அசுரனும் ஆழ்கடல் ஆய்வும்
பண்டைய புராணங்களில் பூமியைக் கடலுக்குள் சுருட்டி எடுத்துச் சென்ற தொழில்நுட்பம் நிறைந்த ஆற்றலை, தொழில்நுட்பத் திறனை, இரண்யாட்சதன் என்ற தொழில்நுட்ப நிபுணத்துவ அசுரனாகப் புராணம் சித்தரிக்கிறது. இரண்யாட்சதன் என்பவன் சுமார் கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கட்டமைப்பு குறித்து ஆராய்ச்சி செய்த ஒரு தீவிர ஆய்வாளராகப் புராணம் குறிக்கிறது.
- ஆய்வு நிதி: தனது விரிவான ஆய்வுகளுக்காக இரண்யாட்சதனுக்குப் பெருமளவில் நிதியும் ஆட்களும் தேவைப்பட்டனர். இதனால் 'தேவர்கள்' என்று அழைக்கப்பட்ட அக்காலச் செல்வந்தர்களை அடிமைப்படுத்தி, அவர்களது செல்வத்தைக் கொண்டு கடலோர நிலப்பரப்புகளிலும் மலைத்தொடர்களிலும் பெரிய ஆய்வகங்களை இரண்யாட்சதன் அமைத்தான்.
- 30-40 கிலோமீட்டர் ஆழ ஆய்வு : இரண்யாட்சதன் நிலப்பரப்பிற்கு அடியே 30 முதல் 40 கிலோமீட்டர் ஆழம் வரை சென்று தீவிரக் கடலடி அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டான்.
- ஆணிவேர்ப் பகுதிகள் பலவீனமடைதல் : இத்தகைய கட்டுப்பாடற்ற அகழ்வாராய்ச்சிகளால், கடலும் நிலமும் சந்திக்கும் ஆழமான ஆணிவேர்ப் பகுதிகள் வலிமையிழந்தன.
கண்டங்கள் மூழ்கல் : புவியின் அடித்தளக் கட்டமைப்பு தகர்ந்ததால் பேரதிர்வுகள் ஏற்பட்டு, பூமியின் மேற்பரப்பில் இருந்த பெருங்கண்ட நிலத்திட்டுகள் அப்படியே பாய் போல் சுருண்டு கடலுக்குள் மூழ்கத் தொடங்கின.
ஆய்வும் அவதாரமும்
பூமி பேரழிவை நோக்கிச் செல்வதைக் கண்ட அக்காலத்து விஞ்ஞானிகளான 'ரிஷிகளும், முனிவர்களும்' மற்றும் செல்வந்தர்களான 'தேவர்களும்' ஒன்றுகூடி நிலைமையை ஆய்வு செய்தனர்.
- செயற்கைக்கோள் மற்றும் கணினி பகுப்பாய்வு : இருடிகள் செயற்கைக்கோள் தரவுகளையும் சூப்பர் கணினிகளையும் (Supercomputers) பயன்படுத்தி புவியின் நிலையை ஒருங்கிணைத்துப் பகுப்பாய்வு செய்தனர்.
- மகாவிஷ்ணுவின் ஆணை : இப்போரழிவைத் தடுக்க இரண்யாட்சதனின் கட்டுப்பாடற்ற ஆழ்கடல் ஆய்வுகளை நிறுத்துவதும், மூழ்கிய நிலப்பரப்பை மீண்டும் மேலே கொண்டுவருவதும் அவசியமானது. இதற்காக அக்கால பேரரசரான மகாவிஷ்ணுவிடம் முறையிடப்பட்டு, ஆழ்கடல் ஆய்வகத்தில் இருந்த இரண்யாட்சதனின் ஆய்வு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டடன்.
கட்டுரை ஆசிரியர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக