Theory of Tsunami லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Theory of Tsunami லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 பிப்ரவரி, 2022

கல்வெட்டில் கடல்கோள்

கல்வெட்டில் கடல்கோள்

முகநூல் நண்பர் Rachinn Rachinn Rachinn அவர்களின் பதிவு இது.

7 பிப்ரவரி, முற்பகல் 6:43க்கு  · 

நினைவுச் சாலை:பாண்டியர்கள் யாரால் முடிவுக்கு வந்தனர். தெளிவாக சித்தரிக்கின்றன இந்தக் கல்வெட்டுச் செய்திகள்.

கம்பணர் ஆட்சிக்குபின்பும் நாயக்கர் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பும் இருந்த இடைக்காலத்தில் பாண்டிய நாடு வாணாதிராயர் ஆட்சியில் இருந்நததாக கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.Òமஹாவலி வாணதரையர்சீர்மையானமதுரை மண்டலாம்Ó&ஸ்ரீவில்லிபுத்தூர்கல்வெட்டு.கக

''மால்விட்ட படை  துரந்து வடுகெறிந்த

மகதேசன் வடிவேல் வாங்கக்

கால்விட்ட கதிர்முடியே யிந்திரனைப்

புடைத்தது முன் கடல்போய் வற்ற

வேல்விட்டதொகுதிறலுமுகிலிட்ட

தனி விலங்கும் வெற்பி லேறச்

சேல்விட்ட பெருமலியு மாங்கேலிட்டுடைந்தான் தென்னவர்கோவே''

''இழைத்த படியிதுவோ வெங்கணா வென்றன்

றிழைத்த வழுகுலேயால்&தழைத்த குடை

மன்னர்கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த தென்னவர்கோன் போன திசைÓ&புதுக்கோட்டை''-குடுமியான்மலைக் கல்வெட்டுக்கள் இரண்டு, பாண்டியர்  தோல்வியையும், வாணாதிராயர் வெற்றியையும் (செய்யுள் நடையில் கூறியுள்ளன.

முனைவர் மா.இராசமாணிக்கனார்

(கல்வெட்டுகளும் தமிழ் சமூக வரலாறும்)

இதன் வழியாக நாம் அறிய வேண்டிய செய்திகள் உள்ளன.பாண்டியர்கள்  வாணாதிராயர்களால் வீழ்த்தப்பட்டனர்.வாணாதிராயர்கள் யார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

கடல்கொண்ட பொதிகை

கடல்கொண்ட பொதிகை 


கடல்கோள்

குமரிக்கோடு அழியக் காரணமான பிரளயகாலத்தில் உண்டான ஆழிப்பேரலைகள் (சுனாமி) மலைகள் மூழ்கும்படியாக உயர்ந்து  எழுந்து தென்தமிழகம் முழுவதையும் அரித்துச் சென்றுள்ளது. இவ்வாறு அடித்துச் சென்றன எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்த பள்ளத்தாக்குகளில் தங்கிவிட, கடல்அலைகள் அதையும் தாண்டிச் சென்று மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளன. 

இதனால், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் இருந்த பள்ளத்தாக்குகள் நிறைந்து சற்று சிறிய சமவெளிகளாக மாறியுள்ளன.  இவ்வாறு பண்டைய தமிழர் நாகரிகம் புதையுண்ட இடமே  ‘பொதிகை’ என்று அழைக்கப்படுகின்ற இடமாகும்.

பொதிகை

பொதிகையில் பொதிந்துள்ளனவற்றைப் புதைபொருள் ஆராய்ச்சி செய்தால், கடல்கோளுக்கு முந்தைய நமது பண்டைத் தமிழரின் எச்சங்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


அன்பன்
கி.காளைராசன் <kalairajan26@gmail.com>
1 Dec 2013, 07:41
to mintamil, vallamai, meykandar@yahoogroups.com, tolkaappiyar@egroups.com

திங்கள், 14 செப்டம்பர், 2020

கடல்கோள்களும் கிழக்கு மேற்குக் கடற்கரைகளும்

கடல்கோள்களும் 

கிழக்கு மேற்குக் கடற்கரைகளும்

மகாராஷ்டிராவில் நர்மதை, தபதி என்ற இரண்டு நதிகள் மற்றும் கேரளமாநிலத்தில் பெரியாறு ஆகிய மூன்று நதிகள் மட்டுமே கிழக்கில் இருந்து மேற்காகப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன்.  இந்த மூன்று நதிகளைத் தவிர இந்தியாவில் பாயும் அனைத்து நதிகளும் கிழக்கே உளள வங்காளவிரிகுடாவில்தான் கலக்கின்றன.

இந்த நதிகள் எல்லாம் வண்டல்மண்ணை அடித்துவந்து கடலில் சேர்க்கின்றன.   ஆனாலும் இந்தியாவின் கூகுள் புவிப்படத்தைப் பார்த்தால்,  கிழக்குக் கடற்கரையோரம் நெடுகிலும் மணல் மிகவும் குறைவாகவே படிந்துள்ளதைக் காணமுடிகிறது.  ஆனால் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் மிக அதிகமான அளவில் மணல் படிந்து கடற்கரையே மணல்மேடாகக் காணப்படுகிறது.

இவ்வாறு, கிழக்குக் கடற்கரையில் குறைவாக மணல் படிந்து இருப்பதற்கும்,  மேற்குக் கடற்கரையில் மிகக் கூடுதலாக மணல் படிந்துள்ளதற்கும் காரணம் என்ன?

வங்கக்கடலில் அந்தமான் தீவையொட்டி இருந்த நிலத்திட்டுகள் புடைபெயர்ந்து கடலில் மூழ்கி அடுத்தடுத்து மிகப்பெரிய கடல்கோள்கள் (big tsunamis) உண்டாகியுள்ளன.   இந்தக் கடல்கோள்களால் உண்டான கடல்வெள்ளம்  கிழக்குக் கடற்கரையைத் தாக்கி அழிந்து, இந்தியத் தீபகற்ப நிலப்பகுதியைத் தாண்டிச் சென்று மேற்குக் கடற்கரையில் படிந்துள்ளது.    இதன் காரணமாகவே இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப்பகுதியில் மணல் குறைவாகவும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் மணல் கூடுதலாகவும் உள்ளது என்பது எனது கருத்து.

இலங்கையிலும் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் குறைவான அளவில் மண் படிந்துள்ளதும், மேற்குக் கடற்கரையில் கூடுதலான மண் படிந்துள்ளதற்கும், இதுபோல் உலகெங்கும் கடற்கரையோரங்களில் அதிகமான மணல் படிந்துள்ளதற்கும்  கடல்கோளால் உண்டான கடல்வெள்ளமே (tsunamis) காரணம் என்பது எனது கருத்து.

இதுபற்றிப் புவியியல் அறிஞர்களின் கருத்துக்களையும், கடல்கோள்கள் ஆர்வலர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.

அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஆவணி 29 (14.09.2020) திங்கள் கிழமை.

வியாழன், 3 செப்டம்பர், 2020

அழகர்கோயிலில் கிடப்பது கல்லா? கல்மரமா?

அழகர்கோயிலில் கிடப்பது 

கல்லா? கல்மரமா?

அழகர்மலைக்கோயில்  அடிவாரத்திலிருந்து உயரத்தில் உள்ள அருள்மிகு இராக்கச்சி யம்மன் தீர்த்தக்கரை வரை சுமார் 4கி.மீ. தூரம்.  இந்தப் பாதையில் எத்தனையோ பாறைகள் உள்ளன.  அழகர்கோயில் பழமுதிர்சோலை அருள்மிகு சுப்பிரமணியர் கோயிலுக்கும் அருள்மிகு இராக்கச்சியம்மன் கோயிலுக்கும் செல்லும் பாதையில், இரண்டு மலைகளுக்கு இடையே உள்ள கணவாய் போன்றுள்ள நடைப்பாதையில்,  அந்தப் பாதை ஓரிடத்தில் இடதுபுறமாகத் திரும்புகிறது.   பேருந்தில் செல்லும் பாதையும் நடந்து செல்லும் பாதையும் இந்த இடத்தில் ஒன்று சேர்கின்றன.   இந்த இடத்தில் பாறைகளுக்கு இடையே  உள்கூடான ஒரு மரம் புதைந்து கிடப்பதைக் காணலாம்.   

இது பார்ப்பதற்கு மரம் போன்று தோன்றினாலும், இது மரம்  அல்ல! இது ஒரு பாறை.  வடிவத்தினால் இது மரம் போன்று தெரிவதால், இது ஒரு மரமாக இருந்து கல்லாக மாறியிருக்கலாம்.

இது ஒரு மரமாக இருந்து கல்லாக மாறியிருக்கும்   “கல்மரம்” போன்ற  தோற்றத்தில் உள்ளது.   ஆயுதங்கள் ஏதும் இல்லாமலேயே கைகளால் அதன் பாகங்களை பிரித்தெடுத்துப் பார்க்க முடிந்தது.    இந்தப் பாறையின் சிதைந்த பகுதியைக் கையால் நிமிட்டிப்  பார்த்தால், குறுனைகள் (grains) வருகின்றன.  இந்தக் குறுனைகளை நன்கு கழுவிப் பார்த்தால்   பல வண்ணங்கள் கொண்ட படிகக்கல் (Quartz, குவார்ட்ஸ்) போன்று இருந்தன.

அழகா்காேயிலில் இருந்து எடுத்து வந்த பாறைகளின் சிறுசிறு பகுதிகளைப் புவியியல் பேராசிரியராகப் பணியாற்றும் நண்பரிடம் காட்டியபோது,  அவா் இது, '' Highly Sheared / well defined cleavage along which the rock gets peeled.'' என்று கருத்துத் தெரிவித்தார். 

புவியியல் துறையில்  பணியாற்றிய நண்பர் ஒருவர், இது "cleavage along which the rock gets cleaved"  என்றிருக்க வேண்டும். peeling   வேறு  cleaving வேறு.  CLEAVAGE PLANE என்பது A REGULAR PLANE OF FRACTURE.   PEELING என்பது வேறு...ONION PEEL......THE PAINT IS PEELING OFF..... என்று கருத்துத் தெரிவித்தார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வுமாணவர் ஒருவர், நாகமலையில் உள்ள sedimentary கற்களை  XRD முறையில் ஆய்வு செய்துள்ளார்.  அவரது ஆய்வுக் கட்டுரை ஒன்று படித்தேன்.   XRD ஆய்வில் ஒரு கல்லின் , கனிமத்தின், தாதுவின் மூலக்கூறுகளை அறியலாம்.  இது ஒரு இயற்பியல் சார்ந்த ஆய்வு முறை.    ஒரு பொருளின் மாதிரியில் (SAMPLE) என்னென்ன தனிமங்கள் உள்ளன என இந்த ஆய்வில் துள்ளியமாக அறியலாம். 

அழகர்கோயிலில் உள்ளது சாதாரணக் கல்லா? அல்லது கல்மரமா? என்று உறுதி செய்வதற்காக, XRD ஆய்விற்கு இந்தக் கல்மரத்தை உட்படுத்தினால் என்ன என்று மனதிற்குள் தோன்றியது.

எனவே இந்தக் கல்மரத்தின் மேல்பகுதி, உள்பகுதி என்று சில மாதிரிகளை அதிலிருநது சிறிது பெயர்த்தெடுத்து XRD சோதனைக்கு உட்படுத்தினேன்.

சோதனை மாதிரி 1 :  அழகர்கோயிலில் மரம் போன்று எனக்குத் தோன்றியதின் மேற்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டதன் துகள்கள்.

சோதனை மாதிரி 2:  அழகர்கோயிலில் மரம் போன்று எனக்குத் தோன்றியதின் உட்பகுதி  இருந்து எடுக்கப்பட்டதன் துகள்கள்.

சோதனை மாதிரி 3:  திருவக்கரை கல்மரத்தில் இருந்து எடுக்கப்பட்டதன் துகள்கள்.

மேற்கண்ட  இந்த மூன்று மாதிரிகளையும் XRD என்ற முறையில் ஆய்வுக்கு உட்படுத்தினேன்.  ஆய்வின் முடிவில் மேற்கண்ட  மூன்று மாதிரிகளுமே  ஒத்தநிலையில் உள்ள மூலக்கூறுகளால் ஆனவை என்று முடிவுகள் கிடைத்தன.
அதாவது XRD ஆய்வின்படி திருவக்கரை கல்மரத்தின் பௌதிக இயல்புகள் அனைத்தும் அழகர்கோயில் கல்மரத்திற்கும் இருந்தது.   திருவக்கரையில் உள்ளது கல்மரம் என்றால் அழகர்கோயிலில் உள்ளதும் கல்மரம் தான் என்று முடிவாகிறது.

XRD ஆய்வு முடிவின் கிடைத்த படத்தைக் கீழே இணைத்துள்ளேன்.கல்மரம்,  tree fossil,

அழகர்மலை கல்மரம் மாதிரியிலும், திருவக்கரை கல்மரம் மாதிரியிலும் SILICATES அதிகம் உள்ளன என்பதை  இந்த ஆய்வு உறுதி செய்கிறது.  சிலிகேட்  கூடுதலாக இருப்பதைக் கொண்டு கல் மரமா , கல்லா என்று ஒருக்காலும் சொல்ல முடியுமா?  மரம் என்பதற்கு அதன் வடிவமே மிகவும் சரியான சான்றாக இருக்கும். 

அழகர்கோயில் கல்மரத்தில் மரப்பட்டைகள் போன்று தோற்றம் தெரிகிறது. ஆனால் இந்தக் கல்மரத்தின் முழுவடிவத்தையும் காணமுடியாதபடி மண்ணும் செடிகொடிகளும் மறைத்துள்ளன.  இதன் பின்பகுதியையும் பார்க்க வேண்டும். இதன் பின்பகுதி மரம் போன்று வட்டவடிவில் இருக்கிறதா? என உறுதி செய்ய வேண்டியுள்ளது!

இதன் பின்பகுதியானது மரம் போன்ற தோற்றத்தில் அமைந்து இருந்தால், இது 100 %  “கல்மரம்தான்“ என உறுதி செய்து விடலாம்.  கடல்கோள் நிகழ்வின் போது, இந்த மரம் கிடக்கும் உயரமான இந்த இடம்வரை கடல்வெள்ளம் வந்துள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் உறுதிப்படுத்திடலாம்.

அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

1 May 2016, 18:09

அழகர்கோயில் கல்மரம் படங்கள் அனைத்தும் இந்த முகவரியில் பதிவு காணக்கிடைக்கும். https://drive.google.com/file/d/0B02g7RFB0HurWWpUbEJNX2FUbDg/view?usp=sharing

--------------------------------------------------------------

அழகர்கோயில் மலையில் மற்றொரு கல்மரம்.  2017ஆம் வருடம் அழகர்கோயிலுக்குச் செல்லும் போது,  மலைச்சாலை தொடங்கும் இடத்திற்கு அருகிலேயே கல்மரம் போன்ற வடிவத்தில் பாறைகளுக்குக் கீழே இருப்பதைக் கண்டேன்.

மஞ்சள் கோட்டிற்குள் உள்ளது ஒரு மரம் போன்று தெரிகிறது அல்லவா,  அதன் பகுதிகளைக் கை நெகத்தால் பெயர்த்து எடுத்துள்ளேன்.  இதைப் பொக்குப்பாறை என்கின்றனர் மதுரைவாசிகள்.   மஞ்சள் கோட்டிற்கு மேலே உள்ளது இறுகிய கடினமான பாறை.   கடினமான பாறைக்குக் கீழே கல்மரம் போன்ற வடிவத்தில் உள்ளது சாதாரணக் கல்லா?  அல்லது கல்மரமா? என ஆராயந்து பார்க்க வேண்டும்.  இதன் பின்பகுதியைத் தோண்டிப் பார்த்து,  இதன் வடிவம் மரம் போன்று இருந்தால்,   இதையும் ஒரு கல்மரம் என உறுதி செய்யலாம்.   

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
11.07.2017
-----------------------


ஞாயிறு, 12 ஜூலை, 2020

வேடசந்தூரில் கிடப்பது கல்லா? கல்மரமா? - புவியியலாளர் சிங்கநெஞ்சம் அவர்களின் பதிவு இது.

வேடசந்தூரில் கிடப்பது கல்லா? கல்மரமா?
புவியியலாளர் சிங்கநெஞ்சம் அவர்களின் பதிவு இது.




Singanenjam Sambandam, Kalairajan Krishnan மற்றும் 4 பேருடன் இருக்கிறார்.
12 ஜூலை, 2017 · 
கல் மரமா.........மரமா......

நம் நண்பர் காளைராஜன் ஐயா அவர்கள் கீழேயுள்ள படத்தை அனுப்பி , வேடசந்தூர் அருகே உள்ள இது " கல்லா ....மரமா " எனக் கேட்டிருக்கிறார். அதற்கான பதிலை கீழே தருகிறேன் .

வணக்கம் காளை ஐயா ,
கல் மீது தாங்கள் கொண்டுள்ள காதலுக்குத் தலை வணங்குகிறேன்.
நீங்கள் படமே அனுப்பாமல் வேடசந்தூர் அருகே கல்மரம் இருக்கிறது என்று எழுதியிருந்தாலும், நான் “இல்லை..இல்லை....இருக்க வாய்ப்பில்லை” என்றுதான் எழுதியிருப்பேன். காரணம், படிவப் பாறைகளில் மட்டுமே தொல்லுயிர் எச்சங்கள் (ஃ பாசில்கள்-FOSSILS) கிடைக்கும். வேடசந்தூர் பகுதியில் படிவப் பாறைகள் கிடையா.
பாறைகள் பொதுவாக மூன்று வகை .

1. பாறைக் குழம்பு (MAGMA) குளிர்ந்து இறுகி உருவாகும் அழற்பாறைகள் அல்லது தீப்பாறைகள் ( IGNEOUS ROCKS) .
2. நீர்நிலைகளில் படியும் கூழாங்கற்கள், குறுங் கற்கள் , மணல், குறுமணல் , களிமண் போன்றவை இறுகி கெட்டிப்பட்டு உருவாகும் படிவப் பாறைகள் (SEDIMENTARY ROCKS).
3. மேற்சொன்ன இருவகைப் பாறைகளும் மிகுந்த அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் உட்பட்டு உருமாறி உருவாகும் உருமாற்றுப் பாறைகள் ( METAMORPHIC ROCKS)
இவற்றில் படிவப்பாறைகள் தவிர மற்ற இருவகைப் பாறைகள் மிக அதிக வெப்பத்தில் உருவாவதால் தாவரங்களோ மற்ற உயிரினங்களோ இவற்றில் படித்திருக்க வாய்ப்பே இல்லை.( MICROORGANISMS EXCLUDED).

ஆதலின் நீங்கள் அனுப்பியுள்ள படம் கல்லோ கல் மரமோ அல்ல, மட்கி வரும் மரமே என உறுதிபட கூறலாம்.
தமிழகத்தில் படிவப் பாறைகள் மற்றும் அதன்பின் படிந்த படிவங்களை காட்டும் வரைபடம் இணைத்துள்ளேன். இந்த இடங்களைத் தவிர வேறு எங்கேயும் ஃபாசில்கள் இருக்காது..

இராகவன் சிவராமன் அருமையான தகவல் ஐயா.. மிக்க நன்றி ஐயா
Singanenjam Sambandam நன்றி தம்பி
Mana Valan திருப்பதி திருவக்கரை இந்த இடங்களில் உள்ள கல்மரம்?
Singanenjam Sambandam வணக்கம் மணவாளன் .....திருவக்கரையில் உள்ள கல்மரங்கள் CUDDALORE SANDSTONE எனும் படிவப் பாறைகளில் படிந்துள்ளன . திருவக்கரையில் மட்டுமல்ல , நெய்வேலி, கடலூர் ஆகிய இடங்களில் உள்ள CUDDALORE SANDSTONE பாறைகளிலும் இவை உள்ளன. திருவக்கரை பகுதியில் CUDDALORE SA…மேலும் பார்க்கவும்
Srinivasan Rajagopal Kalai rajan sir may be showing the photograph of cuddalore sandstone area withan exposed wood fossil.The photo from vedasandur is likely to be wrong.The red colured soil tone of the photo is tempting me to say this . But the rock fragments scattered appear to be non sedimentary. As Singanenjam sir is telling it a decaying tree fell down during the "vardha Puyal" .
Kalairajan Krishnan Sir, it is not a decaying tree, but a rock. I suspected that it may be a tree fossil.
Srinivasan Rajagopal the tirumala area is part of cuddapah super group of rocks with quartzites predominantly.it is of proterozoic age with 2500 to 1500 MY old. there was no possibility of profuse vegetation at that time.
Srinivasan Rajagopal Singanenjam sir's tamizhakkam is amazingly beautiful and enjoyable to reading. A full fledged book on geology atleast for the immediate generation can be done by him only as on today in Tamilnadu, All possible secretarial assistance iam ready to do .Kadavulin Arulum needa Ayulum sirkku irukkum.
Vijay Kumar True sir, Thamizh konji vilaiyadukirathu geologyai thamizhil padika enna oru makilchi...
Saravana Kumar S Geo Thanks sir support to tamil geology student.... because I am also tamil student....i am happy to read from tamil geology
Singanenjam Sambandam சீனு, நம்மிடையே உள்ள நட்பின் பயனாய் நீங்கள் நல்லுரை வழங்கியுள்ளீர்கள் . மிக்க நன்றி. நிச்சயமாக நல்லன செய்யலாம்.
Singanenjam Sambandam விஜயகுமார், பூபதி , சரவணகுமார் அனைவருக்கும் நன்றி.
Mana Valan வணக்கம் இது கல்மரம் தானே சார்.
Vijay Kumar Mele ulla photo natural arch, kalmaram kidaiyathu. When rocks are subjected to erosion by natural agents like wind and water natural archs form
Boopathi Duraisamy What a beautiful reply in Tamil. Translating geology from English to Tamil, Sir is always sir.
Singanenjam Sambandam இல்லைங்க மணவாளன் , இது "NATURAL ARCH" விளக்கம் கீழே....திருப்பதி – திருமலை தோரணக் கல்
நேச்சுரல் ஆர்ச் என ஆங்கிலத்திலும் ஷிலா தோரணம் என்று தெலுங்கிலும் ( ஷிலா என்றால் பாறை அல்லது கல் என்று பொருள்) அழைக்கப்படும் தோரணக்கல் திருப்பதி-திருமலையில் உள்ளது. …மேலும் பார்க்கவும்
7
Kalairajan Krishnan வணக்கம் ஐயா, தங்களது அன்பிற்கும் விரிவான விளக்கத்திற்கும் நன்றி யுடையேன். நான் வேடசந்தூர் அருகே பார்த்துப் படம் எடுத்துப் பதிவு செய்துள்ளது 100% கல். நான் அது கல் என்பதை உறுதி செய்த பின்னரே படம் எடுத்தேன்.
அது கல்மரமா? என்பதுதான் ஐயம்.
Singanenjam Sambandam தவறான புரிதல் ஐயா......அங்கே கல்மரம் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஒரு மாதிரி எடுத்து வையுங்கள். சென்னை வரும்போது பார்க்கலாம்.
Kalairajan Krishnan அப்படியே செய்கிறேன் ஐயா.
Mana Valan விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா.
Senguttuvan Govindasamy விழுப்புரம் மாவட்டத்தில் திருவக்கரையில் உள்ளவை கல்மரங்கள்தானே நட்பே?
Singanenjam Sambandam ஆமாங்க இளவேனில் (உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது) , FOSSIL FUELS என்று அழைக்கப்படுகிற பழுப்பு நிலக்கரி, நிலக்கரி, பெட்ரோ லியம் , எரிவாயு இவை எல்லாமே படிவப் பாறைகளில் மட்டுமே கிடைக்கும். நம் மாநிலத்தில் படிவப் பாறைகள் உள்ள இடங்களை படத்தில் காட்டியுள்ளேன்
இளவேனில் சௌ நன்றி!! :)
பிற மாநிலங்களில் எங்கெங்கு உள்ளது என்கிற தரவு உள்ளதா? அங்கும் எரிவாயு எடுக்கும் திட்டம் ஏதும் நடப்பில் உள்ளதா?
Singanenjam Sambandam விழுப்புரம் மாவட்டத்தில் திருவக்கரையில் உள்ளவை கல்மரங்கள்தானே நட்பே?
ஆமாங்க செங்குட்டுவன் , அவ…மேலும் பார்க்கவும்
Singanenjam Sambandam பிற மாநிலங்களில் எங்கெங்கு உள்ளது என்கிற தரவு உள்ளதா? அங்கும் எரிவாயு எடுக்கும் திட்டம் ஏதும் நடப்பில் உள்ளதா? கீழேயுள்ள வரைபடத்தைப் பாருங்கள் இளவேனில்
Srinivasan Rajagopal Vedasandur zoomed photo was seen again today with cool mind and it is a weathered gneissic rock which is banded closely. the rock is also jointed closely resulting in a ribbed sectional appearance. Theses closely spaced joints are parallel to foliation .
Kalairajan Krishnan பாறையைத் தோண்டித் தனியாக எடுத்து, மண்ணில் புதைந்துள்ள அதன் மறுபக்கத்தைப் பார்த்தால், அதன் முழு வடிவம் தெரிய வரலாம்.
Srinivasan Rajagopal it not a decayed tree Iam very sorroy for the wrong analysis made yesterday.
Srinivasan Rajagopal Lignite occurs at shallow depth 100m to 150m at from the surface at Neyveli .that is why opencast mining is done to mine them.Further south in mannagudi basin Lignite occurs at about 300m depth . mannargudi town is floating in Lignite below.( hence it can not be mined). At Ramanathapuram basin it occurs at 425 to 450m depth from the surface.
Srinivasan Rajagopal The oil and gas occurs at even grater depth in cauvery basin ( nagapattinam and ramanathapuram-on shore and offshore) at even 1 to 1.5 Km deep. which may be depth of the basement crystalline rock also.. My ONGC friends told that thy got in the fractures of basement rock also may be as migratory formation.Singanenjam sir may correct the above information if needed.
Thiagarajan Mcc Excellent
Singanenjam Sambandam மிக்க நன்றி சீனு . காளை ஐயா அவர்கள் கொஞ்சம் sample கொண்டு வந்தால் ஐயம் திரிபுக்கு இடமின்றி தெளிவாக்கிவிடலாம்.
------------------------------------

செவ்வாய், 23 ஜூன், 2020

ஓசூருக்கு வந்த சுனாமி - கடல்கோள்

கடல்கோள்  - ஓசூருக்கு வந்த சுனாமி 

பஃறுளி யாற்றையும் பன்மலை யடுக்கத்தையும் (இலட்சத்தீவுக் கூட்டத்தையும்) குமரிக் கோட்டையும்  கொடுங்கடல் கொண்டது.  அப்போது (சுனாமியால்) உண்டான கடல்நீர் கரையைக் கடந்து தென்னிந்தியா முழுவதையும் அழித்துள்ளது.  கடல்நீரால் அடித்துவரப்பட்ட களிமண் தென்னிந்தியா முழுவதும் உள்ள பாறை இடுக்களில் படிந்துள்ளதைக் காண முடிகிறது.  

கடல்கோள்


தென்னிந்தியா முழுவதும் பாறை இடுக்குகளில் கடல்கோளால் அடித்துவரப்பட்ட களிமண் படிந்து இருப்பதைக் காணமுடிகிறது. 

கடல்கோள், Tsunami, Theory of Tsunami,

அன்பன்
காசிசீர், முனைவர், கி. காளைராசன்

ஞாயிறு, 24 மே, 2020

மதுரைக்கு வந்த சுனாமி (அலவாக்கோட்டை)


மதுரைக்கு வந்த சுனாமி (அலவாக்கோட்டை) 



மாமல்லபுரத்தில் சீனஅதிபர் ஷி ஜின்பிங் அவர்களும் இந்தியப்பிரதமர் மோடி அவர்களும் சந்தித்த இடத்திற்கு அருகில் கிருஷ்ணனின் வெண்ணைய்ப் பந்து என்று ஒரு உருண்டைக் கல் உள்ளது. சரிவான பாறையின் மேல் உள்ள இந்த உருண்டைக்கல் உருண்டு கீழே விழாமல் உள்ளது. முதலாம் நரசிம்ம வர்மன் இந்த உருண்டைக் கல்லை உருட்டிவிட முயற்சி செய்து பின் கை விட்டுவிட்டார்.  சென்னை கவர்னாக இருந்த ஆர்தர் ஹேவ்லாக் (Arthur Havelock)என்பவர் யானைகளைக் கொண்டு இந்தப் பாறையை உருட்டவிட முயற்சி செய்து பின் கைவிட்டுள்ளார்.
மகாபலிபுரத்தில் உள்ள பாறைபோன்று, எத்தனையோ இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், சிறிதும் ஆடாமல் அசையாமல் சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் இரண்டு பாறைகள் நிற்கின்றன.

இந்தப் பாறையைப் போன்ற சிறுசிறு கட்டிகட்டியான பாறைகளை மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரிலும் மற்றும் கிரானைட் குன்றுகளின் உச்சியிலும், பூமிக்கு அடியிலும் காணலாம்.  கடல்கோளால் குமரிக்கோடு அழிந்தபோது உண்டான கடல்வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட கடற்களிமண்  இறுகிப் பாறையாகி இந்தப்  பொக்குப்பாறை உருவாகி உள்ளது என்பது எனது கருத்து. 



சிவகங்கை மாவட்டத்தில் உள்ளோர் அனைவரும் ஒருமுறையேனும் இந்தப் பாறையை நேரில் சென்று பார்த்து வர வேண்டும்.

இருப்பிடம் - மதகுபட்டியிலிருந்து அலவாக்கோட்டை.. அதை தாண்டியதும் இடது பக்க சாலையில் செல்லவும்.. தார்ரோட்டின் முடிவில் வண்டியை நிறுத்தி விட்டு வலதுகை பக்கம் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு ஊரணி வரும். அதன் உள்ளே இறங்கி கரை ஏறி கொஞ்ச தூரம்தான்..
சிவகங்கை, மதகுபட்டி அருகே, அலவாக்கோட்டை.. அதை தாண்டியதும் இடது பக்க சாலையில் சென்றால்..... தார்ரோட்டின் முடிவில் வண்டியை நிறுத்தி விட்டு வலதுகை பக்கம் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு ஊரணி வரும். அதன் உள்ளே இறங்கி கரை ஏறி கொஞ்ச தூரம்தான்..

பாறை படம் -
நன்றி = Ramesh Gemini Kalaiyarkoil
https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/96720839_3497314020283611_4818404860263137280_o.jpg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_ohc=DUBNT-zu7z0AX92EDQ0&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=b48fb439b980fb321fc7ea676367d09c&oe=5EF221EC

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 11 (25/05/2020) ஞாயிற்றுக் கிழமை.

செவ்வாய், 19 மே, 2020

மதுரைக்கு வந்த சுனாமி (பெனுகொண்டா)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மண் கடல் வௌவலின் (பெனுகொண்டா)


“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் கிடைக்கின்றனவா? கடல்மண் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் பொக்குப் பாறைகளைக் காண முடிகிறது.


திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகளைப் படத்துடன் பார்த்தோம். மேலும் திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா முதலான ஊர்களில் மலைக்குன்றுகளில் படிந்துள்ள கடல்மண் படிமங்களைப் படங்களுடன் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக ...
பெங்களூரு கைதராபாத் மார்க்கத்தில் பெனுகொண்டா என்ற ஊருக்கு அருகே உள்ள சிறு மலைக் குன்றில் “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.



ஆந்திராவில் புத்பூர் மற்றம் ராஜ்பூர் இடையே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
Kalairajan Krishnan
20 மே, 2017 ·

வியாழன், 17 ஜனவரி, 2019

Theory of Tsunamis, பெருஞ்சுனாமியில் தோன்றிய வண்ணவண்ண பொக்குப் பாறைகள், நாக்பூர் அருகே தும்ரிகா(டு)

பெருஞ்சுனாமியில் தோன்றிய 
வண்ணவண்ண பொக்குப் பாறைகள்

மதுரைக்கு ஏழு நிறங்களில் ஏழுகடல்களும் வந்தன என்கிறது திருவிளையாடல் புராணம்.  கீழ்க்கண்ட படங்களில் உள்ள பொக்குப்பாறைகள் நாக்பூரிலிருந்து காசிக்கு (வாரணாசிக்கு)ச் செல்லும் வழியில், நாக்பூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் தும்ரிகா(டு) என்ற ஊருக்குச் செல்லும் வழியில் கிடக்கிறன.

தேசிய நெடுஞ்சாலயை அகலப்படுத்துவதற்காக அருகில் உள்ள மலையைத் தோண்டி எடுத்து வந்து போட்டுள்ளனர்.  வேறுவேறு நிறங்களில் இருந்த களிமண் இறுகிப் பாறைகளாக மாறியுள்ளன.

ஏழுவேறு வண்ணமொடு ஏழுகடல்களும் வந்தன என்று திருவிளையாடற் புராணப் பாடல் குறிப்பிடுகிறது.  (பாடல்களைக் கீழே இணைத்துள்ளேன்).  திருவிளையாடற் பாடல் வரிகளுக்கு ஏற்ப வண்ணவண்ண நிறங்களில் இந்தப் பொக்குப்பாறைகள் உள்ளன.  எனவே, இந்தப் பாறைகள் பிரயளகாலத்தில் ஏற்பட்ட கடல்வெள்ளத்தினால் (பெருஞ்சுனாமியினால்) உண்டான வண்ணக் களிமண் இறுகி, வண்ணப் பாறைகளாக உள்ளன என்பது கருத்து.




திருவிளையாடற் புராணம் (8). எழுகடலை அழைத்த படலம்
தடாதகைப் பிராட்டியை மணந்து சிவபெருமான் சுந்தரபாண்டியராகி உலகை ஆண்டுவந்தபோது, முனிவர்கள் அனைவரும் மதுரைக்கு வந்து சிவபெருமானைத் தரிசித்துச் சென்றனர். மதுரைக்கு கௌதம முனிவரும் வந்தார். அவரைத் தடாதகைப் பிராட்டியாரின் தாயார் காஞ்சனமாலை அழைத்து வரவேற்றாள். தன் பிறவித் துன்பத்தை நீக்க வல்ல தவம் யாது? என வினவினாள். அதற்குக் கௌதம முனிவர், மானதம் வாசிகம் காயிகம் என்னும் மூவகைத் தவங்களில் காயிகங்களே சிறந்தவை என்றும், அவைகளில் தீர்த்த யாத்திரைகள் சிறந்தவை என்றும் கூறினார். அத் தீர்த்தங்களுள் கங்கை நதியே சிறந்தது என்றும், அந்த நதிகளில் தனித்தனியே போய் நீராடுதல் அரிது ஆகையால் அந்நதிகள் எல்லாம் வந்துகூடும் கடலில் நீராடுதல் சாலச் சிறந்தது என்றும் அவர் கூறினர். இதனைக் கேட்டு உணர்ந்த காஞ்சனமாலை தானும் கடலில் நீராடி விரும்பினாள். தனது விருப்பத்தைத் தன் மகளான தடாதகைப் பிராட்டியாரிடம் கூறினாள். பிராட்டியார் இறைவனிடம் கூறினார்.

தேவியின் திருமொழியினைக் கேட்ட சுந்தர பாண்டியராகிய சிவபெருமான், ‘‘ஒருகடல் என்ன, ஏழு கடலையுமே கூவி அழைப்போம்’’ என்று கூறி அவை வரும்படி எண்ணினார். இறைவனது திருவுளம் அறிந்த ஏழு கடல்களும் ஆரவாரித்து, சந்திரனைத் துண்டு செய்தது போன்ற வடிவத்தை உடைய, சுரிந்த முகத்தினையுடைய சங்குகள் வாய்விட்டுச் சத்தம் எழுப்பும் படியாக அவற்றைத் தள்ளிக் கொண்டு, மிக வெள்ளிய நுரைகள் ததும்ப, ஆண் சுறாக்கள் மேலே சுழல, குளிர்ந்த முத்துக் கூட்டங்களை எடுத்து வீசிக் கொண்டு, அலையலையாக வரிசையாக, அண்டத்தின் நெடிய முகட்டினைத் தடவும் அளவிற்கு உயர்ந்து எழுந்தன. கடல் பொங்கி எழுந்து வருவதைக் கண்ட மதுரை நகர மக்கள் நடுங்கினர். கலியுக முடிவின் போது பிரமனுடைய படைப்புப் பொருள்கள் அழியுமாறு எழுதல் போல கடல்கள் பொங்கி எழுத்தன. பொங்கி எழுந்த ஏழு கடல்களும், பாம்பினையணிந்த சிவபெருமானது திருவடியைச் சென்று அடைந்தவர் போல, கிழக்கே இருந்த குளத்தில் சென்று அடங்கின. இதனால், பொன்னிறமுடைய தாமரை மலர்ந்து இருந்த அந்தக் குளத்தில், ஏழு கடலின் வெவ்வேறு நிறங்களும் கலந்து சிவபெருமானுடைய எட்டு வகையான வண்ணங்களில் அந்த குளம் விளங்கியது. 885. என்று முனி விளம்பக் கேட்டு இருந்த காஞ்சன மாலை துன்று திரைக் கடல் ஆடத் துணிவுடைய விருப்பினள் ஆய்த் தன் திருமா மகட்கு உரைத்தாள் சிறிது உள்ளம் தளர்வு எய்திச் சென்று இறைவற்கு உரைப்பல் எனச் செழியர் தவக் கொழுந்து அனையாள். 886. தன் தன்னை உடைய பெரும் தகை வேந்தர் பெருமான் முன் சென்று அன்னம் என நின்று செப்புவாள் குறள் வீரர்க்கு அன்று அன்னக் குழியு னொடு ஆறு அழைத்த அருட்கடலே இன்று அன்னை கடல் ஆட வேண்டினாள் என்று இரந்தாள். 887. தேவி திரு மொழி கேட்டுத் தென்னவராய் நிலம் புரக்கும் காவி திகழ் மணி கண்டர் கடல் ஒன்றோ எழு கடலும் கூவி வர அழைத்தும் என உன்னினார் குணபால் ஓர் வாவி இடை எழுவேறு வண்ணமொடும் வருவன ஆல். 888. துண்ட மதித் திரள் அனைய சுரிவளை வாய் விட உதைத்து வெண் தவள நுரை ததும்பச் சுறா ஏறு மிசைக் கொட்பத் தண் தரள மணித் தொகுதி எடுத்து எறியும் தரங்க நிரை அண்ட நெடு முகடு உரிஞ்ச ஆர்த்து எழுந்த கடல் ஏழும். 889. காணும் மாநகர் பனிப்பக் கலி முடிவில் அயன் படைப்புக் கோணுமாறு எழுந்தது எனக் கொதித்து எழுந்த கடல் அரவம் பூணு நாயகன் அகில புவனம் எலாம் கடந்த திரு ஆணையால் அவன் அடி சென்று அடைந்தார் போல் அடங்கியது ஆல். 890. தன் வண்ணம் எழு கடலின் தனி வண்ணமொடு கலந்து பொன் வண்ண நறும் பொகுட்டுப் பூம் பொய்கை பொலிவு எய்தி மின் வண்ணச் சடைதாழ வெள்ளி மணி மன்று ஆடும் மன் வண்ணம் என எட்டு வண்ண மொடும் வயங்கியது ஆல். திருவிளையாடற் புராணம் பாடல்கள் - நன்றி தமிழ் இணையப் பல்கலைக்கழகம் http://www.tamilvu.org/slet/l41d0/l41d0son.jsp?subid=2599 )

திங்கள், 14 மே, 2018

Theory of Tsunami, மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) மதுரையை அழித்தியால் :



மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) 
மதுரையை அழித்தியால்

2004ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய இரண்டு சுனாமிகள் அடுத்தடுத்துத் தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்துள்ளன. அந்நிகழ்ச்சியை ஊழிக்காலம், பிரளயம், கடல்வெள்ளம் என்று திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் விரிவாகக் கூறுகிறது. இவ்வாறு ஊழிக்காலத்தில் பிரளயத்தில் தோன்றிய கடல்வெள்ளம் மதுரையை மைய இலக்காகக் கொண்டு தாக்கியது என்றும், மதுரைத் தாக்கி அளிக்குமாறு இந்திரன் ஆணையிட்டான் என்றும் புராணம் குறிப்பிடுகிறது.
“பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என 
இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள் 
ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து 
அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்“ 

- திருவிளையாடற் புராணம்.
இந்திரனது ஏவலால் மதுரையைக் கடல் அழித்துள்ளது. இதன் காரணமாகத்தான் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சிறப்பான இந்திரவிழா நின்றுபோய் விட்டது போலும். மதுரையை அழித்த இந்திரனை தமிழன் எப்படிப் போற்றுவான்!



கிருஷ்ணன் இந்திரவிழாவை நிறுத்திய கதை - திருமாலின், கிருஷ்ணாவதார காலத்தில், மழைக்கடவுளான இந்திரனுக்கே கோகுலத்தில் வசித்த ஆயர்கள் ஆண்டு தோறும் பூசை செய்து வழிபட்டனர். ஒருமுறை இந்திர வழிபாட்டை, கிருட்டிணன் தடுத்து அருகில் உள்ள மலைக்கு பூசை செய்ய வைத்தார்.  இதனால் கோபம் கொண்ட மழைக் கடவுளான இந்திரன், கோகுலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் மழை பொழியச் செய்தார். இடி மின்னலுடன் கூடிய தொடர் மழையைக் கண்டு பயந்த கோகுலத்து ஆயர்களையும் ஆவினங்களையும் காக்க கிருட்டிணன், அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினார். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர்”  என்கிறது புராணக்கதை.  திருவிளையாடல் புராணமும் கடல்கோளுக்குப் பிறகு பெருமழை பெய்த செய்தியைப் பதிவு செய்துள்ளது.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்.

புதன், 11 ஏப்ரல், 2018

Theory of Tsunamis சலதி வெள்ளம் ( கடல்வெள்ளம் ) பாடல்களின் தொகுப்பு


சலதி வெள்ளம் (tsunami)
திருவிளையாடல் புராணத்தில் இடம்பெற்றுள்ள 
‘சலதி (கடல்) வெள்ளம்’ 
பற்றிய பாடல்களின் தொகுப்பு



2004ஆம் ஆண்டு கடல் கரையைக் கடந்து கடற்கரை ஓரம் உள்ள கிராமங்களில் வசித்த இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.  நிலநடுக்கம் ஏற்பட்டு, கடல் கரையைக் கடந்து நிலத்திற்குள் புகுவதைச் “சுனாமி (Tsunami)” என்ற சப்பானியச் சொல்லால் குறிப்பிடுகிறோம்.  கடல்நீர்  நிலத்திற்குள் புகுவதைக்  “கடல்கோள்” என்றும் “ஆழிப்பேரலை“ என்றும் குறிப்பிடுகின்றனர்.  “சலதிவெள்ளம்” என்று திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  சலதி என்றால் கடல் என்று பொருள். பரஞ்சோதி முனிவர் ‘சங்கரசங்கிதை‘ என்ற வடமொழி நூலை மொழிபெயர்த்துத் தமிழிலில் பாடியுள்ள திருவிளையாடற் புராணத்தில், சலதி என்ற சொல் 13 பாடல்களின் இடம் பெற்றுள்ளது. 


                            
பிரளயம் என்றால் என்ன?
நிலத்திட்டுகள் பெயர்த்து விழுதல்.
மலைகளின் முகடுகள் புடைபெயர்ந்து சரிந்து விழுவதை “மலைச்சரிவு” என்கின்றனர்.  இது போன்று கடலுக்கு அடியில் உள்ள நிலத்திட்டுக்கள் புரண்டு (fault) பெயர்ந்து சரிந்து  விழுவதைப் “பிரளயம்” என்கிறது புராணம்.

சுனாமி என்றால் என்ன?
கடலுக்கு அடியில் உள்ள நிலத்திட்டுகள் புடைபெயர்ந்து பிரண்டு விழுகின்றன.  இவ்வாறு நிலத்திட்டுகள் பெயர்ந்து விழுகின்ற காரணத்தினால் கடல்நீர் அடித்துத் தள்ளப்படுகிறது.  இவ்வாறு தள்ளப்பட்ட கடல்நீரானது பெரும் கடல்அலையாக மாறி நிலத்தைத் தாக்குகின்றன. இதைச் சுனாமி என்ற சப்பானியச் சொல்லால் குறிப்பிடுகின்றனர்.  புராணங்களில் இது “கடல்வெள்ளம்” அல்லது “சலதிவெள்ளம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல்கோள் என்றால் என்ன?
கடல்வெள்ளத்தினால் (சுனாமியினால்) கடல்மட்டத்திற்கு மேலே உள்ள நிலப்பரப்பானது மூடப்படுவதை அழிக்கப்படுவதைக் கடல்கோள் என்று புராணம் குறிப்பிடுகிறது.  (தண்ணீரை ஊற்றி வீட்டைக் கழுவி விடுவது போன்று, கடல்நீரால் தரைப்பகுதி கழுவிவிடப்படுகிறது.)

ஊழி, ஊழிக்காலம் என்றால் என்ன?
“ஊழ்” என்றால் விதி அல்லது நியதி என்று பொருள்.   புவியியல் விதிகள் மாறும்படிப் பெரும் அழிவுகள் உண்டாவதை “ஊழி” என்றும்,  புவியியல் மாற்றம் அடையும்படிப் பெரும் அழிவுகள் நிகழும் காலத்தை “ஊழிக்காலம்” என்றும் புராணம் குறிப்பிடுகிறது.


91.
உலகம் யாவையும் ஈன்றவளும் அருள் உயர்ந்த
திலக நாயகி, பரஞ்சுடர், சேய் என மூன்று
தலைவரால் முறை செய்த நாடு இஃது. அன்றிச் சலதி
சுலவு பாரின் உண்டகுமோ துறக்கத்தும் அஃதே.

331.
அந்தரர் கோன் ஆதனத்தில் உறை மலயத் துவசனை மீண்டும் அழைத்த வாறும்,
சுந்தர உக்கிர குமரன் அவதரித்த வாறும், வளை சுடர் வேல் செண்டு
தந்தை இடத்து அவன் பெற்ற வாறும், அவன் அவ்வடிமேல் சலதி வீறு
சிந்த விடுத்தது மகவான் முடியை வளை யெறிந்து இறைவன் சிதைத்த வாறும்.

341.
ஊமனால் புலவர் இகல் அகற்றியதும் இடைக் காடனுடன் போய்க் கொன்றைத்
தாமனார் வட வால வாய் அமர்ந்த பரிசும் வலை சலதி வீசிப்
பூமனாய் குழலியை வேட்டு அருளியதும் வாதவூர்ப் புனிதர்க்கு ஏறத்
தேம நாண் மலரடிகண் முடி சூட்டி உபதேசம் செய்த வாறும்.

423.
தம் குடிமைத் தச்சனை ஓர் விமானம் அமைத்திட விடுத்தத் அத் தடத்தின் பால் போய்
அம் கணனைக் கடிது அருச்சித்திட நறிய மலர் கிடையாது அயர்வான் அந்தச்
சங்கு எறி தண் திரைத் தடத்தில் அரன் அருளால் பல பரிதி சலதி ஒன்றில்
பொங்கு கதிர் பரப்பி முளைத்தால் என்னப் பொன் கமலம் பூப்பக் கண்டான்.

677.
வரை வளங்களும் புறவினில் வளங்களும் மருதத் தண் பணை வேலித்
தரை வளங்களும் சலதி வாய் நடைக்கலம் தரு வளங்களும் ஈண்டி
உரை வரம்பு அற மங்கலம் பொலிந்தது இவ்வூரினில் நால் வேதக்
கரை கடந்தவன் திருமணம் செயவரு காட்சியைப் பகர்  கின்றேன்.

1831.
அலை சிறந்த சலதி மீது ஒரு ஆறு செல்லு மாறு போல்
மலைசிறந்த நேரி வெற்பன் மள்ளர் சேனை வெள்ள மேல்
கலை சிறந்த மதி நிறைந்த கன்னி நாடு காவலன்
சிலை சிறந்த சிறிய சேனை சென்று அலைத்து நின்றதே.

2067.
தருக்களும் சலியா முந்நீர்ச் சலதியும் கலியா நீண்ட
பொருப்பிழி அருவிக் காலும் நதிகளும் புரண்டு துள்ளா
அருள் கடல் விலைத்த கீத இன்னிசை அமுதம் மாந்தி
மருள் கெட அறிவன் திட்டி வைத்த சித்திரமே ஒத்த.

2189.
செம் கண் ஏறு அழகர் ஆடல் ஈது என்றே யாவரும் தெளிந்தனர் ஏத்தி
அம் கண் நாயகர் தம் கருணையின் திறனும் அடியவர் அன்பையும் தூக்கித்
தம் கணார் அருவி பெருக ஆனந்தத் தனிப் பெரும் சலதியில் ஆழ்ந்தார்
வங்கம் மேல் வந்தாள் பிடர் மிசை இருந்த மாண் இழை விறலியை மன்னன்.

2331.
அப்பெரும் சலதி வெள்ளத்து அழிந்தன அழி விலாத
எப்பெரும் பொழிலும், ஏழு திபமும், இவற்றுள் தங்கி
நிற்பன செல்வ ஆன திணைகளும், நீண்ட சென்னி
பர்ப்பத வகையும் ஈறு பட்டன ஆக அம் கண்.

2655.
அன்னது தெரிந்து நால்வாய் ஐங்கரக் கடவுள் தாதை
முன்னர் வந்து இதனால் அன்றோ மூண்டது இச் செய்தி எல்லாம்
என்ன ஈர்ங் கவளம் போல் ஆங்கு இருந்த புத்தகங்கள் எல்லாம்
தன் நெடும் கரத்தால் வாரி எறிந்தனன் சலதி மீது ஆல்.

2670.
மகவு இலாமையல் ஆற்ற நால் மறுமை யோடு இம்மைப்
புகல் இலான் என வருந்துவான் ஒரு பகல் போது
தகவு சால் பெரும் கிளை யொடும் சலதி மீன் படுப்பான்
அகல வார் கலிக்கு ஏகுவான் அதன் கரை ஒருசார்.

2690.
சங்கு அலம்பு தண் துறை கெழு நாடன் இச் சலதித்
துங்க மந்தரம் எனக் கிடந்து அலமரும் சுறவை
இங்கு அணைந்து எவன் பிடிப்பவன் அவன் யான் ஈன்ற
மங்கை மங்கலக் கிழான் என மனம் வலித்து இருந்தான்.

2695.
தன் பெரும் கணத்து உளான் ஓர் தலைவனும் சலதி வாணன்
என்பது தோன்ற வேடம் எடுத்து எறி வலை தோள் இட்டு
என் புற மலைப்பக் காவி மீன் இடு குடம்பை தாங்கிப்
பின்புற நடந்து செல்லப் பெருந்துறைப் பாக்கம் புக்கான்.

நன்றி – பாடல்கள் தமிழ்இணையப் பல்கலைக்கழகத்தில் உள்ளபடி.
தொகுப்பு - காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி.காளைராசன், 
kalairajan26@gmail.com. 
ஆடி31, 16.08.2017