Theory of Tsunamis பண்டைய மணவூரும்
இன்றைய மதுரையும்
மணவூர் ( கீழடி ) அகழ்வாராய்ச்சி keeladi archaeological site |
மணவூர் ( கீழடி ) அகழ்வாராய்ச்சி keeladi archaeological site |
அன்று “சித்திரா பௌர்ணமி“ நன்நாள். அந்த நன்நாளில், தனஞ்செயன் என்ற வணிகன் கடம்பவனத்தின் நடுவே சிவலிங்கம் ஒன்று இருப்பதையும், அதைத் தேவர்கள் வணங்குவதையும் காண்கிறான். தான் கண்டதை மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுகொண்டிருந்த மன்னன் குலசேகர பாண்டியனிடம் சொல்கிறான். மன்னனும் தனது அமைச்சர்களுடன் கடம்வனத்திற்குள் செல்கிறான். அங்கே தொன்மையான சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு அதை வணங்குகிறான். இந்தச் சிவலிங்கம் உள்ள இடமே பண்டைத் தமிழர் வாழ்ந்த மதுரையம்பதி என்பதை உணர்கிறான். குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்ட பிரளயகாலத்தில், கடல் வவ்விய மதுரை மாநகரம் இந்த இடத்தில்தான் இருந்துள்ளது எனக் கண்டறிகிறான். உடனே கடம்பவனக் காட்டைச் சீராக்கித் தான் கண்ட அந்தச் சிவலிங்கதிற்கு ஆலயம் கட்டுகிறான். ஆலயத்தைச் சுற்றிலும் மிகவும் அருமையாகத் திட்டமிட்டு ஒரு அழகிய நகரை உருவாக்குகிறான். மணவூரில் வாழ்ந்த மக்களையும் மற்றும் அனைவரையும் மதுரையில் குடியமர்த்துகிறான். இவ்வாறு குலசேகர பாண்டியனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரமே இன்றைய மதுரை ஆகும்.
ஊழிக்காலத்தில் குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டதாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பக்தி இலக்கியங்களான தலபுராணங்களிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன. பக்தி இலக்கியங்களில் குறிப்பாகத் ‘திருவிளையாடல் புராணத்தில்‘ வங்கக்கடல் கரையைக் கடந்து மதுரையைத் தாக்கியதாகக் குறிப்புகள் உள்ளன. திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள ஊழிக்காலம், பிரளயம், கடல்கோள் (சுனாமி), மணவூர், மதுரை பற்றிய செய்திகள் விரிவாக ஆராயப்பெற வேண்டியுள்ளன.
தொல்லியல்துறையினர் தமிழகத்தில் மிகவும் தொன்மையான இடுகாடுகள் பலவற்றைக் கண்டறிந்து உள்ளனர். இவை தவிர்த்து 1) அரிக்கமேடு 2) காவேரிப் பூம்பட்டிணம் ஆகிய ஊர்களின் பண்டைத்தமிழர்களின் தொன்மையான நகரங்கள் கண்டு அறிந்துள்ளனர்.
இவற்றுடன் கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் வழியில் சாலைக்குக் கிழக்கே தொல்லியல்துறையினர் மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மண்ணுக்கு அடியில் புதையுண்டுள்ள இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் என்ன? “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம்.
இந்தத் தொன்மையான நகரைப் பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் ஏதும் உண்டா? சோமசுந்தரபாண்டியன் மகன் உக்கிரபாண்டியன். மணவூரில் பிறந்த காந்திமதியை உக்கிரபாண்டியன் மணம் செய்து கொண்ட காரணத்தினால் இந்த ஊருக்கு மணவூர் என்ற பெயர் உண்டானது என்கிறது திருவிளையாடற் புராணம். குலசேகரபாண்டியன் மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் என்கிறது திருவிளையாடல் புராணம்.
இன்றைய மதுரை மாநகரத்தைத் திட்டமிட்டு உருவாக்கிய குலசேகரபாண்டியனின் தலைநகராக விளங்கிய மணவூரைத்தான் தொல்லியல்துறையினர் கண்டறிந்து ஆராய்ந்து வருவது போற்றுதற்கு உரியன.
நக்கீரர் பாடிய பண்டைய மதுரை Ancient Madurai |
மாமதுரை போற்றுவோம், மணவூர் போற்றுவோம், ஆகழ்வாராய்ச்சியாளர் போற்றுவோம்.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
kalairajan26@gmail.com, 9443501912
நாள் - சித்திரை 27ஆம் நாள் (10.05.2017) புதன் கிழமை.
சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10
வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 19
- எருக்காட்டூர் தாயங்கண்ணனார் (அகம்-149)
149. எளிதாகப் பெற்றாலும் வாரேன்!
பாடியவர்: எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார். திணை: பாலை. துறை: தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. சிறப்பு : சேரநாட்டுடன் யவனர் செய்த வாணிகச் செய்தியும், செழியனின் மதுரைக்கு மேற்கிலுள்ள திருப்பரங் குன்றத்து வளமும்,
(தன் நெஞ்சத்திலே பொருள்தேடி வருதல் வேண்டுமென்ற ஆர்வம் எழ, முன்னர்த், தான் அப்படிப் பிரிந்த காலத்திலே, தன் தலைவி அடைந்த வேதனை மிகுதியை மறவாத தலைவன், தான் வாரேன் எனத் தன் நெஞ்சிற்குக் கூறிப்போவதை நிறுத்தி விட்டான். அதுபற்றிக் கூறுவது இச்செய்யுள்)
சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த, நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின். புல்லரை இருப்பைத் தொள்ளை முனையின், பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும் அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும் வாரேன்-வாழி, என் நெஞ்சே!-சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 1 O
மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 65
வளர்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ, அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய நெடுநல் யானை அடுபோர்ச் செழியன் கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது, 15 பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய,
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் - அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 20
சிறிய புல்லிய கறையான் முயன்று எழுப்பிய மிகவும் உயரமான சிவந்த புற்றினுள் மறைந்து கிடக்கும் புற்றாஞ் சோற்றினைப், பெரிய கையினையுடைய கரடியின் பெரிய சுற்ற மானது தின்னும் அதுவும் வெறுத்துவிட்டதானால், புற்கென்ற அரையினையுடைய இருப்பையின் தொளையுடைய வெண்மை யான பூக்களைக் கவர்ந்து உண்ணும். அத்தகைய சுரத்திலே நெடுந்தொலைவு சென்று, மிகவும் அரிதாக ஈட்டத்தக்க உயர்ந்த பொருளை எளிதாக யான் பெற்றாலும்கூட -
அகநானூறு - மணிமிடை பவளம்
சொற்பொருள்: 1. சிதலை - கறையான். 2. நெடுஞ்செம் புற்று - உயரமான சிவந்த புற்று. ஒடுங்கு இரை உள்ளே மறைந்து கிடக்கும் இரையான புற்றாஞ் சோறு. முனையில் - வெறுத்தால், 3. வான்பூ - வெண்மையான பூ எண்கு கரடி இருங்கிளை பெரிய சுற்றம், 9. யவனர் - அயோனியர் போன்ற மத்திய தரைக்கடல் நாட்டவர். கலம் - மரக்கலம். 10, கறி மிளகு, 12. படிமம் - பாவை. 16. ஒடியா விழவு - இடையறாத விழாக்கள். 17. குண்டு சுனை - வட்டமான ஆழச்சுனை.
https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகநானூறு-மணிமிடை_பவளம்-மூலமும்_உரையும்-2.pdf/81
_________________
மதுரை மாநகரத்தின் மேற்கே இருப்பது திருப்பரங் குன்றம்.
'' செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போல்அரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதிர் நியமித்து
மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று''
(நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படை)
(போருக்கு அறை கூவிக் கட்டிய நெடுந்துரம் உயர்ந்த நெடிய கொடிக்கருகே, வரிந்து புனையப்பட்ட பந்து பாவையோடு தொங்க, யுத்தம் செய்வாரை ஒடுக்கிய போர் இல்லாத வாயிலையும், திருமகள் வீற்றிருந்த குற்ற மற்ற அங்காடி வீதியையும், மாடங்கள் மலிந்த வீதியை யும் உடைய கூடல் மாநகரத்தின் மேற்கே.
செரு-யுத்தம். பொருநர்-பொருபவர். நியமம்கடைவீதி, மறுகு-வீதி. குடவயின்-மேற்குத் திக்கில்.)
மலையின் அடிவாரத்துக்கருகே விரிந்த வயல்கள் இருக்கின்றன. நீர்வளமும் நிலவளமும் செறிந்தவை அந்த வயல்கள் என்பதை அங்குள்ள கரிய சேறு காட்டு கிறது. சேற்றிடையே விரிந்து வாயவிழ்ந்த தாமரை மலர்கள், முள்ளைத் தண்டிலே கொண்ட தாமரை மலர்கள் உள்ளன. கட்டுக் காவலுள்ள இடத்தைப் போலத் தாமரையின் தண்டு, எதுவும் ஏறி வராதபடி முள்ளுடன் இருக்கிறது. மலர்களில் வண்டுக்கூட்டங்கள் தங்கி ஒய்யாரமாக இருக்கின்றன. மாலைக்காலம் வந்து விட்டது. தாமரை மலர்கள் மூடிக் கொண்டன. மெத் தென்ற மலர்ப் படுக்கையில் வண்டுகள் சுகமாகத் துங்கிப் போகின்றன.
(கரிய சேற்றையுடைய அகன்ற வயலில் விரிந்து மலர்ந்த முள்ளையுடைய தண்டைப் பெற்ற தாமரை மலரில் தூங்கி, விடியற் காலையில் தேன் பரந்த நெய்தல் மலரை ஊதி, சூரியன் உதயம் ஆனவுடன் கண்ணைப் போல மலர்ந்த அழகிய சுனைகளில் உள்ள மலர்களிலே சிறைகளையுடைய வண்டின் அழகிய கூட்டம் ரீங்காரம் செய்யும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருத்தலையும் உடையவன். அதுவேயன்றி.
இரு - கரிய. எல் பட - சூரியன் உதிக்க. அரி - அழகு. குன்று - திருப்பரங்குன்றம்.)
https://ta.wikisource.org/wiki/பக்கம்:வழிகாட்டி.pdf/79
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக