ஞாயிறு, 28 ஜனவரி, 2018

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் (8), படத்தில் உள்ள திருப்பூவணம் கோயில் பாறை இயற்கையானதா? அல்லது செயற்கையா?

Theory of Tsunamis  
பாறைகள் பலவிதம் (8), 
திருப்பூவணம் கோயில் பாறை 
இயற்கையானதா? அல்லது செயற்கையா? 

திருப்பூவணம் சிவலிங்கம் (திருப்பூவணன்) ஒரு சுயம்புலிங்கம். எத்தனையோ பிரளயங்களிலும் யுகங்களிலும் நிலைபெயராமல் இச் சிவலிங்கம் உள்ளது என்றும், பார்வதிதேவி வளர்த்த பாரிசாத மரத்தின் அடியிலே சுயம்புவாக முளைத்துத் தோன்றியது என்றும் புராணம் குறிப்பிடுகிறது. சிவலிங்கம் புராணதனமானது. அடுத்தடுத்து எத்தனையோ அழிவுகள், அடுத்தடுத்து எத்தனையோ திருப்பணிகள். ஆனாலும் சுயம்புலிங்கம் மட்டும் மாறாமல் உள்ளது.
தற்போதுள்ள கோயில் கருவறைக் கட்டுமானமானது வரகுணபாண்டியனால் கட்டப்பட்டது என்றும், அடுத்தடுத்து நடைபெற்ற திருப்பணிகளுடன் இன்றைய கோயில் கட்டுமானம் உள்ளது என்றும் கூறுகின்றனர். திருஞானசம்பந்தன் காலத்திற்கு முந்தைய தொன்மையான கல்வெட்டுகள் ஏதும் கிடைக்காத காரணத்தினாலும், திருஞானசம்பந்தன் பாடல் பெற்றுள்ள காரணத்தினாலும், இக் கோயிலின் தொன்மைக்குத் திருஞானசம்பந்தன் காலத்தையே வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரமாகக் கொள்கின்றனர்.


இந்நிலையில், ஹேவிளம்பி மார்கழி 9ஆம் நாள் (24.12.2017) ஞாயிற்றுக் கிழமை அன்று எனது வழிபோட்டின் போது இந்தக் கல் எனது கண்ணில் தட்டுப்பட்டது.
இயற்கையா? செயற்கையா?
இதை ஒரு கோணத்தில் பார்த்தால் இயற்கையான கல்போன்றும், மறு கோணத்தில் பார்த்தால் செயற்கையாகக் கட்டப்பெற்ற சுண்ணாம்புக் கல் போன்றும் எனக்குத் தோன்றியது.
கோயில் கட்டுமானத்தின் போது, கல் ஒன்றுடன் சுண்ணாம்பு சேர்த்து வைத்துக் கோயில் கட்டப்பெற்றுள்ளது. எத்தனையோ ஆண்டுகளாகக் கல்லுடன் சேர்ந்திருந்த சுண்ணாம்பும் இறுகிக் கல்லாகி விட்டதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.


இந்தக் கல்லின் படத்தை வேறுவேறு கோணங்களில் படம் எடுத்து இணைத்துள்ளேன். இது இயற்கையாக உண்டான கல்லா? அல்லது புராணதான காலத்தில் இருந்த கோயில் கட்டுமானத்தில் இருந்த ஒரு சிறு கல்லா? என அறிவியல் அடிப்படையில் ஆய்ந்தறிந்தால் திருப்பூவணத்தின் தொன்மையும் தமிழரின் வழிபாட்டுத் தொன்மையும் அறிவியல் அடிப்படையில் நிறுவிடலாம். அரசும், பல்கலைக்கழகமும் தேவையான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக