மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 8 )
பெரும் பிரளயத்தில் உண்டான கடல்வெள்ளத்தில் (சுனாமியில்)
“மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“. (104). “வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள“ என்கிறது சிலப்பதிகாரம்.
“அப் பெரும் சலதி வெள்ளத்து அழுந்தின அழிவு இல்லாத
எப் பெரும் பொழிலும் ஏழு தீபமும் இவற்றுள் அடங்கி
நிற்பன செல்வ ஆன திணைகளும் நீண்ட சென்னிப்
பர்ப்பத வகையும் ஈறு பட்டனவாக அங்கண்“
(திருவிளையாடற் புராணப் பாடல்)
எப் பெரும் பொழிலும் ஏழு தீபமும் இவற்றுள் அடங்கி
நிற்பன செல்வ ஆன திணைகளும் நீண்ட சென்னிப்
பர்ப்பத வகையும் ஈறு பட்டனவாக அங்கண்“
(திருவிளையாடற் புராணப் பாடல்)
“அந்தப் பெரும் கடல்வெள்ளத்துள் மூழ்கி அழிவில்லாத எத்துணைப் பெரிய பூமியும், ஏழு தீவுகளும், இவற்றுள் தங்கி நிற்பன செல்வ ஆன திணைகளும், உயர்ந்த முடிகளை உடைய மலைவகைகளும் ஒழிந்தன“ என்கிறது திருவிளையாடல் புராணம்.
“மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது“ உண்மையா? தமிழகம் முழுவதையும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) அழித்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் காணக் கிடைக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன!
பிரளயத்தின் போது வங்கக் கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே சுமார் ஒரு இலட்சம் சதுர கீலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி பூமிக்குள் மூழ்கியுள்ளது. இதனால் பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகி சேர சோழ பாண்டிய நாடுகள் அனைத்தும் அழிந்து போயின. கிழக்கே வங்கக்கடலில் தோன்றிய இந்த மாபெரும் கடல்வெள்ளம் தமிழகத்தை அழித்து மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளது.
கடல்வெள்ளம் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கு வழியாகப் பாண்டியநாட்டில் நுழைந்து மதுரையைத் தாக்கி, மதுரைக்கடந்து சென்றபோது கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியால்) அடித்துவரப்பட்ட மண் படிந்து மதுரை அருகே நாகமலையும் பசுமலையும், வத்தலக்குண்டு ஊருக்கு மேற்கே பன்றிமலையும் புதிதாகத் தோன்றியுள்ளன.
ஆறுபடைவீடுகளில், முருகனுக்கு வேல் (வேலாயுதம்) வழங்கப்பெற்ற இடம் திருச்செந்தூர். முருகன் “வடிவேல் எறிந்து” கொண்டு சூரனை அழித்த இடம் திருச்சீரலைவாய் என்ற திருச்செந்தூர்.
ஆறுபடைவீடுகளில், முருகனுக்கு வேல் (வேலாயுதம்) வழங்கப்பெற்ற இடம் திருச்செந்தூர். முருகன் “வடிவேல் எறிந்து” கொண்டு சூரனை அழித்த இடம் திருச்சீரலைவாய் என்ற திருச்செந்தூர்.
வங்கக்கடலில் ‘அந்தமான் நிக்கோபார்‘ தீவுகளுக்கு அருகே உண்டான பிரளயத்தினால் பெரும் கடல்வெள்ளம் உண்டாகித் தமிழகத்தைத் தாக்கிய போது, ஒரு மாபெரும் கடல்வெள்ளம் இலங்கையைத் தாக்கி, திருச்செந்தூர் காயல்பட்டணம் இடையே உள்ள நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளது. இதனால் திருச்செந்தூர் வள்ளிகுகை அருகே கடற்கரையை ஒட்டியுள்ள உள்ள பாறைகள் பிளவுபட்டுத் தெற்கு நோக்கி நிமிர்ந்து உள்ளன. கடல்வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் ஏரல் அருகே உள்ள ‘சிவகளை‘ என்ற ஊரின் வடமேற்கேயும் பெருங்குளத்திற்கு வடமேற்கேயும் படிந்து, இரண்டு சிறிய மலைத்தொடர்களை உருவாக்கி உள்ளன. இந்த இரண்டு மண்மலைகளும் தமிழகத்தைக் கடல்கொண்டதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.
தமிழகம் எங்கும் அடுக்கடுக்காக மண் புதைந்து உள்ளதற்கும், குன்றுகள் மற்றும் மலைகளின் மேலே மண் படிந்துள்ளதற்கும், இதுபோன்ற மண்மலைகள் தோன்றியுள்ளதற்கும் காரணம் என்னவாக இருக்க முடியும்? பிரளயம் கடல்வெள்ளம் இவற்றைத் தவிர வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்?
தொல்லியலாளர் போற்றுவோம்.
திருச்சீரலைவாய் போற்றுவோம்.
தமிழரின் தொன்மை போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.
திருச்சீரலைவாய் போற்றுவோம்.
தமிழரின் தொன்மை போற்றுவோம்.
பெருங்குளம் அருள்மிகு ‘கோமதி சமேத திருவழுதீசுவரர்‘ திருவருளைச் சிந்தித்து,
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
(kalairajan26@gmail.com ஆவணி 14 (30.08.2017) புதன்கிழமை.)
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
(kalairajan26@gmail.com ஆவணி 14 (30.08.2017) புதன்கிழமை.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக