கடல்கோளும்
கடலூர் பாறைகளும்
கடலூர் பாறைகள் எவ்வாறு உருவாகின ?
பல்வேறு நிறங்களிலும், பல்வேறு வடிவங்களிலும் உள்ள வெவ்வேறு மண்கட்டிகள், எவ்விதமான நிற மாற்றமோ வடிவமாற்றமோ ஆகாமல் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டுள்ளன !
இவை வெப்பமாறுதலால் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ள முடியாது !
இவை பூமியின் மேற்பரப்பில் கிடக்கின்ற காரணத்தால் புவியழுத்தமும் காரணமாக இருக்க முடியாது !
அப்படி யென்றால், இவற்றை இப்படிப் பாறைபோல் ஒட்ட வைத்த பசை எது ?
ஆற்றில் ஓடும் நல்லதண்ணீரால் மண்ணும் மணலும் ஒட்டிக் கொள்ளுமா ?
குளத்துக்கு அடியில் களிமண் கிடக்கும். அதுபோல் கடலுக்கு அடியிலும் ஒருவகைக் களிமண் கிடக்கும்.
ஊழிக்காலத்தில் நிலத்திட்டுகள் பிரண்டு விழுவதால் நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து கடல்வெள்ளமும் (சுனாமி) உருவாகின்றன. சுனாமியின் போது ஆழ்கடலின் அடியில் கிடக்கும் கடற்களிமண் கடலலை யுடன் நிலத்திற்கு வந்து கல்லையும் மண்ணையும் சேர்த்து ஒட்டி இது போன்ற பாறைகளை உருவாக்கி உள்ளது. இது குறித்த அறிவியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
கடலூர் திருவந்திபுரத்தில் உள்ள மண்மலையில் இது போன்ற பாறைகளைக் காணலாம். சுனாயினால் நிலத்திற்கு வந்த கடல்நீர் மீண்டும் வடியும் போது ஆற்றின் கரையில் இந்த மண்மலையை உண்டாக்கி உள்ளது.
அன்பன்
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக