கடல்கொண்ட பொதிகை
குமரிக்கோடு அழியக் காரணமான பிரளயகாலத்தில் உண்டான ஆழிப்பேரலைகள் (சுனாமி) மலைகள் மூழ்கும்படியாக உயர்ந்து எழுந்து தென்தமிழகம் முழுவதையும் அரித்துச் சென்றுள்ளது. இவ்வாறு அடித்துச் சென்றன எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்த பள்ளத்தாக்குகளில் தங்கிவிட, கடல்அலைகள் அதையும் தாண்டிச் சென்று மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளன.
இதனால், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் இருந்த பள்ளத்தாக்குகள் நிறைந்து சற்று சிறிய சமவெளிகளாக மாறியுள்ளன. இவ்வாறு பண்டைய தமிழர் நாகரிகம் புதையுண்ட இடமே ‘பொதிகை’ என்று அழைக்கப்படுகின்ற இடமாகும்.
பொதிகையில் பொதிந்துள்ளனவற்றைப் புதைபொருள் ஆராய்ச்சி செய்தால், கடல்கோளுக்கு முந்தைய நமது பண்டைத் தமிழரின் எச்சங்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக