வியாழன், 5 ஏப்ரல், 2018

Theory of Tsunamis கடல்வெள்ளத்தில் (சுனாமியில்) கருக்கொண்ட கல்முட்டைகள்

கடல்வெள்ளம் கோட்பாடு (Theory of Tsunamis )


கடல்வெள்ளத்தில் (சுனாமியில்) 
கருக்கொண்ட கல்முட்டைகள் 


"Theory of the Earth" எழுதிய ஆசிரியர் மட்டும், பெரும் ஆறுகள் ஒடியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால் இவர் குறிப்பிடும் ஆறுகள் சுனாமியினால் உருவானவை.

அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால்  “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள் - huge Tsunami)“ உருவாகி யுள்ளன.  இவற்றால்,  பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு, கபாடபுரம், தென்மதுரை உள்ளிட்ட பண்டைத் தமிழகம்  அழித்துள்ளது.  இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.  
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.  

எனது இக்கருத்தை அறிவியல் அடிப்படையில்  நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  



பழனி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் குழந்தைவேலன் சந்நிதி அருகே செல்லும்போது இந்தப் பாறைகளைக் கண்டேன்.   மலைக்குன்றுகளும் மண்குன்றுகளும் உள்ள இடங்களில் இதுபோன்ற கல்முட்டைகளைக் காணலாம்.


குளங்களின் அடியில் களிமண் படிந்து கிடப்பது போன்று,  ஆழ்கடலில் அடியில் கடல்களிமண் படிந்து உள்ளது.   பிரளயத்தினால், கடல்வெள்ளம் (சுனாமி) தோன்றித் தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது, கடலின் அடியில் படிந்து கிடந்த  சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.  ஏதோவொரு பொருள் இந்தச் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது.  அப்போது சேரும் சகதியும்  அந்தப் பொருளின் மீது படிந்து, அது  ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது.  பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது.  இப்போது இந்தப் பாறைகளின் மேற்பகுதிகள் சிதிலமடைந்து செதில்செதிலாகப் பிரிந்து விழுகின்றன என்பது எனது கருத்து.










ஹேவிளம்பி ஆனி 23 (07.07.2017) வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் வழியில் ரெட்டியார் சத்திரம் அருகே மேலே உள்ள கல்முட்டைப் பாறைகளைப் பார்த்தேன்.  




வேடசந்தூர் அய்யலூர் சாலையில் அய்யலூர் அருகே செல்லும்போது இந்த கல்முட்டைப் பாறைகளைக் கண்டேன்.




கடந்த 21 மே 2017 அன்று திண்டுக்கலில் இருந்து தாண்டிகுடி செல்லும் போது மேலே உள்ள இந்தப் பாறைகளை கண்டேன்.  

இவ்வகையான பாறைகள் சிதிலமடைவதற்கு அறிவியல் அடிப்படையில் பல்வேறுவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.  ஆனால் இந்தக் கல்முட்டைப் பாறைகள் பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டை அழித்த கடல்வெள்ளத்தில் (பெருஞ் சுனாமியில்) ஆழ்கடலின் அடியில் இருந்த களிமண் அல்லது சவடு மண்ணினால் (Tsunami deposited clay) உருவானவை என்பது எனது கருத்து.

மேற்கண்ட கல்முட்டைகள் செதில்செதிலாக முட்டைபோன்று உள்ளன.   கோசுட்டாரிகா (Palmar Sur, Osa, Puntarenas Province, Costa Rica) நாட்டில் காணப்படும் கற்பந்துகள் போன்று கோளவடிவில் இல்லை.  

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி காளைராசன்


Palmar Sur, Osa,
Puntarenas Province
Costa Rica

 The Costa Rica Petrospheres.
The Costa Rica Petrospheres.
Ancient-Wisdom
(Map with Locations of Carved Petrospheres in Costa Rica)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக