Theory of Tsunamis
முதற் சங்கம் அமைத்துத்
முதற் சங்கம் அமைத்துத்
தமிழ் வளர்த்த மதுரை இதுவாக இருக்குமா ?
மொரிசியசு முதற் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த மதுரையாக இருக்குமா ?
முத்தமிழ் மூன்று சங்கங்களால் ஆராயப்பெற்ற சிறப்புடையது.
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் இரீஇயினார் பாண்டியர். அவருள் தலைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், 2முரிஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார்ஐஞ்ஞூற்று நாற்பத்து ஒன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்றுநாற்பதிற்றியாண்டு சங்கம் இருந்தார் என்பது. அவர்களைச் சங்கமிரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல்கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம் என்ப.
இந் நாட்களில் சுனாமியிலிருந்து காத்துக் கொள்ள வேண்டி அறிவியல் தொழில் நுட்பத்தினால் சுனாமி
தடுப்புச் சுவர்களை அமைக்கின்றனர்.
இதுபோன்று முதலாம் தமிழ்ச் சங்க காலத்தில்
பண்டைய தென் மதுரையில் வாழ்ந்த பழந்தமிழர் சுமார் 1200 கி.மீ. நீளத்திற்குச் செயற்கையாகச் செவ்வகமாகக் கோட்டை கட்டிக் கடல்கோளில்
இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முற்பட்டுள்ளனரோ? என்ற ஐயம் எனக்கு !
மோரிசியசு தீவை மையமாகக் கொண்டு சுமார் 1200 கி.மீ. நீளமும் சுமார் 300 கி.மீ. அகலமும் கொண்ட செவ்வகவடிவிலான மிகப் பெரிய கோட்டை போன்று காணப்படுகிறது. அதிலும் சரியான இடைவெளியில் மேடுகள் கொத்தளங்கள் போன்று காணப்படுகின்றன. இந்த அமைப்பு முறையால் இது மனிதர்களால் கட்டப்பட்ட சுனாமி தடுப்புச் சுவராக ( Tsunami fencing Man made Wall) இருக்கலாம் என்பது கருத்து.
முதற்சங்கம்
மதுரையிலும்,
இடைச்சங்கம்
கபாடபுரத்திலும்,
கடைச்சங்கம்
உத்தரமதுரையிலும் நடைபெற்றதாக குறிப்பிடுகிறது.
“தடோ ஹேமாயம் திவ்யம் முக்த மனி விபுசிடம்
யுக்தம் கவாடம் பாண்டியானாம் கடா த்ரக்சுயத வானராம் “ என்று இராமயணத்தில் தெற்கே கவாடம் இருந்ததாகக் குறிப்பு ஒன்று உள்ளது.
யுக்தம் கவாடம் பாண்டியானாம் கடா த்ரக்சுயத வானராம் “ என்று இராமயணத்தில் தெற்கே கவாடம் இருந்ததாகக் குறிப்பு ஒன்று உள்ளது.
இனி, இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியும், வெள்ளூர்க்காப்பியனும், சிறுபாண்டரங்கனும், திரையன் மாறனும், துவரைக் கோமானும், கீரந்தையும் என இத்தொடக்கத்தார்
ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப.
அவர்களாற் பாடப்பட்டன கலியும்,4குருகும்,
வெண்டாளியும், 5வியாழமாலை அகவலும் என இத் தொடக்கத்தன என்ப.
அவர்க்கு நூல் அகத்தியமும்,
தொல்காப்பியமும், மாபுராணமும், இசைநுணுக்கமும்,
பூதபுராணமும் என
இவை. அவர் மூவாயிரத்து எழுநூற்றியாண்டு சங்கமிருந்தார் என்ப. அவரைச் சங்கம்
இரீஇயினார் வெண்தேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர்
என்ப. அவருள் கவியரங்கேறினார் ஐவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்து
என்ப. அக்காலத்துப்போலும்
பாண்டியனாட்டைக் கடல்கொண்டது.
மேலே உள்ள
படங்களில் உள்ளது போன்று,
1) மோரிசியசு தீவை மையமாகக் கொண்டு சுமார் 1200 கி.மீ. நீளமும் சுமார் 300 கி.மீ. அகலமும் கொண்ட செவ்வகவடிவிலான மிகப் பெரிய கோட்டை போன்று காணப்படுகின்ற அமைப்பு முறையினால், அது பண்டைத் தமிழரால் உருவாக்கப் பெற்றதாக இருக்கலாம் என்ற ஐயம் ஏற்படுகிறது. அது மனிதனால் உருவாக்கப் பட்ட கோட்டை என்பது உறுதியானால், மோரிசியசு தீவுதான் பண்டைய பாண்டியர் முதற்சங்கம் அமைத்துத் தமிழ் ஆராய்ந்த தென்மதுரை என்பது உறுதி.
மேலும்,
2) டியகோ கார்சியா தீவை மையமாகக் கொண்டு சுமார் 1500 கி.மீ. நீளமுடைய மிகப் பெரிய கடல் அரண் அமைக்கப்பட்டுள்ளது போன்று காணப்படுகின்றது. அதிலும் குறிப்பிட்ட இடைவெளியில் கொத்தளங்கள் போன்ற அமைப்புகள் உள்ளது போன்றும் காணப்படுகிறது. இவ்வாறான துள்ளிதமான அளவுடைய கட்டிட அமைப்பில் காணப்படுவதால், இது பண்டைத் தமிழரால் உருவாக்கப் பெற்றதாக இருக்கலாம் என்ற ஐயம் ஏற்படுகிறது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட அரண் என்பது உறுதியானால், டியகோ கார்சியா தீவுதான் பண்டைய பாண்டியர் இரண்டாம் சங்கம் அல்லது இடைச் சங்கம் அமைத்துத் தமிழ் ஆராய்ந்த கபாடபுரம் அல்லது கவாடபுரம் என்பது உறுதி.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி.காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக