செவ்வாய், 9 ஜனவரி, 2018

Theory of Tsunamis கடல்வெள்ளம் tsunami பாறைகள், அழகர்கோயில் பாறைகள்

Theory of Tsunamis
கடல்வெள்ளம் tsunami பாறைகள்,
அழகர்கோயில் பாறைகள்

“எண்ணையைத் தடவிக் கொண்டு ஆற்றுமணலில் படுத்து உருண்டாலும் ஒட்டும் அளவிற்குத்தான் ஒட்டும்“ என்றொரு சொலவடை கேள்விப்பட்டுள்ளேன்.  கல்லூரி நாட்களில் கணிதம் பயின்றாலும் பல்கலைக்கழகப் பணிநாட்களில் தமிழ் கற்கும் பேறு கிடைத்தது.   அதுவும் திருப்பூவணம் தலபுராணத்தைப் படிக்கும் கிடைத்தற்கு அரிய பெரும்பேறு பெற்றேன்.  “புராணத்தில்  கூறப்பட்டுள்ள செய்திகள் யாவும் உண்மை, இட்டுகட்டிச் சொல்லப்பட்டன அல்ல“ என்ற உண்மையை உணர்ந்து கொண்ட பின்னர் தலபுராணங்களின் மீது எனக்கு ஒரு பற்று ஏற்பட்டது.  அதனால் திருப்பூவணம் தொடர்பான திருவிளையாடற் புராணம் இரசவாதம் செய்த படலத்தைப் படித்தேன்.  பின்னர் திருவிளையாடற் புராணத்தின் மற்ற பிற படலங்களையும், மற்றபிற தலபுராணங்களையும் படித்து அறிந்துகொள்ள முயன்று வருகிறேன்.


திருவிளையாடற் புராணமும், திருப்பூவணம் தலபுராணமும், மற்றும் நான் வாசித்த மற்றபிற தலபுராணங்களும் பண்டைத் தமிழகத்தைக் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) நிகழ்ச்சியை உறுதி கூறின.  கடல்கோள் என்பதை ஒரு புராணப்புனைவு என்று மட்டுமே கருதிக் கொண்டிருந்தேன்.  ஆனாலும் கூகுள்புவிப்படங்கள் (Google Map)  வழியாகப் புராணங்கள் குறிப்பிடும் இடங்களை பார்த்து, புராணம் கூறும் செய்திகள் உண்மையா? என அறிந்து கொள்ள முயன்றேன்.  எனது பார்வையில் கூகுள் புவிப்படங்கள் புராணம் குறிப்பிடும் கடல்வெள்ளத்தை (கடல்கோள்) உறுதி செய்வதாக இருந்தன.

திருப்பூவணக்காசி என்ற நூல் எழுதி வெளியிட்டதற்குப் பலனாக, இறையருளால் 2014ஆம் ஆண்டு இராமேச்சுரம் காசி பாதயாத்திரை செல்லும் பேறு கிடைக்கப் பெற்றேன்.  அதைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு நாக்பூர் காசி பாதயாத்திரையும், 2016ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும், 2017ஆம் ஆண்டும்  அறுபடைவீடு பாதயாத்திரையும் செல்லும் பேறு கிடைக்கப் பெற்றேன். பாதயாத்திரை நாட்களில் நான் ஏற்கனவே கூகுள்புவிப்படத்தில் பார்த்தறிந்த பல இடங்களை நேரில் காணும் வாய்ப்பு கிட்டியது.   பாதயாத்திரையின் போது நாங்கள் நடந்து செல்லும் வழியில் எனது கண்ணில் பட்ட பாறைகளை எல்லாம் என்னால் முடிந்த அளவிற்குப் படங்கள் எடுத்துள்ளேன்.  எனது பார்வையில் நான் பார்த்த பாறைகள் பலவும் புராணம் குறிப்பிடும் கடல்வெள்ளத்தை (கடல்கோள்) உறுதி செய்வதாக இருந்தன.

இமயமலை(யின் அடிப்பகுதி), திருப்பரங்குன்றம், அழகர்கோயில்மலை(யின் அடிப்பகுதி),  யானைமலை, திருமயம், திருச்சிராப்பள்ளி முதலான உலகில் உள்ள 
pure கிரானைட் பாறை மலைகள் அனைத்தும் கங்கன் என்ற விண்கோள் பூமியில் விழுந்த காரணத்தினால் உருவானவை என்றும், இதுவே பூமியில் கல்தோன்றிய காலம்“ என்பது எனது கருத்து.

உலகில் உள்ள பாலைவன மணல்களும், இமயமலை(யின் மேற்பகுதி), துருக்கி, அந்தமான் தீவுக் கூட்டங்கள், இந்தோனேசியா, ‘தாய்‘லாந்து, சவா சுமத்திரா, சப்பான் நிலப்பரப்புகளும், மற்றும் உலகில் உள்ள sedimentary கிரானைட் பாறைகளும் கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியில் இயமலைப் பள்ளத்தாக்கில் இறங்கிய காரணத்தினால் உருவானவை என்றும், இதுவே பூமியில் “மணல் தோன்றிய காலம்“ என்பதும் எனது கருத்து.

அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால் உண்டான “பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி)“ உருவாகி
பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகத்தை அழித்துள்ளதன.  இக் கடல்வெள்ளங்களினால்தான் தமிழகத்தில் மண்
 தோன்றி உள்ளது.  இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பதும் எனது கருத்து.

(1) புராணங்கள், (2) கூகுள் புவிப்படங்கள், (3) நான் கண்ட கல், மண், மணல் இவற்றினை நான் புரிந்துகொண்ட வகையில் தமிழகத்தைக் கடல்வெள்ளம் அழித்துள்ளது என்பது உண்மையே.  இருப்பினும், அறிவியல் அடிப்படையில் எனது மேற்கண்ட கருத்தை நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  ஆய்வு முடிவுகள் வரும் வரை,  நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களை இந்த இழையில் பதிவு செய்கிறேன்.  அன்பர்களின் மேலான கருத்தினை வேண்டுகிறேன்.



படம் (1)
அழகர்கோயில் செல்லும் வழியில் இதைப் பார்த்தேன்.  பார்ப்பதற்கு வெடிய மரத்தின் அடிப்பகுதிபோல் தோன்றியது.  ஆனாலும் அருகில் சென்று பார்த்தபோது பாறைபோல் தோன்றியது.  மரமா? கல்லா? கல்மரமா? என என்னால் உறுதி செய்ய இயலவில்லை.  

அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக