கடல்வெள்ளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடல்வெள்ளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 செப்டம்பர், 2020

கடல்கோள்களும் கிழக்கு மேற்குக் கடற்கரைகளும்

கடல்கோள்களும் 

கிழக்கு மேற்குக் கடற்கரைகளும்

மகாராஷ்டிராவில் நர்மதை, தபதி என்ற இரண்டு நதிகள் மற்றும் கேரளமாநிலத்தில் பெரியாறு ஆகிய மூன்று நதிகள் மட்டுமே கிழக்கில் இருந்து மேற்காகப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன்.  இந்த மூன்று நதிகளைத் தவிர இந்தியாவில் பாயும் அனைத்து நதிகளும் கிழக்கே உளள வங்காளவிரிகுடாவில்தான் கலக்கின்றன.

இந்த நதிகள் எல்லாம் வண்டல்மண்ணை அடித்துவந்து கடலில் சேர்க்கின்றன.   ஆனாலும் இந்தியாவின் கூகுள் புவிப்படத்தைப் பார்த்தால்,  கிழக்குக் கடற்கரையோரம் நெடுகிலும் மணல் மிகவும் குறைவாகவே படிந்துள்ளதைக் காணமுடிகிறது.  ஆனால் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் மிக அதிகமான அளவில் மணல் படிந்து கடற்கரையே மணல்மேடாகக் காணப்படுகிறது.

இவ்வாறு, கிழக்குக் கடற்கரையில் குறைவாக மணல் படிந்து இருப்பதற்கும்,  மேற்குக் கடற்கரையில் மிகக் கூடுதலாக மணல் படிந்துள்ளதற்கும் காரணம் என்ன?

வங்கக்கடலில் அந்தமான் தீவையொட்டி இருந்த நிலத்திட்டுகள் புடைபெயர்ந்து கடலில் மூழ்கி அடுத்தடுத்து மிகப்பெரிய கடல்கோள்கள் (big tsunamis) உண்டாகியுள்ளன.   இந்தக் கடல்கோள்களால் உண்டான கடல்வெள்ளம்  கிழக்குக் கடற்கரையைத் தாக்கி அழிந்து, இந்தியத் தீபகற்ப நிலப்பகுதியைத் தாண்டிச் சென்று மேற்குக் கடற்கரையில் படிந்துள்ளது.    இதன் காரணமாகவே இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப்பகுதியில் மணல் குறைவாகவும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் மணல் கூடுதலாகவும் உள்ளது என்பது எனது கருத்து.

இலங்கையிலும் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் குறைவான அளவில் மண் படிந்துள்ளதும், மேற்குக் கடற்கரையில் கூடுதலான மண் படிந்துள்ளதற்கும், இதுபோல் உலகெங்கும் கடற்கரையோரங்களில் அதிகமான மணல் படிந்துள்ளதற்கும்  கடல்கோளால் உண்டான கடல்வெள்ளமே (tsunamis) காரணம் என்பது எனது கருத்து.

இதுபற்றிப் புவியியல் அறிஞர்களின் கருத்துக்களையும், கடல்கோள்கள் ஆர்வலர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.

அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஆவணி 29 (14.09.2020) திங்கள் கிழமை.

வெள்ளி, 22 மே, 2020

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மண் கடல் வௌவலின் (ஜனம்பெட்டா)

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மண் கடல் வௌவலின் (ஜனம்பெட்டா)





“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது” என்கிறது கலித்தொகை .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் கிடைக்கின்றனவா? கடல்மண் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்” படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்” என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் பொக்குப் பாறைகளைக் காண முடிகிறது.
திருச்செந்தூர், விருப்பாச்சி, பிரச்சந்திரா முதலான ஊர்களில் பிரளயம் பேர்த்த பாறைகளைப் படத்துடன் பார்த்தோம். மேலும் திருமலை, தொப்பூர், சூளகிரி, பெரச்சந்திரா, பெனுகொண்டா முதலான ஊர்களில் மலைக்குன்றுகளில் படிந்துள்ள கடல்மண் படிமங்களைப் படங்களுடன் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக ...

தெலுங்கானாவில் புத்பூர் அருகே உள்ளே ஜனாம்பேட் என்ற ஊரில் தேசியநெடுஞ்சாலை வழிநெடுக “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய” மண்படிமங்கள் மலிந்து காணக்கிடக்கின்றன. அருகில் உள்ள ஆற்றுமணல் மலைமேல் ஏறிப் படிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மலைமேல் படிந்துள்ள மண் ஆற்றிற்கு அடித்துச் செல்லப்படுகிறது என்பது உறுதியாகிறது. இந்த இடத்தில் உள்ள மலைகளிலெல்லாம் மண்படிந்துள்ளதற்குக் காரணம் பிரளயத்தில் தோன்றிய கடல்வெள்ளத்தைத் (சுனாமியைத்) தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
திண்டுக்கல் அருகே சிறுமலையில் அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
Kalairajan Krishnan
22 மே, 2017 ·

திங்கள், 10 டிசம்பர், 2018

கங்கன், கங்கை, கடல்வெள்ளம். Gangan - a celestial igneous rock planet, Ganga - a celestial water sedimentary planet, Tsunami

கங்கன் (a celestial igneous rock planet) , 
கங்கை (a celestial water sedimentary planet), 
கடல்வெள்ளம் (சுனாமி, tsunami)


1) கங்கன், 2) கங்கை, 3) கடல்வெள்ளம் என மூன்று புவியியல் கோட்பாடுகளைக் கூறி வருகிறேன்.




1)  கங்கன் என்ற 2000கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் ஒன்று  பூமியில் (இப்போது இமயமலை இருக்கும் இடத்தில்) விழுந்துள்ளது.


1 a) 
கங்கன் என்று என்னால் பெயரிடப்பெற்ற சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் (a celestial igneous rock planet) ஒன்று பூமியில் மோதி, பூமியைத் துளைத்துப் பூமிக்குள்ளே சென்றுள்ளது.  அதனால் சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விளிம்பு (Rim) இமயமலையாக உருவாகியுள்ளது.  


1 b)
இதனால் பூமியில் மிகவும் தொன்மையான வட்டவடிவமான மலைத்தொடர் உருவாகி உள்ளது.  இதை இமயமலை என்று அழைக்கிறோம்.  புராணங்கள் இமயமலையை “நேமி மால் வரை” என்று கூறிப்பிடுகின்றன. “நேமி மால் வரை” என்றால் வட்டவடிவமான சக்கரம் போன்ற மிக உயரமான மலைத்தொடர் என்று பொருள்.



1 c)
இமயமலையின் அடிப்பகுதி மிகவும் கடினமான கிரானைட் பாறைகளால் ஆனது. கங்கன் துளைத்துச் சென்ற காரணத்தினால், சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட மிகவும் ஆழமான பள்ளத்தாக்கு உண்டாகியுள்ளது.  (இப்போது இந்தப் பகுதியே தக்களமெகன் பாலைவனம் உள்ள பகுதியாகும்)




1 d)
கங்கன் என்ற விண்கோள் பூமியைத் துளைத்துச் சென்றுள்ள காரணத்தினால் பூமியின் மறுபக்கம் நிலப்பரப்பு (தரைப்பகுதி) ஏதும் இல்லாமல் போய்விட்டது. எரிமலைகளை வரிசையாகக் கொண்ட “ (ரிங் ஆப் பயர்) Ring of Fire ” என்ற பகுதி உருவாகி உள்ளது.


1 e)
கங்கன் பூமியைத் துளைத்து உள்ளே சென்ற காரணத்தினால், அதன் குழம்பு பூமியின் மேற்பரப்பைப் பிளந்து கொண்டு வெளியே வந்துள்ளது.  அவ்வாறு வந்துள்ள இடங்களில் நீண்ட நெடிய மலைத்தொடர்கள் உருவாகி உள்ளன.
இந்தியாவில் “மேற்குத்தொர்ச்சி மலைத் தொடர்”, அமெரிக்காவில்  “ஆல்ப்ஸ்மலைத் தொடர் ” முதலான நீண்ட மலைத் தொடர்கள் உருவாகி உள்ளன.  இதனால் பூமியின் மேற்பரப்பில் இருந்த நிலத்திட்டுகளில் வெடிப்பு ஏற்பட்டு கண்டங்களாக உடைந்து பிரிந்துள்ளது.

As Gangan collide the Earth. 
The drill formed by the Gangan is the Rim of the Himalayas. 
The magma split the surface of the earth and came out as long lengthy mountains such as Mountains Alps in America Continental, Easter and Wester Mountain Ranges in India.
Due to the collision the surface of the Earth was divided into plates, and the plates were moving. Thus, the major continents were formed.



1 f)
Simple Calculations :
1) The diameter of the Himalayan Mountain Range is approximately 2000 k.m.
2) Hence it is presumed that the Diameter of Gangan (a celestial igneous rock planet) is approximtely 2000 k.m.
3) Hence the of volume of the Gangan is ≈ 4.18879×10km³, 
approximately 4.2×10km³ 
4) Hence it is presumed that the mass of the earth was increased by 4.2×10km³

Note : the volume of the atmosphere at sea level 4,200,000,000 cubic kilometers.

1) வட்ட வடிவமான இமயமலைத்தொடரின் விட்டம் சுமார் 2000 கி.மீ. ஆக உள்ளது.
2) எனவே பூமியைத் துளைத்துப் பூமியின் உள்ளே சென்றுள்ள  கங்கன் என்ற விண்கோளின் விட்டம் சுமார் 2000 கி.மீ. ஆக இருக்க வேண்டும்.
3) இதனால் அந்தக் கங்கன் என்ற விண்கோளின் பருமன் சுமார் 4.2×109  கனசதுரமீட்டர் ஆக இருக்க வேண்டும்.
4) இதனால் பூமியின் பருமனானது சுமார் 4.2×109   = 4,200,000,000  கனசதுரமீட்டர் கூடுதலாக மாறியிருக்க வேண்டும்.

குறிப்பு - பூமியில் கடல்மட்டத்திற்கு மேலே உள்ள வளி மண்டத்தின் அளவு  4,200,000,000 கனசதுரமீட்டராக உள்ளதை இங்கே ஒப்பு நோக்க வேண்டியதாக உள்ளது. 

--------------------------------------

மேலே கங்கன் என்ற விண்கோள் பூமியில் மோதிப் பூமியைத் துளைத்து உள்ளே சென்றுள்ளதையும் அதனால் பூமியில் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் கண்டோம்.
இனி, வட்டவடிவமான இமயமலைத் தொடரின் நடுவே உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கில் கங்கை என்ற விண் நீர்க்கோள் இறங்கியதைப் பற்றிக் காண்போம்.

2) கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியில் இறங்குவதற்கு முன்பே, கங்கையின் நீர் முழுவதையும் சிலஆண்டுகள் தேக்கி வைத்துக் கொள்ளக்கூடிய மிகப்பெரிய பள்ளத்தாக்கு இமயமலைத் தொடரின் நடுவே இருந்துள்ளது.  இவ்வாறான ஒரு மாபெரும் பள்ளத்தாக்கு இமயமலையில் இருந்துள்ளதைக்  கங்கா புராணம் குறிப்பிடுகிறது. 

கங்கை என்ற விண்ணீர்க்கோள் இமயமலைத்தொடரின் (Rim) உள்ளே இப்போது தக்களமேகன் பாலைவனம் இருக்கும் இடத்தில் இறங்கியுள்ளது. 







கங்கை என்ற இந்த விண்ணீர்க்கோளின் குறைந்தபட்ச கனஅளவு சுமார் 90,660,751 க.ச.கி.மீ. ஆக இருக்க வேண்டும்,  அதிகபட்ச கனஅளவு சுமார் 176,144,220 க.ச.கி.மீ. ஆக இருக்க வேண்டும் எனக் கணக்கிட்டுக் கூறியுள்ளேன். https://docs.google.com/viewer?a=v&pid=forums&srcid=MDQ3MTE4NTA5MTY2NjkwMTk0NTQBMTgyOTM2NzcxNjgzOTUyNDc1NzcBMF94N3BmTDBBZ0FKATAuMQEBdjI&authuser=0

Second is the standard answer for the oceans is 1,400,000,000 cubic kilometers. However, if you have been paying close attention the past couple years, some new insights on the mantle suggest there is 5 times the water in the mantle as there is in the oceans. This make the volume of water on earth 8,400,000,000 cubic kilometers
இதற்கு ஆதாரமாகக் கங்காபுராணத்தையும், கூகுள் புவிப்படத்தையும் முதன்மைச் சான்றாகக் கொண்டுள்ளேன்.  https://groups.google.com/d/msg/mintamil/nRC_brdTWts/0_x7pfL0AgAJ

3) “கடல்வெள்ளம் மதுரையை அழித்தது“  என்ற கருத்தைத் திருவிளையாடல் புராணத்தையும், கூகுள் புவிப்படத்தையும் முதன்மைச் சான்றாகக் கொண்டு, மின்தமிழிலில் கீழ்க்கண்ட இழைகளில் எழுதியுள்ளேன்.

1) “மதுரைக்கு வந்த (சுனாமி) ஆழிப்பேரலை“ https://groups.google.com/d/msg/mintamil/u1RChqX1PdA/oUGnZ9OH-pgJ

2) மியான்மார் தட்டோன் அழிந்தது பிரளயத்தினாலா? https://groups.google.com/d/msg/mintamil/abU2jJI8miE/VYFSv1W7BgAJ

3) கீழடி அழிந்தது பிரளயத்தினாலா? https://groups.google.com/d/msg/mintamil/kneZ2BYbvh0/9rD_EEGyIQAJ

4) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி-2) https://groups.google.com/d/msg/mintamil/4UEpYeETYZw/CFnYEVmrCQAJ

5) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி -3) பிரளயம் பேர்த்த திருச்செந்தூர் பாறை https://groups.google.com/d/msg/mintamil/-gSTGWJbWO0/gs4eDPHeAgAJ

6) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) : மதுரையை வங்கக் கடல் வௌவியது https://groups.google.com/d/msg/mintamil/9OaxHrTzbnE/XqfQJsDECwAJ

7) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) மதுரையை அழித்தியால் ... https://groups.google.com/d/msg/mintamil/VAwI47M4G-M/X56lbdHCBwAJ

8) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) "மண் கடல் வௌவலின்" https://groups.google.com/d/msg/mintamil/jKAJQnE2pVQ/VhL_Tu12CAAJ

9) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மலி திரை ஊர்ந்து (தட்டோன்) https://groups.google.com/d/msg/mintamil/5rsSLsaD-e8/OIWOn4srDAAJ

10) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 7) மதுரையை அழித்த பிரளயத்தில் தோன்றிய பன்றிமலை  https://groups.google.com/d/msg/mintamil/6qz0GJVvbLc/vWdmaza6AQAJ

11) “மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 8“ https://groups.google.com/d/msg/mintamil/8PvU-QKrnss/y241b6PCCgAJ

12) “பிரளயப் பிளவுப் பாறைகள்“ https://groups.google.com/d/msg/mintamil/_di5oP8Qjjg/xd4vP8H4CQAJ

அன்பன்
கி.காளைராசன்

சனி, 12 மே, 2018

Theory of Tsunamis, மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி -3) பிரளயம் பேர்த்த பாறைகள்

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி -3)


பிரளயம் பேர்த்த பாறைகள்



திருவிளையாடற் புராணத்தில் பிரளயம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மதுரையைச் சுற்றிலும் எட்டு மலைகள் இருந்துள்ளன. பிரளயத்தில் கடல் கரையைக் கடந்து மதுரைத் தாக்கிய போது இந்த மலைகள் எல்லாம் பேர்ந்தன என்கிறது புராணம்.
"கொதித்தெழுந்து தருக்களறக் கொத்தியெடுத் தெத்திசையும்
அதிர்த்தெறிந்து வரைகளெல்லா மகழ்ந்துதிசைப் புறஞ்செல்லப்
பிதிர்த்தெறிந்து மாடநிரை பெயர்த்தெறிந்து பிரளயத்தில்
உதித்தெழுந்து வருவதென வோங்குதிரைக் கடல்வருமால்" 

(திருவிளையாடற் புராணம்)

பொருள் - கடலின் அலைகள் எல்லாம் உயர்ந்து, பொங்கி மேலே எழுந்து, மரங்கள் எல்லாம் முறிய வேருடன் பிடுங்கி எடுத்து, அதிர்த்து எல்லாத் திசைகளிலும் வீசியும், எல்லா மலைகளையும் தோண்டிப் பொடி செய்து திசைப் புறங்களுக்குச் செல்லுமாறு வீசியும், மாட வரிசைகளைப் பெயர்த்து வீசியும், பிரளயத்தில் உதித்து எழுந்து வருவதென கடல் வரும். (பிதிர்த்து - பொடியாக்கி; பிதிர் – பொடி)
"கருங்கட லேழுங் காவற் கரைகடந் தார்த்துப் பொங்கி
ஒருங்கெழுந் துருத்துச் சீறி யும்பரோ டிம்ப ரெட்டுப்
பொருங்கட் கரியு மெட்டுப் பொன்னெடுங் கிரியு நேமிப்
பெருங்கடி வரையும் பேரப் பிரளயங் கோத்த வன்றே"

(திருவிளையாடற் புராணம்)
பொருள் – ஏழு கரிய கடல்களும் ஒரே நேரத்தில் பொங்கி மேலே எழுந்தன. வெகுண்டு சீறி ஆரவாரித்து, காவலாகிய எல்லைகளைக் கடந்தன. விண்ணுலகும் மண்ணுலகும், போர்செய்யும் மதத்தையுடைய எட்டு யானைகளும், பெரிய எட்டு பொன்மலைகளும், பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள மலையும் அவற்றின் நிலைகளில் இருந்து பெயர்ந்திடுமாறு, பிரளயமாக ஒன்றோடு ஒன்று கோத்தன.









மதுரைக்கு வடக்கே அழகர்கோயில் மலை உள்ளது. இந்த மலையின் பாறைகள் பலவும் பெயர்ந்து காணப்படுகின்றன. “பிரளயம் பேர்த்த பாறைகள்“ சிலவற்றில் எட்டுப் பாறைகளின் படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

கட்டுரையாளர் - 
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன், kalairajan26@gmailcom, 94435 01912,
நாள் - சித்திரை 29 (12.05.2017) வெள்ளிக் கிழமை

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

Theory of Tsunamis விருப்பாச்சிப் பாறைகள் உருவானது எப்படி?



 Theory of Tsunamis விருப்பாச்சிப் பாறைகள் சுனாமியினால்  உருவாகி உள்ளனவா?

கீழே உள்ள பாறை அமெரிக்க ஐக்கியநாட்டில் உள்ளது.  இதேபோன்றதொரு பாறை அமைப்பை தமிழகம் ஆந்திரா தெலுங்கானா மற்றும் கருநாடகா பகுதிகளில் காணலம்.    அப்படியே அச்சு அசலாக அமெரிக்காவில் காணப்படும் பாறையும் விருப்பாச்சியில் காணப்படும் பாறையும் ஒன்று போல் உள்ளன.  
அமெரிக்காவில் உள்ளது நிலநடுக்கத்தினாலும் சுனாமியினாலும் உருவானவை என்றால், விருப்பாச்சியில் உள்ள பாறைகளும் நிலநடுக்கத்தினாலும் சுனாமியினாலும் உருவானவை என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.


Seismite formed by liquefaction of sediments during a Late Ordovician earthquake (northern Kentucky, USA).

All of these comforting notions were shattered by paleoseismology studies showing evidence of extremely large earthquakes,[2] along with historical tsunami records. In effect, the subduction zone under British Columbia, Washington, Oregon, and far northern California, is perfectly normal, being extremely hazardous in the long term, with the capability of generating coastal tsunamis of several hundred feet in height at the coast. These are caused by the interface between the subducted sea floor stressing the overlaying coastal soils in compression. Periodically a slip will occur which causes the coastal portion to reduce in elevation and thrust toward the west, leading to tsunamis in the central and eastern north Pacific Ocean (with several hours of warning) and a reflux of water toward the coastal shore, with little time for residents to escape. (Ref: http://www.wikiwand.com/en/Paleoseismology )


தமிழகத்தில் பழனி - திண்டுக்கல் சாலையில் விருப்பாச்சி அருகே உள்ள மலையை வெட்டி சாலையை அகலப்படுத்தி உள்ளனர்.  இங்கே கடினமான பாறைகளுக்கு இடையே பொக்குப்பாறைகள் சேர்ந்து உள்ளதைக் காண முடிகிறது.  இந்தப் பொக்குப்பாறைகள் சுனாமியினால் அடித்துவரப்பட்ட களிமண் அல்லது சவடுமண்ணால் உருவானது என்பது எனது கருத்து.



Seismite formed by liquefaction of sediments during a  huge Tsunami hits the Tamil Nadu, (Virupatchi 624614, Tamil Nadu ).

 
Seismite formed by liquefaction of sediments during a  huge Tsunami hits the Tamil Nadu, (Virupatchi 624614, Tamil Nadu )


பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கமும் குமரிக்கோடும் கொடுங்கடல் கொண்ட காலத்தில் ஏற்பட்ட கடல் வெள்ளம் தமிழகம் முழுவதையும் தாக்கி அழித்துள்ளது.  அவ்வாறான ஒரு மாபெரும் கடல்வெள்ளத்தால் (பெருஞ் சுனாமியினால் ) உருவான பாறைகளாக இவைகள் இருக்க வேண்டும் என்று கருத வேண்டியுள்ளது.   


முதல் தமிழ்ச்சங்கம் வளர்த்த தென்மதுரையையும்,
இரண்டாம் தமிழ்ச்சங்கம் வளர்த்த கபாடபுரத்தையும் அழித்த கடல்வெள்ளம் (மாபெருஞ் சுனாமி) தமிழகத்தில் விருப்பாச்சியையும் அழித்துள்ளது என்று கருத வேண்டியுள்ளது.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 18 மார்ச், 2018

சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?


சமுத்திரம் என்று முடியும் ஊர்ப் பெயர்கள்.

சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?



நான்கு முறை மதுரைக்குக் கடல்வெள்ளம் (சுனாமி, ஆழிப்பேரலை) வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது[1].  பஃறுளி ஆற்றுப் பன்மலை யடுக்கத்தையும், குமரிக்கோட்டையும், முதற் தமிழ்ச்சங்கம் நடைபெற்ற தென்மதுரையையும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்ற கபாடபுரத்தையும் கடல்கொண்டது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் பல காணப்படுகின்றன.
இந்த இலக்கியக் குறிப்புகள் குறித்து முறையான ஆய்வுகள் ஏதும்செய்யப்படாமலேயே, இக்கருத்துகள் எல்லாம் பொய்யில் புலவர்களால் புனைந்து உருவாக்கப்பட்ட தொன்மம் என்று கூறிவந்தனர்.  இந் நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே “செழியன் கொடிநுடங்க மறுகின் கூடல்“[2] என்று அகநானூறும்,  மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள் தாமரை என்று நக்கீரரின் திருமுருகாற்றுப்படையும் சிறப்பித்துக் கூறும் கூடல் நகரம் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டுபிடிக்கப் பட்டது.

கீழடி போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற ஆய்வுகளில் பூமிக்கு அடியிலே பெருநகரங்கள் புதையுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.  இந்த ஆய்வுகளால், தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடல்கோள் என்ற செய்தியானது தொன்மக் கதைகள் அல்ல.  அவைகள் உண்மை நிகழ்வுகள் என்று உணர்ந்து கொண்டேன்.

இந்நிலையில், இறையருளால்
2014 ஆம் ஆண்டு இராமேச்சுரம்-காசி பாதயாத்திரையும்,  மீண்டும்  
2015 ஆம் ஆண்டு நாக்பூர்-காசி பாதயாத்திரையும்,
2016 ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும், மீண்டும்
2017 ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும்
செல்லும் செல்லும் பேறு கிடைக்கப் பெற்றேன்.

பாதயாத்திரைப் பயணத்தில் வழிநெடுகிலும் காணக்கிடைக்கும் கல்லையும் மண்ணையும் சுனாமியின் எச்சங்களாகக் கண்டேன். அவற்றினைச் சேகரித்து முறையான அறிவியல் ஆய்விற்கு உட்படுத்தும் முயற்சியில் உள்ளேன்.  பாதயாத்திரை செல்லும் வழிகளில் “சமுத்திரம்” என்று முடியும் பெயர்களை ஊர்களையும் ஆங்காங்கே கண்டேன்.

இந்த ஊர்களுக்குச் சமுத்திரம் என்ற பெயரைச் சேர்த்து வைத்தது யார் ?
சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?
அல்லது, 
இந்த ஊர்களுக்குச் சமுத்திரம் என்ற பெயர் வைத்த காரணம் என்ன ?
என்ற ஐயங்கள் என்னுள் எழுந்தன.

பண்டைத் தமிழகம் முழுவதையும் கடல்வெள்ளம் (சுனாமி) தாக்கி அழிந்துள்ளது என்ற தமிழ் இலக்கியச் செய்திகளை அறிவியில் அடிப்படையில் நிறுவுவதற்கு ஏதுவாகச் சமுத்திரம் என்று முடியும் ஊர்களின் பெயர்களைத் தொகுத்து இணைத்துள்ளேன். எனது தேடலில்  54 ஊர்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

1)      கடலூர்
2)      கொண்ட சமுத்திரம், kondasamudram 608701, cuddalore Dist
கொண்ட சமுத்திரம்  Kondasamudram కొండసముద్రం Andhra Pradesh 523113 (No lake)
3)      செக சமுத்திரம்,  Jakka samudram 636805, Dharmapuri
செக சமுத்திரம்,   Jakkasamudram జక్కసముద్రం Andhra Pradesh 515231
4)      வேங்கட சமுத்திரம், Venkata samudram 636905, Dharmapuri (0.75m lake)
5)      பாலசமுத்திரம்  Bala samudram 624610, Dindigul Dist (0.75m lake )
பாலசமுத்திரம் Balasamudram Tamil Nadu 641664 (No lake)
பாலசமுத்திரம்  Balasamudram, Hanamkonda, Telangana 506001 (2.0 km lake)
பாலசமுத்திரம்  Balasamudram బలసముద్రం Andhra Pradesh 515571 (No lake)
பாலசமுத்திரம் Palasamudram పాలసముద్రం Andhra Pradesh 515241 (600m lake)
6)      சமுத்திரா பட்டி,  Samudrapatti 624402, Dindigul Dist (No lake)
7)      கெட்டி சமுத்திரம், Getti samudram 638501 Erode dist (No lake)
8)    ரெங்க சமுத்திரம், Rangasamudram Sathyamangalam, Tamil Nadu 638402, Erode Dist (No lake, Bhavani river bank)


முத்து சமுத்திரம்  Muthusamuthiram Tamil Nadu 642201 (No lake)
ரெங்க சமுத்திரம்  Rangasamudram Tamil Nadu 641662 (No lake)
ரெங்க சமுத்திரம் Rangasamudram రంగసముద్రం Andhra Pradesh 517370 (No lake)
ரெங்க சமுத்திரா Rangasamudra ರಂಗಸಮುದ್ರ Karnataka (No lake, forest)
9)      திம்ம சமுத்திரம், Thimam samudram 631 502 Kanchipuram dist (No lake, near river, near sea)
திம்ம சமுத்திரம் Thimmasamudram తిమ్మసముద్రం Andhra Pradesh 523185 (No lake, near sea)
10)   எல்.என்.சமுத்திரம்,  L.N.Samudram 639002, Karur Dist
சமுத்திரம், Samudram, Tiruvannamalai, Tamil Nadu (No lake, near  Tiruvannamalai mountain) 
சமுத்திரம், Samudram Tamil Nadu 636306, (No lake, )
ஜலகண்டபுரம் Jalakandapuram Tamil Nadu 636501 (No lake)
ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் ஒரே பெயரில் ஊர்கள் உள்ளதைக் காண முடிகிறது.  இன்னும் கூடுதலாகத் தேடிப் பார்க்க வேண்டும்.

11)   வேங்கட சமுத்திரம், Venkata samudram 635104, Krishnagiri
12)   கோபால சமுத்திரம், Gopala samudram 609108, Nagapattinam Dist
13)   வில்லந்திட சமுத்திரம்,  Vilanthida Samudram 609111, Nagapattinam Dist
14)   பூமா சமுத்திரம்,  Bomma samudram 637001, Namakkal Dist
15)   மால சமுத்திரம், Malla samudram 637503, Namakkal Dist
16)   நமன சமுத்திரம், Namana samudram 622422, Pudukottai Dist
17)   அப்பம்மா சமுத்திரம்,  Appama samudram 636108, Salem Dist
18)   சங்கம்மா சமுத்திரம், Jangamma samudram 636 113, Salem Dist
19)   கோண சமுத்திரம், Kona samudram 637102, Salem Dist
20)   சமுத்திரம், Samudram 636306, Salem Dist
21)   சமுத்திரம், Samudram 630710, Sivaganga Dist
22)   திருமலை சமுத்திரம், Thirumalai samudram 613402, Thanjavur Dist
23)   தியாக சமுத்திரம், Tyaga samudram 612301, Thanjavur Dist
24)   ரெங்க சமுத்திரம், Renga samudram 625562, Teni Dist
25)   பாலசமுத்திரம்  625512
26)   திம்மராய சமுத்திரம், Thimmaraya Samuthiram, Near New Cauvery Bridge, Tiruchirappalli,
27)   திருமலை சமுத்திரம், Thirumalai Samudram village in Thanjavur Tehsil, Thanjavur,
28)   சின்னபாபு சமுத்திரம், chinnababu samudram 605102, Villupuram Dist.
29)   மூல சமுத்திரம், Moola samudram 606107 , villupuram Dist
30)   பெரியபாபு சமுத்திரம், periyababu samudram 605102, villupuram Dist
31)   தாண்டவசமுத்திரம்  Thandava samudram 604151, Villupuram Dist
32)   அப்பம்மாசமுத்திரம் 616108
33)   அம்பா சமுத்திரம்  Amba samudram 627401, Tirunelveli Dist
34)   அம்பா சமுத்திரம்  Amba samudram Pudukudi 627435, Tirunelveli Dist
35)   தளபதி சமுத்திரம், Dalapathi samudram 627101, Tirunelveli Dist
36)   கோபல சமுத்திரம், Gopala samudram 627451, Tirunelveli Dist
37)   இராவண சமுத்திரம், Ravana samudram 627424, Tirunelveli Dist
38)   இரெங்க சமுத்திரம், Renga samudram 627413, Tirunelveli Dist
நீலகண்ட சமுத்திரம் (பாலமடை)

39)   கோண சமுத்திரம், Kona samudram 631202,Tiruvallur Dist
40)   கிருஷ்ண சமுத்திரம், Krishna samudram 631 206, Tiruvallur Dist
41)   இராம சமுத்திரம், Rama samudram 631206, Tiruvallur Dist
42)   கோபால சமுத்திரம், Gopala samudram 614001, Tiruvarur Dist
43)   வடமலை சமுத்திரம், Vadamalai samudram  628907 Thoothukudi Dist
44)   வால சமுத்திரம், தூத்துக்குடி அருகில்
45)   சென்ன சமுத்திரம், Chenna samudram 632506, Vellore Dist
46)   சின்ன சமுத்திரம், Chinna samudram 635653, Vellore Dist
47)   கிரி சமுத்திரம், Giri samudram 635751, Vellore Dist
48)   காம சமுத்திரம்,  Kamma samudram 632319, Vellore Dist
49)   சோம சமுத்திரம், Soma samudram 631102, Vellore Dist
50)   திப்ப சமுத்திரம், Tippa samudram 635809, Vellore Dist
51)   வேங்கிட சமுத்திரம், Venkata samudram 635811, Vellore Dist
52)   மூல சமுத்திரம், Moola samudram 606107, Villupuram Dist
53)   சங்கம்மாசமுத்திரம் 636113
54)   கிருஷ்ண சமுத்திரம் 620013 (திருவெறும்பூர் அருகில்)
55)   நாக சமுத்திரம் nagasamthiram karnadaga (away from Bangalore)

கடலூரையும் சேர்த்து மொத்தம் 55 ஊர்களின் பெயர்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.  சமுத்திரம் என்று முடியும் பெயர்களைக் கொண்ட ஊர்கள் இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

கேரளம், கருநாடகம், ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களில் உள்ள சமுத்திரம் என்ற பெயரில் உள்ள ஊர்கள் கண்டறியப்பட வேண்டும்.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
kalairajan26@gmail.com

1) காமசமுத்திரம் ஏரி உள்ளது . இது கோலார் மாவட்டம் பங்கார்பேட் ஜங்ஷன் அடுத்துள்ள சிறிய ஊர்

2) சமுத்தரிஞ்சு, சமுத்தரணை என்பதெல்லாம்,  வளருருவாக்கம்,  புனர்வேலை, மீளெழுச்சி போன்றவற்றைக் குறிக்கும். “வாடு சமுத்தரிஞ்சு சாவக் கொட்டேடு”.... அது போல முத்துவும் இரங்கனும் கட்டெழுப்பிய ஊர்களாக இருக்கலாம்.
நன்றி = பழைமைபேசி அவர்கள், மின்தமிழ் 
https://groups.google.com/d/msg/minTamil/FaK5pSOpTiE/en3pO8R0BwAJ

3) தாமிரபரணி நதியின் வடக்கு கரையில் பாலாமடை ( திருநெல்வேலியிலிருந்து வடகிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது.) கிராமத்தையும் சுற்றியுள்ள நிலங்களையும் திருமலை மன்னன் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதருக்கு மான்யமாக அளித்தான். அரசின் ஆவணங்களில் இது நீலகண்ட சமுத்திரம் என்றும் வழங்கப்படுகிறது. (See Archaelogical Survey of India Annual Report 1976-77 Epigraphy Sl.No. 243 to 244).  4) மைசூரில் சிவசமுத்திரம்,  திருக்குற்றாலத்தில் பொங்குமா கடல்
நன்றி = நா.கணேசன் அவர்கள், மின்தமிழ்  5) தொழுவூர் அருகே சிறுகடல் உள்ளது.
https://groups.google.com/d/msg/minTamil/FaK5pSOpTiE/gzux2kYmCgAJ




[1] http://thiruvilaiyadalpuranam.blogspot.in/2018/03/blog-post_7.html
[2] http://thiruvilaiyadalpuranam.blogspot.in/2018/03/blog-post_17.html