பிரளயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரளயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 செப்டம்பர், 2020

மதுரைக்கு வந்த சுனாமி நாகமலை தோன்றியது எப்படி?

மதுரைக்கு வந்த சுனாமி
நாகமலை தோன்றியது எப்படி? 


ஆழிப்பேரலை (சுனாமி) மீண்டும் வருமா?
வந்தால் என்ன செய்வது? எப்படிச் செய்வது?
அனைத்து வல்லரசுகளும் பயப்படுகின்றன.
உலகமக்கள் எல்லாம் உயிருக்கு அஞ்சுகின்றனர்.

சப்பான் நாட்டில் சுனாமியால் அணுஉலை எரிந்தது.
தமிழ்நாட்டிலும் இதுபோல் சுனாமி வந்தால், கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர்.  எனவே அணுமின்நிலையத்தை அரைகிலோமீட்டர் தள்ளிக் கட்டவேண்டும் என்றும்
கூறுகின்றனர்.

ஆனால் மதுரைக்கு சுனாமி வந்துள்ளது!
எப்போது வந்தது?
எப்படி வந்தது?
என்ன என்ன அழிந்தன?
யார் யார் பிழைத்தார்கள்?

எப்போது வந்தது?
அதுலகீர்த்தி என இருபத்திரண்டு மைந்தர் வழிவழியாக, பாண்டிய நாட்டைக் காத்துவந்தனர்.  இவர்களுள், பழிதவிர் அதுலகீர்த்திபாண்டியன் என்னும் மன்னனின் மகன் கீர்த்திபூசணன் செங்கோலோச்சி ஆட்சி செய்து வந்த காலத்தில் ஒருநாள் ஆழிப்பேரலை பொங்கி மதுரை வரை வங்கக்கடல் வந்துள்ளது.

எப்படி வந்தது?
கருங்கடல் ஏழும் ஒருசேரப் பொங்கி மேலே எழுந்து,  பெரிய உருவம் பெற்று,  சீறிப் பாய்ந்து, வெகுண்டு ஆரவாரித்து, காவல் கரையைக் கடந்து வந்தன. விண்ணுலகையும், மண்ணுலகையும், இணைக்கின்ற  பெரிய பொன்னையுடைய எட்டு மலைகளும், பெருங்கடி நேமி(சக்கரம்) வரை(பாதுகாப்புச் சுவர்) யும்,  பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள கிரியும் தங்களது நிலையிலிருந்து பெயர்ந்தன.  பிரளயத்தின்மீது இன்னுமொரு பிரளயம் கோர்த்து வந்தது.

இவை அனைத்தும், அப்பெருஞ் சலதி வெள்ளத்தின்  உள்ளே சென்று விட்டன. கடல் வெள்ளத்துள் மூழ்கி, அழிவு இலாத  பெரிய பூமியும், ஏழு தீபகற்பங்களும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கிநிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்த மலைவகைகளும் கடல் அலைகளுள் சென்றன.

என்ன என்ன அழிந்தன?
யார் யார் பிழைத்தார்கள்?

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, நான்கு முறை ஆழிப்பேரலையானது (சுனாமி) மதுரைக்கு வந்து சென்றதாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.
சங்க காலத்திலே, பொங்கி வந்த ஆழிப்பேரலையானது தமிழகத்தையே  அழித்து மேற்கே சென்றுள்ளது. பிரளயத்திற்குமேல் மற்றொரு பிரளயம் உண்டாகியுள்ளது. இதனால் எழுகடலும் பொங்கி எழுந்துள்ளன.  அப்போது மதுரையின் வடக்கு எல்லையாக விளங்கும் யானைமலையும், தெற்கு எல்லையாக விளங்கும் திருப்பரங்குன்றமலையும் தங்களது இடங்களிலிருந்து பெயர்ந்து ஆட்டம் கண்டுள்ளன. கடல் அலையானது பொங்கி எழுந்து வந்து யானைமலையும் திருப்பரங்குன்ற மலையும் மூழ்கடித்துள்ளன.  மலைகளையெல்லாம் மூழ்கடித்த அந்த அழித்த ஆழிப்பேரலையானது மேற்குத் தொடர்ச்சி மலையையும் தாண்டிச் சென்று அரபிக்கடலில் கலந்துள்ளது. 

நாகமலை தோன்றியது

மலைகள் எல்லாம் ஆடும்படியாக அடுக்கடுக்காகப் பிரளயம் உண்டானபோது பொங்கி எழுந்த கடல் அலையானது ஒரே சேறும்சகதியுமாக இருந்துள்ளது.  இந்த அலையில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.  ஆனால், ஒரேயொரு விருட்சம் (மரம்) மட்டும் இவ்வளவு பெரிய  பிரளயத்திலும் ஆடாமல் அசையாமல் பூமிஉருண்டையின் மேல் ஒரு ஆணியை அடித்து வைத்தது போல், அப்படியே நிலையாக ஆழிப்பேரலையை (சுனாமியை) எதிர்த்து நின்றது.  



தண்ணீர் பாய்ந்து ஓடும் ஒரு மணற்பரப்பின் நடுவில் ஒரு குச்சியை நிலையாக நிறுத்தி வைத்தால், நீரோட்டத்தினால் அடித்துவரப்படும் மணல்கள் அந்தக் குச்சிக்குப் பின்புறம் சென்று நீண்டதொரு மேட்டினை உருவாக்கும்.  அலைகள் மிகுந்த கடற்கரையில் நாம் நின்றால், அலையானது நமது கால்களைத் தாண்டிச் செல்லும் போது, நமது கால்களுக்குப் பின்புறமாக ஒரு நீண்ட மணல்மேட்டினை உருவாக்குவதைக் காணலாம்.  இதனைச் செயற்கையாகவும் நாம் சோதனை செய்தும் பார்க்கலாம்.
இதுபோன்றே, கடல் அலையால் அரிந்து வரப்பட்ட  பொருட்கள் இந்த விருட்சத்தில் மேல் மோதி நிலைகொண்டு விருட்சத்திற்குப் பின்புறமாகச் சென்று,   மணலும் சேறும் சகதியும் நிறைந்த ஒரு நீண்ட நெடிய மேட்டினை உருவாக்கிவிட்டது.   இந்த மேட்டில் கடலிலிருந்து அடித்துவரப்பட்ட கடல்நீர், மணல், சகதி மற்றும் வரும் வழியில் இருந்த அனைத்து வகையான மரம் செடிகொடுகளும், மற்றும் உயிரினங்களும் படிந்து விட்டன.
இவ்வாறு உண்டான மணல்மேட்டுப் படிமம் பலமைல் தூரத்திற்கு நீண்டு சென்றுள்ளது.   


இப்போது பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் பல கழிந்து, யுகங்கள் மாறிவிட்டன.  இத்தனை ஆண்டுகளில், பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்ட அழுத்தத்தினாலும் மற்றும்பல இயற்கைக் காரணங்களாலும் இந்தப் படிமமானது அப்படியே பாறைபோல் மாறிவிட்டது.  இப்போது இந்த மேடானது, “நாகமலை“ என்று அழைக்கப்படுகிறது.  யானைமலையும் திருப்பரங்குன்றமலையும் கடும்பாறைகளாக இருக்க, நாகமலைமட்டும் கடும் பாறையாக இல்லாமல், மணற்குன்றாக இருப்பதை இன்றும் காணலாம்.   இதே போன்று பழமுதிர்சோலைமலையையும் (அழகர்கோயில்மலை) ஆழிப்பேரலையானது தாங்கியுள்ளதால் அங்கேயும் இதுபோன்ற படிமங்களைக் காணலாம்.  

ஆழிப்பேரலையாலும் அசைக்க முடியாமல் பூமியின் மேல் ஆப்புப் (ஆணி அடித்தது) போன்று அசையாமல் நின்ற அந்த விருட்சமானது, காலப்போக்கில் படிமம் ஆகியுள்ளது.  இப்போது “ஆப்புடையார்“ என்று அழைக்கப்படுகிறது.  மிகப் பெரிய பிரளயத்திலும் அசையாமல் நின்ற திருவாப்புடையார் உள்ளது பகுதியானது திருவாப்பனூர் என்று பெயர் பெயரலாயிற்று.
திருஆப்புடையார் போன்று, திருப்பரங்குன்றமலையும் ஆழிப்பேரலையை எதிர்த்து நின்றதால், திருப்பரங்குன்றமலைக்கு மேற்குப் பகுதியிலும் நாகமலைக்கு இணையாக ஒரு சிறிய படிம மலைத் தொடர் இருப்பதைக் காணலாம்.

தமிழர்களின் தொன்மையான சான்றுகள் அனைத்தும் நாகமலையில் புதையுண்டு கிடக்கின்றன.  நாகமலையை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால்,  தமிழரின் தொன்மையான வரலாறுச் சான்றுகள் எளிதில் கிடைக்கும்.

பிரளயம் வற்றிய போது கடல்நீர் மீண்டும் கடலுக்குள் செல்லும் போது, அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் எல்லாம் வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேடாக உள்ளது.  இதனால் இந்த இடம் “முகவை“ என்றும் சேதுக்கரை என்றும் பெயர் பெறலானது.  இந்த இடங்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால் தமிழரின் தொன்மைச் சான்றாதாரங்கள் எளிதில் கிடைக்கும்.

ஆடாமல் அசையாமல் நின்று அருள்மிகு திருவாப்புடையாரை வணங்கினால், பிரளயம்போல் தோன்றும் வினைகளையும் எதிர் கொள்ளும் சக்தியைப் பெறலாம். 

திருச்சிற்றம்பலம்.
18 பிப்ரவரி 2013

ஞாயிறு, 24 மே, 2020

மதுரைக்கு வந்த சுனாமி (அலவாக்கோட்டை)


மதுரைக்கு வந்த சுனாமி (அலவாக்கோட்டை) 



மாமல்லபுரத்தில் சீனஅதிபர் ஷி ஜின்பிங் அவர்களும் இந்தியப்பிரதமர் மோடி அவர்களும் சந்தித்த இடத்திற்கு அருகில் கிருஷ்ணனின் வெண்ணைய்ப் பந்து என்று ஒரு உருண்டைக் கல் உள்ளது. சரிவான பாறையின் மேல் உள்ள இந்த உருண்டைக்கல் உருண்டு கீழே விழாமல் உள்ளது. முதலாம் நரசிம்ம வர்மன் இந்த உருண்டைக் கல்லை உருட்டிவிட முயற்சி செய்து பின் கை விட்டுவிட்டார்.  சென்னை கவர்னாக இருந்த ஆர்தர் ஹேவ்லாக் (Arthur Havelock)என்பவர் யானைகளைக் கொண்டு இந்தப் பாறையை உருட்டவிட முயற்சி செய்து பின் கைவிட்டுள்ளார்.
மகாபலிபுரத்தில் உள்ள பாறைபோன்று, எத்தனையோ இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், சிறிதும் ஆடாமல் அசையாமல் சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் இரண்டு பாறைகள் நிற்கின்றன.

இந்தப் பாறையைப் போன்ற சிறுசிறு கட்டிகட்டியான பாறைகளை மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரிலும் மற்றும் கிரானைட் குன்றுகளின் உச்சியிலும், பூமிக்கு அடியிலும் காணலாம்.  கடல்கோளால் குமரிக்கோடு அழிந்தபோது உண்டான கடல்வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட கடற்களிமண்  இறுகிப் பாறையாகி இந்தப்  பொக்குப்பாறை உருவாகி உள்ளது என்பது எனது கருத்து. 



சிவகங்கை மாவட்டத்தில் உள்ளோர் அனைவரும் ஒருமுறையேனும் இந்தப் பாறையை நேரில் சென்று பார்த்து வர வேண்டும்.

இருப்பிடம் - மதகுபட்டியிலிருந்து அலவாக்கோட்டை.. அதை தாண்டியதும் இடது பக்க சாலையில் செல்லவும்.. தார்ரோட்டின் முடிவில் வண்டியை நிறுத்தி விட்டு வலதுகை பக்கம் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு ஊரணி வரும். அதன் உள்ளே இறங்கி கரை ஏறி கொஞ்ச தூரம்தான்..
சிவகங்கை, மதகுபட்டி அருகே, அலவாக்கோட்டை.. அதை தாண்டியதும் இடது பக்க சாலையில் சென்றால்..... தார்ரோட்டின் முடிவில் வண்டியை நிறுத்தி விட்டு வலதுகை பக்கம் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு ஊரணி வரும். அதன் உள்ளே இறங்கி கரை ஏறி கொஞ்ச தூரம்தான்..

பாறை படம் -
நன்றி = Ramesh Gemini Kalaiyarkoil
https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/96720839_3497314020283611_4818404860263137280_o.jpg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_ohc=DUBNT-zu7z0AX92EDQ0&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=b48fb439b980fb321fc7ea676367d09c&oe=5EF221EC

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 11 (25/05/2020) ஞாயிற்றுக் கிழமை.

செவ்வாய், 19 மே, 2020

வங்கக் கடலில் உருவான கடல்கோள்


வங்கக் கடலில் உருவான கடல்கோள்



இது மாபெரும் கடல்கோள்...

பன்மலையடுக்கம் அழிந்து இலட்சத்தீவுகளாக மாறிவிட்டன.
கபாடபுரம் அழிந்து டிகோகார்சிகா தீவாக மாறிவிட்டது.
கிழக்குக் கடற்கரையில் (கடலூர் போன்று) வளைவான கடற்கரைகள் தோன்றியுள்ளன.
தென்னிந்தியாவில் உள்ள ஆறுகள் எல்லாமும் வழித்தடம் மாறியுள்ளன.
வையை என்ற நதி மறைந்து வைகை என்ற நதி உருவாகியுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைமேல் அளவற்ற மண் படிந்து ள்ளது.
விந்தியசாத்பூரா மலைமேல் அளவற்ற மண்படிந்து அதன் உயரம் குறைந்துள்ளது.
தென்னிந்தியாவில் உள்ள மண்மலைகள் எல்லாம் இந்தக் கடல்கோளின்போது புதிதாக உருவானவை
---------------------------------------------------------------------

1) வங்கக்கடலில் உண்டான கடல்வெள்ளம் மதுரை மீது வந்தது,  சூரிய கிரகணத்தின் போது சூரியனை இருள் விழுங்கியது போன்று இருந்தது என்கிறது திருவிளையாடற் புராணம் பாடல் எண் 1040

வங்க வேள் வெள்ள மாட மதுரை மீது வருசெயல்
கங்குல் வாய திங்கண் மீது காரி வாய காருடல்
வெங்கண் வாள ராவி ழுங்க வீழ்வ தொக்கு மலதுகார்
அங்கண்மூட வருவ தொக்கு மல்ல தேது சொல்வதே.”


2) பெரிய ஊழிக்காலத்தில் வங்கக்கடல் மதுரைக்கு வந்தது போன்று வைகையை வருமாறு சிவபெருமான் அழைத்தார் என்கிறது திருவிளையாடற் புராணம் பரி நரியாக்கி வைகை அழைத்த படலம் பாடல் எண் 2977.

“கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச்
சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா
வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும்
இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான்”.
-----------------------------------------------------------------

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 7 (20/05/2020) புதன்கிழமை

மண் கடல் வௌவலின் (சூளகிரி) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)

மண் கடல் வௌவலின் (சூளகிரி)
மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)


தொல்லியல்துறையினர் மதுரைக்கு அருகே கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் சாலை அருகே மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம்.

பண்டைய மதுரையும் மணவூரும் எவ்வாறு அழிந்தன?.
“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104). மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? கடல்மண் தமிழகமலைகளில் கிடக்கின்றனவா?


ஆம், கிடக்கின்றன! இவ்வகையான “கடல்மண்“ படிமப் பாறைகளைப் “பொக்குப் பாறைகள்“ என்கின்றனர். தமிழகத்தில் பிரளயம் பேர்த்த பாறைகளுக்கு இடையேயும், கிரானைட் மலைக்குன்றுகளில் பாறைகளின் இடுக்குகளிலும், சமவெளிகளில் பூமிக்கு உள்ளேயும் இவ்வகைப் பாறைகளைக் காண முடிகிறது.

கிருஷ்ணகிரி ஓசூர் இடையே நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே உள்ள பாறைகளுக்கு இடையே “மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவிய“ மண்படிமங்கள் காணக்கிடக்கின்றன.


இந்த இடத்தில் மேலும் கீழும் கடினமான கிரானைட் பாறைகள் இருக்கின்றன. இந்தப் பாறைகளுக்கு இடையே பொக்குப்பாறை என்று அழைக்கப்படும் கடல்வௌவிய மண் திட்டுக்கள் எளிதில் நன்றாகக் காணக் கிடைக்கின்றன.   அடுத்து ஆந்திராவில் பெரச்சந்திரா அருகே அடுத்த தேடுதல் தொடர்கிறது ... ...

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

கடல்கோள் என்றால் என்ன?



பிரளயம் என்றால் என்ன?
நிலத்திட்டுகள் பெயர்த்து விழுதல். 
மலைகளில் நிலங்கள் பெயர்ந்து விழுவது போன்று கடலுக்கு அடியில் உள்ள நிலங்கள் (fault) பெயர்ந்து சரிந்து விழுவதைப் பிரளயம் என்கிறது புராணம்.
சுனாமி என்றால் என்ன?
கடலுக்கு அடியில் உள்ள நிலத்திட்டுகள் புடைபெயர்ந்து பிரண்டு விழுகின்றன. இவ்வாறு நிலத்திட்டுகள் பெயர்ந்து விழுகின்ற காரணத்தினால் கடல்நீர் அடித்துச் செல்லப்படுகிறது. இதைச் சுனாமி என்ற சப்பானியச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். புராணங்களில் இது கடல்வெள்ளம் அல்லது சலதிவெள்ளம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல்கோள் என்றால் என்ன? 
கடல்வெள்ளத்தினால் (சுனாமியினால்) கடல்மட்டத்திற்கு மேலே உள்ள நிலப்பரப்பானது மூடப்படுவதை அழிக்கப்படுவதைக் கடல்கோள் என்று புராணம் குறிப்பிடுகிறது. (தண்ணீரை ஊற்றி வீட்டைக் கழுவி விடுவது போன்று, கடல்நீரால் தரைப்பகுதி கழுவிவிடப்படுகிறது.)
ஊழி, ஊழிக்காலம் என்றால் என்ன?பெரும் அழிவுகளை ஊழி என்றும், பெரும் அழிவுகள் நிகழ்ந்த காலத்தை ஊழிக்காலம் என்றும் புராணம் குறிப்பிடுகிறது.

சனி, 12 மே, 2018

Theory of Tsunamis, மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி -3) பிரளயம் பேர்த்த பாறைகள்

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி -3)


பிரளயம் பேர்த்த பாறைகள்



திருவிளையாடற் புராணத்தில் பிரளயம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மதுரையைச் சுற்றிலும் எட்டு மலைகள் இருந்துள்ளன. பிரளயத்தில் கடல் கரையைக் கடந்து மதுரைத் தாக்கிய போது இந்த மலைகள் எல்லாம் பேர்ந்தன என்கிறது புராணம்.
"கொதித்தெழுந்து தருக்களறக் கொத்தியெடுத் தெத்திசையும்
அதிர்த்தெறிந்து வரைகளெல்லா மகழ்ந்துதிசைப் புறஞ்செல்லப்
பிதிர்த்தெறிந்து மாடநிரை பெயர்த்தெறிந்து பிரளயத்தில்
உதித்தெழுந்து வருவதென வோங்குதிரைக் கடல்வருமால்" 

(திருவிளையாடற் புராணம்)

பொருள் - கடலின் அலைகள் எல்லாம் உயர்ந்து, பொங்கி மேலே எழுந்து, மரங்கள் எல்லாம் முறிய வேருடன் பிடுங்கி எடுத்து, அதிர்த்து எல்லாத் திசைகளிலும் வீசியும், எல்லா மலைகளையும் தோண்டிப் பொடி செய்து திசைப் புறங்களுக்குச் செல்லுமாறு வீசியும், மாட வரிசைகளைப் பெயர்த்து வீசியும், பிரளயத்தில் உதித்து எழுந்து வருவதென கடல் வரும். (பிதிர்த்து - பொடியாக்கி; பிதிர் – பொடி)
"கருங்கட லேழுங் காவற் கரைகடந் தார்த்துப் பொங்கி
ஒருங்கெழுந் துருத்துச் சீறி யும்பரோ டிம்ப ரெட்டுப்
பொருங்கட் கரியு மெட்டுப் பொன்னெடுங் கிரியு நேமிப்
பெருங்கடி வரையும் பேரப் பிரளயங் கோத்த வன்றே"

(திருவிளையாடற் புராணம்)
பொருள் – ஏழு கரிய கடல்களும் ஒரே நேரத்தில் பொங்கி மேலே எழுந்தன. வெகுண்டு சீறி ஆரவாரித்து, காவலாகிய எல்லைகளைக் கடந்தன. விண்ணுலகும் மண்ணுலகும், போர்செய்யும் மதத்தையுடைய எட்டு யானைகளும், பெரிய எட்டு பொன்மலைகளும், பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள மலையும் அவற்றின் நிலைகளில் இருந்து பெயர்ந்திடுமாறு, பிரளயமாக ஒன்றோடு ஒன்று கோத்தன.









மதுரைக்கு வடக்கே அழகர்கோயில் மலை உள்ளது. இந்த மலையின் பாறைகள் பலவும் பெயர்ந்து காணப்படுகின்றன. “பிரளயம் பேர்த்த பாறைகள்“ சிலவற்றில் எட்டுப் பாறைகளின் படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

கட்டுரையாளர் - 
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன், kalairajan26@gmailcom, 94435 01912,
நாள் - சித்திரை 29 (12.05.2017) வெள்ளிக் கிழமை

Theory of Tsunamis, மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி-2) மணவூர், மணலூர்,

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி-2)

பிரளயம் (பெரும் சுனாமி)
ஊழிக்காலத்தில் குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டதாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  பக்தி இலக்கியங்களான தலபுராணங்களிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன.  இதில் குறிப்பாகத் ‘திருவிளையாடல் புராணத்தில்‘ வங்கக்கடல் கரையைக் கடந்து மதுரையைத் தாக்கியதாகக் குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.  இருப்பினும், திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள ஊழிக்காலம், பிரளயம், கடல்கோள் (சுனாமி), பற்றிய செய்திகள் விரிவாக ஆராயப்படாமலேயே உள்ளன.
தொல்லியல்துறையினர் தமிழகத்தில் மிகவும் தொன்மையான இடுகாடுகள் பலவற்றைக் கண்டறிந்து உள்ளனர்.  இவை தவிர்த்து அரிக்கமேடு காவேரிப் பூம்பட்டிணம் ஆகிய ஊர்களின் பண்டைத்தமிழர்களின் தொன்மையான நகரங்கள் கண்டு அறியப்பட்டுள்ளன. இவற்றுடன் கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் வழியில் சாலைக்குக் கிழக்கே தொல்லியல்துறையினர் மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.  


இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம்.  சோமசுந்தரபாண்டியன் மகன் உக்கிரபாண்டியன்.  மணவூரில் பிறந்த காந்திமதியை உக்கிரபாண்டியன் மணம் செய்து கொண்ட காரணத்தினால் இந்த ஊருக்கு மணவூர் என்ற பெயர் உண்டானது என்கிறது திருவிளையாடற் புராணம்.
மணவூரைத் தலைநகராகக் கொண்டு குலசேகர பாண்டியன் ஆண்டுவந்தான்.  தனஞ்செயன் என்ற வணிகன் கடம்பவனத்தின் நடுவே சிவலிங்கம் ஒன்று இருப்பதையும், அதைத் தேவர்கள் வணங்குவதையும் கண்டுவந்து குலசேகர பாண்டிய மன்ன்னிடம் சொல்கிறான்.  மன்னனும் தனது அமைச்சர்களுடன் அங்கே சென்று சிவலிங்கத்தை வணங்கி ஆலயத்தைக் கட்டுகிறான்.   ஆலயத்தைச் சுற்றிலும் மிகவும் அருமையாகத் திட்டமிட்டு ஒரு நகரை உருவாக்குகிறான்.  இவ்வாறு குலசேகர பாண்டியனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரமே இன்றைய மதுரை ஆகும்.
பண்டைய மதுரையும் மணவூரும் எப்படி அழிந்தன?
( பெருஞ் சுனாமி ) கடல்வெள்ளம், பிரளயம், ஊழிக்காலம் என்கிறது திருவிளையாடற் புராணம்.
2004ஆம் ஆண்டு தமிழகத்தைத் தாக்கிய சுனாமியைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இதைப்போலப் பலநூறுமடங்கு பெரிதான மிகப்பெரிய சுனாமி ஒன்று பண்டைக்காலத்தில் பாண்டியநாட்டைத் தாக்கியுள்ளது.  அந்நிகழ்ச்சி திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
“அழகுமிக்க அதுலகீர்த்தியும் போன்று, இருபத்திரண்டு மைந்தர்கள் வழி வழியாகத்தோன்றி, பண்டைய பாண்டிய நாட்டை ஆண்டு வந்தனர்.  
இவர்களுக்குப் பின்னர் ‘கீர்த்திபூடண பாண்டியன்‘ மன்னன் ஆட்சி செய்துவரும் நாளில், மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டது.   கடல்கள் ஏழும் ஒருசேரப் பொங்கி மேலெழுந்து, உருத்துச் சீறி வெகுண்டு ஆரவாரித்து, காவலாக விளங்கிய கரையைக் கடந்து தமிழுகத்தை அழித்தன.  இந்தப் பிரளயத்தில்  எட்டு மலைகளும், பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள மலையும்  (சக்கரவாளமலை = இயமமலை) நிலைபெயர்ந்தன.  இப்பிரளயம் அடங்கும் முன்னரே மற்றொரு பிரளயமும் தோன்றி அளித்தது.  அந்தப்பெரிய கடல் வெள்ளத்துள் மூழ்கி, அழிவில்லாத எத்துணைப் பெரிய நிலத்திட்டுகளும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கி நிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்தமுடிகளையுடைய மலைவகைகளும், ஒழிந்தன.
ஆனாலும், நீண்ட விழிகளையுடைய மீனாட்சியம்மையின் திருக்கோயிலும், வானினின்றும் இறங்கிய இந்திரவிமானமும், பொற்றாமரை வாவியும், இறைவன் திருவிளையாட்டினால் வந்து தங்கிய மணம்வீசும் சோலைகளையுடைய இடபமலையும் (அழகர்கோயில்மலையும்), யானைமலையும், நாகமலையும், பசுவின் உருத்திரிந்த பசுமலையும்,  பன்றிமலையும் இந்தப் பிரளயத்தில் உண்டான கடல்நீரினால் அடித்துச் செல்லப்படாமல் அழியாமல் இருந்தன.
உயர்ந்த  அலைகளையுடைய கடலானது, கொதித்து எழுந்து மரங்கள் முறியக்  கல்லி எடுத்து, அதிர்ந்து ஆரவாரித்து எல்லாத் திசைகளிலும் வீசியும், கடற்கரைகளை எல்லாம் அகழ்ந்துத் தோண்டிப் பொடி செய்து திசைப்புறங்களிற் செல்லுமாறு வீசியும்,  மலைகளை யெல்லாம் மாட வரிசைகளைப் பெயர்த்து வீசியும், ஊழிக்காலத்தில் தோன்றி பிரளயத்தில் உதித்து எழுந்து வந்தன“ என்கிறது திருவிளையாடற் புராணம்.
     
திருவிளையாடற் புராணம் பாடல்கள் :

“எழில்புனை அதுலகீர்த்தி என இருபத்திரண்டு
வழிவழி மைந்தராகி வையம் காத்த வேந்தர்
பழிதவிர் அதுலகீர்த்தி பாண்டியன் தன்பால் இன்பம்
பொழிதர உதித்த கீர்த்திபூடணன் புரக்குநாளில்

கருங்கடல் ஏழும் காவற்கரை கடந்து ஆர்த்துப் பொங்கி
ஒருங்கு எழுந்து உருத்துச் சீறியும் உம்பரோடு இம்பர் எட்டுப்
பொருங்கல் கரியும், எட்டுப் பொன் நெடுங்கிரியும் நேமிப்
பெரும் கடிவரையும் பேரப் பிரளயம் கோத்தவன்றே.

அப் பெரும் சலதி வெள்ளத்தில் அழுந்தின அழிவிலாத
எப்பெரும் பொழிலும் ஏழுதீபமும் இவற்றுள் அடங்கி
நிற்பன செல்வவான திணைகளும் நீண்ட சென்னிப்
பர்ப்பத வகையும் ஈறுபட்டனவாக அங்கண்.


“எழில்புனையதுலகீர்த்தியெனவிருபத்திரண்டு
வழிவழிமைந்தராகிவையங்காத்தவேந்தர்
பழிதவிரதுலகீர்த்திபாண்டியன்றன்பாலின்பம்
பொழிதரவுதித்தகீர்த்திபூடணன்புரக்குநாளில்
கருங்கடலேழுங்காவற்கரைகடந்தார்த்துப்பொங்கி
ஒருங்கெழுந்துருத்துச்சீறியும்பரோடிம்பரெட்டுப்
பொருங்கட்கரியுமெட்டுப்பொன்னெடுங்கிரியுநேமிப்
பெருங்கடிவரையும்பேரப்பிரளயங்கோத்தவன்றே.
அப்பெருஞ்சலதிவெள்ளத்தழுந்தினவழிவிலாத
எப்பெரும்பொழிலுமேழுதீபமுமிவற்றுட்டங்கி
நிற்பனசெல்வவானதிணைகளுநீண்டசென்னிப்
பர்ப்பதவகையுமீறுபட்டனவாகவங்கண்.
தேனிழிகுதலைத்தீஞ்சொற்சேனெடுங்கண்ணிகோயில்
வானிழிவிமானம்பொற்றாமரைவிளையாட்டின்வந்த
கானிழியிடபக்குன்றங்கரிவரைநாகக்குன்றம்
ஆனிழிவரைவராகவரைமுதலழிவிலாத.
வெள்ளநீர்வறப்பவாதிவேதியன்ஞாலமுன்போல்
உள்ளவாறுதிப்பநல்கியும்பரோடிம்பரேனைப்
புள்ளொடுவிலங்குநல்கிக்கதிருடற்புத்தேண்மூவர்
தள்ளருமரபின்முன்போற்றமிழ்வேந்தர்தமையுந்தந்தான்..



( குறிப்பு - படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.  இப்படங்களைப் பதிவு செய்தோருக்கு நன்றி)


கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
kalairajan26@gmail.com,
9443501912
நாள் - சித்திரை 28 (10.05.2017) வியாழக் கிழமை

வெள்ளி, 26 ஜனவரி, 2018

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் - கோளப்பாறைகள் (தோகூர் அருகே)

Theory of Tsunamis 
பாறைகள் பலவிதம் 
கல்முட்டைகள் அல்லது கோளப்பாறைகள் 
(தோகூர் அருகே)

பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி (huge tsunami) தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன. கடல்வெள்ளத்தில் ஏதோவொரு பொருள் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது. அப்போது சேரும் சகதியும் அந்தப் பொருளின் மீது படிந்து, அது ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது. பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது. இப்போது அதன் மேற்பகுதிகள் சிதிலமடைந்து செதில்செதிலாக உள்ளன என்பது எனது கருத்து.




கடந்த ஆடி 1ஆம் நாள் (17.7.2017) திங்கள் கிழமை யன்று காவேரிஆற்றின் தென்கரையில் திருச்சிராப்பள்ளியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் 
தோகூர் கிராத்திற்கு அருகே இந்த இரண்டு பாறைகளையும் பார்த்தேன். வேறு எங்கோ இருந்து, இந்தப் பாறைகளுடன் மண்ணெடுத்து வந்து சாலையில் போட்டு சாலையின் மட்டத்தை உயர்த்தி யுள்ளனர். இந்தப் பாறைகள் இயற்கையாக இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தன அல்ல. செயற்கையாக வந்து சேர்ந்தவை.



செவ்வாய், 23 ஜனவரி, 2018

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் (6) வேடசந்தூர் அருகே நவாமரத்துப்பட்டி

Theory of Tsunamis  
பாறைகள் பலவிதம் (6) 
வேடசந்தூர் அருகே நவாமரத்துப்பட்டி


பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி (huge tsunami) தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன. கடல்வெள்ளத்தில் ஏதோவொரு பொருள் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது. அப்போது சேரும் சகதியும் அந்தப் பொருளின் மீது படிந்து, அது ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது. பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது. இப்போது அதன் மேற்பகுதிகள் சிதிலமடைந்து செதில்செதிலாக உள்ளன என்பது எனது கருத்து.



கடந்த ஆனி 27ஆம் நாள் (11.7.2017) செவ்வாய்கிழமை அன்று குழந்தைவேலன் சந்நிதியில் இருந்து வேடசந்தூர் செல்லும் வழியில் நவாமரத்துப்பட்டி என்ற ஊரின் அருகே இந்தப் பாறைகளைப் பார்த்தேன்.




கடந்த   ஆனி 28ஆம் நாள் (12.7.2017) புதன்கிழமை யன்று வேடசந்தூரில் இருந்து அய்யலூர் செல்லும் வழியில் அய்யலூர் அருகே கீழேயுள்ள  மூன்று பாறைகளையும்  பார்த்தேன்.







அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்


திங்கள், 18 டிசம்பர், 2017

Theory of Tsunamis கடல்கோளில் அழிந்த குமரிக்கோடு

Theory of Tsunamis
கடல்கோளில் அழிந்த குமரிக்கோடு

 பிரளயகாலத்தில் ஏற்பட்ட கடல்பெருவெள்ளத்தினால் (very huge tsunami)
பஃறுளி ஆற்றையும், பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோட்டையும் கொடுங்கடல் கொண்டது.



மற்றபிற கோடுகளைவிட குமரிக்கோடு வயதில் இளையது. அதனால் குமரி என்ற பண்பாகுபெயர்.
கடலில் குமரி யில்லை. எனவே குமரிக்கடல் என்ற பெயரில்லை.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் 
நா.ரா.
கி. காளைராசன்