சனி, 6 ஜூலை, 2019

மதுரைக்கு வந்த சுனாமி 10 - மதுரை தொடரிநிலையம் அருகேயுள்ள பேருந்து நிலையம்

கடல்கோளால் குமரிக்கோடு அழிந்தது உண்மையா?
மதுரையும் கபாடபுரமும் அழிந்தது உண்மையா?

மதுரையைக் கடல்கொண்டது என்பதற்கு 
புவியியல் சான்றுகள் உள்ளதா?

மதுரையை ஸ்மார்ட் சிட்டி (Madurai Smart City) ஆக்கும் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.  அதன் ஒருபகுதியாக மதுரை மீனாட்சி பேருந்துநிலையத்தை தரமேம்பாடு செய்வதற்காக ஆகழ்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அங்கே எடுத்த படம் இது.









மதுரை தொடரி நிலையம் அருகே உள்ள இந்த இடத்திலிருந்து வைகையாறு சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.  வைகை ஆற்றுப் பெருக்கால், அடுக்கடுக்காய் மதுரையில் மண் படிய வாய்ப்புகள் உண்டு.  ஆனால்,  கடல்நீர் வராமல் வண்ணவண்ண நிறத்தில் மண் படிய வாய்ப்புகள் இல்லையே.  எனவே இந்தப் படத்தில் காணப்படும் அடுக்கடுக்ன மண் திட்டுகள்  வைகையாற்று வெள்ளத்தால் (நல்லதண்ணியால்) உண்டானவை அல்ல. பிரளயத்தில் தோன்றிய பெருஞ் சுனாமியினால் உண்டான கடல் வெள்ளம்  வைகை ஆற்றின் வழியாக உள்ளே புகுந்து பண்டைய மதுரையை  அழித்துள்ளது என அறிய முடிகிறது. 

திருவிளையாடற்புராணம் 11ஆவது படலத்தில் சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகன் உக்கிர குமாரனின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்த ஆழிப்பேரலை(“சுனாமி”) வந்தது என்றும், அதை வேல் எறிந்து உக்கிரபாண்டியன் தடுத்து நிறுத்தினான் என்று ஒரு குறிப்பு உள்ளது.

மேலும், 17ஆவது படலத்தில் அதுலகீர்த்தி பாண்டியனின் பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி(“சுனாமி”) மதுரையை முற்றிலும் அழித்துள்ளது என்ற ஒரு குறிப்பு உள்ளது.
http://kalairajan26.blogspot.in/2013/02/blog-post_18.html



மேலே உள்ள படத்தில் மதுரையில் காணப்படும் மண்அமைப்புப் போன்றே தென்னமெரிக்காவிலும் உள்ளது.  அங்கே அதைச் சுனாமியினால் உண்டானது என்கின்றனர்.


​Tsunami deposits south of Valdivia
http://quakehunters.blogspot.in/2013/01/fieldwork-so-far-in-pictures.html

மேலே உள்ள படத்தில் தென்னமெரிக்காக்காவில் உள்ள வால்திவ்ய (Valdivia) வில் உள்ள மண்படிமங்கள் சுனாமியினால் உண்டானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.  ​வால்திவ்ய (Valdivia) வில் காணப்படும் மண் அமைப்பு சுனாமியினால் உண்டானது என்று கூறப்படுவதாலும், அதே போன்ற மண் அமைப்பு மதுரையிலும் காணப்படுகின்ற காரணத்தில் மதுரையும் சுனாமியினால் அழிந்துள்ளது என்று அறிய முடிகிறது.



மாமதுரை போற்றுவோம், தொல்லியல் போற்றுவோம், தொல்லியலாளர் போற்றுவோம், தமிழரின் தொன்மை போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
17.06.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக