சனி, 12 ஜனவரி, 2019

லாடனேந்தலில் தொல்லியல் தடயங்கள்

திருப்பூவணம் லாடனேந்தலில்
தொல்லியல் தடயங்கள்


திருப்பூவணம் லாடனேந்தலில் தொடரி தண்டவாளத்திற்குக் கீழே தோண்டி ஒரு தரைப்பாலத்தை அமைக்கும் பணியில் இரயில்வே ஈடுபட்டுள்ளது.
பாலம் அமைப்பதற்காகத் தோண்டிய இடத்தில் சற்று தொலைவில் பழைமையான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது.
இப்போது இந்த இடத்தில் தோண்டும் போது, தரைமட்டத்திலிருந்து சுமார் 6அடிக்கும் கீழே சுமார் 4அடி அகலத்திற்கும் 2அடி உயரத்திற்குமான கூம்புவடிவிலான செங்கல் கட்டுமானம் காணக்கிடக்கிறது. அருகே கருப்பு சிவப்பு நிறத்திலான பானைஓடுகளும் கிடக்கின்றன.

கீழடி கண்டுபிடிக்கப்பெற்றுள்ளது போன்று இதுவும் ஒரு முக்கியமான தொல்லியல் நகரமாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்.

இங்கு அடக்கடுக்காப் பெட்டிங்முறையில் (graded bedding) மண்திட்டுக்கள் படிந்துள்ளன. எனவே இது பிரளயகாலத்தில் ஏற்பட்ட பெருஞ்சுனாமியினால் அழிந்த நகரத்தின் எச்சமாக இருக்கலாம் என்பது எனது யூகம்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்























அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மார்கழி 28 (12.01.2019) சனிக்கிழமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக