கடல்கொண்ட கொடைக்கானல் !
இவ்வாறு ஒரு மலையே மூழ்கி அழியும் போது, அதனருகில் உள்ள தமிழகமும் கடலால் மூழ்கடிக்கப் பட்டிருக்க வேண்டுமல்லவா?
கடினமாக கருப்புநிறக் கிரானைட் பாறைகளால் ஆனது கொடைக்கானல் மலைத்தொடர். பாறைகள் சிதைந்துதான் மண்ணும் மணலும் தோன்றின என்கின்றனர் புவியியல் படித்தறிந்தோர். கொடைக்கானலில் உள்ள மண் திட்டுகளைப் பார்த்தால் அங்குள்ளகருப்புநிற கிரானைட் பாறைகள் சிதைத்து உருவான மண் திட்டுகள் போன்று தெரியவில்லை.
ஆனால் கொடைக்கானல் மலைப் பாறைகளின் மீது மஞ்சள்நிற மண் மற்றும் செம்மண் கலந்து படிந்துள்ளன. இவ்வாறான மண்திட்டுக்கள் படிந்துள்ள இடத்தில்தான் கோல்ப் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.
கருப்புநிற கிரானைட் பாறைகள் சிதைந்தா இந்த மண்திட்டுகள் உருவாகி யிருக்கும்?
இதே போன்ற அமைப்பிலான மண்திட்டுகளை அழகர்கோயில் மலை, திண்டுக்கல் அருகே விருப்பாச்சி மலை, திருத்தணி மலை முதலான தமிழகத்தில் உள்ள மலைகளில் எல்லாம் காணலாம். மேலும் இதே போன்ற அமைப்பிலான மண்திட்டுகளை ஆந்திரம் கர்நாடகத்தில் உள்ள மலைகளில் காணமுடிகிறது.
குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்ட போது தோன்றிய கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியினால்) அடித்து வரப்பட்ட களிமண்தான் கொடைக்கானலில் உள்ள கிரானைட் பாறைகளின் மேல் படிந்துள்ளது என எண்ணத் தோன்றுகிறது !
அமெரிக்காவில் Lexington அருகில் உள்ள Kentucky என்ற இடத்தில் இதுபோன்றே மண்திட்டுகள் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்ந்த புவியியல் அறிஞர்கள் பிரளயத்தின்போது உண்டான நிலநடுக்கத்தினாலும் சுனாமியினாலும் உண்டாகி இருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர்.
1024px-Seismite_Ordovician_Kentucky_Close. Seismite formed by liquefaction of sediments during a Late Ordovician earthquake. |
அமெரிக்காவில் கடினமான பாறைகளும், பொக்குப்பாறைகளும் கலந்து உருவாகியுள்ள இந்த அமைப்புப் போன்றே கொடைக்கானல் மலைத்தொடரிலும் காணக் கிடக்கின்றன.
அமெரிக்காவில் நிலநடுக்கத்தினாலும் சுனாமியினாலும் இவ்வாறு உருவாகியுள்ளன என்றால், கொடைக்கானலில் உள்ள இந்தப் பாறைகளும் நிலநடுக்கத்தினாலும் சுனாமியினாலும்தானே உருவாகியிருக்க வேண்டும் ?
கொடைக்கானலில் இருந்து வங்கக் கடலானது சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ளது. தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் இருந்து வங்கக்கடல் ஊர்ந்து 200 கி.மீ. தொலைவைக் கடந்து வந்து, சுமார் 2000 மீட்டர் உயரமுள்ள கொடைக்கானல் மலைப் பாறைகளின் மேல் படிந்துள்ளது. இவ்வளவு மாபெரும் கடல்கோளை (பெருஞ் சுனாமியை) யாரும் எளிதில் நம்பும் படியாக இல்லை.
ஆனால் கூகுள் புவிப்படத்தைப் பார்த்தால், தமிழகத்திற்குக் கிழக்கே அந்தமான் தீவுகளுக்கு அருகே சுமார் 1965 கி.மீ. சுற்றளவும் 1,76,697 சதுர கி.மீ. பரப்பளவும் கொண்ட ஒரு மாபெரும் நிலப்பரப்பு கடலில் மூழ்கி உள்ளதைக் காண முடிகிறது. கடலில் மூழ்கியுள்ள இந்த நிலத்தின் பரப்பளவு தமிழகத்தின் பரப்பளவை விடக் கூடுதலாக உள்ளது.
இவ்வாறான ஒரு மாபெரும் நிலப்பரப்பு கடலில் மூழ்கும் போது உருவாகும் கடல்கோளை (பெருஞ் சுனாமியை) அளவீடாகக் கொண்டால், 2000 மீட்டர் உயரமுடைய கொடைக்கானல் மலையைக் கடல் அலைகள் கடந்து சென்றிருக்க முடியும் என்றே கருத வேண்டியுள்ளது.
தூண்பாறைகள் (Piller Rocks)
கடலானது நிலத்தில் ஊர்ந்து மலையில் ஏறிக் கடந்து செல்லும் போது, எத்தனையோ உயிரியல் தடயங்கள் தமிழகமெங்கும் உள்ள மலைப்பாறைகளின் இடுக்குகளில் தங்கிப் படித்திருக்க வேண்டும். இவ்வாறாகப் படிந்துள்ள படிமங்களைக் தேடிக் கண்டறிய வேண்டும்.
உங்களது கருத்து என்ன ?
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
அருமை!!!
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நீக்கு