கல்வெட்டில் கடல்கோள்
முகநூல் நண்பர் Rachinn Rachinn Rachinn அவர்களின் பதிவு இது.
7 பிப்ரவரி, முற்பகல் 6:43க்கு ·
நினைவுச் சாலை:பாண்டியர்கள் யாரால் முடிவுக்கு வந்தனர். தெளிவாக சித்தரிக்கின்றன இந்தக் கல்வெட்டுச் செய்திகள்.
கம்பணர் ஆட்சிக்குபின்பும் நாயக்கர் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பும் இருந்த இடைக்காலத்தில் பாண்டிய நாடு வாணாதிராயர் ஆட்சியில் இருந்நததாக கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.Òமஹாவலி வாணதரையர்சீர்மையானமதுரை மண்டலாம்Ó&ஸ்ரீவில்லிபுத்தூர்கல்வெட்டு.கக
''மால்விட்ட படை துரந்து வடுகெறிந்த
மகதேசன் வடிவேல் வாங்கக்
கால்விட்ட கதிர்முடியே யிந்திரனைப்
புடைத்தது முன் கடல்போய் வற்ற
வேல்விட்டதொகுதிறலுமுகிலிட்ட
தனி விலங்கும் வெற்பி லேறச்
சேல்விட்ட பெருமலியு மாங்கேலிட்டுடைந்தான் தென்னவர்கோவே''
''இழைத்த படியிதுவோ வெங்கணா வென்றன்
றிழைத்த வழுகுலேயால்&தழைத்த குடை
மன்னர்கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த தென்னவர்கோன் போன திசைÓ&புதுக்கோட்டை''-குடுமியான்மலைக் கல்வெட்டுக்கள் இரண்டு, பாண்டியர் தோல்வியையும், வாணாதிராயர் வெற்றியையும் (செய்யுள் நடையில் கூறியுள்ளன.
முனைவர் மா.இராசமாணிக்கனார்
(கல்வெட்டுகளும் தமிழ் சமூக வரலாறும்)
இதன் வழியாக நாம் அறிய வேண்டிய செய்திகள் உள்ளன.பாண்டியர்கள் வாணாதிராயர்களால் வீழ்த்தப்பட்டனர்.வாணாதிராயர்கள் யார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக