கல்மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 செப்டம்பர், 2020

அழகர்கோயிலில் கிடப்பது கல்லா? கல்மரமா?

அழகர்கோயிலில் கிடப்பது 

கல்லா? கல்மரமா?

அழகர்மலைக்கோயில்  அடிவாரத்திலிருந்து உயரத்தில் உள்ள அருள்மிகு இராக்கச்சி யம்மன் தீர்த்தக்கரை வரை சுமார் 4கி.மீ. தூரம்.  இந்தப் பாதையில் எத்தனையோ பாறைகள் உள்ளன.  அழகர்கோயில் பழமுதிர்சோலை அருள்மிகு சுப்பிரமணியர் கோயிலுக்கும் அருள்மிகு இராக்கச்சியம்மன் கோயிலுக்கும் செல்லும் பாதையில், இரண்டு மலைகளுக்கு இடையே உள்ள கணவாய் போன்றுள்ள நடைப்பாதையில்,  அந்தப் பாதை ஓரிடத்தில் இடதுபுறமாகத் திரும்புகிறது.   பேருந்தில் செல்லும் பாதையும் நடந்து செல்லும் பாதையும் இந்த இடத்தில் ஒன்று சேர்கின்றன.   இந்த இடத்தில் பாறைகளுக்கு இடையே  உள்கூடான ஒரு மரம் புதைந்து கிடப்பதைக் காணலாம்.   

இது பார்ப்பதற்கு மரம் போன்று தோன்றினாலும், இது மரம்  அல்ல! இது ஒரு பாறை.  வடிவத்தினால் இது மரம் போன்று தெரிவதால், இது ஒரு மரமாக இருந்து கல்லாக மாறியிருக்கலாம்.

இது ஒரு மரமாக இருந்து கல்லாக மாறியிருக்கும்   “கல்மரம்” போன்ற  தோற்றத்தில் உள்ளது.   ஆயுதங்கள் ஏதும் இல்லாமலேயே கைகளால் அதன் பாகங்களை பிரித்தெடுத்துப் பார்க்க முடிந்தது.    இந்தப் பாறையின் சிதைந்த பகுதியைக் கையால் நிமிட்டிப்  பார்த்தால், குறுனைகள் (grains) வருகின்றன.  இந்தக் குறுனைகளை நன்கு கழுவிப் பார்த்தால்   பல வண்ணங்கள் கொண்ட படிகக்கல் (Quartz, குவார்ட்ஸ்) போன்று இருந்தன.

அழகா்காேயிலில் இருந்து எடுத்து வந்த பாறைகளின் சிறுசிறு பகுதிகளைப் புவியியல் பேராசிரியராகப் பணியாற்றும் நண்பரிடம் காட்டியபோது,  அவா் இது, '' Highly Sheared / well defined cleavage along which the rock gets peeled.'' என்று கருத்துத் தெரிவித்தார். 

புவியியல் துறையில்  பணியாற்றிய நண்பர் ஒருவர், இது "cleavage along which the rock gets cleaved"  என்றிருக்க வேண்டும். peeling   வேறு  cleaving வேறு.  CLEAVAGE PLANE என்பது A REGULAR PLANE OF FRACTURE.   PEELING என்பது வேறு...ONION PEEL......THE PAINT IS PEELING OFF..... என்று கருத்துத் தெரிவித்தார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வுமாணவர் ஒருவர், நாகமலையில் உள்ள sedimentary கற்களை  XRD முறையில் ஆய்வு செய்துள்ளார்.  அவரது ஆய்வுக் கட்டுரை ஒன்று படித்தேன்.   XRD ஆய்வில் ஒரு கல்லின் , கனிமத்தின், தாதுவின் மூலக்கூறுகளை அறியலாம்.  இது ஒரு இயற்பியல் சார்ந்த ஆய்வு முறை.    ஒரு பொருளின் மாதிரியில் (SAMPLE) என்னென்ன தனிமங்கள் உள்ளன என இந்த ஆய்வில் துள்ளியமாக அறியலாம். 

அழகர்கோயிலில் உள்ளது சாதாரணக் கல்லா? அல்லது கல்மரமா? என்று உறுதி செய்வதற்காக, XRD ஆய்விற்கு இந்தக் கல்மரத்தை உட்படுத்தினால் என்ன என்று மனதிற்குள் தோன்றியது.

எனவே இந்தக் கல்மரத்தின் மேல்பகுதி, உள்பகுதி என்று சில மாதிரிகளை அதிலிருநது சிறிது பெயர்த்தெடுத்து XRD சோதனைக்கு உட்படுத்தினேன்.

சோதனை மாதிரி 1 :  அழகர்கோயிலில் மரம் போன்று எனக்குத் தோன்றியதின் மேற்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டதன் துகள்கள்.

சோதனை மாதிரி 2:  அழகர்கோயிலில் மரம் போன்று எனக்குத் தோன்றியதின் உட்பகுதி  இருந்து எடுக்கப்பட்டதன் துகள்கள்.

சோதனை மாதிரி 3:  திருவக்கரை கல்மரத்தில் இருந்து எடுக்கப்பட்டதன் துகள்கள்.

மேற்கண்ட  இந்த மூன்று மாதிரிகளையும் XRD என்ற முறையில் ஆய்வுக்கு உட்படுத்தினேன்.  ஆய்வின் முடிவில் மேற்கண்ட  மூன்று மாதிரிகளுமே  ஒத்தநிலையில் உள்ள மூலக்கூறுகளால் ஆனவை என்று முடிவுகள் கிடைத்தன.
அதாவது XRD ஆய்வின்படி திருவக்கரை கல்மரத்தின் பௌதிக இயல்புகள் அனைத்தும் அழகர்கோயில் கல்மரத்திற்கும் இருந்தது.   திருவக்கரையில் உள்ளது கல்மரம் என்றால் அழகர்கோயிலில் உள்ளதும் கல்மரம் தான் என்று முடிவாகிறது.

XRD ஆய்வு முடிவின் கிடைத்த படத்தைக் கீழே இணைத்துள்ளேன்.கல்மரம்,  tree fossil,

அழகர்மலை கல்மரம் மாதிரியிலும், திருவக்கரை கல்மரம் மாதிரியிலும் SILICATES அதிகம் உள்ளன என்பதை  இந்த ஆய்வு உறுதி செய்கிறது.  சிலிகேட்  கூடுதலாக இருப்பதைக் கொண்டு கல் மரமா , கல்லா என்று ஒருக்காலும் சொல்ல முடியுமா?  மரம் என்பதற்கு அதன் வடிவமே மிகவும் சரியான சான்றாக இருக்கும். 

அழகர்கோயில் கல்மரத்தில் மரப்பட்டைகள் போன்று தோற்றம் தெரிகிறது. ஆனால் இந்தக் கல்மரத்தின் முழுவடிவத்தையும் காணமுடியாதபடி மண்ணும் செடிகொடிகளும் மறைத்துள்ளன.  இதன் பின்பகுதியையும் பார்க்க வேண்டும். இதன் பின்பகுதி மரம் போன்று வட்டவடிவில் இருக்கிறதா? என உறுதி செய்ய வேண்டியுள்ளது!

இதன் பின்பகுதியானது மரம் போன்ற தோற்றத்தில் அமைந்து இருந்தால், இது 100 %  “கல்மரம்தான்“ என உறுதி செய்து விடலாம்.  கடல்கோள் நிகழ்வின் போது, இந்த மரம் கிடக்கும் உயரமான இந்த இடம்வரை கடல்வெள்ளம் வந்துள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் உறுதிப்படுத்திடலாம்.

அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

1 May 2016, 18:09

அழகர்கோயில் கல்மரம் படங்கள் அனைத்தும் இந்த முகவரியில் பதிவு காணக்கிடைக்கும். https://drive.google.com/file/d/0B02g7RFB0HurWWpUbEJNX2FUbDg/view?usp=sharing

--------------------------------------------------------------

அழகர்கோயில் மலையில் மற்றொரு கல்மரம்.  2017ஆம் வருடம் அழகர்கோயிலுக்குச் செல்லும் போது,  மலைச்சாலை தொடங்கும் இடத்திற்கு அருகிலேயே கல்மரம் போன்ற வடிவத்தில் பாறைகளுக்குக் கீழே இருப்பதைக் கண்டேன்.

மஞ்சள் கோட்டிற்குள் உள்ளது ஒரு மரம் போன்று தெரிகிறது அல்லவா,  அதன் பகுதிகளைக் கை நெகத்தால் பெயர்த்து எடுத்துள்ளேன்.  இதைப் பொக்குப்பாறை என்கின்றனர் மதுரைவாசிகள்.   மஞ்சள் கோட்டிற்கு மேலே உள்ளது இறுகிய கடினமான பாறை.   கடினமான பாறைக்குக் கீழே கல்மரம் போன்ற வடிவத்தில் உள்ளது சாதாரணக் கல்லா?  அல்லது கல்மரமா? என ஆராயந்து பார்க்க வேண்டும்.  இதன் பின்பகுதியைத் தோண்டிப் பார்த்து,  இதன் வடிவம் மரம் போன்று இருந்தால்,   இதையும் ஒரு கல்மரம் என உறுதி செய்யலாம்.   

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
11.07.2017
-----------------------


ஞாயிறு, 12 ஜூலை, 2020

வேடசந்தூரில் கிடப்பது கல்லா? கல்மரமா? - புவியியலாளர் சிங்கநெஞ்சம் அவர்களின் பதிவு இது.

வேடசந்தூரில் கிடப்பது கல்லா? கல்மரமா?
புவியியலாளர் சிங்கநெஞ்சம் அவர்களின் பதிவு இது.




Singanenjam Sambandam, Kalairajan Krishnan மற்றும் 4 பேருடன் இருக்கிறார்.
12 ஜூலை, 2017 · 
கல் மரமா.........மரமா......

நம் நண்பர் காளைராஜன் ஐயா அவர்கள் கீழேயுள்ள படத்தை அனுப்பி , வேடசந்தூர் அருகே உள்ள இது " கல்லா ....மரமா " எனக் கேட்டிருக்கிறார். அதற்கான பதிலை கீழே தருகிறேன் .

வணக்கம் காளை ஐயா ,
கல் மீது தாங்கள் கொண்டுள்ள காதலுக்குத் தலை வணங்குகிறேன்.
நீங்கள் படமே அனுப்பாமல் வேடசந்தூர் அருகே கல்மரம் இருக்கிறது என்று எழுதியிருந்தாலும், நான் “இல்லை..இல்லை....இருக்க வாய்ப்பில்லை” என்றுதான் எழுதியிருப்பேன். காரணம், படிவப் பாறைகளில் மட்டுமே தொல்லுயிர் எச்சங்கள் (ஃ பாசில்கள்-FOSSILS) கிடைக்கும். வேடசந்தூர் பகுதியில் படிவப் பாறைகள் கிடையா.
பாறைகள் பொதுவாக மூன்று வகை .

1. பாறைக் குழம்பு (MAGMA) குளிர்ந்து இறுகி உருவாகும் அழற்பாறைகள் அல்லது தீப்பாறைகள் ( IGNEOUS ROCKS) .
2. நீர்நிலைகளில் படியும் கூழாங்கற்கள், குறுங் கற்கள் , மணல், குறுமணல் , களிமண் போன்றவை இறுகி கெட்டிப்பட்டு உருவாகும் படிவப் பாறைகள் (SEDIMENTARY ROCKS).
3. மேற்சொன்ன இருவகைப் பாறைகளும் மிகுந்த அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் உட்பட்டு உருமாறி உருவாகும் உருமாற்றுப் பாறைகள் ( METAMORPHIC ROCKS)
இவற்றில் படிவப்பாறைகள் தவிர மற்ற இருவகைப் பாறைகள் மிக அதிக வெப்பத்தில் உருவாவதால் தாவரங்களோ மற்ற உயிரினங்களோ இவற்றில் படித்திருக்க வாய்ப்பே இல்லை.( MICROORGANISMS EXCLUDED).

ஆதலின் நீங்கள் அனுப்பியுள்ள படம் கல்லோ கல் மரமோ அல்ல, மட்கி வரும் மரமே என உறுதிபட கூறலாம்.
தமிழகத்தில் படிவப் பாறைகள் மற்றும் அதன்பின் படிந்த படிவங்களை காட்டும் வரைபடம் இணைத்துள்ளேன். இந்த இடங்களைத் தவிர வேறு எங்கேயும் ஃபாசில்கள் இருக்காது..

இராகவன் சிவராமன் அருமையான தகவல் ஐயா.. மிக்க நன்றி ஐயா
Singanenjam Sambandam நன்றி தம்பி
Mana Valan திருப்பதி திருவக்கரை இந்த இடங்களில் உள்ள கல்மரம்?
Singanenjam Sambandam வணக்கம் மணவாளன் .....திருவக்கரையில் உள்ள கல்மரங்கள் CUDDALORE SANDSTONE எனும் படிவப் பாறைகளில் படிந்துள்ளன . திருவக்கரையில் மட்டுமல்ல , நெய்வேலி, கடலூர் ஆகிய இடங்களில் உள்ள CUDDALORE SANDSTONE பாறைகளிலும் இவை உள்ளன. திருவக்கரை பகுதியில் CUDDALORE SA…மேலும் பார்க்கவும்
Srinivasan Rajagopal Kalai rajan sir may be showing the photograph of cuddalore sandstone area withan exposed wood fossil.The photo from vedasandur is likely to be wrong.The red colured soil tone of the photo is tempting me to say this . But the rock fragments scattered appear to be non sedimentary. As Singanenjam sir is telling it a decaying tree fell down during the "vardha Puyal" .
Kalairajan Krishnan Sir, it is not a decaying tree, but a rock. I suspected that it may be a tree fossil.
Srinivasan Rajagopal the tirumala area is part of cuddapah super group of rocks with quartzites predominantly.it is of proterozoic age with 2500 to 1500 MY old. there was no possibility of profuse vegetation at that time.
Srinivasan Rajagopal Singanenjam sir's tamizhakkam is amazingly beautiful and enjoyable to reading. A full fledged book on geology atleast for the immediate generation can be done by him only as on today in Tamilnadu, All possible secretarial assistance iam ready to do .Kadavulin Arulum needa Ayulum sirkku irukkum.
Vijay Kumar True sir, Thamizh konji vilaiyadukirathu geologyai thamizhil padika enna oru makilchi...
Saravana Kumar S Geo Thanks sir support to tamil geology student.... because I am also tamil student....i am happy to read from tamil geology
Singanenjam Sambandam சீனு, நம்மிடையே உள்ள நட்பின் பயனாய் நீங்கள் நல்லுரை வழங்கியுள்ளீர்கள் . மிக்க நன்றி. நிச்சயமாக நல்லன செய்யலாம்.
Singanenjam Sambandam விஜயகுமார், பூபதி , சரவணகுமார் அனைவருக்கும் நன்றி.
Mana Valan வணக்கம் இது கல்மரம் தானே சார்.
Vijay Kumar Mele ulla photo natural arch, kalmaram kidaiyathu. When rocks are subjected to erosion by natural agents like wind and water natural archs form
Boopathi Duraisamy What a beautiful reply in Tamil. Translating geology from English to Tamil, Sir is always sir.
Singanenjam Sambandam இல்லைங்க மணவாளன் , இது "NATURAL ARCH" விளக்கம் கீழே....திருப்பதி – திருமலை தோரணக் கல்
நேச்சுரல் ஆர்ச் என ஆங்கிலத்திலும் ஷிலா தோரணம் என்று தெலுங்கிலும் ( ஷிலா என்றால் பாறை அல்லது கல் என்று பொருள்) அழைக்கப்படும் தோரணக்கல் திருப்பதி-திருமலையில் உள்ளது. …மேலும் பார்க்கவும்
7
Kalairajan Krishnan வணக்கம் ஐயா, தங்களது அன்பிற்கும் விரிவான விளக்கத்திற்கும் நன்றி யுடையேன். நான் வேடசந்தூர் அருகே பார்த்துப் படம் எடுத்துப் பதிவு செய்துள்ளது 100% கல். நான் அது கல் என்பதை உறுதி செய்த பின்னரே படம் எடுத்தேன்.
அது கல்மரமா? என்பதுதான் ஐயம்.
Singanenjam Sambandam தவறான புரிதல் ஐயா......அங்கே கல்மரம் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஒரு மாதிரி எடுத்து வையுங்கள். சென்னை வரும்போது பார்க்கலாம்.
Kalairajan Krishnan அப்படியே செய்கிறேன் ஐயா.
Mana Valan விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா.
Senguttuvan Govindasamy விழுப்புரம் மாவட்டத்தில் திருவக்கரையில் உள்ளவை கல்மரங்கள்தானே நட்பே?
Singanenjam Sambandam ஆமாங்க இளவேனில் (உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது) , FOSSIL FUELS என்று அழைக்கப்படுகிற பழுப்பு நிலக்கரி, நிலக்கரி, பெட்ரோ லியம் , எரிவாயு இவை எல்லாமே படிவப் பாறைகளில் மட்டுமே கிடைக்கும். நம் மாநிலத்தில் படிவப் பாறைகள் உள்ள இடங்களை படத்தில் காட்டியுள்ளேன்
இளவேனில் சௌ நன்றி!! :)
பிற மாநிலங்களில் எங்கெங்கு உள்ளது என்கிற தரவு உள்ளதா? அங்கும் எரிவாயு எடுக்கும் திட்டம் ஏதும் நடப்பில் உள்ளதா?
Singanenjam Sambandam விழுப்புரம் மாவட்டத்தில் திருவக்கரையில் உள்ளவை கல்மரங்கள்தானே நட்பே?
ஆமாங்க செங்குட்டுவன் , அவ…மேலும் பார்க்கவும்
Singanenjam Sambandam பிற மாநிலங்களில் எங்கெங்கு உள்ளது என்கிற தரவு உள்ளதா? அங்கும் எரிவாயு எடுக்கும் திட்டம் ஏதும் நடப்பில் உள்ளதா? கீழேயுள்ள வரைபடத்தைப் பாருங்கள் இளவேனில்
Srinivasan Rajagopal Vedasandur zoomed photo was seen again today with cool mind and it is a weathered gneissic rock which is banded closely. the rock is also jointed closely resulting in a ribbed sectional appearance. Theses closely spaced joints are parallel to foliation .
Kalairajan Krishnan பாறையைத் தோண்டித் தனியாக எடுத்து, மண்ணில் புதைந்துள்ள அதன் மறுபக்கத்தைப் பார்த்தால், அதன் முழு வடிவம் தெரிய வரலாம்.
Srinivasan Rajagopal it not a decayed tree Iam very sorroy for the wrong analysis made yesterday.
Srinivasan Rajagopal Lignite occurs at shallow depth 100m to 150m at from the surface at Neyveli .that is why opencast mining is done to mine them.Further south in mannagudi basin Lignite occurs at about 300m depth . mannargudi town is floating in Lignite below.( hence it can not be mined). At Ramanathapuram basin it occurs at 425 to 450m depth from the surface.
Srinivasan Rajagopal The oil and gas occurs at even grater depth in cauvery basin ( nagapattinam and ramanathapuram-on shore and offshore) at even 1 to 1.5 Km deep. which may be depth of the basement crystalline rock also.. My ONGC friends told that thy got in the fractures of basement rock also may be as migratory formation.Singanenjam sir may correct the above information if needed.
Thiagarajan Mcc Excellent
Singanenjam Sambandam மிக்க நன்றி சீனு . காளை ஐயா அவர்கள் கொஞ்சம் sample கொண்டு வந்தால் ஐயம் திரிபுக்கு இடமின்றி தெளிவாக்கிவிடலாம்.
------------------------------------

சனி, 9 நவம்பர், 2019

கல்லா? கல்மரமா?

கல்லா? கல்மரமா?


சிவகங்கை மாவட்டத்தில் கல்லாகி போன காதலர்களின் கதை 
முகநூல்பதிவு -  Sugar Jayabalan  9 நவம்பர், 2018, பிற்பகல் 7:55


நூற்றாண்டுகளை கடந்து இன்றும் இப்பகுதி மக்களால் நினைவு கூறப்படுகிறது. மானாமதுரை- சிவகங்கை சாலையில் வேலூர் விலக்கு ரோட்டில் ஒரு கி.மீ. தூரம் சென்றால், அதிகரை எனும் கிராமத்திற்கு கிளைச்சாலை பிரிகிறது. நத்தைபுரக்கி கிராமத்தை அடுத்த அதன் அருகே உள்ள பொட்டல் வெளியில் ஐந்தரை அடி உயரத்தில் தூண் போல ஒரு கல்லும், நான்கடி உயரத்தில் சாய்ந்த நிலையில் ஒரு கல்லும் உள்ளன. இந்த கற்தூண்கள் காதல் தோல்வியால் கல்லாகி போன காதலர்கள் என இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

மேலும், அந்தக் கற்களின் காதல் கதை என அப்பகுதி மக்கள் பிளாஷ்பேக் ஒன்றையும் சொல்கிறார்கள். அதாவது, பழங்காலத்தில் சகோதர சகோதரி உறவு உள்ள இளைஞனும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்களது காதலை அவர்கள் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இருவரும் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வந்து, கண்ணீர் சிந்தியபடி கடவுளை வேண்டி கல்லாக மாறி விட்டனர் என்கிறார்கள் அவர்கள். அதோடு, இந்த தூண்களை வழிபட்டால் தங்களின் காதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இப்பகுதி காதலர்களின் மத்தியில் நிலவுகிறது.

இதனால் பல நூறாண்டுகள் கடந்தும் உறுதியாக கல்லாக நிற்கும் இந்த காதலர்களை வழிபட இன்றைய இமெயில், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் காதலர்கள் படையாக வந்து கொண்டிருக்கின்றனர். இங்கு வழிபட்டு, காதல் நிறைவேறி திருமணம் முடித்துக் கொண்ட ஜோடிகளும் மீண்டும் வருகின்றனர்.

இதையெல்லாம் மிஞ்சும் விதமாக நல்ல காதலன் அல்லது நல்ல காதலி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வருபவர்களும் இங்கு வருவது உண்டாம்.

கடந்த சில ஆண்டுகளாக இங்கு நிறைய காதல் ஜோடிகள் வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அவ்வாறு வருபவர்களில் சிலர், இந்தக் கற்களின் கீழ் வளையல், மஞ்சள், பொட்டு, காசு வைத்து சாமி கும்பிட்டு விட்டு செல்கின்றனராம். இரண்டே இரண்டு கற்கள், வெயில், மழையில் நனைந்தபடி.. காதல் சின்னமாக இதை சிலர் சொல்லப் போக.. இந்த கல்வட்ட கல்லுக்குள் புதைந்துள்ள மர்மம் என்னவோ.. தொல்பொருள் ஆய்வாளர்கள் வந்து விளக்கினால்தான் உண்டு!
-சிவகங்கை சீமை-

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

கல்மரம், tree fossil,

கல்மரம்

குஜராத்தில் சோப்பரி (Chobari, Gujarat 363520) என்ற ஊரின் அருகே மிகப்பெரிய கல்மரம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.


கூகுள் புவிப்படத்தில் இதைப் பதிவு செய்து வைத்துள்ளனர்.
https://goo.gl/maps/5ZNbGLJH5DB2,  22°15'31.2"N 71°11'32.6"E, 22.258652, 71.192381


இதே போன்ற அமைப்பில் அழகர்கோயில் மலையிலும் பாறைகள் காணக்கிடக்கின்றன.  அழகர்கோயில் மலைகளில் மரங்கள் போன்று காணக்கிடக்கும் பாறைகளை அறிவியல் அடைப்படையில் ஆராய வேண்டும்.





குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்ட நிகழ்ச்சியைப் பல்வேறு தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. எல்லாவற்றையும் விட மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் திருவிளையாடற்புராணம் பதிவு செய்துள்ளது. பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.
பண்டைக்காலத்தில், இந்தப் பாறை கிடக்கும் இடத்திற்கு அருகில்  இருந்த மரமோ, அல்லது வேறு ஏதோ ஒரு இடத்தில் இருந்த மரமோ கடல்வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இந்த இடத்தில் படிந்து படிமமாக மாறியுள்ளது என்பது எனது கருத்து.

குஜராத்தில் கிடக்கும் கல்மரத்தின் மேல் படிந்துள்ள பாறைகளை யெல்லாம் அகற்றிய பின்னரே அது கல்மரம் எனக் கண்டறிந்துள்ளனர். 
அதுபோல், அழகர்கோயில் மலையிலும் படத்தில் மரம் போன்று தோற்றமளிக்கும் பாறையின் முழுவடிவத்தையும் கண்டறிய வேண்டும். குறிப்பாக இந்தப் பாறையின் மறுபக்கத்தைக் கண்டறிய வேண்டும், மேலும் இந்தப் பாறையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் கண்டறிய வேண்டும். அதன் பின்னரே இது கல்லா? அல்லது கல்மரமா? என்பதை உறுதி செய்ய இயலும் எனக் கருதுகிறேன்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்


வெள்ளி, 25 ஜனவரி, 2019

வேடசந்தூர் சாலையோரம் கிடக்கும் இது கல்லா? மரமா? கல்மரமா?

கல்லா? மரமா? கல்மரமா?

அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால்  “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள் - huge Tsunami)“ உருவாகி யுள்ளன.  இவற்றால்,  பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம்  அழித்துள்ளன.  இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது. 
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.
எனது இக்கருத்தை அறிவியல் அடிப்படையில்  நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  ஆய்வு முடிவுகள் வரும் வரை,  நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களைப் பதிவு செய்கிறேன்.


வேடசந்தூரில் இருந்து அய்யலூர் செல்லும் வழியில் அய்யலூர் அருகே இந்தப் பாறையை ஆனி 28 (12 ஜுலை 2017) புதன் கிழமை காலையில் பார்த்தேன்.
இது பார்ப்பதற்கு ஒரு மரத்தின் படிமம் போல் எனக்குத் தோன்றியது.  நான் பாதயாத்திரையின் போது படங்கள் எடுத்த காரணத்தினால் மற்ற யாத்திரிகள் எல்லோரும் எனக்கு முன்னே சென்றுவிட நான் மட்டும் காலதாமம் ஆகிவருவதை அறிந்து மற்றபிற யாத்திரிகர்கள் எனக்கு அடிக்கடி அலைபேசியில் பேசி என்னை விரைந்து வருமாறு அழைத்தனர்.  அதனால் நேரமின்னை காரணமாகவும், மண்ணைத் தோண்டிப் பார்க்கும் வகையிலான ஆயுதங்கள் ஏதும் என்னிடம் இல்லாத காரணத்தினாலும் என்னால் இந்தப் படிமத்தின் மறுபக்கத்தைத் தோண்டிப் பார்த்துக் கண்டறிய முடியாமல் போனது. 



இந்தப் பாறையின் மறுபக்கத்தைக் கண்டறிய வேண்டும், மேலும் இந்தப் பாறையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் கண்டறிய வேண்டும்.  இவ்விரண்டையும் கண்டறிந்தால் மட்டுமே இது ஒரு மரத்தின் படிமம் என்பதை உறுதி செய்ய இயலும் எனக் கருதுகிறேன்.

பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.
இந்தப் பாறை கிடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தொப்பசாமி மலையில் பண்டைக்காலத்தில் இருந்த மரமோ, அல்லது வேறு ஏதோ ஒரு இடத்தில் இருந்த மரமோ  கடல்வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இந்த இடத்தில் படிந்து படிமமாக மாறியுள்ளது என்பது எனது கருத்து.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைரசான்

வெள்ளி, 9 மார்ச், 2018

Theory of Tsunamis மணவூரில் ( கீழடியில் ) கிடப்பது கல்லா ? கல்மரமா ?

 Theory of Tsunamis
கல்லா ? கல்மரமா ? (is it a tree fossil ?)

மாசி 24, (08 மார்ச் 2018) வியாழக் கிழமை, நண்பர்களுடன் கீழடி அருகே ( பண்டைய மணவூரில் ) தொல்லியல் ஆய்வு நடைபெறும் இடத்தைச் சென்று பார்த்து வரும் வாய்ப்புக் கிடைத்தது.
அகழாய்வு நடைபெற்ற குழிகளை எல்லாம் தடம் தெரியாமல் மூடியிருந்தனர். அடுத்த கட்ட ஆய்வுகள் இன்னும் துவங்கப்படாத காரணத்தினால் அங்கே யாரும் இல்லை.
திரும்பும் போது, அருகில் இருந்த முனீசுவரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டோம். அங்கே இருந்த ஒரு கல் மட்டும் எங்கள் அனைவரின் கண்களையும் கவர்ந்து கவனத்தை ஈர்த்தது.

கல்லா ? கல்மரமா ?

வருடாந்திர வலையத்தைச் (annual rings) சரியாகக் காணமுடியவில்லையே? என்றேன். எல்லா மரங்களுக்கும் வருடாந்திர வலையம் தெரியாது என்றார் நண்பர்.

Keeladi Manavoor Sri Munieswarar temple



மதுரையைத் தாக்கி அழித்த கடல்வெள்ளம் (சலதி வெள்ளம், ஆழிப் பேரரை, சுனாமி, Tsunami ) பண்டைய பாண்டிய சேர சோழ நாட்டில் இருந்த தருக்கள் அனைத்தையும் சாய்த்து கொத்தி எடுத்து எல்லாத் திசைகளும் அதிர்த்து எறிந்தது எனத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

கீழடி, மணவூர் கல்மரம் ( tree fossil )

கீழடி, மணவூர் கல்மரம் ( tree fossil )

கீழடி, மணவூர் கல்மரம் ( tree fossil )

திருவிளையாடல் புராணம் 1299.
கொதித்து எழுந்து தருக்கள் இறக் கொத்தி எடுத்து எத்திசையும் 
அதிர்த்து எறிந்து வகைள் எல்லம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப் 
பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில் 
உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல்

திருவிளையாடல் புராணம் 1302.
மண் புதைக்கத் திசை புதைக்க மயங்கி இருள் போல்  வருநீத்தம் 
விண் புதைக்க எழு மாட வியன் நகரின் புறத்து இரவி 
கண் புதைக்க வரும் அளவில் கண்டு அரசன் நடுங்கிப் 
பெண் புதைக்கும் ஒருபாகப் பிரான் அடியே சரண் என்னா

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்