பெக்மடைட் பாறைகள் (PEGMATITE)
ஊடுறுவுப் பாறைகள் (INTRUSIVES)
இரண்டிற்குமான வேறுபாடுகள் என்ன?
புவியியலாளர் வருத்தமும் என்னுடைய புரிதலும் -
புவியியலாளர் வருத்தம்
Singanenjam Sambandam (11 ஆகஸ்ட், 2017)
வணக்கம் காளை ஐயா, எத்தனை முறை சொன்னாலும் நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். 'மண்' 'மணல்' 'பாறை ' இவற்றை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் இரண்டாம் படத்தில் இருப்பது சிதைவுறும் பாறை. மூன்று மற்றும் நான்காம் படத்தில் இருப்பவை பெக்மடைட் ( PEGMATITE) எனப்படும் ஊடுறுவுப் பாறைகள் ( INTRUSIVES). எதயுமே அறிந்து கொள்ளாமல் உங்கள் புராணக் கதைகளை நிறுவுவதற்காக நீங்கள் பொய் எழுதுவது , வருத்தத்தை தருகிறது.
---------------------------------------------
என்னுடைய புரிதல்
Kalairajan Krishnan (11 ஆகஸ்ட், 2017)
வணக்கம் ஐயா.
விருப்பாச்சி அருகே உள்ள பாறையையும், ஆந்திரா அருகே உள்ள பாறைகளையும் நான் மண்புதைந்து தோன்றிய பிரளயப் பிளவுப் பாறைகள் எனக் குறிப்பிட்டுள்ளேன்.
ஐயா சிங்கநெஞ்சம் அவர்கள் இந்தப் பாறைகளை பெக்மடைட் (PEGMATITE) எனப்படும் ஊடுறுவுப் பாறைகள் (INTRUSIVES) என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஐயா சிங்கநெஞ்சம் அவர்கள் குறிப்பிடும் பெக்மடைட் (PEGMATITE) எனப்படும் ஊடுறுவுப் பாறைகள் (INTRUSIVES) என்று குறிப்பிடும் பாறைகளைப் படத்தில் சிகப்பு மையினால் அடையாளப் படுத்திக் காட்டியுள்ளேன்.
நான் பிரளயப்பிளவுப் பாறைகள் என்று குறிப்பிடும் பாறையை மஞ்சள் மையினால் அடையாளப் படுத்திக் காட்டி உள்ளேன்.
இவை இரண்டும் வேறு வேறானவை. அவற்றிற்கான வேறுபாடுகளைக் கீழே பட்டியல் இட்டுள்ளேன்.
(அ) பெக்மடைட் பாறைகள் நேர்கோட்டில் பிளவு பட்டிருக்காது, வளைந்து நெளிந்து இருக்கும். பிரளயப் பிளவுப் பாறைகள் நேர்கோட்டில் பிளவு பட்டிருக்கும், வளைந்து நெளிந்து இருக்காது.
(ஆ) பெக்மடைட் பாறைகள் தரைப்பகுதியில் நாம் காணும்படியாகத் தெரிந்தே ஆக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் பிரளயப் பிளவுப் பாறைக் தரைப்பகுதியில் நாம் காணும்படியாக இருக்கும்.
(இ) பெக்மடைட் பாறைகள் வயது முதிர்ந்தவை. ஆனால் பிரளயப் பிளவுப் பாறைகள் வயதில் மிகவும் இளயவை.
(ஈ) பெக்மடைட் பாறைகள் எரிமலையால் உருவானவை எனக் கூறுகின்றனர். ஆனால் ‘பிரளயப் பிளவுப் பாறைகள்‘ சுனாமிக் கழிவுகளால், கசடுகளால் உறுவானவை.
புராணம் பெருஞ்சுனாமி பற்றிக் கூறுகிறது. பெருஞ் சுனாமியால் உண்டான புவியியல் மாற்றங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. இதில் பொய் எழுதிட வேண்டிய தேவை புராண ஆசிரியர்களுக்கோ அல்லது எனக்கோ இல்லை.
ஆனால் புவியியலாளர்களுக்கு பெருஞ்சுனாமியின் போனது ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றியும், நிலநடுக்கத்தினால் பாறைகள் பிளவுபட்டது பற்றியும், பெருஞ்சுனாமியினால் அடித்து வரப்படும் கசடு அல்லது கழிவுநீர் பற்றியும், அவை பாறையின் விரிசல்களில் படிந்து இறுகிக் கல்லாக மாறிவருவது பற்றியும் ஆய்ந்தறிய வேண்டிய அவசியம் உள்ளது.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
11 ஆகஸ்ட், 2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக