செவ்வாய், 19 மே, 2020

மண் கடல் வௌவலின் (சூளகிரி) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)

மண் கடல் வௌவலின் (சூளகிரி)
மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)


தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலை அருகே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம்.

பண்டைய மதுரையும் மணவூரும் எவ்வாறு அழிந்தன?.
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?


ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.

கிருஷ்ணகிரி ஓசூர் இடையே நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.


இந்த இடத்தில் மேலும் கீழும் கடினமான கிரானைட் பாறைகள் இருக்கின்றன. இந்தப் பாறைகளுக்கு இடையே பொக்குப்பாறை என்று அழைக்கப்படும் கடல்வௌவிய மண் திட்டுக்கள் எளிதில் நன்றாகக் காணக் கிடைக்கின்றன.   அடுத்து ஆந்திராவில் பெரச்சந்திரா அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக