புதன், 13 மே, 2020

Theory of Tsunamis, திருச்செந்தூருக்கு வந்த சுனாமி

Theory of Tsunamis,

திருச்செந்தூருக்கு வந்த சுனாமி 
பிரளயம் பேர்த்த பாறைகள் 
(பகுதி 3 அ)


திருச்செந்தூருக்கு வந்த சுனாமி  -  மதுரையை ஆண்ட பாண்டியர்கள் கடல்கோளின் போது இறைவனிடம் வேண்டிக்கொண்ட ஆன்மிகச் செய்திகளைத் திருவிளையாடற் புராணம் வெகுவாகக் கூறுகிறது.
இறைவனின் திருவருளைக் கூறும்போது, பிரளயத்தின் போது ஏற்பட்ட புவி மாற்றங்களையும் புராணம் கூறுகிறது.   புராணம் கூறும் பெரும்சுனாமிகளின் அழிவுகளுக்குச் சான்றாகத் தமிழகம் எங்கும் பாறைகள் பெயர்ந்து காணப்படுகின்றன.

“ கருங்கடல் ஏழும் காவல் கரை கடந்து, ஆர்த்துப் பொங்கி,
ஒருங்கு எழுந்து, உருத்துச் சீறி, உம்பரோடு இம்பர், எட்டுப்
பொரும் கடகரியும், எட்டுப் பொன் நெடும் கிரியும், நேமிப்
பெருங்கடி வரையும், பேரப், பிரளயம் கோத்த வன்றே”
....
....
“ கொதித்து எழுந்து, தருக்கள் அறக் கொத்தி எடுத்து, எத்திசையும்
அதிர்த்து, எறிந்து, வரைகள் எல்லாம் அகழ்ந்து, திசைப் புறம் செல்லப்
பிதிர்த்து, எறிந்து, மாடநிரை பெயர்த்து, எறிந்து, பிரளயத்தில்
உதித்து, எழுந்து, வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல்”
இந்தப் புராணப் பாடல்களுக்குச் சான்றாக, அழகர்கோயில்மலையில் உள்ள பாறைகள் சிலவற்றையும்,  பழனி அருகே விருப்பாச்சி பாறையையும் இதற்கு முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.
இந்தப் பதிவில் திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள வள்ளிகுகை வாயில் அருகேயுள்ள பிரளம் பேர்த்த பாறையின் படம் இணைக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் அந்தமான்தீவிற்கு அருகே பிரளயம் (அயனங்கள் பிரள்வது, அல்லது கடலுக்கு அடியில் நிலச்சரிவுகள் உண்டாவது) ஏற்பட்டது.  அதனால் கடல்வெள்ளம் (ஆழிப்பேரலை அல்லது பெருஞ்சுனாமி) உண்டாகித் தமிழகத்தைத் தாக்கி அழிந்துள்ளது.

கடல்கோளால் உண்டான கடல் அலைகள் கரையைக் கடக்கும்போது, கடற்கரையோரம் இருந்த பாறைகளைப் பெயர்த்தெடுத்துப் போட்டுள்ளது.  இவ்வாறு பாறைகள் புடைபெயர்ந்து கிடப்பதைத் தமிழகம் ஆந்திரம் மற்றும் கிழக்குக் கடற்கரையோரம் எங்கும் காணலாம்.


திருச்செந்தூரில் வள்ளிகுகை அருகே உள்ளபாறைகளைப் போன்றே,  பழனி செல்லும் வழியில் விருப்பாச்சியில் உள்ள பாறைகளும் இருப்பதைக் காணலாம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
Kalairajan Krishnan
13 மே, 2017, முற்பகல் 5:03 · Tiruchendur ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக