ஆலவாயும் அலைவாயும்
யூடிப்பில் காணுங்கள் https://youtu.be/Kff9Z7W94tM
Thiruvillayadal Puranam is narrating about Tsunamis. In this blog, I am giving some extracts of the puranam and explaining in details with Google Map and my photos.
கல்வெட்டில் கடல்கோள்
முகநூல் நண்பர் Rachinn Rachinn Rachinn அவர்களின் பதிவு இது.
7 பிப்ரவரி, முற்பகல் 6:43க்கு ·
நினைவுச் சாலை:பாண்டியர்கள் யாரால் முடிவுக்கு வந்தனர். தெளிவாக சித்தரிக்கின்றன இந்தக் கல்வெட்டுச் செய்திகள்.
கம்பணர் ஆட்சிக்குபின்பும் நாயக்கர் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பும் இருந்த இடைக்காலத்தில் பாண்டிய நாடு வாணாதிராயர் ஆட்சியில் இருந்நததாக கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.Òமஹாவலி வாணதரையர்சீர்மையானமதுரை மண்டலாம்Ó&ஸ்ரீவில்லிபுத்தூர்கல்வெட்டு.கக
''மால்விட்ட படை துரந்து வடுகெறிந்த
மகதேசன் வடிவேல் வாங்கக்
கால்விட்ட கதிர்முடியே யிந்திரனைப்
புடைத்தது முன் கடல்போய் வற்ற
வேல்விட்டதொகுதிறலுமுகிலிட்ட
தனி விலங்கும் வெற்பி லேறச்
சேல்விட்ட பெருமலியு மாங்கேலிட்டுடைந்தான் தென்னவர்கோவே''
''இழைத்த படியிதுவோ வெங்கணா வென்றன்
றிழைத்த வழுகுலேயால்&தழைத்த குடை
மன்னர்கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த தென்னவர்கோன் போன திசைÓ&புதுக்கோட்டை''-குடுமியான்மலைக் கல்வெட்டுக்கள் இரண்டு, பாண்டியர் தோல்வியையும், வாணாதிராயர் வெற்றியையும் (செய்யுள் நடையில் கூறியுள்ளன.
முனைவர் மா.இராசமாணிக்கனார்
(கல்வெட்டுகளும் தமிழ் சமூக வரலாறும்)
இதன் வழியாக நாம் அறிய வேண்டிய செய்திகள் உள்ளன.பாண்டியர்கள் வாணாதிராயர்களால் வீழ்த்தப்பட்டனர்.வாணாதிராயர்கள் யார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
கீழடி நகரம்?
நிலவியல் துறை நிபுணர்கள் ஆய்வு துவக்கம்
தினகரன் நாளிதழ் செய்தி 2020-09-18@ 17:34:38
திருப்புவனம், : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வருகின்றன. இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில் பழமையான பானைகள், இணைப்பு குழாய் பானைகள், கட்டிடங்கள், தங்க நாணயம், எடை கற்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. இவை 2,600 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என கண்டறியப்பட்டுள்ளது.கீழடியில் கிடைத்த பொருட்கள் சங்ககால தமிழர்கள் நகர நாகரீகத்துடன் வாழ்ந்ததை நிரூபிக்கின்றன. இங்கு வாழ்ந்த மக்கள் எங்கு சென்றனர், இந்த நகரம் அழிந்ததற்கான காரணம் என்ன என நிலவியல் துறை ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு பணிகள் நேற்று தொடங்கியுள்ளன.
டேராடூன் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிலவியல் துறை தலைவருமான பேராசிரியர் ஜெயம்கொண்ட பெருமாள் தலைமையில் 2 ஆராய்ச்சி கல்லூரி மாணவர்களுடன் நேற்று ஆய்வு பணிகள் தொடங்கின. இதற்காக கீழடியில் தரைதளத்தில் இருந்து 13 மீட்டர் ஆழம் வரை பல்வேறு இடங்களில் மண் அடுக்குகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை வைத்து கீழடி நகரம் அழிந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
இது குறித்து நிலவியல் துறை ஆய்வாளர் பெருமாள் கூறுகையில்,‘‘சங்கத்தமிழ் வளர்ந்த நகரம் கீழடி. இந்த நகரம் அழிந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். கீழடி பகுதி கடல் உள்வாங்கியதால் அழிந்திருக்குமா, சுனாமி போன்றவற்றால் அழிந்திருக்குமா, மக்கள் இடம் பெயர்ந்ததால் அழிந்திருக்குமா என ஆய்வு செய்ய உள்ளோம்’’ என்றார்.
லேசர் கருவி சோதனை - கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி பிப்.19ல் தொடங்கி நடந்து வருகிறது. செப்டம்பருடன் பணிகள் முடிவடைய உள்ளன. வரும் ஜனவரியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக கீழடியில் உள்ள கருப்பையாவின் நிலம் மற்றும் சுற்றியுள்ள நிலங்களில் சர்ஃபேஸ் ஸ்கேனர் என்ற நவீன லேசர் கருவி மூலம் நேற்று ஆய்வு பணிகள் தொடங்கின. இந்த லேசர் கருவிகள் தரைமட்டத்தில் இருந்து 500 மீட்டர் ஆழத்திற்கு ஊடுருவி, கீழே பழங்கால கட்டிடங்கள், பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்யும் திறன் கொண்டவை.
https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=618176
----------------------------
திருவிளையாடற்புராணம் 11ஆவது படலத்தில் சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகன் உக்கிர குமாரனின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்த ஆழிப்பேரலை(“சுனாமி”) வந்தது என்றும், அதை வேல் எறிந்து உக்கிரபாண்டியன் தடுத்து நிறுத்தினான் என்று ஒரு குறிப்பு உள்ளது.
https://kalairajan26.blogspot.com/2016/10/blog-post.html
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆராய்ச்சி அமைப்பாளர்
திருவிளையாடற் புராண ஆராய்ச்சி மையம்
கடல்கொண்ட பொதிகை
குமரிக்கோடு அழியக் காரணமான பிரளயகாலத்தில் உண்டான ஆழிப்பேரலைகள் (சுனாமி) மலைகள் மூழ்கும்படியாக உயர்ந்து எழுந்து தென்தமிழகம் முழுவதையும் அரித்துச் சென்றுள்ளது. இவ்வாறு அடித்துச் சென்றன எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்த பள்ளத்தாக்குகளில் தங்கிவிட, கடல்அலைகள் அதையும் தாண்டிச் சென்று மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளன.
இதனால், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் இருந்த பள்ளத்தாக்குகள் நிறைந்து சற்று சிறிய சமவெளிகளாக மாறியுள்ளன. இவ்வாறு பண்டைய தமிழர் நாகரிகம் புதையுண்ட இடமே ‘பொதிகை’ என்று அழைக்கப்படுகின்ற இடமாகும்.
பொதிகையில் பொதிந்துள்ளனவற்றைப் புதைபொருள் ஆராய்ச்சி செய்தால், கடல்கோளுக்கு முந்தைய நமது பண்டைத் தமிழரின் எச்சங்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மணிமேகலை குறிப்பிடும் கடல்கோள்
மதுரைக்கு வந்த சுனாமி வந்ததா?
எப்போது வந்தது?
எப்படி வந்தது?
ஆழிப்பேரலை (சுனாமி) மீண்டும் வருமா?
வந்தால் என்ன செய்வது? எப்படிச் செய்வது?
அனைத்து வல்லரசுகளும் பயப்படுகின்றன.
உலகமக்கள் எல்லாம் உயிருக்கு அஞ்சுகின்றனர்.
சப்பான் நாட்டில் சுனாமியால் அணுஉலை எரிந்தது.
தமிழ்நாட்டிலும் இதுபோல் சுனாமி வந்தால், கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர். எனவே அணுமின்நிலையத்தை அரைகிலோமீட்டர் தள்ளிக் கட்டவேண்டும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் மதுரைக்கு சுனாமி வந்துள்ளது!
எப்போது வந்தது? எப்படி வந்தது? என்ன என்ன அழிந்தன? யார் யார் பிழைத்தார்கள்?
எப்போது வந்தது?
அதுலகீர்த்தி என இருபத்திரண்டு மைந்தர் வழிவழியாக, பாண்டிய நாட்டைக் காத்துவந்தனர். இவர்களுள், பழிதவிர் அதுலகீர்த்திபாண்டியன் என்னும் மன்னனின் மகன் கீர்த்திபூசணன் செங்கோலோச்சி ஆட்சி செய்து வந்த காலத்தில் ஒருநாள் ஆழிப்பேரலை பொங்கி மதுரை வரை வங்கக்கடல் வந்துள்ளது.
எப்படி வந்தது?
கருங்கடல் ஏழும் ஒருசேரப் பொங்கி மேலே எழுந்து, பெரிய உருவம் பெற்று, சீறிப் பாய்ந்து, வெகுண்டு ஆரவாரித்து, காவல் கரையைக் கடந்து வந்தன. விண்ணுலகையும், மண்ணுலகையும், இணைக்கின்ற பெரிய பொன்னையுடைய எட்டு மலைகளும், பெருங்கடி நேமி(சக்கரம்) வரை(பாதுகாப்புச் சுவர்) யும், பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள கிரியும் தங்களது நிலையிலிருந்து பெயர்ந்தன. பிரளயத்தின்மீது இன்னுமொரு பிரளயம் கோர்த்து வந்தது.
இவை அனைத்தும், அப்பெருஞ் சலதி வெள்ளத்தின் உள்ளே சென்று விட்டன. கடல் வெள்ளத்துள் மூழ்கி, அழிவு இலாத பெரிய பூமியும், ஏழு தீபகற்பங்களும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கிநிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்த மலைவகைகளும் கடல் அலைகளுள் சென்றன.
என்ன என்ன அழிந்தன? யார் யார் பிழைத்தார்கள்?
ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, நான்கு முறை ஆழிப்பேரலையானது (சுனாமி) மதுரைக்கு வந்து சென்றதாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.
சங்க காலத்திலே, பொங்கி வந்த ஆழிப்பேரலையானது தமிழகத்தையே அழித்து மேற்கே சென்றுள்ளது. பிரளயத்திற்குமேல் மற்றொரு பிரளயம் உண்டாகியுள்ளது. இதனால் எழுகடலும் பொங்கி எழுந்துள்ளன. அப்போது மதுரையின் வடக்கு எல்லையாக விளங்கும் யானைமலையும், தெற்கு எல்லையாக விளங்கும் திருப்பரங்குன்றமலையும் தங்களது இடங்களிலிருந்து பெயர்ந்து ஆட்டம் கண்டுள்ளன. கடல் அலையானது பொங்கி எழுந்து வந்து யானைமலையும் திருப்பரங்குன்ற மலையும் மூழ்கடித்துள்ளன. மலைகளையெல்லாம் மூழ்கடித்த அந்த அழித்த ஆழிப்பேரலையானது மேற்குத் தொடர்ச்சி மலையையும் தாண்டிச் சென்று அரபிக்கடலில் கலந்துள்ளது.
மலைகள் எல்லாம் ஆடும்படியாக அடுக்கடுக்காகப் பிரளயம் உண்டானபோது பொங்கி எழுந்த கடல் அலையானது ஒரே சேறும்சகதியுமாக இருந்துள்ளது. இந்த அலையில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.
பிரளயம் வற்றிய போது கடல்நீர் மீண்டும் கடலுக்குள் செல்லும் போது, அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் எல்லாம் வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேடாக உள்ளது. இதனால் இந்த இடம் “முகவை“ என்றும் சேதுக்கரை என்றும் பெயர் பெறலானது. இந்த இடங்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால் தமிழரின் தொன்மைச் சான்றாதாரங்கள் எளிதில் கிடைக்கும்.
அன்பன்
முனைவர் நா.ரா.கி. காளைராசன்
18 பிப்ரவரி 2013

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4)
மதுரையை வங்கக் கடல் வௌவியது:
2004ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய சுனாமி தோன்றி மதுரையை அழிந்தது பற்றித் திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் விரிவாகக் கூறுகிறது.
பேய்களும் கண்ணுறங்கும் நடு இரவில், குருட்டு இருளில் வங்கக் கடலில் பிரளயம் உண்டானது. இதனால் நிலம் நடுக்கியது. வங்கக் கடல் பொங்கி எழுந்தது. கடல் அலைகள் அண்டகூடம் முழுதும் ஊடுருவிச் சென்றன. கடல் வெள்ளம் பெருகி ஆரவாரித்து விண்ணுயர எழுந்தது. மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் அஞ்சுமாறு பெரிய கரிய மலை போல் அலைகள் தோன்றி எழுந்து வந்தன.
நஞ்சு பொருந்திய வாயினையும், கரிய உடலையும் உடையது இராகு என்னும் பாம்பு. இந்தக் கொடிய பாம்பானது ஞாயிறுடன் திங்கள் சேரும்போது (சூரிய கிரகணம்) விரைந்து விழுங்கிவிடும். அதைப் போன்று, மரக்கலங்கள் செல்லும் கடலின் வெள்ளமானது, மாடங்களையுடைய மதுரையை விரைந்து விழுங்கியது.
வட்டமாகிய ஆமைகளைக் கேடயங்களாகவும், வாளை மீன்களை வாட்படைகளாகவும், மகரமீன்களை யானைப் படைகளாகவும், பரந்த அலைக் கூட்டங்களைத் தாவுகின்ற குதிரைப் படையாகவும், கடலில் மிதந்த தோணிகளைத் தேர்ப் படைகளாகவும் கொண்டு கடல் அலைகள் தோன்றி எழுந்தன. வானளவிய கோட்டை மதில் சூழ்ந்த மதுரையின் கிழக்குத் திசையில் உக்கிர பாண்டியன்மேல் போருக்கு எழுந்ததைப் போன்று பிரளயத்தில் தோன்றிய கடல் வெள்ள அலைகள் வானுயரத் தோன்றி வந்தன.
தொடரும்...
கட்டுரையாளர் – காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன், kalairajan26@gmail.com, 9443501912
நாள் – வைகாசி 13 (27.05.2017) சனிக்கிழமை
குறிப்பு - கட்டுரையாளர் தான் படித்த திருவிளையாடற் புராணம் பாடல்கள், நேரில் பார்த்த மண் மற்றும் மலைகளின் அமைப்புகள், கூகுள் புவிப்படங்கள் இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று இயைபு உடையனவாக உள்ளன என்ற கருதுகிறார். மதுரை மணவூர் (கீழடி) மற்றும் தமிழகம் முழுமையும் சுனாமியால் அளித்துள்ளன என்ற கருத்தை இக் கட்டுரையில் பதிவு செய்கிறார்)
பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்துப் பாடியருளிய பிரளயம் கூறும் திருவிளையாடற் புராணப் பாடல்கள் சில.
1037.
பொருங்கடல்வேந்தனைக்கூவிப்பொள்ளென இருங்கடலுடுத்தபாரேமுமூழிநாள் ஒருங்கடுவெள்ளமொத்துருத்துப்போய்வளைந் தருங்கடிமதுரையையழித்தியாலென்றான்.
1038.
விளைவதுதெரிகிலேன்வேலைவேந்தனும்
வளவயன்மதுரையைவளைந்திட்டிம்மெனக்
களைவதுகருதினான்பேயுங்கண்படை
கொளவருநனந்தலைக்குருட்டுக்கங்குல்வாய்.
1039
கொதித்தலைக்கரங்களண்டகூடமெங்குமூடுபோய்
அதிர்த்தலைக்கவூழிநாளிலார்த்தலைக்குநீத்தமாய்
மதித்தலத்தையெட்டிமுட்டிவருமொரஞ்சனப்பொருப்
புதித்ததொத்துமண்ணும்விண்ணுமுட்கவந்ததுததியே.
1040
வங்கவேள்வெள்ளமாடமதுரைமீதுவருசெயல்
கங்குல்வாயதிங்கண்மீதுகாரிவாயகாருடல்
வெங்கண்வாளராவிழுங்கவீழ்வதொக்குமலதுகார்
அங்கண்மூடவருவதொக்குமல்லதேதுசொல்வதே.
1041
வட்டயாமைபலகைவீசுவாளைவாள்கள்மகரமே
பட்டயானைபாய்திரைப்பரப்புவாம்பரித்திரள்
விட்டதோணியிரதமின்னவிரவுதானையொடுகடல்
அட்டமாகவழுதிமேலமர்க்கெழுந்ததொக்குமே.
1042
இன்னவாறெழுந்தவேலைமஞ்சுறங்குமிஞ்சிசூழ்
நன்னகர்க்குணக்கின்வந்துநணுகுமெல்லையரையிரா
மன்னவன்கனாவின்வெள்ளிமன்றவாணர்சித்தராய்
முன்னர்வந்திருந்தரும்புமுறுவறோன்றமொழிகுவார்.
நன்றி
(1) மேலேயுள்ள படமானது இணையத்தில் இருந்து எடுக்கப் பெற்றது. படத்தைப் பதிவு செய்தோருக்கு நன்றி.
(2) திருவிளையாடற்புராணம் பாடல்களை இணையத்தில் பதிவு செய்துள்ள தமிழ்இணையப் பல்கலைக்கழகத்திற்கு நன்றி.
(3) கூகுள் மேப் வழங்கிய புவிப்படத்திற்கு நன்றி.
![]() |
| 1024px-Seismite_Ordovician_Kentucky_Close. Seismite formed by liquefaction of sediments during a Late Ordovician earthquake. |
![]() |
Ganga,
a celestial water planet fall down in the Himalaya Mountains Bowl
|
![]() |
Ganga,
a celestial water planet fall down in the Himalaya Mountains Bowl
|
![]() |
Huge
Tsunami swiped the entire South Indian sub-continent, Burma, Thailand, Indonesia.
|
![]() |
| Tsunami deposited sedimentary rocks |
![]() |
| Is it Tsunami rocks? Melur-Alagarkoil Road |