கடல்கோள்களும்
கிழக்கு மேற்குக் கடற்கரைகளும்
மகாராஷ்டிராவில் நர்மதை, தபதி என்ற இரண்டு நதிகள் மற்றும் கேரளமாநிலத்தில் பெரியாறு ஆகிய மூன்று நதிகள் மட்டுமே கிழக்கில் இருந்து மேற்காகப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன். இந்த மூன்று நதிகளைத் தவிர இந்தியாவில் பாயும் அனைத்து நதிகளும் கிழக்கே உளள வங்காளவிரிகுடாவில்தான் கலக்கின்றன.
இந்த நதிகள் எல்லாம் வண்டல்மண்ணை அடித்துவந்து கடலில் சேர்க்கின்றன. ஆனாலும் இந்தியாவின் கூகுள் புவிப்படத்தைப் பார்த்தால், கிழக்குக் கடற்கரையோரம் நெடுகிலும் மணல் மிகவும் குறைவாகவே படிந்துள்ளதைக் காணமுடிகிறது. ஆனால் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் மிக அதிகமான அளவில் மணல் படிந்து கடற்கரையே மணல்மேடாகக் காணப்படுகிறது.
இவ்வாறு, கிழக்குக் கடற்கரையில் குறைவாக மணல் படிந்து இருப்பதற்கும், மேற்குக் கடற்கரையில் மிகக் கூடுதலாக மணல் படிந்துள்ளதற்கும் காரணம் என்ன?
வங்கக்கடலில் அந்தமான் தீவையொட்டி இருந்த நிலத்திட்டுகள் புடைபெயர்ந்து கடலில் மூழ்கி அடுத்தடுத்து மிகப்பெரிய கடல்கோள்கள் (big tsunamis) உண்டாகியுள்ளன. இந்தக் கடல்கோள்களால் உண்டான கடல்வெள்ளம் கிழக்குக் கடற்கரையைத் தாக்கி அழிந்து, இந்தியத் தீபகற்ப நிலப்பகுதியைத் தாண்டிச் சென்று மேற்குக் கடற்கரையில் படிந்துள்ளது. இதன் காரணமாகவே இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப்பகுதியில் மணல் குறைவாகவும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் மணல் கூடுதலாகவும் உள்ளது என்பது எனது கருத்து.
இலங்கையிலும் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் குறைவான அளவில் மண் படிந்துள்ளதும், மேற்குக் கடற்கரையில் கூடுதலான மண் படிந்துள்ளதற்கும், இதுபோல் உலகெங்கும் கடற்கரையோரங்களில் அதிகமான மணல் படிந்துள்ளதற்கும் கடல்கோளால் உண்டான கடல்வெள்ளமே (tsunamis) காரணம் என்பது எனது கருத்து.
இதுபற்றிப் புவியியல் அறிஞர்களின் கருத்துக்களையும், கடல்கோள்கள் ஆர்வலர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆவணி 29 (14.09.2020) திங்கள் கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக