Theory of Tsunamis கீழடி அழிந்தது எவ்வாறு ?
கடல்வெள்ளத்தினாலா (சுனாமியினாலா ) ?
Tsunami deposits south of Valdivia
http://quakehunters.blogspot.in/2013/01/fieldwork-so-far-in-pictures.html
மேலே உள்ள படத்தில் தென்னமெரிக்காக்காவில் உள்ள வால்திவ்ய (Valdivia) வில் உள்ள மண்படிமங்கள் சுனாமியினால் உண்டானது என்று காணமுடிகிறது.
கீழே உள்ள படங்களில் மலைகளில் இதே போன்ற மண்படிமங்களைக் காண முடிகிறது.
ஆற்றுப் பெருக்கால், அடுக்கடுக்காய் மணவூரில் (கீழடியில்) மண் படிய வாய்ப்புகள் உண்டு. ஆனால், கடல்நீர் வராமல் கலர்க்கலராய் மண் படிய வாய்ப்புகள் இல்லை. எனவே இது வைகையாற்று வெள்ளத்தால் (நல்லதண்ணியால்) உண்டானது அல்ல. பிரளயத்தின் போது ஏற்பட்ட பெருஞ் சுனாமியினால் தோன்றிய கடல் வெள்ளம் வைகை ஆற்றின் வழியாக உள்ளே புகுந்து பண்டைய மணவூரை (கீழடியை) அழித்துள்ளது என அறிய முடிகிறது.
“திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே மதுரை உள்ளது” என்று நக்கீரர் பாடிய பண்டைய மதுரை இதுதான் என்பதை உறுதியாகிறது.
மேலும், 17ஆவது படலத்தில் அதுலகீர்த்தி பாண்டியனின் பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி(“சுனாமி”) மதுரையை முற்றிலும் அழித்துள்ளது என்ற ஒரு குறிப்பு உள்ளது.
http://kalairajan26.blogspot.in/2013/02/blog-post_18.html?view=timeslide
வால்திவ்ய( Valdivia) வில் காணப்படும் மண் அமைப்பு சுனாமியினால் உண்டானது என்று கூறப்படுவதாலும், அதே போன்ற மண் அமைப்பு கீழடியிலும் காணப்படுகின்ற காரணத்தினாலும்,
மதுரைக்கு நேர் கிழக்கே அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் சுமார் 1,70,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள மாபெரும் நிலப்பகுதி பூமிக்குள் புதைந்துள்ளதைக் கூகுள்புவிப்படம் வழியாக அறியமுடிவதாலும்,
அங்கே தோன்றிய மிகமிகப்பெரிய கடல்வெள்ளம் (சுனாமி) மதுரை வரை வந்து அழிந்துள்ளது என்று கருதுகிறேன்.
மாமதுரை போற்றுவோம், தொல்லியல் போற்றுவோம், தொல்லியலாளர் போற்றுவோம், தமிழரின் தொன்மை போற்றுவோம்.
அன்பன்
கி.காளைராசன்
----------------------------------------------------------------------
|
07/10/2016
| |||
2016-10-07 0:29 GMT+08:00 Singanenjam Sambandam <singanenjam@gmail.com>:
இருபுறமும் மலைகள் எனில் , கடல்நீர் உட்புகும் வேகம் மிக மிக அதிகமாக இருக்கும். ஏன் எனில் கடல் நீர் பரவுவதை மலைகள் தடுத்து விடும்.
இதைச் சொன்னவுடன் எனக்கொரு திருவாய்மொழி நினைவிற்கு வந்தது:
ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர
வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்
மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்
சாறு படவமு தங்கொண்ட நான்றே
உரை:
மஹாநதிக ளெல்லாம் மலைகளின்று பெருகிக் கடலிலே வந்து சேருமே; அப்படி சேருவதற்காக ஆறுகள் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனவாம். கடைகிற போது மலைகளிற் காட்டில் கடல் உயருகையாலே ஆறுகள் எதிர்வெள்ளங் கோத்து மலைகளையே நோக்கியே திரும்பியோடுகிற வோசை விலக்ஷ்ணமாயிருந்ததென்று முதலடியாற் சொல்லுகிறது. இங்கே ஈட்டு ஸ்ரீஸீக்தி;-‘கடலிலே மந்தரத்தை நட்டவாறே கடல் கொந்தளித்து ஸஹயம் போய்த்தாழ்ந்து கொடுத்தது; நீரோனது தாழ்ந்த விடத்தே ஒடக்கடவதிறே. ஆறுகளானவை மலையைக் குறித்து எதிரிட்டோடுகிற போதை த்வநியாயனது இவர்க்குச் செவிப்படுகிறபடி. இவர்க்குக் காலத்ரயத்திலுமுள்ள தெல்லாம் தெரியும்படியிறே அவன் வெளிச்சிறப்பித்தது.”
நன்றி = மின்தமிழ்
---------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக