செவ்வாய், 22 செப்டம்பர், 2020

மணலூரை மஹாபாரதம் சொல்கிறது


 

Dev Raj

22 செப்டம்பர், 2019 · 

மணலூரை மஹாபாரதம் சொல்கிறது.

தென் மாவட்டத் தல புராணங்களிலும் மணலூர் குறிப்புள்ளது. பொயுமு 6ம் நூற்0 செய்திகளும் அறிஞர் வாயிலாக வெளிவருகிறது.

மணலூர் - கீழடி: 4 கி மீ. ஆகவே மணலூர் குறிப்புகளும் முதன்மை பெறுகின்றன.


Sankara Narayanan G

மிகச் சரியாக பொயுமு ஆறில் விஜயன் என்ற பெயருடைய சிங்கள மன்னன் பாண்டிய நாட்டு இளவரசியை மணந்து இலங்கையை ஆண்டு வந்ததாக மஹாவம்சம் தெரிவிக்கிறது. தீபவம்சமும் இதையே தெரிவிக்கிறது. பாண்டியர்களைப் பற்றிய மிகப்பழமையான குறிப்பு இது. இது உண்மையாக இருந்தால் பொயுமு ஆறில் பாண்டியர்கள் இலங்கைக்குப் பெண்கொடுக்கும் மன்னர்களாக இலங்கியமை புலப்படும் அப்போது மணலூர் ஒருவேளை தலைநகராக இருந்திருக்கலாம். மணலூர் கீழடி அருகேயுள்ளது. கீழடி மணலூர் ஆகியவை ஒருமித்து பழைய மணலூராக இருக்க வாய்ப்புண்டு. மஹாபாரதமும் பாண்டியர் தலைநகரம் மணலூர் என்றே குறிப்பிடுவது நோக்கற்பாலது.


தென் கொங்கு சதா சிவம்

விஜயன் கலிங்கம் சென்று கப்பல் படை திரட்டியவன்


Natkunarajah Sivagnanam

விஜயன் அவனது தந்தையால் கலிங்கத்திலிருந்து துரத்தப்பட்டவன். விஜயன் சிங்களம் பேசியவனில்லை. இக்குறிப்பைத் தருவது கிபி 5ம் நூற்றாண்டின் பாளி மொழி மஹாவம்சம் .


சம்பூ பாரதத்தில் மணலூர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக