சிவகங்கை அருகே கிணறு தோண்டும்போது வெட்டி எடுக்கப்பட்ட பொக்குப்பாறைகளை கிராமச்சாலை அமைக்கப் பயன்படுத்தி யுள்ளனர்.
இதில் கடினத்தன்மை குறைந்த பொக்குப்பாறை ஒன்று நேர்வகிடு போன்று பிளவு பட்டுள்ளது. (இதனை வெறும் கைகளால் பிரித்து எடுத்துவிடலாம், அவ்வளது குறைவான இறுக்கம் உடைய பாறை.)
இந்தப் பாறையில் மேலும் கீழும் பொக்குப்பாறை இருக்க, இதன் இடையே உண்டான விரிசலில் பிளவில் கடினத் தன்மை கூடிய பாறை ஊடுறுவி உள்ளதைக் காணமுடிகிறது.
இதுபோன்ற பாறைகளைக் கடல்கொண்ட நிலப்பகுதி எங்கும் காணலாம். இந்தப் பாறையின் அமைப்பு முறையைப் பார்க்கும்போது, பாறைகள் சிதைந்துதான் மண் உண்டாகி யுள்ளது என்ற கருத்தை ஏற்க முடியவில்லை.
குளத்தின் அடியில் “களிமண்” படிந்து கிடைக்கும். அந்தக் களிமண்ணை எடுத்துக் காயவைத்தால் கட்டியாகி “மண்ணாங்கட்டி” ஆகிவிடும். குளத்தின் அடியில் களிமண் படிந்துகிடப்பது போன்று, ஆழ்கடலின் அடியிலும் கடற்களிமண் படிந்து கிடக்கிறது.
கடலுக்குள் உள்ள நிலத்திட்டுகள் பெயர்ந்து விழுவதால், நிலநடுக்கம் ஏற்படுகிறது, கடல்நீர் அடித்துச் செல்லப்பட்டு கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகிறது. ஆழ்கடலில் தோன்றும் பெருஞ்சுனாமியினால் ஆழ்கடல்களிமண் அடித்து வரப்பட்டு தமிழகம் எங்கும் பரவிக் கிடக்கிறது.
இவ்வாறாக நிலப்பரப்பில் படிந்துள்ள கடற்களிமண் காய்ந்து இறுகி பாறைகளாக மாறியுள்ளன. கடற்களிமண் மணலோடு சேர்ந்து பொக்குப்பாறைகளாக உருவாகி உள்ளன.
மேற்கண்ட கருத்தினை அறிவியல் அடிப்படையில் நிருவிடுவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக