பூமியில் இறங்கிய கங்கை
How and Where the Ganga (a Celestial Sedimentary Water Planet) fell on the Earth?
A study on Puranam with reference to Google Map
How and Where the Ganga (a Celestial Sedimentary Water Planet) fell on the Earth?
A study on Puranam with reference to Google Map
"ஆகாசத்திலிருந்து சிவனுடைய சிரஸிலும் அங்கிருந்து பூமியிலும் விழுந்ததால் அந்த ஜலம் பயங்கரமான சப்தத்துடன் வந்தது. மீன் ஆமை சிம்சுமாரம் முதலை முதலிய ஜல கூந்துக்கள் அதில் துள்ளி விழுந்து கொண்டிருந்தபடியால் பூமி நன்றாக விளங்கிற்று. ஆகாசத்திலிருந்து கங்கை பூமிக்கு வரும் ஆச்சரியத்தைப் பார்க்கத் தேவ, ரிஷி, கந்தவர்வ, யக்ஷ, ஸித்த கணங்கள்நகரங்களைப் போன்ற விமானங்களிலும் குதிரைகளிலும் யானைகளிலும் கூட்டங் கூட்டமாய் அங்கே வந்தார்கள். அவர்களின் தேஹ காந்தியாலும் ஆபரணங்களின் பிரகாசத்தாலும் எண்ணிறந்த சூரியர்கள் விளங்குவது போல் ஆகாசம் மேகங்களில்லாமல் ""ஜ்வாலித்தது."". என்கிறது புராணம்.
கங்கை என்னும் பனிநீர்க்கோள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது உண்டான வெப்பத்தால் அதில் இருந்த எரியக்கூடிய வஸ்துகள் ஜ்வாலித்து (எரிந்து) பூமியின் மேலே விழுந்தன. இந்த ஜுவாலைகள் விழுந்த இடங்களில் இருந்த தாவரம் முதலான எரியக்கூடிய வஸ்துகள் எல்லாம் அதீத வெப்பத்தால் எரிந்து போயின.
இதனால் கங்கை பூமியின் வளிமண்டலத்திற்குள் ஊடுறுவிய இடத்திலிருந்து, அது பூமியில் விழுந்த "டக்ளிமேகன்" பாலைவனம் முடிய உள்ள இடம் எல்லாம் ஜுவாலைகள் விழுந்த காரணத்தினால் பாலைவனமாக மாறியுள்ளன - என்பது எனது கருத்து.
கங்கை என்ற விண்ணீர் வியனுலகு பூமியின் வளிமண்டலத்திற்குள் ஊடுறுவிய பாதையையும், அதனால் உண்டான
ஜுவாலைகள் விழுந்து பாலைவனமான பூமிப் பகுதியைக் காட்டும் படத்தை இணைத்துள்ளேன்.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக