ஞாயிறு, 27 ஜனவரி, 2019

கல்மரம், tree fossil,

கல்மரம்

குஜராத்தில் சோப்பரி (Chobari, Gujarat 363520) என்ற ஊரின் அருகே மிகப்பெரிய கல்மரம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.


கூகுள் புவிப்படத்தில் இதைப் பதிவு செய்து வைத்துள்ளனர்.
https://goo.gl/maps/5ZNbGLJH5DB2,  22°15'31.2"N 71°11'32.6"E, 22.258652, 71.192381


இதே போன்ற அமைப்பில் அழகர்கோயில் மலையிலும் பாறைகள் காணக்கிடக்கின்றன.  அழகர்கோயில் மலைகளில் மரங்கள் போன்று காணக்கிடக்கும் பாறைகளை அறிவியல் அடைப்படையில் ஆராய வேண்டும்.





குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்ட நிகழ்ச்சியைப் பல்வேறு தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. எல்லாவற்றையும் விட மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் திருவிளையாடற்புராணம் பதிவு செய்துள்ளது. பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.
பண்டைக்காலத்தில், இந்தப் பாறை கிடக்கும் இடத்திற்கு அருகில்  இருந்த மரமோ, அல்லது வேறு ஏதோ ஒரு இடத்தில் இருந்த மரமோ கடல்வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இந்த இடத்தில் படிந்து படிமமாக மாறியுள்ளது என்பது எனது கருத்து.

குஜராத்தில் கிடக்கும் கல்மரத்தின் மேல் படிந்துள்ள பாறைகளை யெல்லாம் அகற்றிய பின்னரே அது கல்மரம் எனக் கண்டறிந்துள்ளனர். 
அதுபோல், அழகர்கோயில் மலையிலும் படத்தில் மரம் போன்று தோற்றமளிக்கும் பாறையின் முழுவடிவத்தையும் கண்டறிய வேண்டும். குறிப்பாக இந்தப் பாறையின் மறுபக்கத்தைக் கண்டறிய வேண்டும், மேலும் இந்தப் பாறையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் கண்டறிய வேண்டும். அதன் பின்னரே இது கல்லா? அல்லது கல்மரமா? என்பதை உறுதி செய்ய இயலும் எனக் கருதுகிறேன்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக