செவ்வாய், 7 ஜூலை, 2020

உருண்டைப் பாறைகள் எப்படி உருவாகின?

உருண்டைப் பாறைகள் எப்படி உருவாகின?

















ஆற்றில் அடித்து வரப்படும் கற்கள் தேய்ந்து உருண்டை வடிவிற்கு மாறிக் கூலாங்கற்களாக கிடக்கின்றனர் என்கின்றனர்.

அப்படியானால் திண்டுக்கல் பழநி நெடுஞ்சாலையில் மலை ஓரங்களில் கிடக்கும் இந்த உருண்டைப் பாறைகள் எப்படி உண்டாயின ?

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

08.07.2017  முகநூல் நண்பர்களின் பதில்களைக் கீழே இணைத்துள்ளேன்.

Chembiyan Valavan திண்டுக்கல்லில் சிறு மலை காட்டாற்று பகுதியில் இருந்து வந்து இருக்கலாம் ஐயா
Chembiyan Valavan பழனி கொடைக்கானல் பகுதியில் இருந்து வந்து இருக்கலாம் ஐயா
Chembiyan Valavan பழனியில் ஆறு உண்டு
Kalairajan Krishnan ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதனால் என்றால் அருகில் உள்ள மற்றபிற கற்களும் இவற்றைப் போன்றே உருண்டையாக ஆகவில்லையே !
Kasi Krishna Raja Most probably they are displaced stones from cairn circles...pleople displace them without knowing the significance..I have seen mainly cairn circle stones in perfect round shapes.
Chembiyan Valavan .I have seen mainly cairn circle stones in perfect round shapes. ///இவை அதிகம் சிறுமலை ஓடைகளில் பார்த்து இருக்கின்றேன் ஐயா
Chembiyan Valavan திண்டுக்கல் தாண்டி செந்துறை பகுதிகளிலும் பார்க முடியும்
பல்லவராயன் ராஜாமணிகுமரேசன் திருச்சியில் சின்னமிளகுபாறை,பெரிய மிளகுபாறை ரெம்ப சூப்பர்
Kalairajan Krishnan சின்னமிளகுபாறை, பெரிய மிளகுபாறை. அருமையான பெயர்கள்.
Singanenjam Sambandam காளை ஐயா, வழக்கம்போல் நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முயல்கிறீர்கள். THESE ARE NOT PEBBLES. THESE ARE PRODUCTS OF PHYSICAL WEATHERING, MOSTLY EXFOLIATION.
Kalairajan Krishnan குழப்பம் எனக்கு இல்லை. எனது கேள்வி தெளிவானது.
"திண்டுக்கல் பழநி நெடுஞ்சாலையில் மலை ஓரங்களில் கிடக்கும் இந்த உருண்டைப் பாறைகள் உருண்டையாக எப்படி உண்டாயின ?"
Singanenjam Sambandam EXFOLIATION என்று எழுதியுள்ளேனே ஐயா
DrGopi K G Aiyer GO TO STUDIES ON GEOLOGY for better scientific knowledge
Kalairajan Krishnan 'கற்றலின் கேட்டல் நன்று". எனவே கற்றறிந்தோரிடம் கேட்டறிந்து கொள்வேன்.
Vinaitheerthan Vino சுனாமி?
Kalairajan Krishnan பத்துப் பதினைந்து பாறைகளைப் பார்த்துவிட்டுச் சும்மா சொல்லமுடியாது. இது போன்ற பாறைகள் கிடக்கும் இடங்களை யெல்லாம் கண்டறிந்து mapping செய்ய முயற்சிக்கிறேன் ஐயா.
Singanenjam Sambandam 1 : 50000 MAPPING பணி முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன ஐயா.
Vijayaraja Kasukali Look like they are eggs been there for millions years turning in to rocks maybe
Govindaswami Venkataraman What is your opinion
Singanenjam Sambandam Eggs do fossilize.....I agree; for example the dinosaur eggs we found in Ariyalur area and in Gujarath state ( see picture). But what are shown in the photograph are weathered rocks only.
Srinivasan Rajagopal These are called core stones formed commonly in granitic and gneissic rock due to weathering and particularly insitu spheriodal weathering. commonly seen in the hilly tracts also. this is not from .river transport and not at all dinosaur eggs. If iam wrong Imay be corrected. See the mahapalipuram famous butter ball.
Kalairajan Krishnan ஆமாம். சரியாகச் சொல்லி உள்ளீர்கள் ஐயா. படத்தில் உள்ள உருண்டைப் பாறைகள் எல்லாம் கிரானைட்மலை அடிவாரங்களுக்கு அருகில்தான் கிடக்கின்றன.
மற்றபிற பாறைகள் assorted வடிவங்களில் உள்ளன ! ஆனால் இவை மட்டும் உருண்டை வடிவில் மாறியுள்ளன. இவை மட்டும் எப்படி உருண்டை வடிவம் பெற்றன? என்பதுதான் வியப்பாக உள்ளது !
Srinivasan Rajagopal when a gneissic rock gets weathered completely some left over portions are slight to mod.wearthed and embedded in the top portion with in the soil or highly wearthed as round/oval/ ablong core stone.Normally weathering takes place along the intersecting joints by water pnetration .ii is different from rolled boulers down the hill .
Kalairajan Krishnan விளக்கமான பதில் அளித்ததற்கு எனது நன்றிகள் ஐயா. ஒரேயொரு ஐயம். திண்டுக்கல் பகுதியில் 18 முதல் 41 டிகிரி வெப்பநிலைதான் நிலவுகிறது. மழையும் குறைவு. இந்தக் குறைந்த வெப்ப நிலையில் weathering rocks உருவாகிட முடியுமா ?
Kalairajan Krishnan படத்தில் உள்ள கோளப்பாறைகள் பாறைகளாக மாறிய பின்னர் உருண்டு இதுபோன்று உருண்டையாக மாறவில்லை.
மாறாக, இவைகள் களிமண் வடிவத்தில் இருக்கும் காலத்திலேயே உருண்டு உருண்டு இவ்வாறான உருண்டை வடிவத்தை அடைந்து விட்டன. பின்னர் காய்ந்து இறுகிப் பாறைகளாக மாறிவிட்டன என்று கருதுகிறேன்.
Kalairajan Krishnan படத்தில் உள்ள கோளப்பாறைகள் பாறைகளாக மாறிய பின்னர் உருண்டு இதுபோன்று உருண்டையாக மாறவில்லை.
மாறாக, இவைகள் களிமண் அல்லது “தார்” போன்று நெகிழும் தன்மையாய் இருக்கும் காலத்திலேயே உருண்டு உருண்டு இவ்வாறான உருண்டை வடிவத்தை அடைந்து விட்டன. பின்னர் காய்ந்து இறுகிப் பாறைகளாக மாறிவிட்டன என்று கருதுகிறேன்.
Govindaswami Venkataraman பூமி திரவக நிலையில் இருந்து தான்குளிர்ந்து கொட்டியானது. திரவம் காற்றுடன் கலந்தபோது குமிழிகளாகமாறி குளிந்து கட்டியாக மாறி இருக்கலாம். மழை துளி வானிலிருந்து பூமிக்கு வரும்போது உருண்டை துளியாகதாற் வரும்.ஆலங்கட்டிகள் உருண்டையாகதான் வரும். அதுபோல்தான் சூரியனிலிருந்து வந்த பூமி குழம்பு உருண்டையாக பூமியானது
Nandhitha Kaappiyan வணக்கம்
திருவஹிந்திரபுரம் அருகில் ஓடும் கடிலம் நதியில் பாருங்கள், தேத்தாங்கொட்டை அளவில் கூழாங்கற்கள் கிடைக்கும், அது எப்படி>
Govindaswami Venkataraman செஞ்சி அருகில் ஒரு குன்று உருண்டையானகற்களை அடுக்கி வைத்தாற்போல் இருக்கும்

PoornaChandra Jeeva ஐயா தங்கள் பதிவு கண்டேன். தங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது . நிலவியல் கூறுகளை ஆழ்ந்து பார்த்து பதிவிடுகிறீர்கள் . முதலில் எனது பாராட்டுக்கள். மலைப்பகுதிகள் , ஒருகாலத்தில் பேராறுகள், மலைநீர் புரண்டோடிய இடங்களில் இத்தகைய உருள் கூழாங்கற்கள் காணப்படும் . தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி , திருநெல்வேலி, வடதமிழகத்தில் விழுப்புரம் தொடங்கி வடக்கு நோக்கி திருவள்ளூர் சத்தியவேடு வழியே ஆரம்பாக்கம் ( இன்றைய தமிழக த்தின் வடகிழக்கில் கடைசி ஊர்) வரையில் இத்தகைய கல்லுருண்டைகளைப் பார்க்கலாம். தமிழகத்தில் 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ந்து ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மழைபெய்யும் ஒரு பருவச்சூழல் நிலவியது. நீங்கள் கூட கேட்டிருப்பீர்கள் தமிழ்நாட்டில் பெரிய அகண்ட மணல் நிறைந்த ஆறுகள் உள்ளன தண்ணீர்தான் இல்லை என்று கூறுவர். இப்பருவச்சூழலாலேயே இக்கற்கள் உருவாயின இத்தகைய பேராறுகள் இக்காலத்தில்தான் உருவாயின .ஆனால், , மலைப்பகுதிகளில் தொடங்கும் இத்தகைய மணலாறுகளில் சிலவற்றில் மழைக்காலத்தில் மட்டுமே நீரோடும். மேலும் தமிழக நிலப்பகுதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வடிந்து செல்லும் இயல்புடையது . இப்பகுதி மண்வளத்தைத்க் காத்துக்கொள்ளும் (conservation power ) ஆற்றல் குறைந்தது. இதற்குக் காரணம் அப்பெருமழைக்காலந்தான் . இக்காலத்தில் பாறைகள் உருண்டு சிதறி புரண்டோடின. நீலமலை, வடதமிழகப் பகுதிகளில் இக்காட்டாறுகள் பெருமளவுக்கு ஓடின. அப்போது காவிரி நதி வேறுவழியில் ஓடியதென்றும், பாலாறு வழியே ஓடியதாகவும், மேலும் பாலாற்றிலிருந்து வடகிழக்காக சத்தியவேடு மலைக்குன்றுகள் வழியே ஓடி எண்ணூர் - ஆரம்பாக்கம் பகுதிகளில் கடலில் கலந்தது என்றும் சில செயற்கைக்கோள் புகைப்படங்கள் உணர்த்துகின்றன. நிலவியல் ஆய்வுகளும் இதனை உணர்த்துகின்றன. விழுப்புரம்- சத்தியவேடு. திருத்தணி- திருவள்ளூர் பகுதிகளில் இவ்வுருண்டைக் கற்கள் ஒரு சுண்டைக்காய் அளவு முதல் ஒன்று இரண்டடி பபருமன்வரை தரையிலும், பூமிக்கடியில் 40 - 50 அடியாழத்திலும் கிடைக்கின்றன. நிலத்தடியில் இச்சரளைக்கல் கிடைக்கும் ஆழத்தில் நன்னீர் ஊற்று உள்ளது. இவ்வாறு தரையிலும் ,தரைக்கடியிலும் கிடைக்கும் இக்கல்லுருண்டைகளை உடைத்து வீடு கட்டும்போது தளம் அமைக்கப் பயன்படுத்துகிறார்கள். எனவே , இத்தகைய உருண்டைக் கற்கள் பண்டைக்காலப் பெருமழையாலும், அதனால் ஏற்பட்ட பேராறுகளாலும் பல காலம் உருண்டோடியதால் தேய்ந்து இக்கல் உருண்டைகள் உருவாயின. நீங்கள் தமிழக நிலவியல் தொடர்பான நூல்களையும் , அறிக்கைகளையும் படித்து இதனை அறியலாம். உங்கள் பகுதிகளில் இவை எவ்வாறு உருவாகி இருக்க வாய்ப்புள்ளது என்று இந்த அடிப்படையில் ஆராய்ந்து அறியலாம். நீங்கள் உங்கள் நிலப்பரப்பை ஆராய்வது உங்கள் சில பதிவுகளைக் கண்டு அறிகிறேன். முகநூலில் பலர் தேவையற்ற அற்பமான பதிவுகளிடுகையில் உங்கள் அற்புதமான பதிவுகளைத் தொடருங்கள்.தங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் .
தமிழக வரலாறும் தொல்லியலும் அறிய தமிழக, பொதுவாக இந்திய நிலவியலைக் கற்பது பயன்தரும். நன்றி.
Kalairajan Krishnan மிகவும் நீண்டதொரு விளக்கத்தைப் பொறுமையாக அளித்துள்ளீர்கள். நன்றி ஐயா.
Kalairajan Krishnan /....இத்தகைய உருண்டைக் கற்கள் பண்டைக்காலப் பெருமழையாலும், அதனால் ஏற்பட்ட பேராறுகளாலும் பல காலம் உருண்டோடியதால் தேய்ந்து இக்கல் உருண்டைகள் உருவாயின./....
ஆறுகள் உற்பத்தியாகும் இடத்திலிருந்து மிகவும் குறைவான தொலைவிலேயே கூழாங்கற்கள் கிடக்கின்றன. இவ்வளவ…மேலும் பார்க்கவும்
PoornaChandra Jeeva Kalairajan Krishnan தவறான கருத்து. நீங்கள் இன்றுள்ள தொலைவையும் நீர் வேகத்தையும் கணக்கில் கொள்ளாதீர்கள் . இக்கற்கள் இத்தொலைவை அடைய பல நூற்றாண்டுகள் ஆகி இருக்கும். இடிபடுதல், மணலுடனும் நிலத்தடைகளால் ஏற்படும் உராய்வு ஆகியவற்றால் அவை உருளையாகின்றன . நீர் உராய்வு பெரிய மலைகளையே குடைந்துள்ளமை திருப்பதி ,மற்றும் சில மேலைநாடுகளில் பார்க்கிறோம் நிலவியலார் உங்கள் கருத்தைப்போல சிந்தித்திருக்கமாட்டார்களா என்ன.
Kalairajan Krishnan Poorna Chandra Jeeva /....இக்கற்கள் இத்தொலைவை அடைய பல நூற்றாண்டுகள் ஆகி இருக்கும். இடிபடுதல், மணலுடனும் நிலத்தடைகளால் ஏற்படும் உராய்வு ஆகியவற்றால் அவை உருளையாகின்றன . ./....
இடிபடும் அளவிற்கு வேகமாக நகரும் கல் சுமார் 150 கி.மீ. தூரத்தைக் கடக்கப் பல நூற்றாண்டுகள் ஆகுமா ?
அதுவும் மணலுடன் இடிபட்டுத் தேயுமளவு வேகமாக நகரும் கல் சுமார் 150 கி.மீ. தூரத்தைக் கடக்கப் பல நூற்றாண்டுகள் ஆகுமா? என்பதே எனது ஐயம்.
Kalairajan Krishnan /....பெரிய மலைகளையே குடைந்துள்ளமை திருப்பதி ,மற்றும் சில மேலைநாடுகளில் பார்க்கிறோம்/....
https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/...

திருப்பதி மலை, கடப்பா, கர்ணூல், கந்திகொட்டா, பென்னாறு உருவானது எப்படி ?
THEORY-OF-TSUNAMIS-KALAIRAJAN.BLOGSPOT.COM
திருப்பதி மலை, கடப்பா, கர்ணூல், கந்திகொட்டா,…

திருப்பதி மலை, கடப்பா, கர்ணூல், கந்திகொட்டா, பென்னாறு உருவானது எப்படி ?
Kalairajan Krishnan River cut mountains
https://youtu.be/Wl0NoHbQOP8

How Kadappa, Karnool, Nallamalai hills formed ?
YOUTUBE.COM
PoornaChandra Jeeva Kalairajan Krishnan கற்கள் தொடர்ந்து 24மணிநேரமும் உருளும் என்பது உங்கள் கருத்தா? நன்றி.
Kalairajan Krishnan Poorna Chandra Jeeva கற்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் உருண்டுள்ளன என்பது எனது கருத்தல்ல.
கல்லானது உருண்டை வடிவத்தை அடையும் அளவிற்கு மணலில் பலகாலம் மோதிட வேண்டும். இதற்கான வேகத்தையும் speed இதற்கான காலத்தையும் time கணக்கிட்டால் distance கூடுதலாக இ…மேலும் பார்க்கவும்
PoornaChandra Jeeva Kalairajan Krishnan களிமண் . உருண்டால் கரைந்து விடாதா?
Kalairajan Krishnan Poorna Chandra Jeeva நான் களிமண்ணை உதாரணமாகச் சொல்வது அதனுடைய பிசுபிசுப்புத் தன்மைக்காக.
நான் சொன்ன களிமண் என்ற உதாரணம் களிமண் என்ற பொருளில் சொல்லவில்ல.
எனவே களிமண் கரையும் தன்மையுடையதால் நான் கூறிய களிமண் என்ற எடுத்துக்காட்டு தவறாகிறது.
எனவே களிமண் என்பதற்குப் பதிலாகச் சாலைகள் போடுவதற்காகப் பயன்படுத்தும் கருப்புநிறத் ”தார் (Tar)“ என்ற பொருளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
கூழாங்கல்லாக மாறியுள்ள கல்லானது Tar போன்ற நிலையில் இருக்கும் போதே அது உருண்டு உருண்டு கூழாங்கல்லின் வடிவத்தை அடைந்து விடுகிறது. அதன்பின்னர் காய்ந்து இறுகிக் கூழாங்கல்லாக மாறிவிடுகிறது என்று கருத்துத் தெரிவிக்கிறேன்.
Kalairajan Krishnan 🙃
பல்லவராயன் ராஜாமணிகுமரேசன் திருச்சி சின்னமிளகு பாறை,பெரியமிளகு பாறைகள் நினைவுக்கு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக