அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால் “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள்)“ உருவாகி யுள்ளன. இவற்றால், பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம் அழித்துள்ளன. இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.
எனது இக்கருத்தை அறிவியல் அடிப்படையில் நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன். ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன. ஆய்வு முடிவுகள் வரும் வரை, நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களை இந்த இழையில் பதிவு செய்கிறேன்.
தேசியநெடுஞ்சாலை 38இல், பந்தல்குடியில் இருந்து சிந்தலக்கரை செல்லும்போது இந்தப் பாறைகளைக் கண்டேன்.
பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன. கடல்வெள்ளத்தில் ஏதோவொரு கருப்பொருள் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது. அப்போது சேரும் சகதியும் அந்தப் பொருளின் மீது படிந்து, அது ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது. பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது.
இப்போது இவ்விதப் பாறைகள் பல்வேறு காரணிகளால் சிதிலமடைந்து வருகின்றன என்பது எனது கருத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக