திங்கள், 5 மார்ச், 2018

Theory of Tsunamis கடல் கொண்ட கபாடபுரம் இதுவா?

 Theory of Tsunamis
இடைச்சங்கம் இருந்த 
கபாடபுரம் (கவாடபுரம்) இதுவா?


முத்தமிழ் மூன்று சங்கங்களால் ஆராயப்பெற்ற சிறப்புடையது.
முதற்சங்கம் மதுரையிலும், இடைச்சங்கம் கபாடபுரத்திலும், கடைச்சங்கம் உத்தரமதுரையிலும் நடைபெற்றதாக குறிப்பிடுகிறது.

“தடோ ஹேமாயம் திவ்யம் முக்த மனி விபுசிடம்
யுக்தம் கவாடம் பாண்டியானாம் கடா த்ரக்சுயத வானராம் “ என்று இராமயணத்தில் தெற்கே கவாடம் இருந்ததாகக் குறிப்பு ஒன்று உள்ளது.


https://ta.wikisource.org/wiki/இறையனார்_அகப்பொருள்_உரை_(முச்சங்க_வரலாறு)

தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் இரீஇயினார் பாண்டியர். அவருள் தலைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், 2முரிஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார்ஐஞ்ஞூற்று நாற்பத்து ஒன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்றுநாற்பதிற்றியாண்டு சங்கம் இருந்தார் என்பது. அவர்களைச் சங்கமிரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல்கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம் என்ப.

இனி, இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியும், வெள்ளூர்க்காப்பியனும், சிறுபாண்டரங்கனும், திரையன் மாறனும், துவரைக் கோமானும், கீரந்தையும் என இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும்,4குருகும், வெண்டாளியும், 5வியாழமாலை அகவலும் என இத் தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும், மாபுராணமும், இசைநுணுக்கமும், பூதபுராணமும் என இவை. அவர் மூவாயிரத்து எழுநூற்றியாண்டு சங்கமிருந்தார் என்ப. அவரைச் சங்கம் இரீஇயினார் வெண்தேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் ஐவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்து என்ப. அக்காலத்துப்போலும் பாண்டியனாட்டைக் கடல்கொண்டது.

இனிக் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியாரும், சேந்தம்பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங் குன்றூர் கிழாரும், இளந்திருமாறனும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும், மதுரை மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புற நானூறும், ஐங்குறு நூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும், என்று இத் தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும் என்ப. அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது 1ஆயிரத்து எண்ணூற்று ஐம்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார் கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங் கேறினார் மூவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தரமதுரை என்ப.

மேலே உள்ள படத்தில் பிரிட்டீஸ் அரசின் கீழ் உள்ள இந்தத் தீவு தமிழரின் கபாடபுராமாக இருக்கும் என்பது எனது கருத்து.

இந்த அறிவியல் தொழில் நுட்பக் காலத்தில் சுனாமியிலிருந்து காத்துக் கொள்ள வேண்டி சுனாமி தடுப்புச் சுவர்களை அமைக்கின்றனர்.


​இதுபோன்று முதலாம் தமிழ்ச் சங்க காலத்தில் வாழ்ந்த பண்டைத் தமிழர் சுமார் 1500 கி.மீ. நீளத்திற்குச் செயற்கையாகச் சுவர் கட்டிக் கடல்கோளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முற்பட்டுள்ளனரோஎன்ற ஐயம் எனக்கு !


 டியகோ கார்சியா தீவை மையமாகக் கொண்டு சுமார் 1500 கி.மீ. நீளத்திற்கு மிக நீண்ட திட்டு கோட்டை போன்று காணப்படுகிறது.  அதிலும் சரியான இடைவெளியில் மேடுகள் கொத்தளங்கள் போன்று காணப்படுகின்றன.  இந்த அமைப்பு முறையால் இது மனிதர்களால் கட்டப்பட்ட சுனாமி தடுப்புச் சுவராக ( Tsunami fencing Man made Wall) இருக்கலாம் என்பது கருத்து.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக