Theory of Tsunamis
பாறைகள் பலவிதம் (6)
வேடசந்தூர் அருகே நவாமரத்துப்பட்டி
பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி (huge tsunami) தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன. கடல்வெள்ளத்தில் ஏதோவொரு பொருள் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது. அப்போது சேரும் சகதியும் அந்தப் பொருளின் மீது படிந்து, அது ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது. பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது. இப்போது அதன் மேற்பகுதிகள் சிதிலமடைந்து செதில்செதிலாக உள்ளன என்பது எனது கருத்து.
கடந்த ஆனி 27ஆம் நாள் (11.7.2017) செவ்வாய்கிழமை அன்று குழந்தைவேலன் சந்நிதியில் இருந்து வேடசந்தூர் செல்லும் வழியில் நவாமரத்துப்பட்டி என்ற ஊரின் அருகே இந்தப் பாறைகளைப் பார்த்தேன்.
கடந்த ஆனி 28ஆம் நாள் (12.7.2017) புதன்கிழமை யன்று வேடசந்தூரில் இருந்து அய்யலூர் செல்லும் வழியில் அய்யலூர் அருகே கீழேயுள்ள மூன்று பாறைகளையும் பார்த்தேன்.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக