மதுரைக்கு வந்த சுனாமி (அலவாக்கோட்டை)
மாமல்லபுரத்தில் சீனஅதிபர் ஷி ஜின்பிங் அவர்களும் இந்தியப்பிரதமர் மோடி அவர்களும் சந்தித்த இடத்திற்கு அருகில் கிருஷ்ணனின் வெண்ணைய்ப் பந்து என்று ஒரு உருண்டைக் கல் உள்ளது. சரிவான பாறையின் மேல் உள்ள இந்த உருண்டைக்கல் உருண்டு கீழே விழாமல் உள்ளது. முதலாம் நரசிம்ம வர்மன் இந்த உருண்டைக் கல்லை உருட்டிவிட முயற்சி செய்து பின் கை விட்டுவிட்டார். சென்னை கவர்னாக இருந்த ஆர்தர் ஹேவ்லாக் (Arthur Havelock)என்பவர் யானைகளைக் கொண்டு இந்தப் பாறையை உருட்டவிட முயற்சி செய்து பின் கைவிட்டுள்ளார்.
மகாபலிபுரத்தில் உள்ள பாறைபோன்று, எத்தனையோ இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், சிறிதும் ஆடாமல் அசையாமல் சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் இரண்டு பாறைகள் நிற்கின்றன.
இந்தப் பாறையைப் போன்ற சிறுசிறு கட்டிகட்டியான பாறைகளை மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரிலும் மற்றும் கிரானைட் குன்றுகளின் உச்சியிலும், பூமிக்கு அடியிலும் காணலாம். கடல்கோளால் குமரிக்கோடு அழிந்தபோது உண்டான கடல்வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட கடற்களிமண் இறுகிப் பாறையாகி இந்தப் பொக்குப்பாறை உருவாகி உள்ளது என்பது எனது கருத்து.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளோர் அனைவரும் ஒருமுறையேனும் இந்தப் பாறையை நேரில் சென்று பார்த்து வர வேண்டும்.
இருப்பிடம் - மதகுபட்டியிலிருந்து அலவாக்கோட்டை.. அதை தாண்டியதும் இடது பக்க சாலையில் செல்லவும்.. தார்ரோட்டின் முடிவில் வண்டியை நிறுத்தி விட்டு வலதுகை பக்கம் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு ஊரணி வரும். அதன் உள்ளே இறங்கி கரை ஏறி கொஞ்ச தூரம்தான்..
சிவகங்கை, மதகுபட்டி அருகே, அலவாக்கோட்டை.. அதை தாண்டியதும் இடது பக்க சாலையில் சென்றால்..... தார்ரோட்டின் முடிவில் வண்டியை நிறுத்தி விட்டு வலதுகை பக்கம் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு ஊரணி வரும். அதன் உள்ளே இறங்கி கரை ஏறி கொஞ்ச தூரம்தான்..
பாறை படம் -
நன்றி = Ramesh Gemini Kalaiyarkoil
https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/96720839_3497314020283611_4818404860263137280_o.jpg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_ohc=DUBNT-zu7z0AX92EDQ0&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=b48fb439b980fb321fc7ea676367d09c&oe=5EF221EC
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 11 (25/05/2020) ஞாயிற்றுக் கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக