கட்டுரை ஆசிரியர் – காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
“நீரின் றமையா துலகு“ என்பது வள்ளுவன் வாக்கு. இந்த உலகிற்கு இவ்வளவு நீர் எங்கிருந்து எப்போது எப்படி வந்தது? என்பதை விளக்க முற்படுவதே “ஆகாய கங்கை“ என்ற இக்கட்டுரையின் நோக்கம்.
அண்டத்தில் அனேகமான கோள்கள் உள்ளன. அவற்றில் எதிலும் பூமியில் உள்ளது போன்ற கடல்நீர் இல்லை. பூமிக்கு மட்டும் கடல்நீர் எப்படி வந்தது? என விளக்க முயலும் இக் கட்டுரையானது மூன்று பகுதிகளைக் கொண்டது.
கட்டுரையின் முதற்பகுதியானது ஐயா சி.ஜெயபாரதன் அவர்களுடைய கட்டுரைகளின் சுருக்கம் ஆகும். இவர் அரியபல அறிஞர்களின் அறிவியல் கருத்துத்துகளின் அடிப்படையில் “பூமியில் 70% பகுதியில் நிரம்பியுள்ள நீர் வெள்ளம் எவ்வாறு வந்தது?“ என விளக்கி எழுதி, விஞ்ஞானிகளால் விடைகாணப்பட வேண்டிய சில கேள்விகளையும் முன் வைத்துள்ளார்.
“பூமியில் நிரம்பியுள்ள நீர் வெள்ளம் எவ்வாறு வந்தது?“ என்பதை விளக்கும் ஜெயபாரதன் அவர்களின் கட்டுரைகளில் உள்ள விஞ்ஞானிகளின் கருத்துகளுக்கு இயைபு உடைய பல கருத்துக்களைப் பாரததேசத்தில் வாழ்ந்த மெஞ்ஞானிகள் எழுதி வைத்துள்ளனர். இந்திய மெஞ்ஞானிகளின் கருத்தை இரண்டாவது பகுதியாக இணைத்துள்ளேன்.
விஞ்ஞானிகளின் கருத்துக்களையும், மெஞ்ஞானிகள் கருத்துகளையும் அஞ்ஞானியான நான் உணர்ந்து கொண்டதை கட்டுரையின் மூன்றாம் பகுதியாக இணைத்து வெளியிடுகிறேன்.
மேற்கண்ட இந்தக் கட்டுரையின் மூன்று பகுதிகளின் வழியாக அண்டத்தில் வேறு எங்கும் காணமுடியாத ஒரு அற்புதக் கோளாக, கடல்நீரும் நன்னீரும் நிறைந்த கோளா, கோடானுகோடி உயிர்கள் வாழும் கோளாக நாம் வாழும் பூமியானது எவ்வாறு மாறியது என்பதை அறிந்து கொள்ள முற்படுவோம்.
(இது கனடா வாழ் ஐயா சி. ஜெயபாரதன், B.E.(Hons) P.Eng (Nuclear), அவர்களின் கட்டுரை: 79 இன் சுருக்கம். இதன் மூலக் கட்டுரையை ஐயா அவர்களது https://jayabarathan.wordpress.com/2008/04/24/water-planet-earth/
தளத்தில் காணலாம்.)
அண்டத்தில் பூமியில் மட்டும்
கல்தோன்றி மண் வளமாகிப் புல்தோன்றிப் பூ மலர புழுக்கள் நெளிய நீர்வளம் எழுந்த தெப்படி ?
நானூறு கோடி ஆண்டுக்கு முன் தானாக நீர் வெள்ளம் மீன்வளம் பெருக்கிய தெப்படி ?
மீனினம் மானுடம் ஆனதெப்படி ?
கல்தோன்றி மண் வளமாகிப் புல்தோன்றிப் பூ மலர புழுக்கள் நெளிய நீர்வளம் எழுந்த தெப்படி ?
நானூறு கோடி ஆண்டுக்கு முன் தானாக நீர் வெள்ளம் மீன்வளம் பெருக்கிய தெப்படி ?
மீனினம் மானுடம் ஆனதெப்படி ?
சூரியக் கதிரொளி மின்னலில் வாயுக்கள் சேர்ந்தனவா ?
வால்மீன் மோதி நீர் வெள்ளம் வாரி இறைத்ததா ?
விண்கற்கள் வீழ்ந்து பனிப்பாறை தண்ணீர் ஆனதா ?
வால்மீன் மோதி நீர் வெள்ளம் வாரி இறைத்ததா ?
விண்கற்கள் வீழ்ந்து பனிப்பாறை தண்ணீர் ஆனதா ?
வால்மீன்களின் டியூடிரியம், ஹைடிரஜன் பின்னத்தையும் [Deuterium Hydrogen Ratio (D/H)] அடுத்து ஆர்கான் நீராவி விகிதத்தையும் [Argon Water Ratio (Ar/H2O)] விண்ணுளவி மூலம் அறிந்ததில் பூமியில் மோதிப் பொழிந்த நீர் வெள்ளம் 15% என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆதி காலத்தில் சூரிய வாயுக்கள் குளிர்ந்து உண்டான கரிக்கற்கள் (Carbonaceous Chondritic Material – Condensed from Solar Hot Gases) எரிந்து 10% நீர் வெள்ளம் பூமியில் சேர்ந்தது.
3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீர்மயம் நிரம்பிய விண்கற்களும், வால்மீன்களும் பிள்ளைப் பிராயப் பூமியில் மோதி நீர் வளமாக்கின என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் ! அடர்த்தியாகப் ஹைடிரஜன் வாயுப் படுகை எரிமலை ஆக்ஸைடுகளுடன் (Oxides from Earth’s Mantle) இணைந்து பேரளவு கடல் நீர் வெள்ளம் பூமியின் சுய உற்பத்தியில்தான் உண்டாகியிருக்க வேண்டும் ! என்பது ஒரு விஞ்ஞானக் கருத்து.
“பூமியில் எப்போது உயிரங்கள் தோன்றின என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவை 4.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உதித்திருக்கக் கூடும் என்று கருத ஆதாரம் உள்ளது. பூகோளம் தோன்றி 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் உயிரின விருத்திக்கு வேண்டிய மூலாதாரங்கள் அனைத்தும் உண்டாகி விட்டன !” என்பது ஒரு விஞ்ஞானக் கருத்து.
“பூமியில் உயிரினம் ஆரம்பமாக வால்மீன்கள் மோதிக் கொட்டிய நீர் வெள்ளம் சிறிதளவாகத்தான் இருக்க முடியும் ! தோற்ற காலத்திலிருந்தே பூமியில் ஏராளமான நீர் வெள்ளம் உண்டாகி இருக்க வேண்டும் ! என்பது ஒரு விஞ்ஞானக் கருத்து.
விண்வெளி நிபுளா முகிலில் நீர் உண்டாக்கும் ஹைடிரஜன் பெராக்ஸைடு கண்டுபிடிப்பு
ஒளிமந்தைகள், விண்மீன்கள் உருவாக்கும் நிபுளா முகிலில் (Nebula Gas Cloud) 2011 ஆண்டில் விண்ணோக்கி மூலம் ஹைடிரஜன் பெராக்ஸைடு மூலக்கூறு இருப்பதை வானியல் விஞ்ஞானிகள் தற்போது அறிந்துள் ளார்கள். கண்ட விண்வெளி அரங்கம் “ரோ ஓஃபியூச்சி” (Rho Ophiuchi) விண்மீனுக்கு அருகில் 400 ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ளது. அதனோடு ஹைடிரஜன் வாயு இணையும் போது நீர் உண்டாவதால், ஹைடிரஜன் பெராக்ஸைடு மூலக்கூறு வானியியல், வேதியல் விஞ்ஞானிகள் ஆய்வுகளுக்கு மிகவும் தேவையான ஒரு மூலக்கூறு. பேரளவு குளிரான -250 டிகிரி செல்ஸியஸ் விண்வெளிப் பகுதியில் உள்ள நிபுளா முகிலில் மிகச் சிறிய அளவில் இருக்கும் ஹைடிரஜன் பெராக்ஸைடு இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த நிபுளா அரங்கில் உள்ள திரட்சியான அகில வாயு, (Cosmic Gas) தூசி ஆகியவை விண்மீன்கள் ஆக்கும் தகுதி பெற்றவை. அப்படி உருவாகும் போது அத்துடன் நெருங்கித் தொடரும் ஆக்ஸிஜன், நீர் மூலக்கூறு உற்பத்திகள் உயிரினத் தோற்றத்துக்குக் மூல காரணிகளாக உருவாகுகின்றன. இந்த இரசாயன மூலக்கூறைக் காட்டிய ஏபெக்ஸ் விண்ணோக்கி (APEX – AtacamaPathfinder Experiment Telescope) தென் அமெரிக்காவில் உள்ள சில்லி நாட்டில்5000 மீட்டர் 16, 000 அடி உயரத்தில் இருக்கும் மலைப் பீடத்தில் அமைக்கப் பட்டுள்ளது.

பூமியில் 70% பகுதியில் நிரம்பியுள்ள நீர் வெள்ளம் விண்வெளி வாயுக் கோள்கள் மூலம் வந்திருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது. இந்த நிபுளா முகில்களில் பொதுவாக இருப்பவை பெரும்பான்மையாக ஹைடிரஜன் வாயுவும் மற்றும் சிற்றளவில் உதிரியாக மற்ற இரசாயன மூலங்கள் மட்டுமே. இப்போது வானியல் குழுவினர் ரோ ஓஃபியூச்சி முகிலிலிருந்து ஹைடிரஜன் பெராக்சைடு ஒளிவீசி தன் முத்திரையை யிட்டுள்ளது. விண் வெளியில் அகிலத் தூசித் தூள்களின் மேற்பகுதியில் ஹைடிரஜனும் ஆக்ஸிஜனும் இணைந்து ஹைடிரஜன் பெராக்ஸைடு உருவாகி வருவதாகத் தெரிகிறது. பிறகு அத்துடன் மிகுதியாக ஹைடிரஜன் வாயு இணைந்து நீர் மூலக்கூறு உண்டாகுகிறது என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.
நீர் வெள்ளம் பூமியில் தோன்றியது எப்போது ?
பிரபஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆண்டுகள் ஓடி விட்டன !
சூரிய குடும்பம் தோன்றிச் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன !
விஞ்ஞானிகள் பூமியிலே நீர் வெள்ளம் தோன்றி 4.3 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன என்று உறுதியான சான்றுகளுடன் இப்போது கூறுகிறார்கள் !
ஆனால் தற்போதைய ஆராய்ச்சி ஒன்று மாறாக 400 மில்லியன் ஆண்டுக்கு முன்புதான் நீர்வளம் பூமியில் உண்டானது என்று சொல்லி இருக்கிறது !

பூமி தோன்றிய 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் சூழ்வெளி வாயு மண்டமும், நீர் வெள்ளக் கடலும், நிலையான பூதளத் தட்டும், பூமிக்குக் கீழ் 10 கி.மீ. ஆழத்தட்டு ஆகிய முன்றும் உண்டாகி விட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 4.3 பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூகோளத்தில் உயிரினத் தோற்றத்துக்கு உகந்த மூலாதார வசதிகள் உதித்து விட்டன என்று விண்ணுயிரியல் விஞ்ஞானி மோஜிஸிஸ் (Mojzsis) கூறுகிறார் !
சூரிய குடும்பத்தில் மட்டும் ஒன்பது கோள்களும், பனிரெண்டு துணைக் கோள்களும் ஆராய்ச்சிக்கு உதவிட உள்ளன. அவற்றில் பூமி ஒன்றில் மட்டுமே உயிரின விருத்திக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் உண்டாகி நிலை பெற்று விட்டன. ஒருசில கோள்களிலும், மற்றும் சில துணைக் கோள்களிலும் ஒரு யுகத்தில் நீர்வளம் இருந்ததற்குச் சான்றுகள் காணப் படுகின்றன.
ஆனாலும் பூமி மட்டும்தான் பேரளவு நீர் வெள்ளத்தை பல மில்லியன் ஆண்டுகளாய் நிலையாகப் பற்றிக் கொண்டிருக்கிறது.
வியாழக் கோளின் துணைக் கோளான ஈரோப்பாவில் (Jupiter’s Satellite Europa) நீர்க்கடல் இருந்ததாக சமீபத்தில் விண்ணுளவி ஆராய்ந்து தகவல் அனுப்பியுள்ளது. அதனால் அங்கும் உயிரின வாழ்வுக்குத் தகுதி இருந்திருக்கிறது என்று விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது !
பூமியில் மட்டும் நீர் வெள்ளம் ஏன் தோன்றியது? நீர்மயம் எப்படி நிலையானது மற்றும் உயிரினம் ஏன் உதித்தது என்பதற்கு உறுதியான பதில்கள் கிடையா! பிரபஞ்சத்தின் மகத்தான பல புதிர்களில் அந்தக் கேள்விகளும் உள்ளன.
பூமியில் மட்டும் நீர் வெள்ளம் ஏன் தோன்றியது? நீர்மயம் எப்படி நிலையானது மற்றும் உயிரினம் ஏன் உதித்தது என்பதற்கு உறுதியான பதில்கள் கிடையா! பிரபஞ்சத்தின் மகத்தான பல புதிர்களில் அந்தக் கேள்விகளும் உள்ளன.
வால்மீன்கள் மோதிப் பூமியில் நீர் வெள்ளப் பொழிவு !
நமக்குத் தெரிந்த மூன்று வால்மீன்களான : ஹாலி, ஹயாகுடேக், ஹாலி-பாப் (Comets : Halley, Hyakutake & Hale-Bopp) மூன்றிலும் ஓர் ஒற்றுமை காணப்படுகிறது. கடல் நீரில் காணப்படும் டியூடிரியம் போல் (Deuterium – கன ஹைடிரஜன்) இரு மடங்கு அளவு அம்மூன்று வால்மீன்களில் உள்ளன! அதாவது நீரில் பேரளவு சாதா ஹைடிரஜனும் சிறிதளவு அதன் ஏகமூலமான கன ஹைடிரஜனும் 6500:1 ஒப்பமைப்பில் கலந்துள்ளது. (Heavy Hydrogen called Deuterium is an Isotope of Light Hydrogen) சாதா ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டான் உள்ளது. டியூடிரியம் அல்லது கன ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டானுடன் ஒரு நியூட்ரானும் சேர்ந்துள்ளது. அந்த மூன்று வால்மீன்களின் நீர் வெள்ளம் பூமியில் சேரவில்லை என்று கருதும் விஞ்ஞானி களும் உள்ளார்கள்!
கன ஹைடிரஜன் 6500:1 கலந்துள்ள நீர் வெள்ளம் கொண்ட வேறு வால்மீன்கள் பூமியில் விழுந்து நீர்வளம் பெருகியிருக்க வேண்டும் என்று கருதுவோரும் உள்ளார்கள்!
முரணாக அதிக சதவீத டியூடிரிய நீர் வெள்ளம் கொண்ட வால்மீன்கள் பூமிமீது நீரைப் பொழிந்திருந்தாலும் ஏற்புடையதே ! ஏனெனில் சூரியனின் புறவூதா ஒளிப்பிரிவு (ultra-Violet Photo-Dissociation ) மூலம் கன ஹைடிரஜன் பின்னால் இழப்பாகிப் பூமியில் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு. கடல் நீரின் சராசரி டியூடிரியம் கொள்ளளவு அடிப்படையில் கருதினால் பூமியின் நீரளவில் (15% – 30%) பங்கு வால்மீன்கள் மோதி வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்கிறார்கள்.

விண்கற்கள் விழுந்து பூமியில் நீர் வெள்ள நிரப்பு !
வால்மீன்களைப் போன்று சில எறிகற்களும், விண்கற்களும் (Meteorites & Asteroids) விண்வெளியில் “நீர் தாங்கியாக” (Water Bearer) கருதப்படுபவை ! அவையும் பூமி உண்டான ஆரம்ப காலத்தில் பூமிமேல் ஏராளமாக விழுந்துள்ளன. அவற்றில் பனிப்பாறைகளாய்த் தொத்திக் கொண்டிருக்கும் பகுதியில் 20% நீர் வெள்ளம் இருப்பதாக ஊகிக்கப் படுகிறது. விண்கற்கள் பரிதிக்கு அப்பால் எத்தனை மைல் தூரத்தில் உள்ளனவோ அதைப் பொருத்தது அவற்றின் நீர் கொள்ளளவு. அவற்றின் நீர்க் கொள்ளளவை உறுதியாக அறிவது சிரமமானதால், விண்கற்கள் பூமியில் கொட்டிய நீரளவை ஊகிப்பது இயலாது ! பிரபஞ்சத்தில் தீர்வு செய்ய முடியாத பல புதிர்கள் இருப்பது போல் பூகோளத்தில் நீர் வெள்ளம் எப்படிப் பெருகியது என்பதற்கும் உறுதியான விளக்கத்தை விஞ்ஞானிகள் சொல்ல முடியவில்லை !

அன்பன்
கி.காளைராசன்
“வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணரற் பாற்று“
“நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு“
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக