEGMATITE) எனப்படும் ஊடுறுவுப் பாறைகள் (INTRUSIVES) என்று குறிப்பிடும் பாறைகளைப் படத்தில் சிகப்பு மையினால் அடையாளப் படுத்திக் காட்டியுள்ளேன்.

நான் பிரளயப்பிளவுப் பாறைகள் என்று குறிப்பிடும் பாறையை மஞ்சள் மையினால் அடையாளப் படுத்திக் காட்டி உள்ளேன்.

இவை இரண்டும் வேறு வேறானவை. அவற்றிற்கான வேறுபாடுகளைக் கீழே பட்டியல் இட்டுள்ளேன்.

(அ) பெக்மடைட் பாறைகள் நேர்கோட்டில் பிளவு பட்டிருக்காது, வளைந்து நெளிந்து இருக்கும். பிரளயப் பிளவுப் பாறைகள் நேர்கோட்டில் பிளவு பட்டிருக்கும், வளைந்து நெளிந்து இருக்காது.

(ஆ) பெக்மடைட் பாறைகள் தரைப்பகுதியில் நாம் காணும்படியாகத் தெரிந்தே ஆக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் பிரளயப் பிளவுப் பாறைக் தரைப்பகுதியில் நாம் காணும்படியாக இருக்கும்.

(இ) பெக்மடைட் பாறைகள் வயது முதிர்ந்தவை. ஆனால் பிரளயப் பிளவுப் பாறைகள் வயதில் மிகவும் இளயவை.

(ஈ) பெக்மடைட் பாறைகள் எரிமலையால் உருவானவை எனக் கூறுகின்றனர். ஆனால் ‘பிரளயப் பிளவுப் பாறைகள்‘ சுனாமிக் கழிவுகளால், கசடுகளால் உறுவானவை.

புராணம் பெருஞ்சுனாமி பற்றிக் கூறுகிறது. பெருஞ் சுனாமியால் உண்டான புவியியல் மாற்றங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. இதில் பொய் எழுதிட வேண்டிய தேவை புராண ஆசிரியர்களுக்கோ அல்லது எனக்கோ இல்லை.

ஆனால் புவியியலாளர்களுக்கு பெருஞ்சுனாமியின் போனது ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றியும், நிலநடுக்கத்தினால் பாறைகள் பிளவுபட்டது பற்றியும், பெருஞ்சுனாமியினால் அடித்து வரப்படும் கசடு அல்லது கழிவுநீர் பற்றியும், அவை பாறையின் விரிசல்களில் படிந்து இறுகிக் கல்லாக மாறிவருவது பற்றியும் ஆய்ந்தறிய வேண்டிய அவசியம் உள்ளது.

அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

11 ஆகஸ்ட், 2017

ஞாயிறு, 24 மே, 2020

மதுரைக்கு வந்த சுனாமி (அலவாக்கோட்டை)


மதுரைக்கு வந்த சுனாமி (அலவாக்கோட்டை) 



மாமல்லபுரத்தில் சீனஅதிபர் ஷி ஜின்பிங் அவர்களும் இந்தியப்பிரதமர் மோடி அவர்களும் சந்தித்த இடத்திற்கு அருகில் கிருஷ்ணனின் வெண்ணைய்ப் பந்து என்று ஒரு உருண்டைக் கல் உள்ளது. சரிவான பாறையின் மேல் உள்ள இந்த உருண்டைக்கல் உருண்டு கீழே விழாமல் உள்ளது. முதலாம் நரசிம்ம வர்மன் இந்த உருண்டைக் கல்லை உருட்டிவிட முயற்சி செய்து பின் கை விட்டுவிட்டார்.  சென்னை கவர்னாக இருந்த ஆர்தர் ஹேவ்லாக் (Arthur Havelock)என்பவர் யானைகளைக் கொண்டு இந்தப் பாறையை உருட்டவிட முயற்சி செய்து பின் கைவிட்டுள்ளார்.
மகாபலிபுரத்தில் உள்ள பாறைபோன்று, எத்தனையோ இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், சிறிதும் ஆடாமல் அசையாமல் சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் இரண்டு பாறைகள் நிற்கின்றன.

இந்தப் பாறையைப் போன்ற சிறுசிறு கட்டிகட்டியான பாறைகளை மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரிலும் மற்றும் கிரானைட் குன்றுகளின் உச்சியிலும், பூமிக்கு அடியிலும் காணலாம்.  கடல்கோளால் குமரிக்கோடு அழிந்தபோது உண்டான கடல்வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட கடற்களிமண்  இறுகிப் பாறையாகி இந்தப்  பொக்குப்பாறை உருவாகி உள்ளது என்பது எனது கருத்து. 



சிவகங்கை மாவட்டத்தில் உள்ளோர் அனைவரும் ஒருமுறையேனும் இந்தப் பாறையை நேரில் சென்று பார்த்து வர வேண்டும்.

இருப்பிடம் - மதகுபட்டியிலிருந்து அலவாக்கோட்டை.. அதை தாண்டியதும் இடது பக்க சாலையில் செல்லவும்.. தார்ரோட்டின் முடிவில் வண்டியை நிறுத்தி விட்டு வலதுகை பக்கம் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு ஊரணி வரும். அதன் உள்ளே இறங்கி கரை ஏறி கொஞ்ச தூரம்தான்..
சிவகங்கை, மதகுபட்டி அருகே, அலவாக்கோட்டை.. அதை தாண்டியதும் இடது பக்க சாலையில் சென்றால்..... தார்ரோட்டின் முடிவில் வண்டியை நிறுத்தி விட்டு வலதுகை பக்கம் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு ஊரணி வரும். அதன் உள்ளே இறங்கி கரை ஏறி கொஞ்ச தூரம்தான்..

பாறை படம் -
நன்றி = Ramesh Gemini Kalaiyarkoil
https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/96720839_3497314020283611_4818404860263137280_o.jpg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_ohc=DUBNT-zu7z0AX92EDQ0&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=b48fb439b980fb321fc7ea676367d09c&oe=5EF221EC

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 11 (25/05/2020) ஞாயிற்றுக் கிழமை.

வெள்ளி, 22 மே, 2020

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மண் கடல் வௌவலின் (ஜனம்பெட்டா)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மண் கடல் வௌவலின் (ஜனம்பெட்டா)





“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது” என்கிறது கலித்தொகை .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் கிடைக்கின்றனவா? கடல்மண் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்” படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்” என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் பொக்குப் பாறைகளைக் காண முடிகிறது.
திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகளைப் படத்துடன் பார்த்தோம். மேலும் திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா, பெனுகொண்டா முதலான ஊர்களில் மலைக்குன்றுகளில் படிந்துள்ள கடல்மண் படிமங்களைப் படங்களுடன் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக ...

தெலுங்கானாவில் புத்பூர் அருகே உள்ளே ஜனாம்பேட் என்ற ஊரில் தேசியநெடுஞ்சாலை வழிநெடுக “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய” மண்படிமங்கள் மலிந்து காணக்கிடக்கின்றன. அருகில் உள்ள ஆற்றுமணல் மலைமேல் ஏறிப் படிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மலைமேல் படிந்துள்ள மண் ஆற்றிற்கு அடித்துச் செல்லப்படுகிறது என்பது உறுதியாகிறது. இந்த இடத்தில் உள்ள மலைகளிலெல்லாம் மண்படிந்துள்ளதற்குக் காரணம் பிரளயத்தில் தோன்றிய கடல்வெள்ளத்தைத் (சுனாமியைத்) தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
திண்டுக்கல் அருகே சிறுமலையில் அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
Kalairajan Krishnan
22 மே, 2017 ·

செவ்வாய், 19 மே, 2020

வங்கக் கடலில் உருவான கடல்கோள்


வங்கக் கடலில் உருவான கடல்கோள்



இது மாபெரும் கடல்கோள்...

பன்மலையடுக்கம் அழிந்து இலட்சத்தீவுகளாக மாறிவிட்டன.
கபாடபுரம் அழிந்து டிகோகார்சிகா தீவாக மாறிவிட்டது.
கிழக்குக் கடற்கரையில் (கடலூர் போன்று) வளைவான கடற்கரைகள் தோன்றியுள்ளன.
தென்னிந்தியாவில் உள்ள ஆறுகள் எல்லாமும் வழித்தடம் மாறியுள்ளன.
வையை என்ற நதி மறைந்து வைகை என்ற நதி உருவாகியுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைமேல் அளவற்ற மண் படிந்து ள்ளது.
விந்தியசாத்பூரா மலைமேல் அளவற்ற மண்படிந்து அதன் உயரம் குறைந்துள்ளது.
தென்னிந்தியாவில் உள்ள மண்மலைகள் எல்லாம் இந்தக் கடல்கோளின்போது புதிதாக உருவானவை
---------------------------------------------------------------------

1) வங்கக்கடலில் உண்டான கடல்வெள்ளம் மதுரை மீது வந்தது,  சூரிய கிரகணத்தின் போது சூரியனை இருள் விழுங்கியது போன்று இருந்தது என்கிறது திருவிளையாடற் புராணம் பாடல் எண் 1040

வங்க வேள் வெள்ள மாட மதுரை மீது வருசெயல்
கங்குல் வாய திங்கண் மீது காரி வாய காருடல்
வெங்கண் வாள ராவி ழுங்க வீழ்வ தொக்கு மலதுகார்
அங்கண்மூட வருவ தொக்கு மல்ல தேது சொல்வதே.”


2) பெரிய ஊழிக்காலத்தில் வங்கக்கடல் மதுரைக்கு வந்தது போன்று வைகையை வருமாறு சிவபெருமான் அழைத்தார் என்கிறது திருவிளையாடற் புராணம் பரி நரியாக்கி வைகை அழைத்த படலம் பாடல் எண் 2977.

“கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச்
சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா
வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும்
இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான்”.
-----------------------------------------------------------------

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 7 (20/05/2020) புதன்கிழமை

மண் கடல் வௌவலின் (சூளகிரி) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)

மண் கடல் வௌவலின் (சூளகிரி)
மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)


தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலை அருகே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம்.

பண்டைய மதுரையும் மணவூரும் எவ்வாறு அழிந்தன?.
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?


ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.

கிருஷ்ணகிரி ஓசூர் இடையே நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.


இந்த இடத்தில் மேலும் கீழும் கடினமான கிரானைட் பாறைகள் இருக்கின்றன. இந்தப் பாறைகளுக்கு இடையே பொக்குப்பாறை என்று அழைக்கப்படும் கடல்வௌவிய மண் திட்டுக்கள் எளிதில் நன்றாகக் காணக் கிடைக்கின்றன.   அடுத்து ஆந்திராவில் பெரச்சந்திரா அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

புதன், 13 மே, 2020

Theory of Tsunamis, திருச்செந்தூருக்கு வந்த சுனாமி

Theory of Tsunamis,

திருச்செந்தூருக்கு வந்த சுனாமி 
பிரளயம் பேர்த்த பாறைகள் 
(பகுதி 3 அ)


திருச்செந்தூருக்கு வந்த சுனாமி  -  மதுரையை ஆண்ட பாண்டியர்கள் கடல்கோளின் போது இறைவனிடம் வேண்டிக்கொண்ட ஆன்மிகச் செய்திகளைத் திருவிளையாடற் புராணம் வெகுவாகக் கூறுகிறது.
இறைவனின் திருவருளைக் கூறும்போது, பிரளயத்தின் போது ஏற்பட்ட புவி மாற்றங்களையும் புராணம் கூறுகிறது.   புராணம் கூறும் பெரும்சுனாமிகளின் அழிவுகளுக்குச் சான்றாகத் தமிழகம் எங்கும் பாறைகள் பெயர்ந்து காணப்படுகின்றன.

“ கருங்கடல் ஏழும் காவல் கரை கடந்து, ஆர்த்துப் பொங்கி,
ஒருங்கு எழுந்து, உருத்துச் சீறி, உம்பரோடு இம்பர், எட்டுப்
பொரும் கடகரியும், எட்டுப் பொன் நெடும் கிரியும், நேமிப்
பெருங்கடி வரையும், பேரப், பிரளயம் கோத்த வன்றே”
....
....
“ கொதித்து எழுந்து, தருக்கள் அறக் கொத்தி எடுத்து, எத்திசையும்
அதிர்த்து, எறிந்து, வரைகள் எல்லாம் அகழ்ந்து, திசைப் புறம் செல்லப்
பிதிர்த்து, எறிந்து, மாடநிரை பெயர்த்து, எறிந்து, பிரளயத்தில்
உதித்து, எழுந்து, வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல்”
இந்தப் புராணப் பாடல்களுக்குச் சான்றாக, அழகர்கோயில்மலையில் உள்ள பாறைகள் சிலவற்றையும்,  பழனி அருகே விருப்பாச்சி பாறையையும் இதற்கு முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.
இந்தப் பதிவில் திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள வள்ளிகுகை வாயில் அருகேயுள்ள பிரளம் பேர்த்த பாறையின் படம் இணைக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் அந்தமான்தீவிற்கு அருகே பிரளயம் (அயனங்கள் பிரள்வது, அல்லது கடலுக்கு அடியில் நிலச்சரிவுகள் உண்டாவது) ஏற்பட்டது.  அதனால் கடல்வெள்ளம் (ஆழிப்பேரலை அல்லது பெருஞ்சுனாமி) உண்டாகித் தமிழகத்தைத் தாக்கி அழிந்துள்ளது.

கடல்கோளால் உண்டான கடல் அலைகள் கரையைக் கடக்கும்போது, கடற்கரையோரம் இருந்த பாறைகளைப் பெயர்த்தெடுத்துப் போட்டுள்ளது.  இவ்வாறு பாறைகள் புடைபெயர்ந்து கிடப்பதைத் தமிழகம் ஆந்திரம் மற்றும் கிழக்குக் கடற்கரையோரம் எங்கும் காணலாம்.


திருச்செந்தூரில் வள்ளிகுகை அருகே உள்ளபாறைகளைப் போன்றே,  பழனி செல்லும் வழியில் விருப்பாச்சியில் உள்ள பாறைகளும் இருப்பதைக் காணலாம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
Kalairajan Krishnan
13 மே, 2017, முற்பகல் 5:03 · Tiruchendur ·

சனி, 6 ஜூலை, 2019

மதுரைக்கு வந்த சுனாமி 10 - மதுரை தொடரிநிலையம் அருகேயுள்ள பேருந்து நிலையம்

கடல்கோளால் குமரிக்கோடு அழிந்தது உண்மையா?
மதுரையும் கபாடபுரமும் அழிந்தது உண்மையா?

மதுரையைக் கடல்கொண்டது என்பதற்கு 
புவியியல் சான்றுகள் உள்ளதா?

மதுரையை ஸ்மார்ட் சிட்டி (Madurai Smart City) ஆக்கும் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.  அதன் ஒருபகுதியாக மதுரை மீனாட்சி பேருந்துநிலையத்தை தரமேம்பாடு செய்வதற்காக ஆகழ்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அங்கே எடுத்த படம் இது.









மதுரை தொடரி நிலையம் அருகே உள்ள இந்த இடத்திலிருந்து வைகையாறு சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.  வைகை ஆற்றுப் பெருக்கால், அடுக்கடுக்காய் மதுரையில் மண் படிய வாய்ப்புகள் உண்டு.  ஆனால்,  கடல்நீர் வராமல் வண்ணவண்ண நிறத்தில் மண் படிய வாய்ப்புகள் இல்லையே.  எனவே இந்தப் படத்தில் காணப்படும் அடுக்கடுக்ன மண் திட்டுகள்  வைகையாற்று வெள்ளத்தால் (நல்லதண்ணியால்) உண்டானவை அல்ல. பிரளயத்தில் தோன்றிய பெருஞ் சுனாமியினால் உண்டான கடல் வெள்ளம்  வைகை ஆற்றின் வழியாக உள்ளே புகுந்து பண்டைய மதுரையை  அழித்துள்ளது என அறிய முடிகிறது. 

திருவிளையாடற்புராணம் 11ஆவது படலத்தில் சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகன் உக்கிர குமாரனின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்த ஆழிப்பேரலை(“சுனாமி”) வந்தது என்றும், அதை வேல் எறிந்து உக்கிரபாண்டியன் தடுத்து நிறுத்தினான் என்று ஒரு குறிப்பு உள்ளது.

மேலும், 17ஆவது படலத்தில் அதுலகீர்த்தி பாண்டியனின் பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி(“சுனாமி”) மதுரையை முற்றிலும் அழித்துள்ளது என்ற ஒரு குறிப்பு உள்ளது.
http://kalairajan26.blogspot.in/2013/02/blog-post_18.html



மேலே உள்ள படத்தில் மதுரையில் காணப்படும் மண்அமைப்புப் போன்றே தென்னமெரிக்காவிலும் உள்ளது.  அங்கே அதைச் சுனாமியினால் உண்டானது என்கின்றனர்.


​Tsunami deposits south of Valdivia
http://quakehunters.blogspot.in/2013/01/fieldwork-so-far-in-pictures.html

மேலே உள்ள படத்தில் தென்னமெரிக்காக்காவில் உள்ள வால்திவ்ய (Valdivia) வில் உள்ள மண்படிமங்கள் சுனாமியினால் உண்டானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.  ​வால்திவ்ய (Valdivia) வில் காணப்படும் மண் அமைப்பு சுனாமியினால் உண்டானது என்று கூறப்படுவதாலும், அதே போன்ற மண் அமைப்பு மதுரையிலும் காணப்படுகின்ற காரணத்தில் மதுரையும் சுனாமியினால் அழிந்துள்ளது என்று அறிய முடிகிறது.



மாமதுரை போற்றுவோம், தொல்லியல் போற்றுவோம், தொல்லியலாளர் போற்றுவோம், தமிழரின் தொன்மை போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
17.06.2019

வெள்ளி, 18 ஜனவரி, 2019

Theory of Tsunamis, Tsunami Glay Rocks near Siluwa, MP.

Theory of Tsunamis,
Tsunami Clay Rocks, near Siluwa,NH 34, 
Jabalpur, Madhya Pradesh 480888


பஃறுளி ஆற்றுப் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்ட போது, தென்னிந்தியா முழுவதும் கடல்வெள்ளத்தினால் (பெருஞ்சுனாமியினால்) மூழ்கடிக்கப்பெற்றுள்ளது. அதன்பின்னர் சிலகாலம் கழிந்த கடல்நீர் வற்றியுள்ளது. கடல்நீரால் அடித்து வரப்பட்ட கடல்களிமண் தென்னிந்தியா முழுதும் படிந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளன.

திருவிளையாடல் புராணம் 1299.
கொதித்து எழுந்து தருக்கள் இறக் கொத்தி எடுத்து எத்திசையும்
அதிர்த்து எறிந்து வகைள் எல்லாம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப்
பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில்
உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல்




அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 10 ஜனவரி, 2019

Theory of Tsunamis, பாறைகள் பலவிதம் (படம் 1, அழகர்கோயில்)

பாறைகள் பலவிதம் (படம் 1)


“கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி“யின் பார்வையில் பாறைகள் பலவிதம் (படம் 1)

Kalairajan Krishnan Melurஇல் இருக்கிறார்.
10 jun 2017, முற்பகல் 7:23 ·


கங்கன் என்ற விண்கோள் பூமியில் மோதிப், பூமியைத் துளைத்துக் கொண்டு, பூமியின் உள்ளே சென்றுள்ளது.  இவ்வாறு கங்கன் மோதிய இடத்தில் உண்டான விளிம்புப் (Rim) பகுதியே வட்டவடிவமான இமயமலைத் தொடர் உருவாகி உள்ளது.   கண்டப்பெயர்ச்சியால் இமயமலை உருவாகவில்லை.

கங்கன் பூமியில் மோதிய போது தெரித்து விழுந்த பாறைக்குழம்புகளால்  திருப்பரங்குன்றம் மலை, திண்டுக்கல் மலை, அழகர்கோயில்மலையின் அடிப்பகுதி, யானைமலை, திருமயம் மலை, திருச்சிராப்பள்ளி மலை முதலான கிரானைட் மலைகள் உருவாகி உள்ளன.

பூமியின் உள்ளே சென்ற கங்கன் என்ற விண்கோளின் பாறைக் குழம்புகள் பிதுங்கி வெளி வந்த காரணத்தினால் தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள், அமெரிக்காவில் ஆல்ப்ஸ்மலைத் தொடர்கள் முதலான நீண்ட மலைத்தொடர்கள் உருவாகி உள்ளன.  உலகில் உள்ள கிரானைட் மலைகள் எல்லாமும் கங்கன் என்ற விண்கோள் பூமியில் விழுந்த காரணத்தினால் உருவானவை .

கங்கன் பூமியின் மோதிய காரணத்தினால் பூமியின் மேற்பகுதி சிதறுண்டு பிளவுபட்டுக் கண்டப்பெயர்ச்சி உண்டாகிக் கண்டங்களாகப் பிரிந்துள்ளது.

இமயமலைத்தொடருக்கு நேர்எதிரே, பூமியின் மறுபக்கத்தில் நிலப்பரப்புகள் ஏதும் இல்லாமல் போனது.  மேலும் Ring of Fires என்ற எரிமலைத்தொடர்கள் உருவாகி உள்ளன.

கங்கன் விழுந்த காரணத்தினால் பூமியின் எடை  கூடியுள்ளது. 

கங்கள் விழுந்து இமயமலைத்தொடரும் மற்றும் பல கிரானைட் மலைத் தொடர்களும் உருவான காலமே பூமியில் “கல்தோன்றிய காலம்“ என்பது எனது கருத்து.
-------------------------------------------------------------------------------------------------------------------


Ganga, a celestial water planet fall down in the Himalaya Mountains Bowl


கங்கை என்ற ஒரு விண்நீர்க்கோள் இமயமலையின் பள்ளத்தாக்கில் இறங்கியுள்ளது.  இது பூமிக்குள் நுழையும் போது அதிலிருந்த எரியக்கூடிய பொருட்கள் தீப்பிடித்து எரிந்து விழுந்த காரணத்தினால் பூமியில் மிகப் பெரிய பாலைவனங்கள் தோன்றியுள்ளன.

Ganga, a celestial water planet fall down in the Himalaya Mountains Bowl
கங்கை என்ற விண்ணீர்க்கோளில் வேகமாகப் பூமியில் இறங்கிய இடம் தக்களமேகன் பாலைவனமாக உள்ளது.  கங்கை வேகமாகப் பூமியில் இறங்கிப் பூமியைத் துளைத்துச் சென்ற காரணத்தினால், தக்களமேகன் பாலைவனம் மிகவும் பள்ளமான பகுதியாக உள்ளது.  கங்கை என்ற விண்ணீர்க்கோளில் இருந்த தண்ணீரின் ஒருபகுதி தக்களமேகன் பாலைவனம் வழியாகப் பூமிக்குள்ளே சென்று வெளியே வந்த இடம் மிகவும் ஆழமான மெரினாடிரன்ச் கடற்பகுதியாக உருவாகியுள்ளது.

கங்கை என்ற விண்ணீர்க்கோளில் இருந்த  களியும் உப்புநீரும் இமயமலையின் மேல் படிந்துள்ள காரணத்தினால், இமயமலையின் மேல்பகுதி ஒரு மடிப்புமலைத் தொடராக மாறியுள்ளது.  மேலும் துருக்கி,  பர்மா, அந்தமான் தீவுக் கூட்டங்கள், இந்தோனேசியா, தாய்லாந்து, சவா சுமத்திரா, சப்பான் நிலப்பரப்புகளும், மற்றும் உலகில் உள்ள (sedimentary rocks) பொக்குப் பாறைகளும் உருவாகியுள்ளன.

பூமியின் கடல்மட்டம் உயர்ந்துள்ளது.  பூமியில் கடல்கள் உப்புக்கடல்களாக மாறியுள்ளன.  

கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியில் இயமலைப் பள்ளத்தாக்கில் இறங்கிய காரணத்தினால் உருவாகி உள்ளன. இதுவே பூமியில் “பொக்குப்பாறைகள் தோன்றிய காலம் ”என்பதும் எனது கருத்து.
----------------------------------------------------------------------------------------------------------

Huge Tsunami swiped the entire South Indian sub-continent, Burma, Thailand, Indonesia. 

ஊழிக்காலத்தில், பொக்குப்பாறைகளால் உண்டான இந்தோனேசியா, ‘தாய்‘லாந்து, சவா சுமத்திரா, சப்பான் நிலப்பரப்புகளில் உள்ள குறைபாடு உள்ள இடங்களில் (defaults)  பொக்குப்பாறைத் திட்டுகள் புடைபெயர்ந்து சரிந்து விழுந்து கடலில் மூழ்குவதால் நிலநடுக்கங்களும் அதனைத் தொடர்ந்து கடல்வெள்ளமும் (ஆழிப்பேரரை, பெருஞ்சுனாமிகளும்) உருவாகின்றன என்பதும் எனது கருத்து.

Tsunami deposited sedimentary rocks

அந்தமான் அருகே பொக்குப்பாறைகளால் ஆன மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால்  “பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி)“ உருவாகிப் பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம்  கடலால் அழிந்துள்ளது.  முன்பு இருந்த நிலப்பரப்பில்மேல் கடல்வெள்ளத்தால் (பெருஞ்சுனாமியினால்) அடித்துக் கொண்டுவரப்பட்ட மண் திட்டுக்கள் படிந்து இப்போதுள்ள நிலப்பரப்பு உருவாகியுள்ளது.

இவ்வாறு  பெருஞ்சுனாமிகளால் அடித்துவரப்பட்ட கடல்மண் பூமியின் மேல் படிந்த காலத்தையே தமிழ் இலக்கியம் “மணல் தோன்றிய காலம்“ எனக் குறிப்பிடுகிறது என்பதும் எனது கருத்து.

Is it Tsunami rocks? Melur-Alagarkoil Road
அழகர்கோயில் செல்லும் வழியில் இந்தப் பாறையைப் பார்த்தேன். பார்ப்பதற்கு வெட்டிய மரத்தின் அடிப்பகுதிபோல் தோன்றியது. ஆனாலும் அருகில் சென்று பார்த்தபோது பாறைபோல் இருந்தது.

இது மரமா? கல்லா? கல்மரமா? என என்னால் உறுதி செய்ய இயலவில்லை.
“மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி” என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவித் தேவையான சான்றாக இந்தக் கல்மரம் இருக்குமா?

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
10 Jan 2017.

புதன், 30 மே, 2018

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மண் கடல் வௌவலின் (சிறுமலை)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)

மண் கடல் வௌவலின் (சிறுமலை)


“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ (104).  மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றிப் பண்டைய பாண்டிய நாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து,  தமிழகத்திற்குள் புகுந்து அழித்தது உண்மையா?  கடல்மண் தமிழகத்தில் கிடக்கின்றனவா? கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் தமிழகத்தில் படிந்துள்ளனவா?
அழகர்கோயில், திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா, வத்தலக்குண்டு முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகள் உள்ளன. மேலும் மணவூர் (கீழடி), திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா, பெனுகொண்டா, புத்பூர், வத்தலக்குண்டு முதலான ஊர்களில் கடல்மண் படிமங்கள் உள்ளன. 
சுற்றிலும் சிறுசிறு மலைக்குன்றுகள் இருக்க, அவற்றின் நடுவில் சிறுமலை கிராமம் அமைந்துள்ளது.  சிறுமலையில் பிரளயம் பேர்த்த பாறைகள் உள்ளனவா? கடல் வௌவிய மண் படிமங்கள் உள்ளனவா?


தமிழகத்தில் உள்ள கிரானைட் மலைகளில், கிரானைட் பாறைகளுக்கு இடையே பொக்குப்பாறைகள் எனப் பொதுமக்களால் அழைக்கப்படும் பாறைகளும் உள்ளன.  ஆனால் சிறுமலையில் கிரானைட் பாறைகள், பொக்குப்பாறைகள் இவற்றுடன் பல்வேறுபட்ட பாறைகளும்  காணக் கிடக்கின்றன. 

இதில் சிறப்பாக, ‘வெள்ளியங்கிரி‘ என்று அழைக்கப்படும் ஒரு சிறு குன்றின் உச்சிக்குச் செல்லும் வழி நெடுகிலும் இளஞ் செந்நிறத்தில் பொக்குப்பாறைகளை அதிகமாகக் காணமுடிகிறது.
இளஞ் செஞ்நிறத்தில் உள்ள இந்தப் பொக்குப் பாறையில் ஊசிமுனை அளவிற்குச் சிறுசிறு துளைகளைக் காணமுடிகிறது.  இத்துளைகளை மூடியபடி இளங்கருப்பு நிறத்தில் துகள்களைக் காணமுடிகிறது. இந்தக் கருமையான சிறு துகள்களைத் தனியாகப் பிரித்து எடுத்துப் பார்த்தபோது, அவை மண்ணாகவோ மணலாகவோ பாறையாகவே இல்லை.  மாறாக மக்கிய தாவரமாகவோ அல்லது கடல்வாழ் நுண்ணுயிர் போன்று கண்ணுக்குத் தெரிகிறது.

சிறுமலை வெள்ளியங்கிரியில் உள்ள இந்தப் பொக்குப் பாறைகளில் படிந்துள்ள சிறுசிறு கருமைநிறத் துகள்களை அறிவியல் முறைப்படி ஆராய்ந்து அறிய வேண்டும்.
கடல் இருக்கும் திசைநோக்கித் தமிழகத்தில் உள்ள பாறைகள் ஏன் பேர்ந்துள்ளன ? தமிழகத்தில் எரிமலையே இல்லாதபோது எரிமலையுடன் தொடர்புடைய மண் திட்டுகள் எவ்வாறு உண்டாகி உள்ளன?
இதற்கான காரணங்கள் அறிவியல் அடிப்படையில் கண்டறிப் பட்டுள்ளதாகத் தெரியவில்லை. 



பிரளயத்தில் ஏற்பட்ட பெருஞ் சுனாமியானது பாறைகளைப் பேர்த்தெடுத்துப் போட்ட காரணத்தினால்தான், அவை கடல் இருக்கும் திசைநோக்கிப் பெயர்ந்துள்ளன என்று யூகிக்க முடிகிறது.  மேலும், கடல்மண் வௌவிய காரணத்தினால்தான் சாம்பல்நிற மண்திட்டுக்கள் கிரானைட் பாறை இடுக்குகளில் படிந்துள்ளன என்றும் யூகிக்க முடிகிறது.  
மேற்கண்ட ஐயங்களுக்கு அறிவியல் அடிப்படையில் விளக்கம் கிடைக்கும்வரை, பிரளயத்தில் ஏற்பட்ட பெருஞ் சுனாமியால் மதுரையும் பண்டைத் தமிழகமும் அழிந்துள்ளன என்ற தமிழ் இலக்கியக் கருத்துகளை உண்மை என்றே கருத வேண்டியுள்ளது.
அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 16 (30 மே 2017) செவ்வாய் கிழமை.

திங்கள், 28 மே, 2018

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மலி திரை ஊர்ந்து (தட்டோன் - மயன்மார்)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)

மலி திரை ஊர்ந்து (தட்டோன் - மயன்மார்)



“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள குன்றுகளில் எல்லாம் கடல் வௌவிய மண்திட்டுக்கள் கிடப்பதைக் காணமுடிகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை முழுவதும் கிரானைட் பாறைகளால் ஆனது. ஆனால் இந்தக் குன்றின் உச்சியில் மண்திட்டுக்களைக் காணமுடிகிறது. இதே போன்று தமிழகத்தில் மற்றபிற கிரானைட் குன்றுகளின் உச்சியிலும் இது போன்ற மண் திட்டுக்களைக் காண முடிகிறது. இந்த மண் திட்டுக்கள் சுனாமியால் அடித்து வரப்பட்ட மண்படிமங்களா? இவற்றில் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் ஏதேனும் உள்ளனவா? என அறிவியல் முறைப்படி ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.
மதுரையானது கடற்கரையில் இருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது. வங்கக்கடல் இவ்வளவு தொலைவு வந்து தாக்கியிருக்குமானால், வங்கக்கடற்கரையில் உள்ள மியான்மார் (பர்மா) தேசத்திலும் இதே சுனாமியின் தாக்கம் இருக்க வேண்டும் அல்லவா?
ஆமாம். பர்மாவில் உள்ள கிரானைட் மலைகளிலும் தமிழக கிரானைட் மலைகளில் படிந்துள்ளது போன்ற மண்படிமங்களை அதிக அளவில் காணமுடிகிறது. 

சிவகங்கை மாவட்டம் திருமலையில் எடுக்கப்பட்ட மண்படிமத்தின் படமும், பர்மாவில் தட்டோனில் எடுக்கப்பட்ட மண்படிமத்தின் படமும் மேலே உள்ளன. இந்த இரண்டு மண் படிமங்களும் ஒன்றுபோலவே உள்ளன.
மேலும் மதுரைக்கு அருகே மணவூரில் (கீழடியில்) நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி போன்று பர்மா தட்டோன் என்ற ஊரிலும் நடைபெற்றுள்ளது. தட்டோனிலும் மணவூரில் (கீழடியில்) புதையுண்ட நகரத்தில் உள்ள மண் படிமங்களைப் போன்றே மண்படிமங்கள் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. இதனால் பர்மாவில் உள்ள தட்டோனும் தமிழகத்தில் உள்ள மணவூரும் (கீழடியும்) ஒரே காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் அழிந்திருக்கும் எனக் கருதமுடிகிறது.
பர்மாவில் யுரோஞ்சி என்ற ஊரில் உள்ள மலைப்பகுதியில் உள்ள மண் திட்டுக்களும், ஆந்திராவில் பெனுகொண்டாவில் உள்ள மலைப்பகுதியில் உள்ள மண் திட்டுக்களும் ஒன்றுபோல் உள்ளதைக் காணமுடிகிறது.
இதனால், பர்மாவில் உள்ள தட்டோன் மற்றும் யுரோஞ்சி ஆகிய ஊர்கள் சுனாமியினால் அழிந்துள்ளன எனக் கண்டறியப்பட்டால், தமிழகத்தில் திருமலை முதற்கொண்டு ஆந்திராவில் உள்ள பெனுகொண்டாவரை சுனாமியினால்தான் அழிந்துள்ளது எனக் கருத வேண்டியுள்ளது.  (மண்மாதிரிகள் ஆய்வில் உள்ளன).

கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,

வெள்ளி, 18 மே, 2018

Theory of Tsunamis, மதுரைக்கு வந்த சுனாமி, (பகுதி - 5), மலி திரை ஊர்ந்து, மண் கடல் வௌவலின் (தோப்பூர்)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மலி திரை ஊர்ந்து
மண் கடல் வௌவலின் (தோப்பூர்) 



தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலை அருகே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம். பண்டைய மதுரையும் மணவூரும் எவ்வாறு அழிந்தன?.
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?

ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.


சேலம் தருமபுரி நெடுஞ்சாலையில் தோப்பூர் அருகே உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.
பஃறுளி ஆற்றையும், பன்மலை அடுக்கத்தையும், குமரிக் கோட்டையும் கொண்ட கொடுங்கடல் தமிழகம் கேரளம் ஆந்திரம் கருநாடகம் முதலாகத் தென்னிந்தியா முழுவதையும் தாக்கி அழித்துள்ள காரணத்தினால், தென்னிந்தியா முழுவதும் உள்ள மலைகளில் மேலும் கீழும் கடினமான பாறைகள் இருக்க, (மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று) நடுவில் மண்திட்டுகள் படிந்திருப்பதைக் காணலாம்.

கிருஷ்ணகிரி அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

(குறிப்பு – இந்த மண்படிமங்களில் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் ஏதேனும் உள்ளனவா? என அறிவியல் அடிப்படையில் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன)
கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,

புதன், 16 மே, 2018

Theory of Tsunamis, "மலி திரை ஊர்ந்து” திருமலை

Theory of Tsunamis, "மலி திரை ஊர்ந்து” திருமலை

கீழடி அருகே புதையுண்டுள்ள நகரம் கடல்கொண்ட மதுரையா ?
"மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியதா" ?

தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலையின் கிழக்கே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.  
திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே உள்ள இந்த ஊர் உள்ளது.  மாடமலி மதுரை திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே உள்ளது என்று நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் பாடியுள்ளார்.  இதனால் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நகரமே பண்டைய மதுரையாக இருக்க வேண்டும்.
 குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் இப்போதுள்ள மதுரைநகரம் புனர்நிர்மாணம் செய்யப்பெற்று மக்கள் எல்லாம் அங்கே குடியமர்த்தப் பெற்றுள்ளனர்.  பழைமையான இந்த நகரத்திற்கும் மதுரை என்று பெயர், புதிதாக நிருமாணம் செய்யப்பட்ட நகரத்திற்கும் மதுரை என்று பெயர்.  எனவே பெயரில் குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக இந்தத் தொன்மையான நகரத்திற்கு மணவூர் என்ற பெயரைச் சூட்டியுள்ளனர்.
எனவே கீழடி என்ற ஊரின் அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டுபிடித்துள்ள நகரின் பண்டைய பெயர்  “மணவூர்“ ஆகும். சோமசுந்தரபாண்டியன் மகன் உக்கிரபாண்டியன். இவன் மணவூரில் பிறந்த காந்திமதியை மணம் செய்து கொண்டான். இதன் காரணத்தினால் இந்த ஊருக்கு மணவூர் என்ற பெயர் உண்டானது. பின்னர் மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் குலசேகர பாண்டியன். இவன் மதுரை மாநகரைத் திட்டமிட்டு உருவாக்கி அங்கே மணவூர் மக்களை எல்லாம் குடியமர்த்தினான் என்கிறது திருவிளையாடற் புராணம். 

அப்படியானால், பண்டைய மதுரையும் மணவூரும் எப்படி அழிந்தன? கீர்த்திபூடண பாண்டியன் ஆட்சிக் காலத்தில், மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்றும், அது அடங்கும் முன்னரே மற்றொரு பிரளயம் தோன்றி மீண்டும் அழித்தது என்றும் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்டதாகச்“ சிலப்பதிகாரம் கூறுகிறது(சிலம்பு. 11. 19-20).
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்து, மண்ணை மூடிக் கவர்ந்துள்ளது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! தமிழகத்தில் உள்ள குன்றுகளின் மேற்குப் பகுதிகளில் எல்லாம் கடல்மண் கிடப்பதைக் காணமுடிகிறது.

கடல் வௌவிய மண்படிமங்கள் காணக்கிடக்கின்றனவா?


மேலே உள்ள படத்தில்,  திண்டுக்கல் பழநி சாலையில் விருப்பாச்சி அருகே உள்ள ஏற்றத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்க இடையில் “மலிதிரை ஊர்ந்து கடல் வௌவிய மண்“ படிந்துள்ளதாகக் கட்டுரையாளர் கருதுகிறார்.




மேலே உள்ள இரண்டு படங்களிலும், சிவகங்கை மாவட்டம் திருமலையில் உள்ள பாறை இடுக்குகளில் கடல்மண் படிந்துள்ளதா? என்ற தேடுதல் தொடர்கிறது ... ...  
கிரானைட் பாறைகளின் இடையே படிந்துள்ள இந்தவகையான பொக்குப் பாறைகள் சுனாமியினால் அடித்து வரப்பட்ட கடல்களிமண்ணால் உருவானை எனக் கருதுகிறேன்.

(குறிப்பு –  மண்மாதிரிகளை அறிவியல் அடிப்படையில் ஆராயும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.)

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
------------------------------------------------
சங்கப் பாடல்களில் மதுரையும் கூடலும் 
சங்கப்பாடல்களில் மதுரை என்ற சொல் 9 வரிகளிலும்.......
கூடல் என்ற சொல் 38 வரிகளிலும் இடம் பெற்றுள்ளன....
(நன்றி - http://tamilconcordance.in/sangconc)

சங்கப்பாடல்களில் மதுரை -
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை/சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ - மது 699,700
இடை நெறி தாக்கு-உற்றது ஏய்ப்ப அடல் மதுரை/ஆடற்கு நீர் அமைந்தது யாறு - பரி  11/48,49
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் - பரி 12/9
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் - பரி 31/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் - பரி 32/3
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் - பரி 33/3
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் - கலி 96/23
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று - சிறு 67
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் - புறம் 32/5

சங்கப்பாடல்களில் கூடல் (38) -
மாடம் மலி மறுகின் கூடல் குட-வயின் - திரு 71
மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல்/நாள்_அங்காடி நனம் தலை கம்பலை - மது 429,430
மலி ஓதத்து ஒலி கூடல்/தீது நீங்க கடல் ஆடியும் - பட் 98,99
பெரும் பெயர் கூடல் அன்ன நின் - நற் 39/10
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண் - நற் 298/9
மூன்று உடன் கூடிய கூடல் அனையை - பதி 50/7
குன்றத்தான் கூடல் வரவு - பரி 8/28
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல்/மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ - பரி  8/29,30
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல்/ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் - பரி  10/40,41
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல்/வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை - பரி  10/112,113
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்/அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை - பரி  10/129,130
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல்/உரைதர வந்தன்று வையை நீர் வையை - பரி  12/31,32
புலத்தினும் போரினும் போர் தோலா கூடல்/கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை - பரி  19/8,9
குன்றொடு கூடல் இடை எல்லாம் ஒன்றுபு - பரி 19/15
கூடல் விழையும் தகைத்து தகை வையை - பரி 20/26
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல்/கடி மதில் பெய்யும் பொழுது - பரி  20/106,107
காமரு வையை கடுகின்றே கூடல்/நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி - பரி  24/4,5
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்/மணி எழில் மா மேனி முத்த முறுவல் - பரி  24/46,47
நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே - கலி 31/25
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல்/தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் - கலி  57/8,9
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்/வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை - கலி  92/11,12
வாடா வேம்பின் வழுதி கூடல்/நாள்_அங்காடி நாறும் நறு நுதல் - அகம் 93/9,10
பொய்யா விழவின் கூடல் பறந்தலை - அகம் 116/14
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது - அகம் 149/14
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் - அகம் 231/13
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய - அகம் 253/6
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய - அகம் 296/12
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் - அகம் 315/7
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் - அகம் 346/20
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே - புறம் 58/13
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல்/விலங்கு இடு பெரு மரம் போல - புறம் 273/5,6
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன - புறம் 347/6

பொன் தேரான் தானும் பொலம் புரிசை கூடலும்/முற்று இன்று வையை துறை - பரி  24/26,27
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம் - பரி 34/2
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை - கலி 30/11
கூடலொடு பரங்குன்றின் இடை - பரி 17/23
நெடு மாட கூடற்கு இயல்பு - பரி 35/6
கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும்/கை ஊழ் தடுமாற்றம் நன்று - பரி  17/45,46