படம் - நன்றி - https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2021/jul/15/கீழடி-அகழாய்வில்-சுடுமண்-உறைகிணறு-கண்டுபிடிப்பு-3660277.html
கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. அகரத்தில் மட்டும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 7 உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது. 6ஆம் கட்ட அகழாய்வில் 28 அடுக்குகள் கொண்ட உறைகிணற்றின் அருகே, தற்போது, 7ஆம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக ஒரு உறைகிண கண்டறியப்பட்டுள்ளது. இதில் அகரத்தில் 6வது குழியில் 20 முதல் 25 செ.மீ உயரமுள்ள உறைகள் கொண்ட 3 அடுக்குகளுடன் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. உறைகிணறுகளின் உள்ளே எந்த பொருளும் கிடைக்க வில்லை. ஆனால் உறைகிணறுகளின் அருகே மண் பாத்திரங்கள் கிடைத்துள்ளன. அதனை வைத்து உறைகிணறுகளில் தண்ணீர் எடுத்து இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.
அந்தக்காலத்தில் குடிநீர்க் கிணறுகளில் மூங்கில் மரத்தினால் உறை செய்யப்பட்டிருக்கும். இவ்வாறான கிணறுகளில் இருந்த மூங்கில் உறைகள் மக்கி மண்ணோடு மண்ணாகிவிட்டன. ஆனால் இந்தக் கிணறுகளின் அடிப்பகுதியில் விழுந்த பானைகள் உடைந்து வட்டவடிவமாக இருக்கும்.
இந்தச் சுடுமண்உறைகிணறுகள் குடிநீர் எடுப்பதற்கானவை அல்ல....
இவற்றின் பயன்பாடு அறிவியல் அடிப்படையிலான ஆய்விற்கு உரியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக