Anciant Madurai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Anciant Madurai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 மே, 2018

Theory of Tsunami, மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) மதுரையை அழித்தியால் :



மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) 
மதுரையை அழித்தியால்

2004ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய இரண்டு சுனாமிகள் அடுத்தடுத்துத் தோன்றி பாண்டியநாட்டைத் தாக்கி அழித்துள்ளன. அந்நிகழ்ச்சியை ஊழிக்காலம், பிரளயம், கடல்வெள்ளம் என்று திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் விரிவாகக் கூறுகிறது. இவ்வாறு ஊழிக்காலத்தில் பிரளயத்தில் தோன்றிய கடல்வெள்ளம் மதுரையை மைய இலக்காகக் கொண்டு தாக்கியது என்றும், மதுரைத் தாக்கி அளிக்குமாறு இந்திரன் ஆணையிட்டான் என்றும் புராணம் குறிப்பிடுகிறது.
“பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என 
இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள் 
ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து 
அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்“ 

- திருவிளையாடற் புராணம்.
இந்திரனது ஏவலால் மதுரையைக் கடல் அழித்துள்ளது. இதன் காரணமாகத்தான் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சிறப்பான இந்திரவிழா நின்றுபோய் விட்டது போலும். மதுரையை அழித்த இந்திரனை தமிழன் எப்படிப் போற்றுவான்!



கிருஷ்ணன் இந்திரவிழாவை நிறுத்திய கதை - திருமாலின், கிருஷ்ணாவதார காலத்தில், மழைக்கடவுளான இந்திரனுக்கே கோகுலத்தில் வசித்த ஆயர்கள் ஆண்டு தோறும் பூசை செய்து வழிபட்டனர். ஒருமுறை இந்திர வழிபாட்டை, கிருட்டிணன் தடுத்து அருகில் உள்ள மலைக்கு பூசை செய்ய வைத்தார்.  இதனால் கோபம் கொண்ட மழைக் கடவுளான இந்திரன், கோகுலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் மழை பொழியச் செய்தார். இடி மின்னலுடன் கூடிய தொடர் மழையைக் கண்டு பயந்த கோகுலத்து ஆயர்களையும் ஆவினங்களையும் காக்க கிருட்டிணன், அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினார். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர்”  என்கிறது புராணக்கதை.  திருவிளையாடல் புராணமும் கடல்கோளுக்குப் பிறகு பெருமழை பெய்த செய்தியைப் பதிவு செய்துள்ளது.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்.

சனி, 12 மே, 2018

Theory of Tsunamis, மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி -3) பிரளயம் பேர்த்த பாறைகள்

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி -3)


பிரளயம் பேர்த்த பாறைகள்



திருவிளையாடற் புராணத்தில் பிரளயம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மதுரையைச் சுற்றிலும் எட்டு மலைகள் இருந்துள்ளன. பிரளயத்தில் கடல் கரையைக் கடந்து மதுரைத் தாக்கிய போது இந்த மலைகள் எல்லாம் பேர்ந்தன என்கிறது புராணம்.
"கொதித்தெழுந்து தருக்களறக் கொத்தியெடுத் தெத்திசையும்
அதிர்த்தெறிந்து வரைகளெல்லா மகழ்ந்துதிசைப் புறஞ்செல்லப்
பிதிர்த்தெறிந்து மாடநிரை பெயர்த்தெறிந்து பிரளயத்தில்
உதித்தெழுந்து வருவதென வோங்குதிரைக் கடல்வருமால்" 

(திருவிளையாடற் புராணம்)

பொருள் - கடலின் அலைகள் எல்லாம் உயர்ந்து, பொங்கி மேலே எழுந்து, மரங்கள் எல்லாம் முறிய வேருடன் பிடுங்கி எடுத்து, அதிர்த்து எல்லாத் திசைகளிலும் வீசியும், எல்லா மலைகளையும் தோண்டிப் பொடி செய்து திசைப் புறங்களுக்குச் செல்லுமாறு வீசியும், மாட வரிசைகளைப் பெயர்த்து வீசியும், பிரளயத்தில் உதித்து எழுந்து வருவதென கடல் வரும். (பிதிர்த்து - பொடியாக்கி; பிதிர் – பொடி)
"கருங்கட லேழுங் காவற் கரைகடந் தார்த்துப் பொங்கி
ஒருங்கெழுந் துருத்துச் சீறி யும்பரோ டிம்ப ரெட்டுப்
பொருங்கட் கரியு மெட்டுப் பொன்னெடுங் கிரியு நேமிப்
பெருங்கடி வரையும் பேரப் பிரளயங் கோத்த வன்றே"

(திருவிளையாடற் புராணம்)
பொருள் – ஏழு கரிய கடல்களும் ஒரே நேரத்தில் பொங்கி மேலே எழுந்தன. வெகுண்டு சீறி ஆரவாரித்து, காவலாகிய எல்லைகளைக் கடந்தன. விண்ணுலகும் மண்ணுலகும், போர்செய்யும் மதத்தையுடைய எட்டு யானைகளும், பெரிய எட்டு பொன்மலைகளும், பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள மலையும் அவற்றின் நிலைகளில் இருந்து பெயர்ந்திடுமாறு, பிரளயமாக ஒன்றோடு ஒன்று கோத்தன.









மதுரைக்கு வடக்கே அழகர்கோயில் மலை உள்ளது. இந்த மலையின் பாறைகள் பலவும் பெயர்ந்து காணப்படுகின்றன. “பிரளயம் பேர்த்த பாறைகள்“ சிலவற்றில் எட்டுப் பாறைகளின் படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

கட்டுரையாளர் - 
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன், kalairajan26@gmailcom, 94435 01912,
நாள் - சித்திரை 29 (12.05.2017) வெள்ளிக் கிழமை

Theory of Tsunamis, மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி-2) மணவூர், மணலூர்,

மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி-2)

பிரளயம் (பெரும் சுனாமி)
ஊழிக்காலத்தில் குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டதாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  பக்தி இலக்கியங்களான தலபுராணங்களிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன.  இதில் குறிப்பாகத் ‘திருவிளையாடல் புராணத்தில்‘ வங்கக்கடல் கரையைக் கடந்து மதுரையைத் தாக்கியதாகக் குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.  இருப்பினும், திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள ஊழிக்காலம், பிரளயம், கடல்கோள் (சுனாமி), பற்றிய செய்திகள் விரிவாக ஆராயப்படாமலேயே உள்ளன.
தொல்லியல்துறையினர் தமிழகத்தில் மிகவும் தொன்மையான இடுகாடுகள் பலவற்றைக் கண்டறிந்து உள்ளனர்.  இவை தவிர்த்து அரிக்கமேடு காவேரிப் பூம்பட்டிணம் ஆகிய ஊர்களின் பண்டைத்தமிழர்களின் தொன்மையான நகரங்கள் கண்டு அறியப்பட்டுள்ளன. இவற்றுடன் கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் வழியில் சாலைக்குக் கிழக்கே தொல்லியல்துறையினர் மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.  


இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம்.  சோமசுந்தரபாண்டியன் மகன் உக்கிரபாண்டியன்.  மணவூரில் பிறந்த காந்திமதியை உக்கிரபாண்டியன் மணம் செய்து கொண்ட காரணத்தினால் இந்த ஊருக்கு மணவூர் என்ற பெயர் உண்டானது என்கிறது திருவிளையாடற் புராணம்.
மணவூரைத் தலைநகராகக் கொண்டு குலசேகர பாண்டியன் ஆண்டுவந்தான்.  தனஞ்செயன் என்ற வணிகன் கடம்பவனத்தின் நடுவே சிவலிங்கம் ஒன்று இருப்பதையும், அதைத் தேவர்கள் வணங்குவதையும் கண்டுவந்து குலசேகர பாண்டிய மன்ன்னிடம் சொல்கிறான்.  மன்னனும் தனது அமைச்சர்களுடன் அங்கே சென்று சிவலிங்கத்தை வணங்கி ஆலயத்தைக் கட்டுகிறான்.   ஆலயத்தைச் சுற்றிலும் மிகவும் அருமையாகத் திட்டமிட்டு ஒரு நகரை உருவாக்குகிறான்.  இவ்வாறு குலசேகர பாண்டியனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரமே இன்றைய மதுரை ஆகும்.
பண்டைய மதுரையும் மணவூரும் எப்படி அழிந்தன?
( பெருஞ் சுனாமி ) கடல்வெள்ளம், பிரளயம், ஊழிக்காலம் என்கிறது திருவிளையாடற் புராணம்.
2004ஆம் ஆண்டு தமிழகத்தைத் தாக்கிய சுனாமியைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இதைப்போலப் பலநூறுமடங்கு பெரிதான மிகப்பெரிய சுனாமி ஒன்று பண்டைக்காலத்தில் பாண்டியநாட்டைத் தாக்கியுள்ளது.  அந்நிகழ்ச்சி திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
“அழகுமிக்க அதுலகீர்த்தியும் போன்று, இருபத்திரண்டு மைந்தர்கள் வழி வழியாகத்தோன்றி, பண்டைய பாண்டிய நாட்டை ஆண்டு வந்தனர்.  
இவர்களுக்குப் பின்னர் ‘கீர்த்திபூடண பாண்டியன்‘ மன்னன் ஆட்சி செய்துவரும் நாளில், மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டது.   கடல்கள் ஏழும் ஒருசேரப் பொங்கி மேலெழுந்து, உருத்துச் சீறி வெகுண்டு ஆரவாரித்து, காவலாக விளங்கிய கரையைக் கடந்து தமிழுகத்தை அழித்தன.  இந்தப் பிரளயத்தில்  எட்டு மலைகளும், பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள மலையும்  (சக்கரவாளமலை = இயமமலை) நிலைபெயர்ந்தன.  இப்பிரளயம் அடங்கும் முன்னரே மற்றொரு பிரளயமும் தோன்றி அளித்தது.  அந்தப்பெரிய கடல் வெள்ளத்துள் மூழ்கி, அழிவில்லாத எத்துணைப் பெரிய நிலத்திட்டுகளும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கி நிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்தமுடிகளையுடைய மலைவகைகளும், ஒழிந்தன.
ஆனாலும், நீண்ட விழிகளையுடைய மீனாட்சியம்மையின் திருக்கோயிலும், வானினின்றும் இறங்கிய இந்திரவிமானமும், பொற்றாமரை வாவியும், இறைவன் திருவிளையாட்டினால் வந்து தங்கிய மணம்வீசும் சோலைகளையுடைய இடபமலையும் (அழகர்கோயில்மலையும்), யானைமலையும், நாகமலையும், பசுவின் உருத்திரிந்த பசுமலையும்,  பன்றிமலையும் இந்தப் பிரளயத்தில் உண்டான கடல்நீரினால் அடித்துச் செல்லப்படாமல் அழியாமல் இருந்தன.
உயர்ந்த  அலைகளையுடைய கடலானது, கொதித்து எழுந்து மரங்கள் முறியக்  கல்லி எடுத்து, அதிர்ந்து ஆரவாரித்து எல்லாத் திசைகளிலும் வீசியும், கடற்கரைகளை எல்லாம் அகழ்ந்துத் தோண்டிப் பொடி செய்து திசைப்புறங்களிற் செல்லுமாறு வீசியும்,  மலைகளை யெல்லாம் மாட வரிசைகளைப் பெயர்த்து வீசியும், ஊழிக்காலத்தில் தோன்றி பிரளயத்தில் உதித்து எழுந்து வந்தன“ என்கிறது திருவிளையாடற் புராணம்.
     
திருவிளையாடற் புராணம் பாடல்கள் :

“எழில்புனை அதுலகீர்த்தி என இருபத்திரண்டு
வழிவழி மைந்தராகி வையம் காத்த வேந்தர்
பழிதவிர் அதுலகீர்த்தி பாண்டியன் தன்பால் இன்பம்
பொழிதர உதித்த கீர்த்திபூடணன் புரக்குநாளில்

கருங்கடல் ஏழும் காவற்கரை கடந்து ஆர்த்துப் பொங்கி
ஒருங்கு எழுந்து உருத்துச் சீறியும் உம்பரோடு இம்பர் எட்டுப்
பொருங்கல் கரியும், எட்டுப் பொன் நெடுங்கிரியும் நேமிப்
பெரும் கடிவரையும் பேரப் பிரளயம் கோத்தவன்றே.

அப் பெரும் சலதி வெள்ளத்தில் அழுந்தின அழிவிலாத
எப்பெரும் பொழிலும் ஏழுதீபமும் இவற்றுள் அடங்கி
நிற்பன செல்வவான திணைகளும் நீண்ட சென்னிப்
பர்ப்பத வகையும் ஈறுபட்டனவாக அங்கண்.


“எழில்புனையதுலகீர்த்தியெனவிருபத்திரண்டு
வழிவழிமைந்தராகிவையங்காத்தவேந்தர்
பழிதவிரதுலகீர்த்திபாண்டியன்றன்பாலின்பம்
பொழிதரவுதித்தகீர்த்திபூடணன்புரக்குநாளில்
கருங்கடலேழுங்காவற்கரைகடந்தார்த்துப்பொங்கி
ஒருங்கெழுந்துருத்துச்சீறியும்பரோடிம்பரெட்டுப்
பொருங்கட்கரியுமெட்டுப்பொன்னெடுங்கிரியுநேமிப்
பெருங்கடிவரையும்பேரப்பிரளயங்கோத்தவன்றே.
அப்பெருஞ்சலதிவெள்ளத்தழுந்தினவழிவிலாத
எப்பெரும்பொழிலுமேழுதீபமுமிவற்றுட்டங்கி
நிற்பனசெல்வவானதிணைகளுநீண்டசென்னிப்
பர்ப்பதவகையுமீறுபட்டனவாகவங்கண்.
தேனிழிகுதலைத்தீஞ்சொற்சேனெடுங்கண்ணிகோயில்
வானிழிவிமானம்பொற்றாமரைவிளையாட்டின்வந்த
கானிழியிடபக்குன்றங்கரிவரைநாகக்குன்றம்
ஆனிழிவரைவராகவரைமுதலழிவிலாத.
வெள்ளநீர்வறப்பவாதிவேதியன்ஞாலமுன்போல்
உள்ளவாறுதிப்பநல்கியும்பரோடிம்பரேனைப்
புள்ளொடுவிலங்குநல்கிக்கதிருடற்புத்தேண்மூவர்
தள்ளருமரபின்முன்போற்றமிழ்வேந்தர்தமையுந்தந்தான்..



( குறிப்பு - படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.  இப்படங்களைப் பதிவு செய்தோருக்கு நன்றி)


கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
kalairajan26@gmail.com,
9443501912
நாள் - சித்திரை 28 (10.05.2017) வியாழக் கிழமை

செவ்வாய், 1 மே, 2018

முத்தமிழ்ச் சங்கம் வளர்த்த மூன்று பெருநகரங்கள்

முத்தமிழ்ச் சங்கம் வளர்த்த 
மூன்று பெருநகரங்கள்


கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே, வாளொடு முன்தோன்றிய மூத்த குடி.
(கல் = வடபெருங்கல் = இமயமலை,
மண் = பசுமலை, பன்றிமலை முதலான மண்மலைகள்)
முதற் சங்கம் - தென்மதுரை,
இடைச் சங்கம் - கபாடபுராம்,
கடைச் சங்கம் - வடமதுரை (தற்போது கீழடி அருகே தொல்லியளார்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ள நகரம்)



அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
விளம்பி சித்திரை 18 (01.05.2018)

புதன், 11 ஏப்ரல், 2018

Theory of Tsunamis சலதி வெள்ளம் ( கடல்வெள்ளம் ) பாடல்களின் தொகுப்பு


சலதி வெள்ளம் (tsunami)
திருவிளையாடல் புராணத்தில் இடம்பெற்றுள்ள 
‘சலதி (கடல்) வெள்ளம்’ 
பற்றிய பாடல்களின் தொகுப்பு



2004ஆம் ஆண்டு கடல் கரையைக் கடந்து கடற்கரை ஓரம் உள்ள கிராமங்களில் வசித்த இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.  நிலநடுக்கம் ஏற்பட்டு, கடல் கரையைக் கடந்து நிலத்திற்குள் புகுவதைச் “சுனாமி (Tsunami)” என்ற சப்பானியச் சொல்லால் குறிப்பிடுகிறோம்.  கடல்நீர்  நிலத்திற்குள் புகுவதைக்  “கடல்கோள்” என்றும் “ஆழிப்பேரலை“ என்றும் குறிப்பிடுகின்றனர்.  “சலதிவெள்ளம்” என்று திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.  சலதி என்றால் கடல் என்று பொருள். பரஞ்சோதி முனிவர் ‘சங்கரசங்கிதை‘ என்ற வடமொழி நூலை மொழிபெயர்த்துத் தமிழிலில் பாடியுள்ள திருவிளையாடற் புராணத்தில், சலதி என்ற சொல் 13 பாடல்களின் இடம் பெற்றுள்ளது. 


                            
பிரளயம் என்றால் என்ன?
நிலத்திட்டுகள் பெயர்த்து விழுதல்.
மலைகளின் முகடுகள் புடைபெயர்ந்து சரிந்து விழுவதை “மலைச்சரிவு” என்கின்றனர்.  இது போன்று கடலுக்கு அடியில் உள்ள நிலத்திட்டுக்கள் புரண்டு (fault) பெயர்ந்து சரிந்து  விழுவதைப் “பிரளயம்” என்கிறது புராணம்.

சுனாமி என்றால் என்ன?
கடலுக்கு அடியில் உள்ள நிலத்திட்டுகள் புடைபெயர்ந்து பிரண்டு விழுகின்றன.  இவ்வாறு நிலத்திட்டுகள் பெயர்ந்து விழுகின்ற காரணத்தினால் கடல்நீர் அடித்துத் தள்ளப்படுகிறது.  இவ்வாறு தள்ளப்பட்ட கடல்நீரானது பெரும் கடல்அலையாக மாறி நிலத்தைத் தாக்குகின்றன. இதைச் சுனாமி என்ற சப்பானியச் சொல்லால் குறிப்பிடுகின்றனர்.  புராணங்களில் இது “கடல்வெள்ளம்” அல்லது “சலதிவெள்ளம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல்கோள் என்றால் என்ன?
கடல்வெள்ளத்தினால் (சுனாமியினால்) கடல்மட்டத்திற்கு மேலே உள்ள நிலப்பரப்பானது மூடப்படுவதை அழிக்கப்படுவதைக் கடல்கோள் என்று புராணம் குறிப்பிடுகிறது.  (தண்ணீரை ஊற்றி வீட்டைக் கழுவி விடுவது போன்று, கடல்நீரால் தரைப்பகுதி கழுவிவிடப்படுகிறது.)

ஊழி, ஊழிக்காலம் என்றால் என்ன?
“ஊழ்” என்றால் விதி அல்லது நியதி என்று பொருள்.   புவியியல் விதிகள் மாறும்படிப் பெரும் அழிவுகள் உண்டாவதை “ஊழி” என்றும்,  புவியியல் மாற்றம் அடையும்படிப் பெரும் அழிவுகள் நிகழும் காலத்தை “ஊழிக்காலம்” என்றும் புராணம் குறிப்பிடுகிறது.


91.
உலகம் யாவையும் ஈன்றவளும் அருள் உயர்ந்த
திலக நாயகி, பரஞ்சுடர், சேய் என மூன்று
தலைவரால் முறை செய்த நாடு இஃது. அன்றிச் சலதி
சுலவு பாரின் உண்டகுமோ துறக்கத்தும் அஃதே.

331.
அந்தரர் கோன் ஆதனத்தில் உறை மலயத் துவசனை மீண்டும் அழைத்த வாறும்,
சுந்தர உக்கிர குமரன் அவதரித்த வாறும், வளை சுடர் வேல் செண்டு
தந்தை இடத்து அவன் பெற்ற வாறும், அவன் அவ்வடிமேல் சலதி வீறு
சிந்த விடுத்தது மகவான் முடியை வளை யெறிந்து இறைவன் சிதைத்த வாறும்.

341.
ஊமனால் புலவர் இகல் அகற்றியதும் இடைக் காடனுடன் போய்க் கொன்றைத்
தாமனார் வட வால வாய் அமர்ந்த பரிசும் வலை சலதி வீசிப்
பூமனாய் குழலியை வேட்டு அருளியதும் வாதவூர்ப் புனிதர்க்கு ஏறத்
தேம நாண் மலரடிகண் முடி சூட்டி உபதேசம் செய்த வாறும்.

423.
தம் குடிமைத் தச்சனை ஓர் விமானம் அமைத்திட விடுத்தத் அத் தடத்தின் பால் போய்
அம் கணனைக் கடிது அருச்சித்திட நறிய மலர் கிடையாது அயர்வான் அந்தச்
சங்கு எறி தண் திரைத் தடத்தில் அரன் அருளால் பல பரிதி சலதி ஒன்றில்
பொங்கு கதிர் பரப்பி முளைத்தால் என்னப் பொன் கமலம் பூப்பக் கண்டான்.

677.
வரை வளங்களும் புறவினில் வளங்களும் மருதத் தண் பணை வேலித்
தரை வளங்களும் சலதி வாய் நடைக்கலம் தரு வளங்களும் ஈண்டி
உரை வரம்பு அற மங்கலம் பொலிந்தது இவ்வூரினில் நால் வேதக்
கரை கடந்தவன் திருமணம் செயவரு காட்சியைப் பகர்  கின்றேன்.

1831.
அலை சிறந்த சலதி மீது ஒரு ஆறு செல்லு மாறு போல்
மலைசிறந்த நேரி வெற்பன் மள்ளர் சேனை வெள்ள மேல்
கலை சிறந்த மதி நிறைந்த கன்னி நாடு காவலன்
சிலை சிறந்த சிறிய சேனை சென்று அலைத்து நின்றதே.

2067.
தருக்களும் சலியா முந்நீர்ச் சலதியும் கலியா நீண்ட
பொருப்பிழி அருவிக் காலும் நதிகளும் புரண்டு துள்ளா
அருள் கடல் விலைத்த கீத இன்னிசை அமுதம் மாந்தி
மருள் கெட அறிவன் திட்டி வைத்த சித்திரமே ஒத்த.

2189.
செம் கண் ஏறு அழகர் ஆடல் ஈது என்றே யாவரும் தெளிந்தனர் ஏத்தி
அம் கண் நாயகர் தம் கருணையின் திறனும் அடியவர் அன்பையும் தூக்கித்
தம் கணார் அருவி பெருக ஆனந்தத் தனிப் பெரும் சலதியில் ஆழ்ந்தார்
வங்கம் மேல் வந்தாள் பிடர் மிசை இருந்த மாண் இழை விறலியை மன்னன்.

2331.
அப்பெரும் சலதி வெள்ளத்து அழிந்தன அழி விலாத
எப்பெரும் பொழிலும், ஏழு திபமும், இவற்றுள் தங்கி
நிற்பன செல்வ ஆன திணைகளும், நீண்ட சென்னி
பர்ப்பத வகையும் ஈறு பட்டன ஆக அம் கண்.

2655.
அன்னது தெரிந்து நால்வாய் ஐங்கரக் கடவுள் தாதை
முன்னர் வந்து இதனால் அன்றோ மூண்டது இச் செய்தி எல்லாம்
என்ன ஈர்ங் கவளம் போல் ஆங்கு இருந்த புத்தகங்கள் எல்லாம்
தன் நெடும் கரத்தால் வாரி எறிந்தனன் சலதி மீது ஆல்.

2670.
மகவு இலாமையல் ஆற்ற நால் மறுமை யோடு இம்மைப்
புகல் இலான் என வருந்துவான் ஒரு பகல் போது
தகவு சால் பெரும் கிளை யொடும் சலதி மீன் படுப்பான்
அகல வார் கலிக்கு ஏகுவான் அதன் கரை ஒருசார்.

2690.
சங்கு அலம்பு தண் துறை கெழு நாடன் இச் சலதித்
துங்க மந்தரம் எனக் கிடந்து அலமரும் சுறவை
இங்கு அணைந்து எவன் பிடிப்பவன் அவன் யான் ஈன்ற
மங்கை மங்கலக் கிழான் என மனம் வலித்து இருந்தான்.

2695.
தன் பெரும் கணத்து உளான் ஓர் தலைவனும் சலதி வாணன்
என்பது தோன்ற வேடம் எடுத்து எறி வலை தோள் இட்டு
என் புற மலைப்பக் காவி மீன் இடு குடம்பை தாங்கிப்
பின்புற நடந்து செல்லப் பெருந்துறைப் பாக்கம் புக்கான்.

நன்றி – பாடல்கள் தமிழ்இணையப் பல்கலைக்கழகத்தில் உள்ளபடி.
தொகுப்பு - காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி.காளைராசன், 
kalairajan26@gmail.com. 
ஆடி31, 16.08.2017


சனி, 17 மார்ச், 2018

Theory of Tsunamis மண்ணுக்குள் மணவூர் (கீழடி)

Theory of Tsunamis பண்டைய மணவூரும் 

இன்றைய மதுரையும்






மணவூர் ( கீழடி ) அகழ்வாராய்ச்சி keeladi archaeological site
மணவூர் ( கீழடி ) அகழ்வாராய்ச்சி keeladi archaeological site


 அன்று “சித்திரா பௌர்ணமி“ நன்நாள். அந்த நன்நாளில், தனஞ்செயன் என்ற வணிகன் கடம்பவனத்தின் நடுவே சிவலிங்கம் ஒன்று இருப்பதையும், அதைத் தேவர்கள் வணங்குவதையும் காண்கிறான்.  தான் கண்டதை மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுகொண்டிருந்த மன்னன் குலசேகர பாண்டியனிடம் சொல்கிறான்.  மன்னனும் தனது அமைச்சர்களுடன் கடம்வனத்திற்குள் செல்கிறான். அங்கே தொன்மையான சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு அதை வணங்குகிறான்.  இந்தச் சிவலிங்கம் உள்ள இடமே பண்டைத் தமிழர் வாழ்ந்த மதுரையம்பதி என்பதை உணர்கிறான். குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்ட பிரளயகாலத்தில், கடல் வவ்விய மதுரை மாநகரம் இந்த இடத்தில்தான் இருந்துள்ளது எனக் கண்டறிகிறான்.  உடனே கடம்பவனக் காட்டைச் சீராக்கித் தான் கண்ட அந்தச் சிவலிங்கதிற்கு ஆலயம் கட்டுகிறான். ஆலயத்தைச் சுற்றிலும் மிகவும் அருமையாகத் திட்டமிட்டு ஒரு அழகிய நகரை உருவாக்குகிறான். மணவூரில் வாழ்ந்த மக்களையும் மற்றும் அனைவரையும் மதுரையில் குடியமர்த்துகிறான். இவ்வாறு குலசேகர பாண்டியனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரமே இன்றைய மதுரை ஆகும். 
ஊழிக்காலத்தில் குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டதாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  பக்தி இலக்கியங்களான தலபுராணங்களிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன.  பக்தி இலக்கியங்களில் குறிப்பாகத் ‘திருவிளையாடல் புராணத்தில்‘ வங்கக்கடல் கரையைக் கடந்து மதுரையைத் தாக்கியதாகக் குறிப்புகள் உள்ளன. திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள ஊழிக்காலம், பிரளயம், கடல்கோள் (சுனாமி), மணவூர், மதுரை பற்றிய செய்திகள் விரிவாக ஆராயப்பெற வேண்டியுள்ளன.
தொல்லியல்துறையினர் தமிழகத்தில் மிகவும் தொன்மையான இடுகாடுகள் பலவற்றைக் கண்டறிந்து உள்ளனர்.  இவை தவிர்த்து 1) அரிக்கமேடு 2) காவேரிப் பூம்பட்டிணம் ஆகிய ஊர்களின் பண்டைத்தமிழர்களின் தொன்மையான நகரங்கள் கண்டு அறிந்துள்ளனர்.
இவற்றுடன் கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் வழியில் சாலைக்குக் கிழக்கே தொல்லியல்துறையினர் மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். 
மண்ணுக்கு அடியில் புதையுண்டுள்ள இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் என்ன? “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம்.
இந்தத் தொன்மையான நகரைப் பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் ஏதும் உண்டா? சோமசுந்தரபாண்டியன் மகன் உக்கிரபாண்டியன்.  மணவூரில் பிறந்த காந்திமதியை உக்கிரபாண்டியன் மணம் செய்து கொண்ட காரணத்தினால் இந்த ஊருக்கு மணவூர் என்ற பெயர் உண்டானது என்கிறது திருவிளையாடற் புராணம்.  குலசேகரபாண்டியன் மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் என்கிறது திருவிளையாடல் புராணம்.
இன்றைய மதுரை மாநகரத்தைத் திட்டமிட்டு உருவாக்கிய குலசேகரபாண்டியனின் தலைநகராக விளங்கிய மணவூரைத்தான் தொல்லியல்துறையினர் கண்டறிந்து ஆராய்ந்து வருவது போற்றுதற்கு உரியன. 
 நக்கீரர் பாடிய பண்டைய மதுரை Ancient Madurai 

“மாடமலி மறுகில் கூடல் குடவயின்” என்று திருமுருகாற்றுப்படையும், “கூடற் குடவயின் பரங்குன்று” என்று அகநானூறும் கூறுகின்றன. அகழ்வாய்வு நடைபெறும் மணவூருக்கு மேற்கே பரங்குன்று (திருப்பரங்குன்றம்) உள்ளது. இதனால் இப்போது அகழ்வாய்வு நடைபெறும் இடமே நக்கீரர் காலத்தில் மதுரையாக இருந்துள்ளது என்பது தெளிவு.நிர்வகி
 மாமதுரை போற்றுவோம், மணவூர் போற்றுவோம், ஆகழ்வாராய்ச்சியாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
kalairajan26@gmail.com,  9443501912
நாள் - சித்திரை 27ஆம் நாள் (10.05.2017) புதன் கிழமை.


சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10

வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 19                        
                                                         - எருக்காட்டூர் தாயங்கண்ணனார்  (அகம்-149)

           

149. எளிதாகப் பெற்றாலும் வாரேன்!

பாடியவர்: எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார். திணை: பாலை. துறை: தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. சிறப்பு : சேரநாட்டுடன் யவனர் செய்த வாணிகச் செய்தியும், செழியனின் மதுரைக்கு மேற்கிலுள்ள திருப்பரங் குன்றத்து வளமும்,

(தன் நெஞ்சத்திலே பொருள்தேடி வருதல் வேண்டுமென்ற ஆர்வம் எழ, முன்னர்த், தான் அப்படிப் பிரிந்த காலத்திலே, தன் தலைவி அடைந்த வேதனை மிகுதியை மறவாத தலைவன், தான் வாரேன் எனத் தன் நெஞ்சிற்குக் கூறிப்போவதை நிறுத்தி விட்டான். அதுபற்றிக் கூறுவது இச்செய்யுள்)

சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த, நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின். புல்லரை இருப்பைத் தொள்ளை முனையின், பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும் அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5

அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும் வாரேன்-வாழி, என் நெஞ்சே!-சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 1 O

மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 65

வளர்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ, அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய நெடுநல் யானை அடுபோர்ச் செழியன் கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது, 15 பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய,

ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் - அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 20

சிறிய புல்லிய கறையான் முயன்று எழுப்பிய மிகவும் உயரமான சிவந்த புற்றினுள் மறைந்து கிடக்கும் புற்றாஞ் சோற்றினைப், பெரிய கையினையுடைய கரடியின் பெரிய சுற்ற மானது தின்னும் அதுவும் வெறுத்துவிட்டதானால், புற்கென்ற அரையினையுடைய இருப்பையின் தொளையுடைய வெண்மை யான பூக்களைக் கவர்ந்து உண்ணும். அத்தகைய சுரத்திலே நெடுந்தொலைவு சென்று, மிகவும் அரிதாக ஈட்டத்தக்க உயர்ந்த பொருளை எளிதாக யான் பெற்றாலும்கூட -

சேர மன்னர்களது, ‘சுள்ளி’ எனப்படும் அழகிய பேராற்றினது வெண்மையான நுரைகள் சிதறிப் போகுமாறு, நல்ல தொழில் மாண்புடைய மரக்கலத்திலே யவனர் பொன்னோடு வந்து மிளகோடு திரும்பிப் போகும் நல்ல வளங்கெழுமிய ஊர் முசிறி ஆகும். அதன்கண், ஆரவாரம் எழுமாறு முற்றுகையிட்டு, நடந்த அரிய போரையும் வென்று, அங்குள்ள பொற்பாவையையுங் கவர்ந்து வந்தவன், நெடிய நல்ல யானைப் படையினையும் வெல்லும் போராற்றலையும் உடையவனாகிய செழியன். அவனுடைய கொடியசையும் தெருக்களையுடைய மதுரைமா நகருக்கு மேற்குப்புறத்தே இருப்பது திருப்பரங்குன்றம். பல புள்ளிகளையுடைய மயிலின் வெற்றிக்கொடியினை உயர்த்திருப்பது அது. இடையறாத விழாக்களையும் அது உடையது. நெடியோனாகிய முருகனின் அந்தத் திருப்பரங்குன்றின் குண்டு சுனையிலே, வண்டினம் மொய்க்க இதழ் விரிந்த புதிய நீலப்பூவின் ஒத்த மலர்கள் இரண்டின் சேர்க்கையைப் போன்ற, இவளது செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ச்சியான கண்கள் தெளிந்த கண்ணிரினைக் கொள்ளுமாறு, நெஞ்சமே! இவளைப் பிரிந்து யான் நின்னோடு வருவேனல்லேன். நீ போய் நின் வினையை முடித்து வாழ்வாயாக! என்று, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் . 
அகநானூறு - மணிமிடை பவளம்

சொற்பொருள்: 1. சிதலை - கறையான். 2. நெடுஞ்செம் புற்று - உயரமான சிவந்த புற்று. ஒடுங்கு இரை உள்ளே மறைந்து கிடக்கும் இரையான புற்றாஞ் சோறு. முனையில் - வெறுத்தால், 3. வான்பூ - வெண்மையான பூ எண்கு கரடி இருங்கிளை பெரிய சுற்றம், 9. யவனர் - அயோனியர் போன்ற மத்திய தரைக்கடல் நாட்டவர். கலம் - மரக்கலம். 10, கறி மிளகு, 12. படிமம் - பாவை. 16. ஒடியா விழவு - இடையறாத விழாக்கள். 17. குண்டு சுனை - வட்டமான ஆழச்சுனை.

https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகநானூறு-மணிமிடை_பவளம்-மூலமும்_உரையும்-2.pdf/81

_________________

மதுரை மாநகரத்தின் மேற்கே இருப்பது திருப்பரங் குன்றம்.

'' செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி 
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் 
பொருநர்த் தேய்த்த போல்அரு வாயில் 
திருவீற் றிருந்த தீதுதிர் நியமித்து 
மாடமலி மறுகிற் கூடற் குடவயின்

இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த 
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக் 
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக் 
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் 
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் 
குன்றமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று''
(நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படை)

(போருக்கு அறை கூவிக் கட்டிய நெடுந்துரம் உயர்ந்த நெடிய கொடிக்கருகே, வரிந்து புனையப்பட்ட பந்து பாவையோடு தொங்க, யுத்தம் செய்வாரை ஒடுக்கிய போர் இல்லாத வாயிலையும், திருமகள் வீற்றிருந்த குற்ற மற்ற அங்காடி வீதியையும், மாடங்கள் மலிந்த வீதியை யும் உடைய கூடல் மாநகரத்தின் மேற்கே.

செரு-யுத்தம். பொருநர்-பொருபவர். நியமம்கடைவீதி, மறுகு-வீதி. குடவயின்-மேற்குத் திக்கில்.)

மலையின் அடிவாரத்துக்கருகே விரிந்த வயல்கள் இருக்கின்றன. நீர்வளமும் நிலவளமும் செறிந்தவை அந்த வயல்கள் என்பதை அங்குள்ள கரிய சேறு காட்டு கிறது. சேற்றிடையே விரிந்து வாயவிழ்ந்த தாமரை மலர்கள், முள்ளைத் தண்டிலே கொண்ட தாமரை மலர்கள் உள்ளன. கட்டுக் காவலுள்ள இடத்தைப் போலத் தாமரையின் தண்டு, எதுவும் ஏறி வராதபடி முள்ளுடன் இருக்கிறது. மலர்களில் வண்டுக்கூட்டங்கள் தங்கி ஒய்யாரமாக இருக்கின்றன. மாலைக்காலம் வந்து விட்டது. தாமரை மலர்கள் மூடிக் கொண்டன. மெத் தென்ற மலர்ப் படுக்கையில் வண்டுகள் சுகமாகத் துங்கிப் போகின்றன.
(கரிய சேற்றையுடைய அகன்ற வயலில் விரிந்து மலர்ந்த முள்ளையுடைய தண்டைப் பெற்ற தாமரை மலரில் தூங்கி, விடியற் காலையில் தேன் பரந்த நெய்தல் மலரை ஊதி, சூரியன் உதயம் ஆனவுடன் கண்ணைப் போல மலர்ந்த அழகிய சுனைகளில் உள்ள மலர்களிலே சிறைகளையுடைய வண்டின் அழகிய கூட்டம் ரீங்காரம் செய்யும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருத்தலையும் உடையவன். அதுவேயன்றி.

இரு - கரிய. எல் பட - சூரியன் உதிக்க. அரி - அழகு. குன்று - திருப்பரங்குன்றம்.)

https://ta.wikisource.org/wiki/பக்கம்:வழிகாட்டி.pdf/79