புதன், 10 ஜனவரி, 2018

Theory of formation of Himalayas பாறைகள் பலவிதம் (2) திருப்பரங்குன்றம் மலை உருவானது

Theory of formation of Himalayas 
பாறைகள் பலவிதம் (2) 
திருப்பரங்குன்றம் மலை உருவானது



கங்கன் என்ற விண்கோள் பூமியில் விழுந்த காரணத்தினால்  உண்டான (rim) விளிம்பு மலைத்தொடரின் ஒரு பகுதியே இமயமலையின் அடிப்பகுதியாகும். கங்கன் பூமியில் மோதிய போது சிதறுண்ட பாறைகளால்  திருப்பரங்குன்றம், அழகர்கோயில்மலை(யின் அடிப்பகுதி),  யானைமலை, திருமயம் மலை, திருச்சிராப்பள்ளிமலை முதலான  கிரானைட் மலைகள் உருவாகி யுள்ளன. 
இதுவே பூமியில் கல்தோன்றிய காலம்“ என்பதும் எனது கருத்து.

மேலும்,
கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியில் இயமலைப் பள்ளத்தாக்கில் (rim) இறங்கி யுள்ளது.  அந்த நீர்க்கோளிலில் இருந்த மணல்கள் எரிந்து விழுந்து,  உலகில் உள்ள பாலைவனங்கள் தோன்றியுள்ளன.  அந்த நீர்க்கோளில் இருந்த சேறும் சகதியும் சவடும் படிந்த காரணத்தினால்,  இமயமலை(யின் மேற்பகுதி), துருக்கி, அந்தமான் தீவுக் கூட்டங்கள், இந்தோனேசியா, ‘தாய்‘லாந்து, சவா சுமத்திரா, சப்பான் நிலப்பரப்புகளும் உருவாகியுள்ளன.
இதுவே பூமியில் “மணல் தோன்றிய காலம்“ என்பதும் எனது கருத்து.

அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால்  “பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி)“ உருவாகி யுள்ளன. இவை, பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகத்தை அழித்துள்ளன.  இக் கடல்வெள்ளங்களினால்தான் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.  
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பதும் எனது கருத்து.

இந்த மூன்று கருத்துகளையும்  அறிவியல் அடிப்படையில்  நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  ஆய்வு முடிவுகள் வரும் வரை,  நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களைப் பதிவு செய்கிறேன்.


திருப்பரங்குன்றம் மலையானது பூமி தோன்றும் போது, இந்த இடத்தில் இருந்த பாறைக்குழம்பு குளிர்ந்து உருவானது அல்ல.  கங்கன் என்ற விண்கோள் பூமியில் விழுந்து இமயமலைத் தொடரின் அடிப்பகுதி உருவாகி உள்ளது.  கங்கன் பூமியில் மோதிய போது தெரித்து விழுந்த ஒரு பகுதியே திருப்பரங்குன்றம் மலை ஆகும் என்பது எனது கருத்து.

அன்பன்
கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக