ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

மூன்று மிகமிகப் பெரிய நிகழ்வுகள்

 


மூன்று மிகமிகப் பெரிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறேன்.

1) 2000 கி.மீ. விட்டம் கொண்ட கங்கன் விழுந்தது,
பலகாலம் கழித்து அதே இடத்தில்
2) 300-420 கி.மீ. விட்டம் கொண்ட கங்கை என்ற விண்ணீர்க்கோள் விழுந்தது.
பலகாலம் கழித்து அந்தமான் அருகே
3) தமிழகத்தின் பரப்பளவிற்குச் சமமான நிலத்திட்டு பிரண்டு விழுந்து பெரும் சுனாமி உண்டாகி தென்னிந்தியாவை அழித்தது.

கங்கன் விழுந்த காரணத்தினால்,
1 அ) உலகிலேயே அதிகமான, உயரமான மலைச் சிகரங்களைக் கொண்ட இமயமலைத் தொடர் உருவானது,
1 ஆ) உலகிலேயே அகலமான கடல்பகுதி உருவானது,
1 இ) உலகின் பரப்பளவில் 29% பகுதியே நிலம் மட்டுமே மிஞ்சியுள்ளது. 71% நிலப்பகுதிகள் காணாமல் போனது,
1 ஈ)  29% நிலப்பகுதி கண்டங்களாகப் பிளவு பட்டு, இடப்பெயர்ச்சி அடையத் துவங்கியது,
1 உ) உலகிலேயே நீண்ட மலைத்தொடர் அமெரிக்கக் கண்டத்தில் உருவானது,
1 ஊ) உலகிலேயே நீண்ட “ ring of fire “ எரிமலைத் தொடர் உருவானது,
1 எ) பூமியின் கனஅளவு கூடியுள்ளது.


கங்கை விழுந்த காரணத்தினால்
2 அ) உலகிலேயே பெரும் பாலைவனங்கள் உருவானது.
2 ஆ) உலகிலேயே ஆழமான தக்களமேகன் பாலைவனம் உருவானது
2 இ) கங்கன் விழுந்த காரணத்தால் உண்டான (2000 கி.மீ. விட்டம் கொண்ட) பள்ளதாக்கின் பெரும் பகுதி மேடானது.
2 ஈ) உலகிலேயே ஆழமான கடல் பகுதிகள் உருவானது.
2 உ) இந்தோனேசியா சப்பான், துருக்கி முதலான சவடுமண் நிலப்பரப்புகள் உருவானது,
2 ஊ) ஏழு பெரும் நதிகள் உருவானது,
2 எ) உலகில் உள்ள மடிப்பு மலைகள் தோன்றியது.
2 ஏ) கடல் நீரின் அளவு கூடியது, கடல் உப்பு நீரானது.
2 ஐ) சிம்சுமாரம், ஆமை, முதலை முதலான உயிரினங்கள் பூமியில் இறங்கியது,
2 ஒ) உலகெங்கும் வண்டல்மண் திட்டுக்கள் உருவானது,

பெரும் நிலப்பரப்பு பெயர்ந்து விழுந்த ( அந்தமான் அருகே பிரளயம் ஏற்பட்ட ) காரணத்தினால்,
3 அ) மதுரையை மையமாகக் கொண்டு பெருஞ் சுனாமி தென்னிந்தியாவைத் தாக்கி அழித்தது,
3 ஆ) பண்டைய மதுரை அழிந்தது, குமரிக்கோடு அழிந்தது,
3 இ) நாகமலை பசுமலை உருவானது
3 ஈ) சிவகளை மலை உருவானது
3 உ) தென்னிந்தியா தக்கான பீடபூமியாக மாறியது
3 ஊ) மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வண்டல்மண் படிந்தது
3 எ) பிரளயப் பிளவுப் பாறைகள் உருவானது
3 ஏ) தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகம் முழுவதும் bedding sedimentary திட்டுகள் உருவாகியுள்ளது
3 ஐ) தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள குன்றுகளின் உச்சியில் எல்லாம் பொக்குப்பாறைகள் உருவாகி இருப்பது,

மேற்கண்ட காரணிகளை புராணத்தின் அடிப்படையில் விளக்கினால், விளக்கக் கோட்பாட்டில் பிழைகள் இருக்காது.  எனவே வரும் நாட்களில், மேற்கண்ட காரணிகளுக்கான விஞ்ஞானிகளின் கோட்பாடுகளில் காணப்படும் பிழைகளை மட்டும் சுட்டிக்காட்டி இந்த மூன்று இழைகளையும் தீபாவளியோடு முடித்துக் கொள்ளப் பார்க்கிறேன்.
..........................................

கங்கன் என்ற சொல் அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது.
வில்லிபாரதத்தில் இடம் பெற்றுள்ளது..

துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி - அகம் 44/8

உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து - வில்லி:19 10/2
கனிட்டனது எண்ணம் அ கங்கன் ஆகிய - வில்லி:21 34/1
கங்கன் என்று தன் அருகு இருந்தருளிய கடவுள் - வில்லி:22 22/1
எற்றிய கவறு நெற்றி எதிர் உற இருந்த கங்கன்
நெற்றியில் சென்று வாசம் நிறைத்த குங்குமத்தின் சேற்றால் - வில்லி:22 125/1,2
நன்றி - http://tamilconcordance.in/

.................................................

Hari Krishnan to mintamil
25 Jun 2015, 12:05:45
விராட பர்வத்தில் தர்மபுத்திரன் புனைந்த பெயர் கங்கன்.  ஆனால் அதன் உச்சரிப்பு Kanka.  கங்க என்பது கழுகு, பருந்து, கருடன் எல்லாவற்றுக்கும் வழங்கி வரும் பெயர்.  கருடவாகனன் என்பதால் கங்கன் என்கிறார். 
..........................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக