சலதி வெள்ளம் (tsunami)
திருவிளையாடல் புராணத்தில் இடம்பெற்றுள்ள
‘சலதி (கடல்) வெள்ளம்’
பற்றிய பாடல்களின் தொகுப்பு
2004ஆம் ஆண்டு கடல் கரையைக் கடந்து கடற்கரை ஓரம் உள்ள
கிராமங்களில் வசித்த இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது. நிலநடுக்கம் ஏற்பட்டு, கடல் கரையைக் கடந்து
நிலத்திற்குள் புகுவதைச் “சுனாமி (Tsunami)” என்ற சப்பானியச் சொல்லால் குறிப்பிடுகிறோம். கடல்நீர் நிலத்திற்குள் புகுவதைக் “கடல்கோள்” என்றும் “ஆழிப்பேரலை“ என்றும் குறிப்பிடுகின்றனர். “சலதிவெள்ளம்” என்று திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது. சலதி என்றால் கடல் என்று பொருள். பரஞ்சோதி முனிவர் ‘சங்கரசங்கிதை‘ என்ற வடமொழி
நூலை மொழிபெயர்த்துத் தமிழிலில் பாடியுள்ள திருவிளையாடற் புராணத்தில், சலதி என்ற
சொல் 13 பாடல்களின் இடம் பெற்றுள்ளது.
பிரளயம் என்றால் என்ன?
நிலத்திட்டுகள் பெயர்த்து விழுதல்.
மலைகளின் முகடுகள் புடைபெயர்ந்து சரிந்து விழுவதை “மலைச்சரிவு” என்கின்றனர். இது போன்று கடலுக்கு அடியில் உள்ள நிலத்திட்டுக்கள் புரண்டு (fault) பெயர்ந்து சரிந்து விழுவதைப் “பிரளயம்” என்கிறது புராணம்.
சுனாமி என்றால் என்ன?
கடலுக்கு அடியில் உள்ள நிலத்திட்டுகள் புடைபெயர்ந்து பிரண்டு விழுகின்றன. இவ்வாறு நிலத்திட்டுகள் பெயர்ந்து விழுகின்ற காரணத்தினால் கடல்நீர் அடித்துத் தள்ளப்படுகிறது. இவ்வாறு தள்ளப்பட்ட கடல்நீரானது பெரும் கடல்அலையாக மாறி நிலத்தைத் தாக்குகின்றன. இதைச் சுனாமி என்ற சப்பானியச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். புராணங்களில் இது “கடல்வெள்ளம்” அல்லது “சலதிவெள்ளம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல்கோள் என்றால் என்ன?
கடல்வெள்ளத்தினால் (சுனாமியினால்) கடல்மட்டத்திற்கு மேலே உள்ள நிலப்பரப்பானது மூடப்படுவதை அழிக்கப்படுவதைக் கடல்கோள் என்று புராணம் குறிப்பிடுகிறது. (தண்ணீரை ஊற்றி வீட்டைக் கழுவி விடுவது போன்று, கடல்நீரால் தரைப்பகுதி கழுவிவிடப்படுகிறது.)
ஊழி, ஊழிக்காலம் என்றால் என்ன?
“ஊழ்” என்றால் விதி அல்லது நியதி என்று பொருள். புவியியல் விதிகள் மாறும்படிப் பெரும் அழிவுகள் உண்டாவதை “ஊழி” என்றும், புவியியல் மாற்றம் அடையும்படிப் பெரும் அழிவுகள் நிகழும் காலத்தை “ஊழிக்காலம்” என்றும் புராணம் குறிப்பிடுகிறது.

91.
உலகம் யாவையும்
ஈன்றவளும் அருள் உயர்ந்த
திலக நாயகி, பரஞ்சுடர், சேய் என மூன்று
தலைவரால் முறை
செய்த நாடு இஃது. அன்றிச் சலதி
சுலவு பாரின்
உண்டகுமோ துறக்கத்தும் அஃதே.
331.
அந்தரர் கோன்
ஆதனத்தில் உறை மலயத் துவசனை மீண்டும் அழைத்த
வாறும்,
சுந்தர உக்கிர
குமரன் அவதரித்த வாறும், வளை சுடர் வேல் செண்டு
தந்தை இடத்து
அவன் பெற்ற வாறும், அவன் அவ்வடிமேல் சலதி
வீறு
சிந்த விடுத்தது
மகவான் முடியை வளை யெறிந்து இறைவன் சிதைத்த
வாறும்.
341.
ஊமனால் புலவர்
இகல் அகற்றியதும் இடைக் காடனுடன் போய்க்
கொன்றைத்
தாமனார் வட வால
வாய் அமர்ந்த பரிசும் வலை சலதி வீசிப்
பூமனாய் குழலியை
வேட்டு அருளியதும் வாதவூர்ப் புனிதர்க்கு ஏறத்
தேம நாண்
மலரடிகண் முடி சூட்டி உபதேசம் செய்த வாறும்.
423.
தம் குடிமைத்
தச்சனை ஓர் விமானம் அமைத்திட விடுத்தத் அத் தடத்தின் பால் போய்
அம் கணனைக் கடிது
அருச்சித்திட நறிய மலர் கிடையாது
அயர்வான் அந்தச்
சங்கு எறி தண் திரைத்
தடத்தில் அரன் அருளால் பல பரிதி சலதி
ஒன்றில்
பொங்கு கதிர்
பரப்பி முளைத்தால் என்னப் பொன் கமலம் பூப்பக் கண்டான்.
677.
வரை வளங்களும்
புறவினில் வளங்களும் மருதத் தண் பணை வேலித்
தரை வளங்களும் சலதி
வாய் நடைக்கலம் தரு வளங்களும் ஈண்டி
உரை வரம்பு அற
மங்கலம் பொலிந்தது இவ்வூரினில் நால் வேதக்
கரை கடந்தவன் திருமணம்
செயவரு காட்சியைப் பகர் கின்றேன்.
1831.
அலை சிறந்த சலதி
மீது ஒரு ஆறு செல்லு மாறு போல்
மலைசிறந்த நேரி
வெற்பன் மள்ளர் சேனை வெள்ள மேல்
கலை சிறந்த மதி
நிறைந்த கன்னி நாடு காவலன்
சிலை சிறந்த
சிறிய சேனை சென்று அலைத்து நின்றதே.
2067.
தருக்களும் சலியா
முந்நீர்ச் சலதியும் கலியா நீண்ட
பொருப்பிழி
அருவிக் காலும் நதிகளும் புரண்டு துள்ளா
அருள் கடல்
விலைத்த கீத இன்னிசை அமுதம் மாந்தி
மருள் கெட அறிவன்
திட்டி வைத்த சித்திரமே ஒத்த.
2189.
செம் கண் ஏறு
அழகர் ஆடல் ஈது என்றே யாவரும் தெளிந்தனர் ஏத்தி
அம் கண் நாயகர்
தம் கருணையின் திறனும் அடியவர் அன்பையும்
தூக்கித்
தம் கணார் அருவி
பெருக ஆனந்தத் தனிப் பெரும் சலதியில் ஆழ்ந்தார்
வங்கம் மேல்
வந்தாள் பிடர் மிசை இருந்த மாண் இழை விறலியை மன்னன்.
2331.
அப்பெரும் சலதி வெள்ளத்து
அழிந்தன அழி விலாத
எப்பெரும்
பொழிலும், ஏழு திபமும், இவற்றுள் தங்கி
நிற்பன செல்வ ஆன
திணைகளும், நீண்ட சென்னி
பர்ப்பத வகையும்
ஈறு பட்டன ஆக அம் கண்.
2655.
அன்னது தெரிந்து
நால்வாய் ஐங்கரக் கடவுள் தாதை
முன்னர் வந்து
இதனால் அன்றோ மூண்டது இச் செய்தி எல்லாம்
என்ன ஈர்ங் கவளம்
போல் ஆங்கு இருந்த புத்தகங்கள் எல்லாம்
தன் நெடும்
கரத்தால் வாரி எறிந்தனன் சலதி மீது ஆல்.
2670.
மகவு இலாமையல்
ஆற்ற நால் மறுமை யோடு இம்மைப்
புகல் இலான் என
வருந்துவான் ஒரு பகல் போது
தகவு சால் பெரும்
கிளை யொடும் சலதி மீன் படுப்பான்
அகல வார் கலிக்கு
ஏகுவான் அதன் கரை ஒருசார்.
2690.
சங்கு அலம்பு தண்
துறை கெழு நாடன் இச் சலதித்
துங்க மந்தரம்
எனக் கிடந்து அலமரும் சுறவை
இங்கு அணைந்து
எவன் பிடிப்பவன் அவன் யான் ஈன்ற
மங்கை மங்கலக்
கிழான் என மனம் வலித்து இருந்தான்.
2695.
தன் பெரும்
கணத்து உளான் ஓர் தலைவனும் சலதி வாணன்
என்பது தோன்ற
வேடம் எடுத்து எறி வலை தோள் இட்டு
என் புற மலைப்பக்
காவி மீன் இடு குடம்பை தாங்கிப்
பின்புற நடந்து
செல்லப் பெருந்துறைப் பாக்கம் புக்கான்.
நன்றி – பாடல்கள்
தமிழ்இணையப் பல்கலைக்கழகத்தில் உள்ளபடி.
தொகுப்பு -
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி.காளைராசன்,
kalairajan26@gmail.com.
ஆடி31, 16.08.2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக