அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால் “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள்)“ உருவாகி யுள்ளன. இவற்றால், பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம் அழித்துள்ளன. இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.
ஹேவிளம்பி ஆனி 28 (12.07.2017) புதன்கிழமை அன்று, திண்டுக்கல் - திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலை எண் 83இல் அய்யலூரிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் இந்த செம்மண் மலையைப் பார்த்தேன்.
பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன. கடல்வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட செம்மண் இங்கு ஒரு மலைபோல் குவிந்துள்ளது. இந்த “பஞ்சம்தாங்கி ( Panjamthangi R.F.)” செம்மண் கிராவல் மலையானது (https://goo.gl/maps/gXa65qL8qdn ) பெருஞ் சுனாமியினால் உண்டானது என்பது எனது கருத்து. மேலும் கேரளம் தமிழகம் ஆந்திரா கருநாடகம் இங்கு உள்ள மண்மலைகள் எல்லாம் பெருஞ் சுனாமியினால் உண்டானவையே என்பதும் எனது கருத்து.
“ கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி” என்ற புறப்பொருள் வெண்பா மாலை பாடல்வரிகள் உண்மையானவை ஆகும். மிகைப்படுத்தி எழுதப்பட்டன அல்ல.
இந்த “பஞ்சம்தாங்கி மலை” உருவாவதற்கு முன்பே தமிழகத்தில் தமிழர்கள் தோன்றிக் குடிகளாக வாழ்ந்துள்ளனர் என்பது உண்மை. முறையான ஆய்வுகள் செய்யாமலேயே புறப்பொருள் வெண்பாமலையைப் புறந்தள்ளப் பார்க்கின்றனர்.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா. கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக