கல்லா? மரமா? கல்மரமா?
அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால் “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள் - huge Tsunami)“ உருவாகி யுள்ளன. இவற்றால், பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம் அழித்துள்ளன. இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.
எனது இக்கருத்தை அறிவியல் அடிப்படையில் நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன். ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன. ஆய்வு முடிவுகள் வரும் வரை, நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களைப் பதிவு செய்கிறேன்.
வேடசந்தூரில் இருந்து அய்யலூர் செல்லும் வழியில் அய்யலூர் அருகே இந்தப் பாறையை ஆனி 28 (12 ஜுலை 2017) புதன் கிழமை காலையில் பார்த்தேன்.
இது பார்ப்பதற்கு ஒரு மரத்தின் படிமம் போல் எனக்குத் தோன்றியது. நான் பாதயாத்திரையின் போது படங்கள் எடுத்த காரணத்தினால் மற்ற யாத்திரிகள் எல்லோரும் எனக்கு முன்னே சென்றுவிட நான் மட்டும் காலதாமம் ஆகிவருவதை அறிந்து மற்றபிற யாத்திரிகர்கள் எனக்கு அடிக்கடி அலைபேசியில் பேசி என்னை விரைந்து வருமாறு அழைத்தனர். அதனால் நேரமின்னை காரணமாகவும், மண்ணைத் தோண்டிப் பார்க்கும் வகையிலான ஆயுதங்கள் ஏதும் என்னிடம் இல்லாத காரணத்தினாலும் என்னால் இந்தப் படிமத்தின் மறுபக்கத்தைத் தோண்டிப் பார்த்துக் கண்டறிய முடியாமல் போனது.
இந்தப் பாறையின் மறுபக்கத்தைக் கண்டறிய வேண்டும், மேலும் இந்தப் பாறையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் கண்டறிய வேண்டும். இவ்விரண்டையும் கண்டறிந்தால் மட்டுமே இது ஒரு மரத்தின் படிமம் என்பதை உறுதி செய்ய இயலும் எனக் கருதுகிறேன்.
பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.
இந்தப் பாறை கிடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தொப்பசாமி மலையில் பண்டைக்காலத்தில் இருந்த மரமோ, அல்லது வேறு ஏதோ ஒரு இடத்தில் இருந்த மரமோ கடல்வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இந்த இடத்தில் படிந்து படிமமாக மாறியுள்ளது என்பது எனது கருத்து.
இந்தப் பாறை கிடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தொப்பசாமி மலையில் பண்டைக்காலத்தில் இருந்த மரமோ, அல்லது வேறு ஏதோ ஒரு இடத்தில் இருந்த மரமோ கடல்வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இந்த இடத்தில் படிந்து படிமமாக மாறியுள்ளது என்பது எனது கருத்து.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைரசான்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைரசான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக