Theory of Tsunamis
பாறைகள் பலவிதம் (3)
பாறைகள் பலவிதம் (3)
படங்கள் 3,4,5,6,7
இடம் - கல்குறிச்சி - பந்தல்குடி சாலையோரம்
பாறைகள் பலவிதம் (2)இன் தொடர்ச்சி இது.
அந்தமான் அருகே இருந்த தமிழகத்தின் நிலப்பரப்பளவிற்குச் சற்றொப்பச் சமமான மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கி உள்ளது. இதனால், “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள்)“ உருவாகி யுள்ளன. இந்த மாபெரும் கடல்கோள் நிகழ்ச்சியால், பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம் அழித்துள்ளன. இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.
எனது இக்கருத்தை அறிவியல் அடிப்படையில் நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன். ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன. ஆய்வு முடிவுகள் வரும் வரை, நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களை இந்த இழையில் பதிவு செய்கிறேன்.
தேசியநெடுஞ்சாலை 38இல், கல்குறிச்சியில் இருந்து பந்தல்குடி செல்லும்போது இந்தப் பாறைகளைக் கண்டேன்.
பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன. கடல்வெள்ளத்தில் ஏதோவொரு பொருள் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது. அப்போது சேரும் சகதியும் அந்தப் பொருளின் மீது படிந்து, அது ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது. பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது. இப்போது அதன் மேற்பகுதிகள் சிதிலமடைந்து செதில்செதிலாக உள்ளன என்பது எனது கருத்து.
please read the following also.
http://hkss.cedd.gov.hk/hkss/eng/education/GS/eng/hkg/chapter4.htm
அன்பன்
காசிஸ்ரீ நா.ரா. கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக