மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5)
மண் கடல் வௌவலின் (வத்தலக்குண்டு)
மதுரைக்குக் கிழக்கே வங்கக்கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே பிரளயம் ஏற்படுட்டு அங்கிருந்த நிலத்திட்டுகள் புடைபெயர்ந்து கடலில் மூழ்கின. அதனால் கடல்வெள்ளம் (பெருஞ்சுனாமி) உண்டாகித் தென்னிந்தியா முழுவதையும் தாக்கி அழித்துள்ளது. இந்தக் கடல்கோள் அழிவின்போது பஃறுயாற்றுப் பன்மலை அடுக்கமும், குமரிக்கோடும் அழிந்து போயின. மதுரை மாநகரம் அழிந்துவிட்டது, அதனால் மதுரைக்கு ஆலவாய் என்ற புதிய பெயர் உண்டானது.கடல்கோளால் உண்டான கடல்வெள்ளம் தமிழகக் கடற்கரையைக் கடந்து உள்ளே வரும் போது மிகப்பெரிய அளவில் மண்ணை அள்ளிக்கொண்டு வந்து சேர்த்துள்ளன. ஏதேனும் தடைகள் ஏற்பட்ட இடங்களில் மண்மலைகள் உண்டாகியுள்ளன. தென்னிந்தியா முழுவதும் உள்ள மண்மலைகள் இவ்வாறு கடல்கோளால் உண்டானவையே.
மேலேயுள்ள படத்தில் வட்டம் காட்டப்பட்டுள்ள இடத்தில் உள்ள பொருள் (இது சுயம்புலிங்கமா இருக்கலாம், அல்லது பெரிய பாறையாக இருக்கலாம்) ஒன்று கடல்வெள்ளத்தைத் தடுத்துள்ளது. இதனால் கடல் வெள்ளத்தினால் (பெருஞ்சுனாமியினால்) அடித்துவரப்பட்ட மண்ணானது இந்த இடத்தில் ஒரு மலைபோல் குவியத் தொடங்கி ஒரு மேடான இடத்தை உருவாக்கியுள்ளது.
மதுரைக்கு வந்த சுனாமி, வத்தலக்குண்டு |
Add captionமதுரைக்கு வந்த சுனாமி, வத்தலக்குண்டு, மண்மலை |
மதுரைக்கு வந்த சுனாமி, வத்தலக்குண்டு, மண்மலை |
மதுரைக்கு வந்த சுனாமி, வத்தலக்குண்டு, மண்மலை |
அறிந்தோர் அன்புடன் கூறி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தங்களது நண்பர்களிடமும் பகிர்ந்து கேட்டறிந்து கூற வேண்டுகிறேன்.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக